Tuesday, November 28, 2017

ஹரிவம்ஷ் ராய் பச்சனின் கவிதை . மொழிபெயர்ப்பு

ஹரிவம்சராய் பச்சன் அவர்களின் கவிதை
लहरों से डरकर नौका पार नहीं होती
அலைகளுக்கு பயந்தால்  படகில் கடக்க முடியாது. 

कोशिश करने वालों की हार नहीं होती
முயற்சி செய்வோர்களுக்கு தோல்வி ஏற்படாது 
नन्ही चीटी जब दाना लेकर चलती है
சிறிய எறும்பு  தானியம் எடுத்துச்
செல்லும்  போது 
चढ़ती दीवारों पर, सौ बार फिसलती है
சுவரின் மேல் ஏறும்பொழுது நூறுமுறை நழுவி விழுகிறது

मन का विश्वाश रगों मे साहस भरता हैமனதின் நம்பிக்கைகள் நரம்புகளில் துணிவை நிரப்புகிறது .
चढ़कर गिरना, गिरकर चढ़ना न अखरता हैஏறி விழுவதும் , விழுந்து ஏறுவதும்  பிடிப்பதில்லை
आखिर उसकी मेहनत बेकार नहीं होती,இறுதியில்  அந்த உழைப்பு வீணாவதில்லை
कोशिश करने वालों की हार नहीं होती
முயற்சி செய்பவர்களுக்குத்  தோல்வி ஏற்படுவதில்லை 
डुबकियां सिन्धु मे गोताखोर लगाता है,
முத்து எடுப்பவன் கடலில் மூழ்கி 

जा जा कर खाली हाथ लौटकर आता है
பல தடவை வெறுங்கையுடன்  திரும்புகிறான் 
मिलते नहीं सहज ही मोंती गहरे पानी में,
எளிதாக ஆழமான  கடலில்  கிடைப்பதில்லை.
 बढ़ता दुगना उत्साह इसी हैरानी में.இந்த வியப்பில் இரு மடங்கு வியப்பு ஏற்படுகிறது .
मुट्ठी उसकी खाली हर बार नहीं होती,ஒவ்வொரு முறையும் அவன் வெறுங் கையுடன் வருவதில்லை.
कोशिश करने वालों की हार नहीं होती
முயற்சி எடுப்பவர்களுக்கு தோல்வி ஏற்படுவதில்லை
असफलता एक चुनौती है , इसे स्वीकार करो ,
தோல்வி என்பது ஒரு அறைகூவல்
இதை ஏற்றுக்கொள் 

मी रह गई, देखो और सुधार करो .
குறைகளை  அறிந்து  அவைகளைத்  திருத்திக்கொள்.
जब तक ना सफल हो , नींद चैन को त्यागो तुम ,
வெற்றி கிடைக்கும் வரை
அமைதியான தூக்கத்தை விட்டுவிடு

 संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम.
போராட்ட களத்தை விட்டுவிட்டு ஒடாதே.

कुछ किए बिना ही जय जयकार नहीं होती,
எதுவுமே செய்யாமல் வெற்றி முழக்கம் ஏற்படாது
कोशिश करने वालों की हार नहीं होती
முயற்சி எடுப்பவர்களுக்கு தோல்வி ஏற்படாது.