நான் ஒரு ஹிந்து ,
எனக்கு என் மதத்தின் மேல்
சிரத்தை உண்டு ;பக்தி உண்டு.
ஒற்றுமை இல்லையே என்ற வருத்தமும் உண்டு .
திடீரென்று வரும் வெளி ஆடம்பர பக்தியில் ,
புதிய விநாயகர் ஊர்வலத்தில்
அழகான கடவுளின் சிலைகளை பளுதூக்கிமூலம்
அவமானப்படுத்தி கடலில் எறிவதில்
உடன்பாடில்லை. அதில்
எனக்கு சிரத்தையில்லை.
வருத்தம் தான் ஏற்படுகிறது.
நான் ஹிந்து;
தர்மத்தின் மீது நம்பிக்கை உண்டு.
பால கங்காதர திலகர்விடுதலைப்
போராட்டத்திற்காக மக்களை ஒன்று சேர்க்க
ஆரம்பித்த விநாயகர் ஊர்வலம்
அன்றும் பதட்டம்
இன்றும் பதட்டம் .
அப்பொழுது இல்லை.
இவ்வளவு வீண் ஆடம்பர சிலவுகள்.
சுதந்திர இந்தியாவில்
பயமும் பதட்டமும்
உருவாக்கும் ஊர்வலம்.
பக்தர்கள் கைககளில் குண்டாந்தடி,
பக்கத்திலே துப்பாக்கி ஏந்தி வரும்
காவலர்கள்.
பக்தி ஊர்வலமா/!?
கலக்கம் ஏற்படுத்தும் ஊர்வலமா?
போர்க்களம் நோக்கி செல்லும் பயங்கரமா /
பயம். பீதி.
எப்பொழுது எங்கே என்ன ஆகுமோ
என்ற உள்மன எண்ணங்கள்.
புதிதாக பெருகும் ஊர்வலங்கள்.
யானை முகத்தோனே !
உன்னிடம் ஒரு பணிவான பிரார்த்தனை.
உன் பக்தர்கள் கையில் பூக்களே இருக்கட்டும்.
உருளைக்கட்டை ,குண்டாந்தடி வேண்டாம்.
உன் அழகு சிலைகள் கடலில் எறியப்பட்டு
அவமானம் அடைய வேண்டாம்.
பயம் ,பதட்டம் உருவாகுமோ என்ற
பீதி வேண்டாம்.
உன் பக்தர்கள் மனதில்
ஒரு மாற்றத்தைக்கோடு.
இந்த கோடி ரூபாய்கள் ஏழை எளிய
மக்களுக்கும்
நாட்டுக்கும் பயன் படட்டும்.
நானும் உன் பக்தன்.
என் வேண்டுகோளை நிறைவேற்று.
मैं हूँ हिन्दू अवश्य ,
मुझे श्रद्धा है , दृढ़ विशवास है
सनातन धर्म पर.क्या करूं?
मुझे उनके अचानक के बाह्याडम्बर से
व्यर्थ के गणेश चतुर्थी के नए जुलूसों से
सुन्दर ईश्वर मूर्ति को समुद्र में क्रेन द्वारा
अपमानित करने में ,
करोड़ों के रूपये बर्बाद करने में
मुझे श्रद्धा नहीं,दुखी हूँ.
मैं हूँ हिन्दू आस्था है हिंदुत्व पर.
बाल गंगादर तिलक आज़ादी के लिए
गणेश चतुर्थी का जुलूस निकाला था.
तब नहीं ,इतने धन शक्ति का व्यर्थ प्रयोग.
आजादी भारत में ,आतंक फैलानेवाला,
कब क्या होगा? कहाँ पुलिस का लाठी का प्रयोग
कहाँ मार-पीट ,भगवान की तो करना है पूजा
शांत चित से भयरहित.
पर हर गली में गणेश ,
हिफाज़त के लिए एक पुलिस.
जुलुस के दिन भक्तों के हाथों में लाठी है बड़ी -बड़ी;
लाठी तैयार हैं एक कलह की चिंगारी में
रक्त प्रवाह करने ,जलने जलाने,
ऐसे आतंक सेना के वीर और पुलिस सहीं जुलुस
क्या यह हालात तो हरवर्ष बढ़ता जाता हैं,
जुलुस के दिन कोई खतरा न हो
ऐसे एक ह्रदय कम्पन की दशा सरकार को ,आम जनता को, पुलिस को.
यह नयी जुलुस पद्धति की क्या ज़रुरत.
हे हेरम्ब!हे विघ्नेश! तेरी मूर्तियों को क्रेन द्वारा फेंकने के अपमान
कैसे सह रहे हो;
नम्र निवेदन है तेरे भक्तों में मानसिक परिवर्तन लाओ .
लोग तेरी पूजा-अर्चना आतंक रहें सानंद उल्लास उत्साह से करें;
केवल भक्तों के हाथ फूल ही फूल हो
न हो बड़ी बड़ी लाठी.