—1—எஸ். அனந்தகிருஷ்ணன் மொழிபெயர்ப்பு
राम नाम मनिदीप धरु जीह देहरीं द्वार |
तुलसी भीतर बाहेरहुँ जौं चाहसि उजिआर ||
துளசிதாசர் ராம பக்தர்.
இந்த ஈரடியில் ராமரின் பெயரை உச்சரிப்பதால் ஏற்படும் பயனைக்
கூறுகிறார்.
இராம நாமம் என்பது
மணிவிளக்கைப் போன்றதாகும்.
இந்த நாம மணிவிளக்கை
நாக்கில் வைத்து ஜபம் செய்தால்
உள்ளும் புறமும் ஒளிமயமாகும்.
நான்கு பக்கங்களிலும் பிரகாசமாகும்.
புறமாயைகள் ஒழிந்து அகில மாயை அழிந்து மனநிறைவு, மன சாந்திகிட்டும்.
மன சஞ்சலம்தீரும்.
—2—
नामु राम को कलपतरु कलि कल्यान निवासु |
जो सिमरत भयो भाँग ते तुलसी तुलसीदास ||
ராம நாமம் கற்பக விருக்ஷம்.
அனைத்து மன விருப்பங்களையும்
நிறைவேற்றக் கூடியது.
நலம் தரக்கூடியது.
அவரை தீய நிலையில் இருந்து
நல்லவனாக்கியது ராம ஜபம்.
துளசி போன்று அவரை பரிசுத்த
மாக்கி அழியா புகழ் தந்தது.
—3—
तुलसी देखि सुबेषु भूलहिं मूढ़ न चतुर नर |
सुंदर केकिहि पेखु बचन सुधा सम असन अहि ||
துளசிதாசர் சொல்கிறார்,
புறத்தோற்றம் அழகாக இருந்தால்
அனைவரும் மயங்கி விடுகின்றனர்.
முட்டாள் மட்டுமல்ல,
புத்திசாலி கூட ஏமாற்றம் அடைகின்றனர்.
மயில் அழகாகத் தான் ஆடுகிறது. ஆனால்
அதன் உணவு பாம்பாகும்.
புற அழகு மாயை.
—4—
सूर समर करनी करहिं कहि न जनावहिं आपु |
बिद्यमान रन पाइ रिपु कायर कथहिं प्रतापु ||
துளசிதாசர் சொல்கிறார்:
வீரர்கள் என்றும் போரிட
அஞ்சமாட்டார்கள்.
கோழைகள் தான் வீண் பேச்சு
பேசுகிறார்கள்.
போரிடாமல் தன்
குலப்பெருமை பேசி
தன்னை வீரர்கள் போன்று
காட்டிக் கொள்வார்கள்.
—5—
सहज सुहृद गुर स्वामि सिख जो न करइ सिर मानि |
सो पछिताइ अघाइ उर अवसि होइ हित हानि ||
இயற்கையிலேயே நல்லது விரும்பினால்
நல்லதை உபதேசிக்கும் குருவின் உபதேசத்தை ஏற்று நடக்கவேண்டும்.
அவ்வாறு குரு உபதேசத்தை ஏற்று நடக்காதவர்களுக்கு தீமையே நடக்கும்.
பாவம் சேரும். வருத்தப்பட வேண்டியிருக்கும்.
—6—
मुखिया मुखु सो चाहिऐ खान पान कहुँ एक |
पालइ पोषइ सकल अंग तुलसी सहित बिबेक ||
துளசிதாசர் சொல்கிறார்:
தலைவன் வாய் போன்று இருக்கவேண்டும்.
வாய் தனக்குள் போட்ட
உணவை
நன்கு மென்று
விழுங்கி அனைத்து
அங்கங்களையும்
வலிமையாக்குகிறது.
அவ்வாறு தலைவன்
வலது இடது,ஜாதி மத இன சம்பிராதயமின்றி
அனைத்து மக்களையும்
சமமாகக் கருதி பாதுகாக்க வேண்டும்.
—7—
सचिव बैद गुरु तीनि जौं प्रिय बोलहिं भय आस |
राज धर्म तन तीनि कर होइ बेगिहीं नास ||
அமைச்சர், மருத்துவர், குரு ஆகிய மூவரும்
சுயநலம்,அச்சம்,சுயலாபம் இன்றி இருக்கவேண்டும். அவ்வாறு இல்லை என்றால்நாடு,உடல்,அறம் அனைத்தும்
விரைவில் அழிந்து விடும்.
—8—
तुलसी मीठे बचन ते सुख उपजत चहुँ ओर |
बसीकरन इक मंत्र है परिहरू बचन कठोर ||
துளசிதாசர் சொல்கிறார்:
இனிய சொற்கள் பேசினால் நாலாபக்கங்களில் சுகம் கிடைக்கும்.
இனிய சொற்கள் தான் மற்றவர்களை
வளப்படுத்தும் மந்திரமாகும். ஆகையால் கடினமான சொற்களைப் பேசுவதை விட்டு விட வேண்டும்.
—9—
सरनागत कहुँ जे तजहिं निज अनहित अनुमानि |
ते नर पावँर पापमय तिन्हहि बिलोकति हानि ||
சுயநலத்திற்காக தன்னிடம் அடைக்கலம் வந்தவனை விட்டுவிடுபவன், மிகப்பெரிய பாவி.அவனைப் பார்ப்பதே பாவம்
—10—
दया धर्म का मूल है पाप मूल अभिमान |
तुलसी दया न छांड़िए ,जब लग घट में प्राण ||
இரக்கம் அறத்தின் ஆணிவேர்.
பாவங்கள் ஆணவத்தின் ஆணிவேர்.
மனிதன் எந்த நிலையிலும் இரக்க குணத்தை விட்டு விடக்கூடாது.
ஆணவம் அனைத்துப் பாவங்களுக்கும்
மூலகாரணமாகும்.
—11—
आवत ही हरषै नहीं नैनन नहीं सनेह|
तुलसी तहां न जाइये कंचन बरसे मेह||
கண்களில் அன்பு இல்லை.
சென்றால் மகிழ்ச்சி இல்லை.
அவ்வாறானவர்கள் வீட்டில்
தங்கமே மழையாகப் பெய்தாலும்
செல்லக்கூடாது.
—12—
तुलसी साथी विपत्ति के, विद्या विनय विवेक|
साहस सुकृति सुसत्यव्रत, राम भरोसे एक||
துளசிதாசர் சொல்கிறார்:
இன்னல்கள் வரும் போது
நமது நண்பர்கள்
கல்வி,பணிவு,அறிவு,துணிவு,நற்செயல்கள்,
உண்மை பேசுதல்,கடவுள் பக்தி, ஆகிய ஏழு குணங்கள் தான்.
—13—
तुलसी नर का क्या बड़ा, समय बड़ा बलवान|
भीलां लूटी गोपियाँ, वही अर्जुन वही बाण||
துளசிதாசர் சொல்கிறார்:
காலம் மிகவும் வலிமையானது.
காலம் தான் மனிதனை சிறியவன்,பெரியவனாக்குகிறது.
வில் வீரரான அர்ஜுனுக்கு
நேரம் சரியில்லாததால்
ஒரு முறை வேடர்களிடமிருந்து கோபிகளைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
—14—
तुलसी भरोसे राम के, निर्भय हो के सोए|
अनहोनी होनी नही, होनी हो सो होए||
துளசிதாசர் சொல்கிறார்:
பகவான் ராமர் மீது நம்பிக்கை வைத்து
அச்சமின்றி தூங்குங்கள். எந்த அசம்பாவிதமும் நடக்காது.
நடக்கும் அசம்பாவிதத்தைத்
தடுக்கவும் முடியாது.
—15—
तुलसी इस संसार में, भांति भांति के लोग|
सबसे हस मिल बोलिए, नदी नाव संजोग||
துளசிதாசர் சொல்கிறார்::--
வித விதமான குணமும் நடத்தையும் உள்ள மக்கள் வாழும் வையகம் இது. ஆகையால் நல்லவர் கெட்டவர்கள் எல்லோரிடமும் நட்புடனும் கனிவுடனும் சிரித்துப் பழகுங்கள்.
—16—
लसी पावस के समय, धरी कोकिलन मौन|
अब तो दादुर बोलिहं, हमें पूछिह कौन||
துளசிதாசர் சொல்கிறார்:
மழைக்காலத்தில் தவளைகள்கத்தும்.
குயில் மௌனமாக இருக்கும்.
தவளைகளின் கர்ண
கொடூரமான டர்டர்
என்ற ஓசைகளின் முன்
குயிலின் இனிமையான
குரல் எடுபடாது.
தவளைகள் போல்
கத்தும் முட்டாள்
கள் வஞ்சகர்கள்
முன் அறிவுஉள்ளவர்கள்,
பேசமாட்டார்கள்.
—17—
काम क्रोध मद लोभ की, जौ लौं मन में खान|
तौ लौं पण्डित मूरखौं, तुलसी एक समान||
துளசிதாசர் சொல்கிறார்:
காமம்,கோபம்,ஆணவம்,
பேராசை
ஆகிய
குணங்கள் மனதில்
சுரங்கம் போல் இருந்தால்
பண்டிதர்களும்முட்டாள்களும் ஒன்றே.