Saturday, July 29, 2023

முதுமை

 முதுமை எனது தவறில்லை. 

இது கடவுளின் நியமம்.

மனிதனுக்கு உயிருடன் 

அனுபவிக்கும்

சுவர்கமும் நரகமும்.

இளமையின்

வினைப்பயனுக்கான

பரிசும் தண்டனையும் .

ஒரு அலுவலர்

ஊழல் வாதி

கையூட்டு வாங்குபவர்

மகிழுந்து  மாளிகை

பார்ப்பவர்களுக்கு 

அதிக சுகமானவர்,

பணக்காரர்.

வீட்டில் தனிமை

நரக வேதனை .

மீளாத்துயரம் .

அவரது வாழ்க்கை

இளைஞர்களுக்கு ஓர்

எச்சரிக்கை மணி.

முதுமை  உண்மையைக் கூறும்.

சுவர்க்கம் எங்கும் இல்லை.

நரகம் எங்கும் இல்லை.

இது தான் அனுபவப் பாடம்.

உண்மையில் முதுமை புரிந்து கொள்ளும்

சுவர்க்கமும்  நரகமும் 

மரணலோகம் இந்த பூலோகம் தான்.

சே.அனந்தகிருஷ்ணன்.