வலைப் பூவில் எழுதலாமே !
வையகம் போற்றுமா?
அவனி ஆதாரிக்குமா?
பார் புகழுமா ?
தவறுகள் வருமா ?
ஏளனம் செய்வார்களா?
ஏற்றம் தருமா?
ஆழமான பொருள் ஞானம் உண்டா?
சிந்தனை ஆழ்ந்த நிலையில் உண்டா?
பலவித எண்ணங்கள் , பலவித சூழல்கள்
உண்மை கூறுமா ? உண்மை மறைக்குமா ?
ஊழல் கூடுமா ? ஊழ்வினை சுடுமோ ?
நாம் எந்த பதவி விரும்பினோம் .?
எந்த பதவியில் உள்ளோம் ?
பார் புகழும் தமிழ்நாடு .இன்று
baaரில் புரளும் இளைஞர்கள்.
baaருக்கு அரசு , காவலர் பாதுகாப்பு,
baarai எதிர்த்தால் காவலர் பெண்கள் மீது
தடியடி. மதி இழந்த
மதுகுடித்த காவலதிகாரி .
தமிழ் தமிழ் என்றே ஆட்சி பிடிப்பார்.
பணக்கொள்ளைக்கு
ஆங்கிலப் பள்ளிகள் திறப்பார்.
ஹிந்தி போராட்டம் என்பார் ,
வடமொழி எதிர்ப்பு என்பார்
அந்தணர் ஒழிக என்பார்
உதய சூரியன் சின்னம் என்பார்.
உதயநிதி என்பர்.
தேசீயம் மறப்பார் .
தேச நலம் மறப்பார்.
ஏழைகளுக்கு உதவும் நவோதயா பள்ளிக்கு
எதிர்ப்பே தெரிவிப்பார்.
சன் சைன் என்றே மத்திய பள்ளி நடத்துவார்.
நன்கொடை வாங்குவார், பணமே கல்வி என்பார்.
விழிப்புணர்வு வேண்டுமே !
தமிழ் வழி படிப்போருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை
தருமா ? அரசு. பெயர் தமிழ்நாடு ,
பட்டி தொட்டி எல்லாம் பணக்காரர்கள் திறக்கும்
பள்ளிகள்.
திண்ணைப்பள்ளி ஏழை ஆசிரியர்கள், பட்டம் பெற்றவர்கள்
ஏழைகளுக்கு பள்ளிகள் நடத்தக் கூடாது.
படிப்பறிவில்லா முத லாளி நடத்தும் பள்ளிக்கு அங்கீகாரம்.
முதுகலைப் பட்டங்கள் , முதுகலை பயிற்சி பட்டங்கள்
கொத்தடிமை ஆசிரியர்கள்.
நிரந்தரமில்லா பணி, ஊதியமோ பத்தாது.
அரசுப்பள்ளிகள் உதவிபெறும் பள்ளிகள்
ஆசிரியர் சுதந்திரம் . தனியார் பள்ளி
ஆசிரியர் தரம் மாலை நேர பயிற்சியால் வருமானம்.
இந்நிலை மாறுமா ?
பொறியியல் கல்லூரி பேராசிரியர்
மாத ஊதியம் பத்தாயிரம் . பத்துமா .
இக்கொடுமை மாறுமா? அரசியல் கொள்ளை ஒழியுமா?