Saturday, March 23, 2019

சாஹித்திய அகாடெமி ஹிந்தி இதழில் வெளியான ஹிந்தி கவிதைகளின் தமிழ் ஆக்கம் -2





6. கவிஞர் :---மாதவ் கௌசிக்

     கவிதை :- கஜல்
 
    பூக்கள் ,இலைகள் ,பூந்தோட்டங்கள்
    இப்பொழுது எங்கே ?
     வீடுகள் இருக்கின்றன ,
   ஆனால் தாழ்வாரங்கள்
   இப்பொழுது எங்கே ?
    அப்பாவிக் குழந்தைகள்
   படுக்கைக்குக்  கீழே
   அமுக்கப்பட்டு ,
  முன்போல் குழந்தைப் பருவம்
    ஆனந்தமாக இல்லை.
    உங்கள் முகமே உங்களுடையதாக இல்லை ,
     உண்மையைக் காட்டும் கண்ணாடிகள் எங்கே ?

 அமில மழை  பொழிகிறது .
பால் போன்ற நீர்த்துளிகளின்  இப்பொழுது எங்கே ?

கனவுகள் பறவைகள் போன்று பறந்து விட்டன .
மரத்தில் தொங்கு கின்ற  கூடுகள்  எங்கே ?
கேட்டுப்பார்த்தால்  வாழ்க்கை பேசியது --
வாழ்க்கையில்  நட்பு  வாழ்க்கை இப்பொழுது எங்கே ?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2.   நகரத்தில் எனக்கு ஆறுதல் அளிப்பவர் யார் ?

     கிராமத்தில் இருந்தும் எனக்கு கடிதங்கள் வருவதில்லை.
   
     எனது  தனிமை உலகம் பற்றி என்னத்தைச்  சொல்வது.?
    மாடி   என்னை முறைத்துப் பார்க்கிறது ?
   உண்மை பேசும் பழக்கத்தால்
    எல்லோரும் என்னிடம்
    கோபமாக   இருக்கின்றனர் .

   மனக்காயம்  இதயத்தில் இருந்து வெளிப்படக்  கூடாது .

    என்னை சீண்டி கோபமூட்டக்கூடாது .
தன்  கண்களால் தன்னையே  பார்க்க முடியாது .
நேரம் எனக்கு  வாய்ப்பளிக்கவில்லை .
எந்தச்  சொற்களால் ,நன்றி சொல்லமுடியும் ?
எனக்கு மரியாதையை பரிசாகக் கொடுத்துள்ளார்கள்.
***************************************************************

7.       கவிஞர்  தேவேந்திர ஷர்மா "இந்திர "

            கவிதைத்  தலைப்பு :--நவ  கீத்
                   புதியபாடல்

            1. மௌனத்தின் தொடர்ச்சி
               இப்பொழுது முடியாது .
                சிரிப்பின் மணத்தால்
                பேச முடியாது .
                 பூ இதழின் முந்தானையில் இருந்து
                  முத்துக்கள் சிதறிவிட்டன.
                 புயல்   மலராத நான்கு
                  பூக்களை உதிர்த்தது விட்டது.
                    சந்தனக்காட்டை எரிக்க
                     காற்று வீசியதுபோல்
                    உறவினரின்   பாலம் உடைந்து விட்டது.

                   நமக்கிடையில் சேர்ந்து இருந்தவர்கள் ,
                   சந்தித்தும்  சந்திக்கவில்லை .
                    உயிருள்ள சத்தங்கள்
                   படுக்கையில் புதைத்துவிட்டன .

                 இறந்த ஆணவம் ஆகாயத்தில்
                தொங்கிக்கொண்டிருக்கிறது
                   சொற்களின்  பயணிகள் கூட்டம்
                   பாலைவனத்தில் மறைந்துவிட்டது .

***********************************************************

                 
             





No comments: