Thursday, November 24, 2016

கபீரின் சிந்தனைகள் -நான்கு.

௩௧.
இதயத்தில் இறைவனின் நாமம்
இயற்கையாகவே  ஒலிக்கிறது.
ஆத்மாவும் பரமாத்மாவும்
ஒன்றான பிறகு இறைவனின்
  நாமத்தை  வாயால்
 ஜெபிக்கவேண்டிய
அவசியம்  இல்லை.

௩௨.

கையில் ஜபமாலை சுழன்று கொண்டிருக்கிறது.
நாவானது  இறைவனின்  நாமத்தை சொல்கிறது.  ஆனால்
மனம்  உலகியல் நிகழ்வுகளை நோக்கி
பத்து  திசைகளிலும் சுற்றிக்கொண்டிருக்கிறது.
இதற்குப் பெயர்  இறைவனின் தியானம் ஆகாது.

௩௩.
ஆத்மா  பரமாத்மாவில் நிலைத்த பிறகு
மனம் ஒருமையுடன் இறைவனில்  நிலைக்கிறது.
சொல்,செயல்  இரண்டும் மாறாமல் இருக்கிறது.
வேற்றுமை இல்லா
 ஐக்கிய  உணர்வின்
பேரா னந்தத்தை
 பல யுகங்கள் தவத்தில் ஈடுபட்டாலும்
 உலகியல் கர்மங்களில்  ஈடுபடும்
மனிதர்கள் அனுபவிக்கமுடியாது.

34 ௩௪
ஜபம்  செய்பவனும்  மடிகிறான்.

ஜபம்  செய்யாதவனும்  மடிகிறான்.
இறைநாமங்கள்  ஆன்மீக ஓசைகள்
கேட்பவனும்  மடிகிறான்.
ஆனால் மனிதன் வடிவில்
  நாராயணன்  ஆனவனும்
ஆத்மா பரமாத்மா இரண்டும் ஓர்  நிலை
அடைந்தவனுக்கு  மரணம்  இல்லை.

௩௫.

கபீர்  சொல்கிறார் :-பசியானது  நாய்  போன்றது,
அது இரவும் பகலும்
பஜனையில் இடையூறு செய்கிறது. .
ஆகையால்  சிறிது  உணவு
அதற்கு  போட்டுவிட்டு
எவ்வித சேர்க்கைத்  தடையும்  இன்றி
இறைவனை  வழிபடு.

௩௬.
ஹே  பகவானே!
நான்   உன்னையே துதித்து
உன்னைப்போலவே  ஆகிவிட்டேன்.
உன்னைப்போல்  ஆனதால்
ஆணவம்  ஒழிந்துவிட்டது.
எங்குபார்த்தாலும் அங்கெல்லாம்
இறைவனையே  காண்கிறேன்.
ஆணவம்  அழிந்ததால்
 இறைவனை மட்டுமே  காண்கிறேன்.
 ௩௬.
கபீர்  சொல்கிறார் ,
நான்  ஏன்  கவலைப்படவேண்டும்.
நான்  கவலைப்படுவதால்
என்ன  நடக்கப்போகிறது.
மனிதனைப்படைத்த  ஹரிதான்
என்னைப்பற்றி  கவலைப்படுகிறார்.
ஆகையால்  எனக்கென்று
 எவ்விதக்  கவலையும்  இல்லை.
௩௮.
 ஒரு  சாது  அல்லது  மஹான்
 தனக்காக  எதுவும்
சேர்த்துவைப்பதில்லை.
அவன்  தன்  வயிற்றுப்  பசி அடங்க
எவ்வளவு  தேவையோ ,
அந்த  அளவே  சேர்த்து  வைக்கிறான்.
அவனுக்கு முன்னும் பின்னும்
கடவுள்  நின்று கொண்டிருக்கிறார்.
அதனால் அவன்  கேட்டதுமே
 இறைவன்  அவைகளை
 கொடுத்துவிடுகிறார் .
௩௯.

கபீர்  சொல்கிறார் :-
விடிந்துவிட்டது.
எல்லா ஜீவராசிகளும்
 விழித்துக்கொண்டன.
பகவான்  அவரவர்களுக்கு
எவ்வளவு வேண்டுமோ ,
அந்த அளவு
 எல்லோருக்குமே  அளிக்கிறார்.
௪௦.

எல்லோரின்  கர்ம  பலனை
ஆண்டவன்  எழுதிக் கொண்டிருக்கிறார்.
அவர் எது  எழுதினாரோ ,
அதுவே  நடக்கும்.
என்னதான் கடும்
முயற்சி  செய்தாலும்
எது  கிடைக்கவேண்டுமோ
அதில் எள்ளளவும்  கூடாது. குறையாது.





No comments: