Friday, December 2, 2016

கபீரின் ஆன்மீக சிந்தனைகள் -பாகம் -௨

௧௧.

கபீர் :-கடவுளால்  தான்  அனைத்தும் நடக்கிறது. 

மனிதனால் எதுவுமே நடக்காது.

கடவுள்  கடுகை  மலையாக்கிவிடுவார்.
மலையை  கடுகாக்கி விடுவார்.
அவரின்றி  அணுவும்  அசையாது.
*****************************************************

௧௨
கடவுள்  ஓடும் தண்ணீரை
 தரையாக்கிவிடுவார்,
தரையில்  நதியை  ஓடச்செய்வார்,
அனைத்திலும் அவர் பங்குதான் உள்ளது.
அவர் எப்படி  எதை  விரும்புகிறாரோ ,
அப்படியே  அதை  செய்துவிடுவார்.
*****************************************************
௧௩.
கடவுளைப் போன்று சாமார்த்தியமுள்ள ,
கௌரவமுள்ள ,ஆழ்ந்த,கம்பீரமானவர்
வேறு  யாரும்  கிடையாது.
அவன் உயிரனங்களின்   குணங்களை  ஏற்று ,
கெட்ட  குணங்களை விட்டுவிடுவார்.
அவர்  நல்லவர்களை ஒரு  நொடியில் உலகம்  என்ற
கடலைக்  கடக்க  வைத்துவிடுவார். 
***************************************************************
௧௪.
கபீர்:--
நான்  எது  செய்தேனோ,அதை  எல்லாம்
 நீதான் செய்தாய்.
நான் எதையும்  செய்யவில்லை. 
  1. இந்த  வேலையை  நான் தான்  செய்தேன் என்று 
சொல்லும்   போது நீயும்  (கடவுள் ) எனக்குள்ளிருந்தாய்.
****************************************************************

௧௫.
கடவுளால்  காப்பாற்றப்படும்  ஒருவரை
யாராலும் அடிக்க  முடியாது.
உலகமே  எதிர்த்து  நின்றாலும்
ஒரு  சிறு  தீங்கு கூட  செய்யமுடியாது.
******************************************************************
௧௬.
என்னுடைய  கடவுள்,
 ஒரு  வாணிகச்  செட்டியார்.
வியாபாரம் செய்வதில்
  மிகவும்  கெட்டிக்காரர்.
திராசு  தட்டு  இல்லாமலேயே
 பாவ புண்ணியங்களை
அளந்துவிடுவார்.
*****************************************************************
௧௭.
இறைவனே!
 நீ  விரும்பாதவனை
உலகம் ஒரு தம்படிக்குக்  கூட  மதிக்காது.
உன்னால்   விரும்பப்பட்டு
பாதுகாக்கப்படுபவன்
  மிகவும் மதிக்கப்படுவான்.
*********************************************************************************************************************************************************
௧௮.
பக்தர்களிடம்  கபீர்  கூறுகிறார் :-
பூவில்  மணம்  இருப்பதுபோல்
 உன்  இறைவன்
உனக்குள்  இருக்கிறார்.
கஸ்தூரிமான்  வயிற்றில்
மணமுள்ள  கஸ்தூரி
 இருப்பதுபோல்
உன் கடவுள் உனக்குள்ளேயே  இருக்கிறார்.
வெளியில்  தேடுவது அறிவற்றசெயல். 
கஸ்தூரிமான்  தன்னுள்  இருக்கும்
 மணத்தை  உணராமல்
வெளியில்  தேடும்.
அது  அதன் அறியாமை.
அறிவுள்ள  மனிதன்
அப்படி வெளியில்  தேடமாட்டான்.
*************************************************************************
௧௯.
நீ  வையகம்  முழுவதும்
 வடிகட்டி   தேடிய  கடவுள்
உனக்குள் இருக்கிறார்.
நீ  அறியாமை  என்ற  திரையைப்  போட்டு
வெளியில் தேடுவதால்
 உனக்கு  கடவுள்
தரிசனம்  கிடைக்கவில்லை.
********************************************************************************
௨௦
கபீர்  சொல்கிறார்
நீ  கடவுளை
  அறிந்துகொண்டு விட்டாயானால்
உன்னுடைய வீட்டிற்குள்ளேயே
இருந்து  தியானம் செய்.
உன்னுடைய  கடவுள்
 உனக்குள்ளேயே இருக்கிறார்.
அவனைத்தேடி  எங்கும்  செல்லாதே.
**************************************************************************



No comments: