கபீரின் ஈரடிகள் ----101 முதல் 150 வரை
101. இந்த உடல் காட்டைப் போன்றது.
நமது செயல்கள் கோடாலி போன்றது .
நமது வினைகள் மூலம் நாமே நம்மை
வெட்டிக்கொண்டிருக்கிறோம் .இப்படி நம்மை நாமே
அழிப்பதை கபீர் சிந்தித்து சொல்கிறார்.
102. உனக்கு என்று நண்பர்கள் ஒருவரும் கிடையாது.
எல்லா மனிதர்களும் சுயநலத்தால் கட்டுண்டு இருக்கிறார்கள்.
இந்த ஞானம் அறிந்து நம்பிக்கை மனதில் உண்டாகும் வரை
ஆத்மாவின் நம்பிக்கை விழிப்புணர்வு வராது.
உண்மை ஞானம் வராததால் மனிதன் உலகியலில்
சிக்கி துன்பம் அடைகிறான் .
.இந்த சுயநல உலகை அறிந்துகொண்டால்
மனிதன் மனம் இறைவனையே நாடும்.
103. அழிவின் ஆணிவேர் அகங்காரம். ஆணவம் . இதில் சிக்கிக் கொள்ளாதே.
இந்த ஆணவம் கை விலங்காகும்.கழுத்துக்குத் தூக்குக் கயிறாகும்.
104. இந்த வாழ்க்கைப் படகு பாழடைந்ததாகும் .
இதை துடுப்பு போட்டு செலுத்துபவன் முட்டாள்.
இந்த உலகியல் ஆசைகளின் சுமை யால்
வையகக் கடல் மூழ்கிவிடும்.
உலகியலில் இருந்து மீட்க முடியாது.
இந்த உலகியலில் இருந்து விடுபட்டவர்கள்
வையகக் கடலில் மூழ்குவதில் இருந்து தப்பிவிடுவார்கள் .
105. மனித மனம் அனைத்தும் அறிந்தும்
தீய குணங்களில் சிக்கிக்கொள்கிறது.
அதன் செயல் விளக்கை கையில் பிடித்துக்கொண்டே
கிணற்றில் விழுவதுபோல் ஆகிவிடும்.
அப்படிப்பட்ட மனிதன் நலமாக வாழ்வது எப்படி ?
நலமாக இருக்க எப்படி முடியும் ?
106. நம் இதயத்திற்குள் கண்ணாடி இருக்கிறது.
ஆனால் கேளிக்கை காமக் களியாட்டங்களால்
முகம் தெளிவாகத் தெரியவில்லை.
மனதின் சந்தேகங்கள் தீய ஆசைகள் நீக்கிவிட்டால்
உண்மையான முகம் தென்பட முடியும்.
107. நீதான் செயல் புரிபவன்.ஏன் பேசாமல் இருக்கிறாய் ?
செயல் புரிந்து ஏன் வருத்தப்படுகிறாய் ?
நீ நட்டதோ கருவேல முள் மரம்.
அவ்வாறிருக்க மாம்பழம் எப்படி கிடைக்கும்.?
நீ எப்படிப்பட்ட விதை விதைக்கிறாயோ ,
அப்படித்தான் பலன் கிடைக்கும்.
தீய வினைக்கு தீய பலன்.
நல்வினைக்கு நற்பயன் .
108. நாம் நல்லவர்கள் சேர்க்கையால்
நல்ல விளைவுகளை தாக்கத்தைப் பெறமுடியும்.
சந்தன மரத்தருகில் இருக்கும் மணம்
அதன் அருகில் இருக்கும் வேப்ப மரமும் பெறும் .
ஆனால் ,ஓங்கி உயர்ந்து வளரும் மூங்கில்
தன் பெருமையில் மூழ்கிவிடும். இப்படி மூங்கில் போல் இருக்காமல் ,
சேர்க்கையின் பலனை கிரஹித்துக்கொள்ள வேண்டும்.
109. இந்த உலகம் கண்மை மாளிகை .இதன் கதவு செயல்கள் கர்ம வினை கருமையால் அமைக்கப் பட்டிருக்கின்றன. பண்டிதர்கள் பூமியில்
கற்சிலைகளை ஸ்தாபனம் செய்து வழிகளை அமைத்திருக்கின்றனர்.
110. முட்டாள்களுடன் சேராதே.
முட்டாள்கள் இரும்பு போன்று .தண்ணீரில் மூழ்கிவிடுகிறார்கள் .ஆகாயத்தில் இருந்து விழும் நீர்த்துளி வாழைப்பழத்தில் விழுந்தால் கற்பூரமாகிவிடும்.சிப்பியில் விழுந்தால் முத்தாகிவிடும்.
பாம்பின் வாயில் விழுந்தால் விஷமாகிவிடும்.
நல்லவர்களின் நட்பும் சேர்க்கையும் தேவை.
111.நல்லவர்களின் சேர்க்கை ஒருபொழுதும்
பயனற்றுப் போய்விடாது.
சந்தன மரம் உயரத்தில் குறைந்திருந்தாலும்
நான்கு பக்கங்களுக்கும்
நறுமணம் வீசும்.
அதை ஒருவரும் வேப்பமரம் என்று சொல்லமாட்டார்கள்.
சந்தன மரம் தன சுற்றுப்புறத்தை நறுமணமாக வைத்திருக்கும்.
112. தெரிந்தே பொய் பேசுபவர்கள் ,பொய்யை காதலிப்பவர்கள் ஆகியோரைத் தவிர்க்க வேண்டும்.
கனவிலும் அவர்களுடைய சேர்க்கை கூடாது.
113. மனத்தைக் கொன்று ஆணவத்தை விட்டு வாழ்ந்த யோகிகள் சென்றுவிட்டனர். அவர்களுடைய அஸ்தி விபூதி இருக்கிறது.
அதாவது உலகில் அவர்களுடைய புகழ் மட்டுமே உள்ளது.
114. பன்னிரண்டு மாதங்களும் பலன்கள்
பழங்கள் தரும் மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக்கொள்.
அதனுடைய குளிர் நிழல் அடர்த்தியாக இருக்கவேண்டும். பறவைகள் விளையாட வேண்டும் .பழங்கள் அதிகமாக இருக்கவேண்டும்.
115. உடல் அழியக்கூடியது. மனம் சஞ்சலமானது.
ஆனால் நாம் இதை நிலையானது என்று எண்ணி
வேலை செய்கிறோம். இந்த நிலையற்றதை நிலையானதாக எண்ணி இவ்வுலகில் நீ போடும் ஆட்டம் கண்டு காலன் சிரிக்கிறான்
.மரணம் அருகாமையில் உள்ளது என்று அறிந்தும்
மனிதன் அறியாதது போல் வாழ்கிறான்.
இது மிகவும் வேதனையான விஷயமாகும்.
116.குடத்தில் தண்ணீர் ,தண்ணீரில் குடம் ,உள்ளும் புறமும் தண்ணீர்.
குடம் உடைந்தால் குடத்தின் தண்ணீரும்
குளத்தின் தண்ணீரில் கலந்துவிடும்.
அறிஞர்கள் இந்த தத்துவத்தையே ஆத்மாவும்
பரமாத்மாவும் ஒன்று என்று பகர்கின்றனர் .
ஆத்மா பரமாத்மாவிலும் பரமாத்மாவில் ஆத்மாவும்
கலந்திருக்கிறது. அத்வைதக்கருத்து சங்கரர் கூறியது இதுதான்.
117. படித்தவர்கள் கூறுவது நூலில் உள்ளவை.
படிக்காத கபீர் சொல்வது அனுபவத்தில் அறிந்ததும்
கண்ணால் பார்த்ததும். உண்மையானவை.
நான்எளிதாக புரியவைக்க தீர்வு காணவும் சொல்கிறேன்.
அதை சிக்கலாக்கி கடினமாக்குவது படித்தவர்கள். தான்.
118. மனதை வென்றால் வெற்றி.
மனதை வெல்லவில்லை என்றால் தோல்வி.
வெற்றிக்கும் தோல்விக்கும் மன வலிமை ,
மன திடம் தான் காரணம்..மன நம்பிக்கையும் வேண்டும்
கடவுளின் அனுக்கிரஹம் ,தரிசனம் கிடைக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மனதில் வேண்டும்.
நம்பிக்கை இல்லை என்றால் எப்படி தரிசனம் கிடைக்கும்.
119. ஆணவம் இருந்தால் ஆண்டவன் இல்லை.
ஆண்டவன் இருந்தால் ஆணவம் இருக்காது.
அன்பின் வழி மிகவும் குறுகளானது ,
ஒன்றுக்குத்தான் இடம். ஆணவமா ? ? ஆண்டவனா ?
ஒன்றிருந்தால் மற்றொன்று இருக்காது.
120. அறிவை விட அன்பே உயர்ந்தது,
ஞானம் பெற்று மனது கல்லானால் ,
செங்கல் போல் உயிரற்றது
ஆனால் எவ்வித பயனும் கிடையாது.