76. உலகவாழ்வில் மாயையும் மனதும் இறப்பதில்லை.
மனித உடல்மரணமடைவதைக்கண்டும்
மனிதனின் நம்பிக்கைகளும்
ஆசைகளின் தாக்கங்களும் என்றும் இறப்பதில்லை .
கபீர் பலமுறை இதைக் கூறியுள்ளார் .
77. மன ஆசைகளை விட்டுவிடு.
நம் ஆற்றலால் அறிவால் அவைகளைப்
பூர்த்தி செய்ய முடியாது.
தண்ணீரிலிருந்து நெய் வந்தால்
எடுக்க முடிந்தால் ஒருவரும் காய்ந்த
ரொட்டி சாப்பிடமாட்டார்கள்.
78. அறியாமை என்ற தூக்கத்தில் இருக்காதீர்கள்.
ஞானத்தின் விழிப்புணர்ச்சி பெற்று
கடவுளின் பெயரை ஜபிக்க ஆரம்பியுங்கள் .
விழிப்புணர்வுடன் இறைவனை தியானம் செய்.
நீ ஆழ்ந்த மீளாத்தூக்கத்தில் தூங்கும்
நாட்கள் விரைவில் வந்துவிடும்.
விழித்திருந்து கடவுளின் பெயரை ஜபித்து
ஏன் தியானம் செய்வதில்லை ?
79. தண்ணீரின் அன்பை பசுமையான மரங்கள் தான் உணரும்.
காய்ந்தகட்டைகளுக்கு மழை பெயதால் என்ன ?பெய்யாவிட்டால் என்ன ? சகிக்கும் நல்ல உள்ளங்களுக்குத்தான் அன்பின் அருமை தெரியும் .அன்பில்லா மனதிற்கு இதை உணர அறிய வாய்ப்பில்லை.
80 .மேகங்கள் கல்லின் மேல் மழை பெய்யத்தொடங்கின.
மண் கரைந்து தண்ணீருடன் ஓடியது.
கல் அப்படியே உள்ளது.
81. மனித வாழ்க்கை சில ஆண்டுகள். இதற்காக பல வகை முன்னேற்பாடுகளை செய்ய முற்படுகிறான் .
அரசனோ ஏழையோ நின்றுகொண்டே அழிந்துவிட்டன.
82 . அரசர்களே!பேரரசர்களே ! ஒருநாள் எல்லோரையும் ,எல்லாவற்றையும் விட்டுவிட்டு செல்லும் நாள் வரும் . ஏன் ,நீங்கள் இப்பொழுதே எச்சரிக்கையாக இருக்கமாட்டீர்கள் ?
83. அன்பை ருசிக்காதவர்கள் ,ருசித்தும் ரசிக்காதவர்கள் ,
சூனியமான ,ஜன சஞ்சாரமற்ற வீட்ட்டில் உள்ளவர்கள் ,
அவர்களுக்கு எதுவுமே கிடைக்காது .
சூனியமான வீட்டிற்கு வந்தவர்கள் ,
சூனியமாகவே சென்றுவிடுவார்கள்.
84. மனிதனிடம் ஏதாவது கொடுக்க
சொன்னால் மரியாதை ,பெருமை ,கௌரவம் ,
அன்பு எல்லாமே வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிடும்.
85.போகின்றவனை ,போவதைத் தடுக்காதே.
நீ உன் தன்னிலையை இழந்து
விடாதே. நீ உன் இயல்பு நிலையிலேயே இருந்தால்
குகனின் படகுபோல்பலர் உன்னை சந்திப்பார்கள் .
85. இந்த உடல் பச்சைமண் குடம் போன்றது.
உடன் எடுத்துச்செல்கிறாய்.
சிறிது அடிவிழுந்தாலும் உடைந்துவிடும்.
எதுவும் மிச்சமிருக்காது.
86. ஆணவம் மிகவும் கெட்ட பொருள்.
முடிந்தால் இதிலிருந்து தப்பித்து ஓடிவிடு.
நண்பனே!பஞ்சினால் சுற்றப்பட்ட நெருப்புபோல் ஆணவம் .
இதை நம்மருகில் எப்படி வைத்திருக்க முடியும்?
87. அன்பு என்ற மேகம் நம்மேல் பொழிய ஆரம்பித்ததால்
உள்ளுள்ள ஆத்துமா நனைந்து விட்டது.
அக்கம் பக்கத்தில் உள்ள சுற்றுப்புறம் பசுமையாகிவிட்ட.
நிலை மகிழ்ச்சியாகி விட்டது. அதன்பின் அரிய நிலை.
நாம் என் ப தே அன்பில் வாழ்வதில்லை.
88. அன்பில்லா இதயம் ,அன்பின் ருசி அறியா நிலை,பகவானின் பெயரை சொல்லா நாக்கு இவை இல்லா மனிதன் உலகில் பிறந்ததே வீண்.
அன்பு தான் வாழ்க்கையில் பொருள் நிறைந்தது.
அன்பின் ரசத்தில் மூழ்கி இருப்பதுதான் வாழ்க்கையின் சாரம்.
89.பகவானை தரிசிக்க எவ்வளவு இடையூறுகள்.
அவனை அடையச்செல்லும் வழி பயங்கரமானது.
அநேக பாதகர்கள் ,திருடர்கள் ,ஏமாற்றுபவர்கள் உள்ளனர்.
நீண்ட வழி .அநேக ஆபத்துக்கள் .தடைகள்.
அவைகளில் சிக்குண்டு புலம்பிக்கொண்டே இருக்கிறோம்.
பல மாயைகள் கவர்ச்சிகள்,
நாம் நம் குறிக்கோள்களை மறந்து மயங்கி விடுகிறோம்.
நாம் நம் முதலீட்டை இழந்துகொண்டே இருக்கிறோம்.
90. இந்த உடல் விளக்கு. உயிர் திரி.
இரத்தம் எண்ணெய்.
இவ்வாறான விளக்கு ஏற்றி எத்தனை ஆண்டுகள்
கடவுளை தரிசிக்க காத்திருப்பேன்.
அந்த விளக்கில் ஜ்வாலை ஏற்றி அவனை பெறுகின்ற
பக்தியில் உடலையும் மனதையும் ஈடுபடுத்துதல்
ஒருபெரும் தவம் சாதனை.
இதில் சிலர்தான் வெற்றிபெறுவார்கள்.
91.பகபவானே ! நீ என்கண்கள் வழியாக உள்ளே வந்து விடு.
நான் நீ வந்த பின் கண்களை மூடிக்கொள்வேன்.
பிறகு நான் மற்றவர்களை மற்றவர்களை
பார்க்கமாட்டேன் .
எனக்குள் இருக்கும் உன்னை மற்றவர்களையும் பார்க்க விடமாட்டேன்.
92. குங்குமக்கோடு வைக்கும் இடத்தில் கண் மை ஒருவரும் வைக்கமாட்டார்கள்.கண்களில் பகவான் எழுந்தருளிவிட்டால்
வேறு ஒருவரும் மனதில் வசிக்கமுடியாது.
எப்படி வரமுடியும்?
93. கடலுக்குள் உள்ள சிப்பி அளவில்லா கடல் தண்ணீரை குடிக்காமல் ,
தாகம் தாகம் என்று சுவாதி நக்ஷத்திரத்தில் விழும் மழை நீர்த்துளிகளை
எதிர்பார்த்து கடல் நீரை தூசிபோல் கருதுகிறது. நம் மனதில் இதைப்பெறவேண்டும் என்ற ஆசை இருக்கிறதோ எதைப்பெறவேண்டும்
என்ற மன ஈடுபாடு உள்ளதோ அதைப்பெறாமல் மற்றவை எல்லாம் சாரமற்ற பொருளாகிறது.
94. ஏழு ஸ்வரங்கள் ஒலி கேட்ட ,ஒவ்வொரு நொடியும்
விழாக்கோலமாக இருந்த வீடுகளும் இன்று காலியாகி அவைகளில் காகங்கள் வாழ்கின்றன. எப்பொழுதும் ஒரே மாதிரியாக காலங்கள் இருப்பதில்லை. மகிழ்ச்சி இருந்த இடத்தில் துன்பங்கள் சூழ்கின்றன .
மகிழ்ச்சியான கூடாரங்கள் துக்கமான கூடாரமாகின்றன.
இதுதான் உலக நடப்பாகும்.
95. உயர்ந்த கட்டிடங்களைப் பார்த்து ஏன் கர்வப்படுகிறாய்?
நாளையோ நாளை மறுநாளோ இந்த உயரங்கள் மண்ணோடு மண்ணாகலாம். நீங்களும் மண்ணில் சாய்ந்து விடுவீர்கள்.
மேல் புற்கள் முளைத்துவிடும்.
சூனியமாகிவிடும் . மகிழ்ச்சியான வீடுகள் முற்றங்கள்
ஒன்றுமில்லாமல் போய்விடும். ஆகையால் ஆணவம் கூடாது.
இந்த ஈரடி படிக்கும்போது தனுஷ்கோடி நினைவுதான் வருகிறது.
96. பிறப்பு -இறப்பை எண்ணி தீய செயல்கள் செய்வதை விட்டுவிடுங்கள்.
நீ செல்லும் வழியை நல்ல வழியாக எண்ணி -அதையே நினைவில் வைத்து
அதையே அழகாக மாற்றி முன்னேறுங்கள்.
97. காவலன் இன்றி பறவைகள் வயல்களின்
பயிர்களை காலி செய்துவிட்டன.
இருப்பினும் சில வயல்கள் மீதம் இருக்கின்றன.
நீ விழித்துக்கொண்டால் அவைகளை காக்கலாம்.
விழிப்புணர்வும் முன் எச்சரிக்கையும் இல்லாததால் தான்
மனிதன் நஷ்டமடைகிறான்.
98. உடல் என்ற ஆலயம் அழிந்துவிடுகிறது.
அதன் ஒவ்வொரு அங்கமும் அழிந்துவிடுகிறது,
இந்த உடல் என்ற ஆலயத்தைப் படைத்த பகவானை
தியானம் செய்து இந்த உடல் அழியாதவாறு கவனித்துக்கொள் .
99. இந்த உடல் அரக்கு ஆலயம்.
இதை நாம் வைரங்களாலும் விலையுயர்ந்த கற்களாலும் அலங்கரித்துக்கொள்கிறோம்.
இந்த உடல் தற்காலிக பொம்மை .அழியக்கூடியது.
நாம் முயன்று உழைத்து அதை அலங்கரிக்கிறோம்.
உடல் நொடியில் அழிவதை மறந்து விடுகிறோம்.
உடல் பச்சை மண் பொம்மை உடைந்து விடுகிறது.
எதிர்பாராமல் நாம் அறியாமலேயே அழிந்துவிடுகிறது.
100. இந்த உடல் அழியக்கூடியது.நீ இதை நிர்வகித்து சமாளித்துக்கொள்.
கோடிக்கணக்கில் ரூபாய்கள் சொத்துக்கள் இருந்தவர்களும் வெறுங்கையுடன் சென்றுவிட்டனர். ஆகையால் பணம் சொத்து சேர்ப்பதையே குறிக்கோளாகக் கொள்ளாதீர்கள். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக (பொருளுள்ளதாக )ஆக்கிக்கொள் .
சில நல்ல செயல்களும் செய்யுங்கள் .
No comments:
Post a Comment