▼
தமிழ் ஹிந்தி பணி
तमिऴ हिंदी सेवा।
++++++++++++++++++++
நீதிநெறி விளக்கம்
नीति नेऱिविळक्कम्
अपने से स्तर से छोटे लोगों को देखकर
हमें खुश होना चाहिए कि हम बड़े हैं।
अपने से शिक्षित लोगों को देखकर
इनके ज्ञान के सामने हम कुछ भी नहीं का
विचार करके ज्ञानार्जन में लगना है।
धन में हम अपने से निम्न लोगों को देखकर
खुश होना चाहिए।
ज्ञान में अपने से बड़े ज्ञानियों को देखकर अफसोस होकर ज्ञान बढाने में मन लगाना चाहिए।
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
எற்றே யிவர்க்குநா மென்று. 14
தம்மை விடக் குறைந்த செல்வம் படைத்தவரைப் பார்த்து, தாம் பெற்றிருக்கும் செல்வம், “அம்மா! எவ்வளவு பெரிது” என்று எண்ணி உள்ளம் மகிழவேண்டும். தம்மைக் காட்டிலும் கற்றவரைப் பார்த்து “இவர் முன்னிலையில் நான் என்ன?” என்று தன் கருத்தை மாற்றிக்கொள்க.
குமரகுருபரர் இயற்றிய நீதிநெறி விளக்கம்
யாப்பு – வெண்பா
காலம் 17 ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment