வரை திறை அருகில்
केनवास के पास
ஹிந்தி மூலம் –முனைவர் ஜஸ் ப்ரீத் ஃபலக்
हिंदी मूल — डाक्टर जसप्रीत क़ौर फ़लक
தமிழாக்கம் — பழநி சே. அனந்தகிருஷ்ணன்.
அறிமுகம்–परिचय
காதல் உணர்வுகளின் வெளிப்பாடு
================
காதல் பிரார்த்தனையை விட பெரியது.வேண்டுதல்கூடாது.இயற்கையாக வர வேண்டும்.காதலுக்காகஇனிமேல் கை உயர்த்த மாட்டேன்.என்று முடியும் இந்த காதல் கவிதை நூல் காதல் தோல்வி அதனால் ஏற்படும் மன வேதனைகள்,காதலன் விட்டுச் சென்ற பின் இணைந்து சேர்ந்து சுற்றிய அனுபவங்கள்,பேசியஉரையாடல்கள்,
இலையுதிர் கால வசந்தகால கற்பனைகள்,
இரண்டிலும் கல் போன்று காதல் சமநிலையில் இருப்பது,காதல் ஒரு முழுமை பெறா பயணம்,
புகைவண்டித் தொடர் தண்டவாளம் போல் இறுதி வரை பிரிந்தே செல்லுதல், காதல் படகு சிதறிய நிலை, சென்ற காதல் விமானத்தின்
வீழ்ச்சி, அதனால் ஏற்பட்டகாயங்கள், முதன் முதல் காதலன் தொட்ட உணர்வு என்று ஆழ்மன உணர்ச்சி வரிகள், இயற்கை அழகை இரசித்த படிஉலாவியபள்ளத்தாக்குகள்,தோட்டங்கள்,
நந்தவனங்கள் கடற்கரை மணல்கள், இறுதிவிடை பெற்று சென்ற பின் பிரிவு அலைகள் இழுத்துச் சென்று போட்ட இடம் மணற்பாங்கானபாலைவனம்.
தனிமையில் நான். வாழ்க்கையின் இறுதி பக்கத்தில் வேறு ஒருவர் பெயர் சேர்க்க முடியாது. என்னிடம் தோற்பதற்கு எதுவும் இல்லை. என்ற ஆழ்மன உணர்வு பூர்வமான வேதனைகள்.
காதல் உணர்வுமிக்க ஆழ்மன எண்ணங்களை,
மகிழ்ச்சியான இணைந்த நேரங்களை, பிரிந்த பிறகு ஏற்பட்ட மனத்துயரங்களை வாசகர் மனதில் பதித்த கவிதைகள்” முனைவர் ஜஸ்ப்ரீத் ஃபலக்” அவர்களின் “கேன்வாஸ் கே பாஸ்” அதாவது “ வரை திறை அருகில்.”
அதன் தமிழாக்கம் நான் என் நடையில் என் தமிழில் எழுதியுள்ளேன்.
ஹிந்தி மூலம் பெண் கவிஞர் முனைவர் ஜஸ் ப்ரித் ஃபலக் பெயரின் தமிழ் பொருள் “ புகழ் பிரியை,”ஆகாயம்”.
வானளாவும் புகழ் பெற வாழ்த்துக்கள்.
பழனி சே. அனந்தகிருஷ்ணன்,தமிழ்நாட்டு ஹிந்தி பரப்புனர்.
[ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், ஹிந்து மேல் நிலைப் பள்ளி,திருவல்லிக்கேணி,சென்னை.]
அலைபேசி எண்–8610228658
—-------------------------------------------------
வரை திறை அருகில்
केनवास के पास
ஹிந்தி மூலம் –முனைவர் ஜஸ் ப்ரீத் ஃபலக்
हिंदी मूल — डाक्टर जसप्रीत क़ौर फ़लक
தமிழாக்கம் — பழநி சே. அனந்தகிருஷ்ணன்.
—---------------------------------------
पलाश के फूल ( पृष्ठ संख्या -19)
புரசு பூக்கள்
—------------
எதிர்பார்ப்பின்
வெப்பம் அதிகரித்ததே.
பரசு மலர்கள்
மலர்ந்து விட்டனவே.
ஆனால்,
நீ வரவில்லையே.
தோழிகள் இலுப்பை பொறுக்கிக்கொண்டிருக்கின்றனர்.
வழிகளில் மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.
புள்ளினங்கள் கிரீச்சிட்டுக்கொண்டிருக்கின்றன.
தோழிகள் பாடிக் கொண்டிருக்கின்றனர்.
பிரிவின் வலி எழுப்பிக்கொண்டிருக்கின்றது.
வந்து விடு.
புரசுப் பூக்கள் அன்றாடம் மலர்வதில்லை
நிலமும் விண்ணும் தினமும் சந்திப்பதில்லை.
வந்து விடு.
(உன்னைத் தவிர எனக்கு வேறு ஒருவருமே இல்லை. நீ அருகில் இருந்தால் ,மனம் மலர்கிறது. நீ விலகிச் சென்றதும், என் மனம் தொட்டாச் சிணுங்கி போல் வாடிவிடுகிறது.
வஸந்தத்தின் உறவு புதிய இலைகளுடன்,
புதிய பூக்களுடன் இருப்பது போல் என் உயிர் வாழ்தல் இப்படி இணைந்தே இருக்கிறது.என் சுவாசம், என் காலடி, உன்னால் தானே இயங்குகின்றது.அருகில் காலடி சத்தம் வருவது போல் அருகில் வருகிறது.)
இந்த மாலை நேரம் மறைந்து விடும்.
நொடியில் இந்த காட்சி மாறிவிடும்.
இன்று இரு துடிக்கும் உள்ளங்களும் இணைந்து விட்டால்புரசுப்பூக்கள் உள்ளங்களிலும் மலர்ந்து விடும்.
தமிழ் மொழிபெயர்ப்பு
சே. அனந்த கிருஷ்ணன்.*
=============================
मुहब्बत --காதல் ( पृष्ठ 20.)
உள்ளங்கை சிவக்க
மருதாணியால் காதலை
எழுத மாட்டேன்.
அதன் வண்ணம்
சில நாட்களில் வெளிரிவிடும்.
காகிதத்தில் காதலை எழுதினால்
அது எரிந்து விடும்.
அழுகியும் விடும்.
மரத்தின் தண்டில் காதல் எழுதினால்
புயல்கள் மரத்தை சாய்த்து விடும்.
காதலை கற்களில் பொறித்தால்
பாறைகள் தேய்ந்து பிளந்தும் விடும்.
காதலை ஓடும் நதிகளில் எழுதினால்
நதி கடலில் கலந்து விடும்.
காதலை மணலில் எழுதினால்
மணல் காற்றில் சிதறிவிடும்.
காதலை சுவற்றில் எழுதினால்
சுவர் விழுந்து விடும்
காலத்தின் மாற்றத்தால்
பாசி படர்ந்து விடும்.
காதலை பசுமையான கொடிகளின்
இலைகளில் எழுதினால்
வெயில் காலத்தில்
கொடிகள் காய்ந்து விடும்.
காதலை கண்ணாடியில் எழுதினால்
கண்ணாடி ஒருநாள் உடைந்து விடும்.
காதலை பூக்களின் இதழ்களில் எழுதினால்
சில நாட்களில் பூக்கள் காய்ந்து
கிளைகளில் இருந்து உதிர்ந்து விடும்.
காதலை நான் உள்ளம் என்ற நூலில்எழுதுவேன்.
அதை யாராலும் அழிக்க முடியாது.
காதல் பலகையில் எழுதும் பொருள் அல்ல என்பதை அறிந்து கொண்டேன்.
(காதல் ஓவியம் வரைந்து வரைந்து
உன் பெயரை எழுதி-எழுதி
என் விரல்கள் தேய்ந்து விட்டன.
என் கைகளை முத்தமிட்டு பார்,
காதல் மணம் வீசும்.
காதல் ஓவியம் இல்லை, அது
நமக்கு அக்கம் பக்கத்தில்
சிதறிக் கிடக்கின்றன.
உணர்கிறேன்.
நீயும் இதைத் தானே நினைக்கிறாய் அல்லவா?)
தமிழ் மொழிபெயர்ப்பு
சே. அனந்த கிருஷ்ணன்.*
—----------------------------------------------------------------
காதல் சிலை.प्रेम की शिला (पृष्ठ संख्या-24)
இளம் வயதில் அந்த பருவம்
நீ மென்மையான கதிர் போல.
நான் தாழம்பூ இதழ் போல.
மனதில் வண்டுகள்
ரீங்காமிட்டுக் கொண்டிருந்தன.
மனதில் தாமரை மலர்ந்து கொண்டிருந்தது.
கனவு நிறைந்த கண்களில்
காதல் விழித்துக் கொள்ளத் துவங்கியது.
நீர்வீழ்ச்சி போல் கலகல என சிரிப்பது,
பைத்தியக்கார காமக் கண்களாகி விட்டது.
(நான் பைத்தியக்காரி உன் காம லீலைகளுக்காக துடித்துக்கொண்டிருக்கிறேன்.
என்னையும் காலில் இடறி உயிர் கொடுங்கள். “அஹல்யாவைப் போல பல யுகங்களாக உன்னுடைய தொடு உணர்வுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
வந்து போகும் தொடர் நிகழ்வுகளையையும்,
என்னுடைய எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும்
நீண்ட காலத்தையும் முடிவுக்குக் கொண்டுவாருங்கள்.)
கிட்டாதது கிட்டியது போல்
ஆசையின் முதல் நட்சத்திரம் உதித்தது.
நான் தீண்ட ,ஆவலுள்ள புஜங்களில்
சுற்றி வளைத்துக் கொண்டேன்.
மனதில் உணர்வுகளின் பூமி
மணக்கத் தொடங்கியது .
பவளமல்லி போன்று
நம்பிக்கை என்ற ஆறு
துள்ளத் தொடங்கியது.
திடீரென்று மன ஆகாயம் ,
ஒழுங்கற்று தாறுமாறாகியது.
என் ஆசைகளை
தூரிகை கொண்டு அழித்துவிட்டது.
மனதின் முற்றத்தில் மணந்த
துளசி வாடிவிட்டது.
வசந்த்தத்தின் கனவுகள்,
கனவாகவே ஆகிவிட்டது.
எத்தனையோ இலையுதிர் காலங்கள்,
வசந்தத்தின் நீண்ட
ஆடை அணி அணிந்து
ஆனால்
அந்த காதல் சிலை மட்டும்
அசையாமல் கிடந்தது.
தமிழ் மொழிபெயர்ப்பு சே. அனந்த கிருஷ்ணன்.*
==================================
கைரேகைகள் —-
हस्त रेखाएँ (पृष्ठ संख्या-26)
என் கைகளில் இருக்கும் கை
ரேகைகள் போன்றே
கிளைகளில் இருந்து உதிர்ந்த
பழுத்த இலைகளின் மீதும்.
அதே கோடுகள்.
காலத்தின் புயல் அவைகளை
கிளைகளில் இருந்து ஏன் உதிர்த்தது?
அவைகளுடன் சேர்ந்து வாழ்ந்த காலம்
அவைகளை ஒரே அடியாக மறந்து விட்டதே.
அந்த இலைகளுக்கும்
பருவகாலங்களின் மீது
காதல் இருந்தது,
புதிய பருவகாலங்களின்
எதிர்பாரப்புகள் இருந்தன.
அந்த இலைகள் எங்கே போகும்?
காற்றும் இதை நினைக்கவில்லை.
எப்படிப்பட்ட சூழலில் சிதறும்.
இலைகளின் கை ரேகைகள்
என் கை ரேகைகளுடன்
எவ்வளவு இணையாக உள்ளன.
என் வாழ்க்கையும்
இலைகளைப் போன்றே
சிதறிக் கிடக்கிறது.
என் கைகளில் என்ன எழுதி உள்ளன?
என்பதும் எனக்குத் தெரியாது.
இந்த ரேகைகளில் எதுவும் எழுதவில்லை-என்றால்
அதிலிருந்து முற்றிலும் விதி
தனிப் பட்டே இருந்திருக்குமே?
மக்கள் சொல்கிறார்கள்.
எழுதியிருந்தால்
இலைகளை கிளைகளில் இருந்து
உதிர்க்கும் முன்பே காற்று
அவைகளைப் படித்திருக்குமே.
( குழந்தைப் பருவத்தில் உதிர்ந்த இலைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது இந்த பழுத்த உதிர்ந்த இலைகளைப் போன்றே என்னுடைய வாழ்க்கையும் ஒன்று போல் இருக்கும் என்று நினைக்கவில்லை.)
தமிழ் மொழிபெயர்ப்பு
சே. அனந்த கிருஷ்ணன்.*
===========================
நினைவுகளின் நெருப்பு பிழம்புகள்.
यादों के अलाव (पृष्ठ संख्या-27|-
—---------------------
உன் உதடுகள் என்
காதோடு பேசிய காதல் சுவை–என்னை
எரித்து குளிரில்
வேதனைச் சுவை தருகின்றன.--
நீ பேசிய போதை போகவில்லை.
நீ காதலின் இளமை இரவுகளி்ல்
விட்டுச் சென்றுவிட்டாய். –என்
மன வெற்றிடத்தில்
துரதிர்ஷ்டம் பரவிவிட்டது.
நீ திரும்பிவந்தாலும்
என்னிடமிருந்து அமைதியையும்
களைப்பான சுவாசத்தையும் தான் அறிவாய்.
(நான் முழுமை அடையாத இரவில் எங்கே போவேன். முழுமை அடையாமை அனைவருக்கும் வேதனை தருமே.வந்துவிடு. இந்த முழுமையற்ற இரவை முழுமைப் படுத்து.
களைத்த கண்களில் முத்தமிட்டு விடு. ஒரு முறை வந்து என் வாழ்க்கை மணலில் மலர்ந்து விடு)
மனம் என்ற பாலைவனத்தில்
சிதறிய மணலை
ஒரு தோல்வி அடைந்த காதல்
உணர்வின் துண்டுகளை.
பாழடைந்த வாழ்க்கையை
மறைப்பதாய் இருந்தால் மறைத்து விடு.
மறைத்து விடுவாயா?
நான் தூள்- தூளாக சிதறுவதற்கு முன்
மறுபடியும் வந்து விடு.
தமிழ் மொழிபெயர்ப்பு
சே. அனந்த கிருஷ்ணன்.*
—----------------------------------------------------------
மாலை வீணானது
साँझ की डोर (पृष्ठ संख्या -28)
—------------
மாலை நேரம் வீணானதே
உணர்வுகளின் ஒரு செய்தி
உன்னை அடையும் முன்பே
நின்று விட்டதே.
தீப்பொறி போன்று
சிறிது ஒளி காட்டி
கனவு போல்
ஒளிர்ந்து அணைந்துவிட்டதே.
ஆசைகள் துடித்து அடங்கிவிட்டதே.
(இந்த இருள் எல்லை இல்லாததா? உணர்வுகளின் விளக்கேற்றி இந்த இருளை அகற்ற முடியாதா? ஒவ்வொரு கனவையும் பொருளுள்ளதாக்க உன்னால் முடியும் என்பது எனக்குத் தெரியும். நான் காதல் என்ற பழுக்காத
கயிற்றால் ஆன சக்கரவியூகத்தில் நான் இதை முறிக்கவும் முடியாது.இதை எப்பொழுதும் வீணான மாலை பொழுதில் சுற்றிக் கொண்டிருப்பேன்)
ஓசையின்றி ஆன்மாவை
காயப் படுத்தி
நீங்காத வடுவை உண்டாக்கி
வாழ்க்கையை நாசப்படுத்திவிட்டது.
கையில் இருந்த நம்பிக்கை
கதிர் நழுவிவிட்டது.
வாழ்க்கையின் பக்கம் மாறிவிட்டது.
வாழ்க்கைப் புத்தகத்தின் ஒரு
அத்யாயம் முடிந்துவிட்டது.
ஏதோ ஒரு உலகில்தொலைந்து,
செல்லும் வழி தெரியாமல்
போவதில் இருந்து
நான் தப்பித்து விட்டேன்.
அடிக்கடி மனமுடைந்து
வருந்துவது தான் உன்னை
சந்திக்கும் வழியாக.
(உன்னை சந்திக்க வேண்டும், சந்திக்கவேண்டும்.ஒரே ஒரு வேண்டுகோள்–
உன் பின்னால் நிழல் போல் தொடர்ந்து பல யுகங்கள் கழிந்துவிட்டன. நில் .நான் படி ஏறிக் கொண்டிருக்கிறேன்)
அதிக அமைதியாக
இருக்க விரும்புகிறேன்.
உன்னுடன் இப்படித்தான் பேச வேண்டும்,
மீதமுள்ள உறவை இப்படியே
தொடர விரும்புகிறேன்,
எப்படி என் நிலையை விளக்குவேன்.
தமிழ் மொழிபெயர்ப்பு
சே. அனந்த கிருஷ்ணன்.*
—--------------------------------------------
பாதி பயணத்தை நோக்கி
अधूरे सफर की ओर ( पृष्ठ संख्या 30)
—-----------------------------------------
உரைநடையின்றி,
விவாதமின்றி,
நினைவுகளி்ன் மலர்ந்த வெய்யிலில்
நீ கொடுத்த வாக்குறுதிகளை
இன்றும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அமைதியற்ற வசந்தங்களில்
மனம் கவரும் காட்சிகளில்
வாழ்க்கையின் சிதறிய வண்ணங்களில்
உன் அன்பின் பரப்பை
குங்குமம் பரசுப் பூக்களில்
இன்றும் தேடுகிறேன்.
பனித்துளிகளில்
ஒளிரும் கொன்றைமலர்களில்
பவளமல்லிகை மணங்களில்
உன் அன்பின் மணத்தைத் தேடுகிறேன்,
நீ முதலில் தொட்ட உணர்வை
இன்றும் உணர்கிறேன்.
[ தினந்தோறும் உன் நினைவாகவே தூங்குகிறேன். உன் எண்ணங்களால் விடிகிறது.
உன் கையைப் பிடித்து பேசாமல் நடக்கிறேன்.
மாலை மங்கிய ஒளியில் தொலைந்து விடுகிறேன். இந்த பயணம் நம்மை எங்கே அழைத்துச் செல்லும்.]
தோட்டங்களில், நந்தவனங்களி்ல்
குயிலின் குரலில்,
வண்டுகளின் ரீங்காரத்தில்,
மழையின் ரிம் ஜிம் ஓசையில்
நதிகளின் கலகல ஓசைகளில்
அழகுப் பொருள்களில்
உன் சிதறிய நினைவுகளில்
உணர்வுகளின் கடலில்
அன்பின் காவிய கங்கையில்
சொற்களின் தென்படா ஆழத்தில்
உன் அன்பின் தடையில்லா ஓட்டத்தில்
தேடிக் கொண்டே இருக்கிறேன்.
அழகான பருவகாலங்களில்
அடர்ந்த மேகங்களில்
தென்றல் காற்றில்
அழகான இயற்கை காட்சிகளில்
நிலத்தில் இருந்து வானம் வரை
உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
ஆம், பல ஆண்டுகளாக,
என் இதயத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன்.
வருத்தமான காற்றின் காரணமாக
என் மனம் துடித்துக் கொண்டிருக்கிறது.
பிரிவின் காரணமாக பருந்து போல
முடிவு வரை மறைக்கப் படுகிறது.
கவலை மனம் மலை போல
உன் நினைவின் மேகங்கள்
நின்று நின்று நகர்கின்றன.
கடந்த கால சூன்யமான
வழிகளில்முடியாத
பயணங்களை நோக்கி
மெதுவாக நீ
தொட்டது போல
தெரிகிறது.
_—-----------------------------------
[ நீ என் உலகத்திற்கு ஏன் வந்தாய்? நீ போக வேண்டுமானால் திரும்பி வரமாட்டாய் என்ற செய்தி தெரியும். ஒரு வயது வரை உன்னை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன், நீ என் இதயத் துடிப்பை என் கண்களில் பார்த்துக் கொண்டிருக்கலாம்]
தமிழ் மொழிபெயர்ப்பு
சே. அனந்த கிருஷ்ணன்.*
===============================
நான் கேட்டேன்.
मैंने पूछा -[पृष्ठ संख्या–32.]
—-----------
நான் கேட்டேன் :—--
என் மனதின் ஏரியில்
தாமரை போன்று மணப்பாயா?
என் ஆர்வத்தின் ஆகாயத்தில்
நிலவாக வருவாயா.
என் உணர்வுகளின் கடலில்
காற்றாகி அலைகளில்
குறும்புகள் செய்வாயா?
மீண்டும் எப்பொழுதாவது இந்த
வழியில் செல்வாயா?
என் மனம் என்ற தாகமான பூமியில்
பொறுமை என்ற மேகத்தை பொழிவாயா?
நீ என்னுடைய கட்டாயத்தை
துரோகம் என புரிந்து கொண்டாயா?
என் வாழ்க்கையின் எண்ணங்களாகி
என் மனதில் துடிப்பாயா?
ஆனால் அவன் பேசாமல் இருந்தான்.
எதுவும் பேசவில்லை.
[ நான் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன்.
அவனின் ஒரு சொல்லிற்காக.அவனின் மௌனத்தோடு தினந்தோறும் பேசுகிறேன்.இன்று கேட்க விரும்பியிருந்தேன்ஒரே ஒரு சொல்.]
நான் மறுபடியும் கேட்டேன்–
நான் செல்லும் வழியில்
என் விருப்பங்களின்
விண்மீன்களை பரப்புவாயா?
மறுபிறவியிலும் என்னை எதிர்பார்ப்பாயா?
என்னை சந்திக்கும் தைரியம் இருக்கிறதா?
ஆனால் அவன் எதுவும் பேசவில்லை.
மறுபடியும் நான் கேட்டேன்:--
நம்பிக்கை உணர்வாகி
என் பாடல்களை இயற்றுவாயா?
நிழலாக என்னுடன் வருவாயா?
அழகான கனவுகளாக என்
கண்களில் வளர்வாயா?
அவன் விண்ணைப் பார்த்துக் கொண்டே
வருத்தமான சொற்களால் சொன்னான்:---
“நான் கண்களை மூடும் போதெல்லாம்
நீ மட்டும் தான் தெரிகிறாய்.
ஆணையிட்டு சொல்கிறேன்—
நீ என் காதலை உணரும் போதெல்லாம்
நான் இந்த வழியில் செல்வேன்.
நான் ஒரு பைத்தியக்காரி!
அவனுடைய சுயநலத்தைப் புரிந்துகொண்டேன்.
சுருக்கமாக கூறி மிகவும் விளக்கமாக
மீண்டும் பிரிவதை கூறிச் சென்றான்.
இந்த தொடர் நிகழ்வும் நன்றாகவே உள்ளது.
[ இந்த தொடர் நிகழ்வுகள்,இந்த உறவுகள் எவ்வாறானவை என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். திறந்திருந்தால் உறவுகள் கட்டுண்டிருக்கும்,நான் உன்னுடன்
சூன்யமாக விரும்புகிறேன்]
தமிழ் மொழிபெயர்ப்பு
சே. அனந்த கிருஷ்ணன்.*
===============================
ஒளிரும் நிலவொளி
[भीगी चाँदनी -](पृष्ठ संख्या –34)
மென்மையான நிலவொளியில்
பிரபஞ்சம் முழுவதும் ஒளிர்கிறது
மன எண்ணங்கள் மணம் வீசுகின்றது.
ஆசைகளின் பவித்திரமான பனித்துளிகள்
பூக்களில் இருந்து விழுந்து கொண்டிருக்கின்றன.
உன் மணத்தில் நான் ,
நனைந்து கொண்டிருக்கிறேன்.
நீ கட்டிப் பிடிப்பதில் நான்
கசங்கிக் கொண்டிருக்கிறேன்.
உடல் முழுவதும் தீயாய் சுடுகின்றன.
நீ மிக அருகில் இருக்கும் போது
மூச்சுக் காற்றில் கரைந்துகொண்டிருக்கிறேன்.
கண்களில் தூக்கம் இல்லை.
கனவுகளும் இல்லை.
மணம் போல் வந்து என்
தனிமையில் மணம் வீசிச் செல்கிறாய்.
உன்னை நான் நம்பிக்கை துரோகி என
சொல்லவும் முடியாதே.
இன்று நீ என் உணர்வுகளின்
ஏரியிலே இறங்கி வந்து விடு.
நீயும் நனைந்து
என்னையும் உன் அன்பின்
பனித்துளிகளில் நனைத்து விடு.
உன் அன்பின் மொட்டுகளில்
பிரிவின் வேதனைக் கண்ணீர்
நிரம்பி வழிகிறது.
மன முற்றத்தில் பரசு மணம் வீசுகின்றது.
உரைஆடலின் மோகபாசம்
இழுத்துச் செல்கின்றது.
மரங்களைச் சுற்றிப் பிணைந்த
கொடிகள்
வேதனைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.
மன வேதனைகள்
பறந்து கொண்டிருக்கின்றன.
காதலின் தொடுவானத்தைத்
தொடவிரும்பகின்றன.
இதழ்களில் பரவும் பேராசைகள்
மென்மையான குரலில் மனதின்
துடிப்புகளை இன்று சொல்லிக் கொண்டிருக்கின்றன.
பனித்துளிகள் பூக்களை நனைப்பது போல்
எனக்குள் அப்படியே ஈரமாக்கி விடு.
[உன்னுடைய பெயரை பனித்துளிகளி்ல் எழுதும் விருப்பத்தில் பூக்கிளைகளில் உள்ள முட்கள் அடிக்கடி குத்துகின்றன. காதல் காயங்கள் அடிக்கடி வலி தருவது போன்று..மெலிதாக –இனிமையாக…இன்று பனித்துளிகள் மேல் உன்னுடைய பெயரை எழுதவில்லை. முட்கள் குத்தி காயப் படுத்திக் கொண்டிருந்தாலும் உன் பெயரை எழுத முயற்சி செய்துகொண்டே இருப்பேன்.]
தமிழ் மொழிபெயர்ப்பு
சே. அனந்த கிருஷ்ணன்.*
==============================
விரகதாபத்தின் கவிதை.
जुदाई की तहरीर (पृष्ठ सं०.36-39)
உன்னைத் திரும்பிப் பார்த்து குரல்
கொடுப்பது எப்படி? –முதலிலேயே
நீ வெகு தூரம் சென்று விட்டாயே!
உன் நிழலை எப்படி பார்ப்பது?
என் கையின் ரேகைகளில்
என் தலைவிதியை எழுதும் முன்பே
நீ மிக தூரம் சென்று விட்டாயே!
எப்படி உன்னை அடைவேன்,
அறியாத எண்ணங்களில்,அழகான பருவகால மலர்கள் மலரும் முன்பே
நீ மிக தொலைவில் சென்று விட்டாயே!
என் மூச்சுக் காற்றால் உன்னை எப்படி
நிரப்பி தொடுவேன் ?
உன் காதல் வசந்த்த்தில் என்
மனதின் முற்றத்தில் மணம் வீசும் முன்பே
நீ மிக தொலைவில் சென்றுவிட்டாயே!
தூக்கமா? கனவா?
இனிமையான உணர்வா?
காலத்தின் இனமையான இராகங்கள்
உன்னை கண் நிறைய காணும் முன்பே
நீ மிக தொலைவில் சென்று விட்டாயே!
நான் என் ஆத்மாவில்
உன் பெயரை எழுதும் நேரத்தில்
உனக்கு அனைத்தும் சமர்ப்பிக்கும்
நேரத்தில் தட்டும் முன்பே
நீ மிக தொலைவில் சென்று விட்டாயே!
[நீ என் மன ஆழத்தில் சிதறும் ஓசைபோல் பரவி விட்டாய். நீ திரும்பி பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் நான் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஓசைக்கு உருவமில்லை என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால் உன் முகம்,உன் கண்களில் அந்த கவர்ச்சி
நீ தொலைவில் சென்றாலும் என்னருகில்
இருக்கவேண்டியிருக்கும்]
உன் கண்களி்ல் என் பெயரை
எப்படி படிப்பேன்?
விதியானது பிரிவின் எழுத்தை முன்பே எழுதிவிட்டதே.
என்னை நீ படிக்கும் முன்பே
நீ வெகு தொலைவில் சென்றுவிட்டாயே!
உன்னிடம் பல பிறவிகள்,
பிறவித் தொடர்ச்சிகள்
எப்படி பேசுவேன்?
இரண்டடிகள் கூட என்னுடன் வரவில்லை,
நீ வெகு தொலைவில் சென்றுவிட்டாயே!
என் நினைவில் உன் பெயரை
எப்படி எழுதுவேன்?
வாழ்க்கையின் அதிக வெப்பத்தில்
உன் தோளில் எப்படி சாய்வேன்?
மனதின் அருகில் வரும் முன்பே
நீ வெகு தொலைவில் சென்றுவிட்டாயே!
[ எப்படி நான் என் நிலை கூறுவேன்–நீ சென்றதுமே யாராவது இருக்கிறார்களா? நீ இல்லாமல் ஒவ்வொரு பருவகாலத்திலும் வருத்தமாக இருக்கிறேன்.நம் இருவருக்கும் உள்ள தூரம் எப்படி முடிவுபெறும். வந்து செல். ஏதோ ஒரு திசைக்கு செல்.அங்கு வந்து உன்னை சந்திப்பேன்..]
உன் ஆத்மா வரையுள்ள பயணத்தை,
தொலைவில் இருந்தே உணர்ந்தேனே.
உன்னை நான் ஒரு பகுதி தானறிந்தேனே.
ஒரு சந்திப்பிலேயே முடிவெடுத்து
காதல் பாடம் படிக்கும் முன்பே
அடுத்த பயணத்தி்ற்கு
நீ வெகு தொலைவில் சென்றுவிட்டாயே!
நான் உனக்காக ஆழ்ந்த சஞ்சலமான
கவிதைகள், பாடல்கள், எழுதியிருந்தேன்.
அந்த பாடல்களை கேட்கும் முன்பே
நீ வெகு தொலைவில் சென்றுவிட்டாயே!
உனக்கு எப்படி நான் சொல்வேன்,
வேதனைகள் நிறைந்த கதைகளை உன் செவிகளில், சொற்கள் மெழுகு போல் உரைந்து ஆழ்மனம் அமைதியாகிவிட்டதே.
காதல் கதை இணையும் முன்பே
நீ வெகு தொலைவில் சென்றுவிட்டாயே!
நீ என் எண்ணங்களில் மணம் வீசினாயே,
குண்டு மல்லிகை போன்றே உடனிருந்தாயே!
ஆனால் தண்டவாளங்கள் போன்று
விலகியே இருந்தாயே!
குறிக்கோளை அடையும் முன்பே
நீ வெகு தொலைவில் சென்றுவிட்டாயே!
[ தலைவிதி எப்படியோ..என் கைரேகைகளில் உன் பெயர் எழுதவில்லை. என்னை கைவிட்டுவிட்டு நீ எங்கே சென்றுவிட்டாய்.
நீ இன்றி எவ்வளவு தனிமையில் நான்
இருப்பதைஎண்ணவே இல்லையே.
போகத்தான் நினைத்திருந்தால் அடிக்கடி ஏன் வருகிறாய்–ஒரு முறை வந்துவிடு காலம் போன்று,மணம் போன்று ,கடந்த பருவகாலம் போன்று ,அகவை போன்று]
உன்னருகில் அமர்ந்து காதல் சுவை
சொற்களை எப்படி பேசுவேன்?
ஆவணிமாதம் முதல் மழை வரும் முன்பே
நீ வெகு தொலைவில் சென்றுவிட்டாயே!
காதலின் அனைத்து மேகங்களும் கருத்ததுவே.
மனத்தின் புகார்களின் அனைத்து
சொற்களும் சுருங்கிவிட்டன.
நாம் இருவரும்ஒருவர் மற்றவர்களை
அறியாமல் இருந்து விட்டோம்.
ஒருவர் மற்றவர்களின்
மோஹத்தில் வஞ்சிக்கப் பட்டோம்.
ஒருவர் மற்றவர்களுக்கு இறுதி விடை அளித்து
தன் தன் பயணம் நோக்கி–
நீ வெகு தொலைவில் சென்றுவிட்டாயே!
தமிழ் மொழிபெயர்ப்பு
சே. அனந்த கிருஷ்ணன்.*
—-------------------------=================
காயம்
जख्म -(पृष्ठ संख्या 40-42)
=================
நான் சொன்னேன்—
குளிர்கால காலை நேரம்,எவ்வளவு
அழகாக காட்சியளிக்கிறதில்லையா?
வா, ஓடுவோம்.
மாநகர புகைகளுக்கு அப்பால்,
இரைச்சலும் போட்டிகளும் கடந்த
ஏரிக்கு அப்பால்
கொன்றை மரங்களுக்கு அப்பால்
பசுமையான பாப்லா
மரங்களின் நீண்ட வரிசையில்
பனி மூடிய மலைகளின்
வெண்மைச் சிகரங்களைத் தொட
பிடிவாதமாக இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
மூடுபனியின் விரிந்த போர்வை
இவ்வுலகத் தீமைகளை சுற்றிக் கொள்கிறது.
அந்த மலை எவ்வளவு அருகில் தோன்றுகிறது.
வா,நீண்டதூரம் செல்வோம்.
கண்களை சில நிமிடங்கள் மூடிக்கொண்டு
சேர்ந்தே செல்வோம்.
அவன் சொன்னான்:--முடியாது.
அவைகள் மிகவும் தொலைவில் இருக்கின்றன.
நம்மிடமிருந்து அதிக மைல்கள் தூரம்
நமது அன்பின் குறிக்கோளைப் போல
வெகு தொலைவில்.
நான் சொன்னேன்—வா.
குளிர்கால வெயிலை
உள்ளங்கையில் நிரப்பி விளையாடுவோம்.
இந்த பள்ளத்தாக்கின் அந்தப் பக்கம்
பசும் புல் தரையில் படுத்துக் கொள்வோம்.
கையோடு கை கோர்த்து
சுகமான நொடிகளின் நினைவுகளை
மீண்டும் புத்தம் புதியதாக்குவோம்.
இயற்கையின் இந்த மென்மையான வெய்யில்
எவ்வளவு அழகாக நம் இருவருக்காகவே.
அவன் சொன்னான்–இல்லை.
அது அனைவருக்குமாக!
நான் சொன்னேன்:--வா.
ஏதாவது அறியாத வழியில் செல்வோம்.
அழகான மலைபள்ளத் தாக்குகளில்
மணங்களை ரசித்து எங்காவது
வெகு தொலைவிற்கு செல்வோம்.
அவன் கண்கள் கூறின–
நாம் திரும்ப வேண்டும்.
என்னுடைய கனவு விமானம்
வீழ்சி அடைவதை
பார்த்துக் கொண்டிருந்தேன்.
வயதான பின்பும் மனதில் ஒரு வலி
இன்றும் என்னை ஏரிக்கு அப்பால்
அழைத்துச் செல்கிறது.
சிதறிய நொடிகளை மிக தூரம் வரை
பார்க்கிறேன்.
அந்த மனக் காயங்களை
என் சுவாசக் காற்றை தொட்டுப் பார்க்கிறேன்.
[ அவன் எவ்வளவு தனிமையில்–நானும் தான்,
அவனுடன் இருந்த நொடிகள்,இன்றும் என்
கைகளை பிடித்துக் கொண்டிருக்கின்றன,தினந்தோறும் என்னை அழைக்கிறான். நான் அவன் நிழலில் செல்கிறேன். செல்லும் போதே வழியை மறந்து விடுகிறேன்.நான் எங்கே போவது?]
—-----------------------------------------------------==
मुहब्बत के गवाह ( पृष्ठ-43–45)
காதலின் சாட்சி
==============
இன்றும் உயிருடன் இருக்கிறது
என் உணர்வின் நொடிகள்
என் தோட்டத்தில் மணக்கும் பூக்களில்.
நீ என்னை பல ஆண்டுகளுக்குப் பின்
சந்தித்த போது முன்பு சந்தித்த
நொடிகளை நினைவு படுத்தினாய்.
நீ வந்த போது நான்
உன் பாதங்களில் அர்ச்சித்த பூக்கள்
நீ சென்ற பின் அவைகளை
என் தோட்டத்தின் மண்ணில் போட்டேன்.
அந்த நேரத்தில் நான்
வாடிய மலர்களை புதைத்து விட்டேன்.
ஆனால்
அந்த நொடிகளை புதைக்க முடியவில்லை.
என்
கண்களிலேயே வைத்துக்கொண்டேன்.
அந்த நொடிகள் வாழ்வதற்காக
பேசுவதற்காக நிலைத்து விட்டன.
நிலைத்து வாழ்வதற்காக
மீண்டும் மலர்வதற்காக.
.மணம் வீசுவதற்காக.
காலங்கள் நகர்ந்தன.
அந்த விதைகளில் இருந்து
முளைகள் வந்தன.
பெரிய செடிகளாக வளர்ந்தன.
இன்று அவைகளில்
அதே வாடிய பூக்கள்
நீ வந்தபோது வழியில் பரப்பியவை.
உன்னுடன் சேர்ந்து கனவு கண்டவை.
காலங்கள் கழிந்துவிட்டன.
ஆனால்
அந்த பவழமல்லியின் வாசனை
அப்படியே நிலைத்திருக்கிறது.
இன்றும் அதிலிருந்து
அதே மணம் வீசுகிறது.
[ சில உறவுகள் தன் இரத்த உறவுகளை விட அதிகம் நெருங்கி வருகின்றன.சுவாசிக்கும் போது உள்ளே வருகின்றன. உள்ளே ஒரு மூலையில் அமர்ந்து ஆயுள் முழுவதும் நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.முற்றத்தில் மணம் பரப்புகிறது. காலடி ஓசை போன்று கேட்டுக் கொண்டே இருக்கிறது. ]
உன் விருப்பம் நிறைந்த மணத்துடன்
புது புத்துணர்வுடன்
மீண்டும் உன் நினைவுகளுடன்
நேரம் போய்க் கொண்டிருக்கிறது.
என் காதல் என்ற கர்பத்திலிருந்து
மணம் நிறைந்தநிமிடங்களின் விதைகள்
முளைவிட்டு துளிர்த்துக் கொண்டிருக்கின்றன.
வாழ்க்கை என்ற மாலை நேரத்தில்
புத்துணர்வளித்துக் கொண்டிருக்கின்றன.
நமக்குப் பிறகும்
தோட்டத்தில் இருந்து
விருப்பத்தின் மணம் எப்பொழுதும்
சாட்சியாக வீசிக்கொண்டிருக்கும்.
இப்படியே
காதல் துளிர்த்துக் கொண்டிருக்கும்.
பூமி -ஆகாயத்தில்
உன் காரணமாகவே
இவ்வுலகில் காதலிக்க கற்றுக் கொள்ளும்.
[நாம் வாழ்க்கையில் காதலித்தால்,இயற்கையும் நம்மை காதலிக்கும். இயற்கை உள்ளங்களில்
காதல் மலர்களை மலராமல் செய்திருந்தால்
உலகம் ஆனந்தமாக இருக்காது.உன் காதல் பூக்களால் உலகம் அழகாக இருக்கிறது]
================================
தற்செயல்
===========
एक इत्तेफ़ाक (पृष्ठसंख्या-46 to49)
நான் அவனை சந்தித்தது தற்செயலாகத்தான்.
அவன் என்னிடம் சொன்னான்—
உன்னுடன் இந்த அழகான சந்திப்பினால்,
என் வாழ்க்கையின் சில நேரங்கள் அழகானதே.
எனக்கும் இப்படியே தோன்றியது,
நானும் அவனின் முற்றத்தில் தங்கிவிட்டேன்.
வருத்தமான வாழக்கை அழகாகியது.
மாயாஜாலம் போல அழகான பூங்கொத்து
அந்த சிவந்த மாலைநேரத்தில்,
நனைகின்ற நிலவு நதியிடம் சொல்வது போல்
தண்ணீரில் மெதுவாக இரங்கி வருகின்றது.
நேரங்கள்,நாட்கள்,மாதங்கள்,ஆண்டுகள்
கழிந்தன.
நூற்றாண்டுகளுக்குப் பிறகு
என் பூட்டிய இதயத்தை
திறக்க முயன்றது போல.
சந்திப்பு மகிழ்ச்சியோ இல்லையோ,
ஆனால் வயது என்ற காகிதம்
வெளிறிவிட்டது.
அவன் நீடூழி வாழ
ஒரு காரணமாகியது.
மனதிற்குள்ளேயே நான் சிலிர்த்தேன்.
அவன் காதல் மகிழ்ச்சியில் கரைந்து
இரவில் அன்பில்லா வெறுப்பாக
சுவசித்துக் கொண்டிருந்தேன்.
என் உள் மனதில் ஏதோ கனவின்
விதை வளர்ந்து கொண்டிருந்தது.
நான் அதன் அருகில்
சென்று கொண்டிருந்தேன்.
[ அவன் வந்ததே தெரியவில்லை.அவன் உலகில் நான் என்னை இழந்துவிட்டேன்.என் உலகில் இருப்பேன்.தற்செயலாக நான் என் உயிரையே பணயம் வைக்கும் அளவிற்கு -தற்செயலாக
முதல் முறையாக என் கால்களில் முத்தமிட்டான்.
ஆகாயமே பூமியில் இறங்கி வந்ததுபோல் எனக்குத் தோன்றியது.]
அவன் என் மனதிலும் மூளையிலும்
ஆட்சி செலுத்துவது போல் தோன்றியது.
என் மனதிற்குள் அவனை நினைக்கத் தொடங்கினேன்.
எனக்குள் அறியாமலேயே உணர்வுகளின்
ஆறு மீண்டும் ஒரு முறை
கொந்தளிக்கத் தொடங்கியது.
அதன் குரல் என்
உணர்வுகளை அழுத்தத் தொடங்கியது.
என் உடலில் இனிமையான
புல்லாங்குழல் இசைக்க ஆரம்பித்தது.
அவனுடைய காதலில் மூழ்குவதுபோலிருந்தது.
என் ஆசைகளை காலத்தின் தாழ்ப்பாழ்
போட்டு மூடியிருந்தேன்.
அந்த கனவுகள்
பிரம்மாண்டத்தி்ல் மன நிலவை
அலங்கரித்தேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு
கனவுகளில் ஆகாசகங்கை
உண்மை ஆகி
வாழ்க்கையில் ஒளிரத் தொடங்கியது.
காதலின் ரஜனிகந்தா
வாழ்க்கையில் புன்முறுவல் பூத்தது.
அவன் என் பையில் நன்றி என்ற
பொருளை நிரப்பிக் கொண்டிரு்ந்தான் .
அவனின் அன்புச் செல்வத்தால்
பணக்காரி ஆகிவிட்டேன்.
அவன் உணர்ச்சிமி்க்க வார்த்தைகளை
பூக்களின் மணம் போல
பிறவிப்பயன் போல கருதிவந்தேன்.
அந்த வார்த்தைகளின் மணம்
அங்கம் முழுவதும்ஆனந்தமளிக்கும்.
அவன் ஒரு கனவாக
என் வாழ்க்கையில் வந்தான்.
எனது மன நிறைவற்ற ஆன்மாவின்
அடர்ந்த இருளகற்றித்
தன் சுவாசத்திரியால்
எனது அணையும் விளக்கை
அணையா விளக்காக்கினான்.
வாழ்க்கைச் சுடரை ஒளிரவைத்தான்.
கனவுகள் நிஜமாகின.
நான் மணல் வீடு கட்டினேன்.
மங்கலான வழி, காய்ந்த சருகுகள்,
சோகமான காடுகள்
மிக தொலைவுவரை அமைதி
எங்களை மிக நெருக்கமாக்கின.
அவன் என் உதடுகளைத் தொட்டால்
உதடுகள் புரசு மலர்கள் போல் சிவந்தன.
அவனது அந்த முதல் தீண்டல்
அவனுடைய வெப்பமான சுவாசக்காற்று
என் அனைத்து அங்கங்களையும் தீண்டின.
அவனின் மணம் என் மனதில்
குடிபெயர்ந்தது.
பல பிறவிகள் வாழ்ந்தது போல்.
ஆயுள் முழுவதும் சேர்ந்தது போல்.
இப்போது என்னால் உன்னை பிரியமுடியாது.
நான் உன் அம்சத்தால்
சூரியனாகிவிட்டேன்.
ஆகாயத்தில் மிளிரும் சூரியன்.
உனக்குள் பல சூரியன்கள்
அதன் ஒரு அம்சம் நான்.
[ வாழ்க்கையில் பல நிகழ்வுகள் தற்செயலே. ஆனால் பல தற்செயல் நிகழ்வுகள் மிகவும் சவைமிக்கதாகவும் நினைவி்ல் நிற்பதாகவும்இருக்கின்றன.அவை வாழ்க்கையின் ஓட்டத்தையும்,
நோக்கத்தையும் மாற்றிவிடுகின்றன.
நான் இருளில் வழி தவறிய நிழல்.நீ தொட்டு
என்னை ஒளிக்கதிர் ஆக்கிவிட்டாய். நீ என் வாழக்கை வானத்தில் சூரியனாக பிரகாசிக்கிறாய். இந்த தற்செயல்ரகசியமானதே!]
எண்ணங்களின் சாரல்
+===
[ ख्यालों का सारल -पृष्ठ-50-51]
கவிதையின் மேகங்கள்
ஆவணியில் மட்டும் பொழிவதில்லை.
ஏரிக்கருகில் செல்லும் போது,
மனதின் ஒற்றையடிப் பாதையில்
பூக்களின் மேலுள்ள பனித்துளி
பார்த்துக்கொண்டே செல்லும் போது
இயற்கையின் அமைதியில்
பிரிவுத் துயரில்
வருத்தமான பருவத்தில்
இரவின் அமைதியில்
எங்கிருந்தாலும்
எந்தசமயத்திலும்
தூங்கும் போதும்
விழிக்கும் போதும்
உட்காரும் போதும்
சிரிக்கும் போதும்
பாடும் போதும்
சுற்றுலா செல்லும் போதும்
அலமாரியில் நூல்களை
அடுக்கும் போதும்
பழைய கடிதங்களை
பார்க்கும் போதும்.
துவைத்த துணிகளை
காயப்போடும் போதும்
மடித்து வைக்கும் போதும்
சமையலில் சப்பாத்தி உருண்டைகள்
உருட்டும் போதும்
பாத்திரங்களை அடுக்கி
வைக்கும் போதும்
திடீரென இந்த மேகங்கள்
மனத்திரையில் இருந்து
பொங்கிவருகின்றன.
மன முற்றத்தை
நனைத்து விடுகின்றது.
அதனால் நீ கொடுத்த
நாட்குறிப்பையும்
எழுதுகோலையும்
சமையல் அறையி்ல்
வைத்திருக்கின்றேன்.
அதி்ல் எழுதுகிறேன்
அன்பில் நனைந்து மூழ்கிய
கற்பனைக் கவிதைகளை
அதனால் எனது ரொட்டிகள்
கோணலாகின்றன.
ஆனால் சொற்கள்
முறையான வரிசையில்
எண்ணங்களின் சாரல்களி்னால்
அழகாக அமர்கின்றன.
நான் பல முறை
மாவிலேயே கவிதைகளக்
கட்டிவிடுகிறேன்.
என் சமையலறையில்
பாத்திரங்களல்ல
கவிதைகள்
சிதறிக் கிடக்கின்றன.
இந்நூலின் பாதி கவிதைகள்
சமையல் அறையில்தான் எழுதினேன்.
நம்புவாயா?
கவிதை எழுதுவதற்கு என
பருவகாலம்
குறிப்பிட்ட நேரம் காலம்
இடமென எதுவுமே இல்லை.
எண்ணங்களின் மழைச்சாரல்
எப்பொழுது வேண்டுமென்றாலும்
எங்கு வேண்டுமென்றாலும்
பொழியும்.
==================================
[வாழ்க்கையின் நடை தான் பிரார்த்தனை என ஓசா சொல்கிறார் . நீங்கள் எதைச் செய்தாலும் பிரார்த்தனை தான்.பிரார்த்தனை தனியாக செய்ய வேண்டியதில்லை.கவிதை என்பது உங்கள் அக்கம் பக்கத்தில் ,உங்களுக்குள்ளிருந்து கவிதை வெளிவந்து உங்களுக்குள்ளே பெருக்கெடுக்க வேண்டும்.
கவிதை தனிமையில் எழுதக்கூடாது. கவிதை மன இதழில் இருந்து வரவேண்டும். முயற்சிசெய்து கவிதைகளை அமைப்பது நியாயமற்றது. கவிதையின் ஆத்மாவை சித்திரவதை செய்யும் குற்றமாகும்.
கவிதை இயற்கையாக இருந்தால் செழிப்பாக இருக்கும்]
==================================
எதிர்பார்ப்பு
[इंतज़ार -पृष्ठ 52-53]
—----------------------------------------
மென்மையான கொடிகளைப் பிடித்து
நின்றுகொண்டிருக்கிறேன்.
எதிர்பார்ப்பின் கண்ணீர்
இமைகளில் மின்னுகின்றன.
ஆற்றில் தொலைவில் படகோட்டி
சோகப் பாட்டு
பாடிக் கொண்டிருக்கிறான்.
அறியாத ஒரு மாயாஜாலம்
மாலை நேர செந்நிறக்கதிர்கள்
வீசிக்கொண்டிருக்கின்றன.
பகல் மெதுவாக
மறைந்து கொண்டிருக்கின்றது.
மனம் சலித்துக் கொண்டிருக்கிறது.
மரங்களின் அமைதி
பருவத்தின் மது மயக்கம்
குற்றம் எதுவும் சாட்டமுடியாது.
எனக்கு தைரியம் கிடையாது.
சருகுகளின் காலடி ஓசைளும்
மனதில் அச்சமூட்டுகின்றன.
ஒவ்வொரு நொடியும்
வியப்பூட்டிக் கொண்டிருக்கின்றது.
என் நிழலைக் கண்டே
அச்சப்படுகிறேன்.
தானாகவே பேசிக்கொண்டிருக்கிறேன்.
நினைவுகள் வெள்ளம் போல.
மனது அமிலம் போல.
மாலை மறைந்தது
இரவு வந்து விட்டது
நீ வரவில்லை.
இது பெரிய விஷயமா?
இரவின் இந்த கல்லான கண்கள்
பயந்த கண்கள்.
அதிர்ஷ்ட கைகளிலிளிருந்து
நம்பிக்கை நட்சத்திரம் உதிர்கிறது.
ஒவ்வொன்றாக
கனவெல்லாம் களைகின்றன.
பறக்கும் மின்மினுப்பூச்சிகளின் கூட்டம்
என்னிடம் ஏதேதோ கேட்கின்றன.
நான் தைரியத்தை இழந்து
கொண்டிருக்கிறேன்.
அமைதியின் சுவரை
உடைத்துக்கொண்டு வா.
எனக்காக அனைத்தையும்
விட்டுவிட்டு வா.
குளிர்ந்த நிலவொளியில்
நடுங்கிக்கொண்டிருக்கிறேன்.
வா, வந்து உன் காதல் பட்டாடை
போர்த்த மாட்டாயா?
+===============================+
[ உலகில் கடினமான வேலை எதிர்பார்பதே என்று மக்கள் சொல்கிறார்கள். எதிர் பார்ப்பில் தான் கவர்ச்சி அதிகம். ஒவ்வொரு யுகத்திலும்
காதலர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.உன்னையும் என்னையும் கூட]
+============================
வீண் முயற்சி
नाकाम कोशिश पृष्ठ संख्या 54-55
—-------
ஒவ்வொரு முறையும் நான் விரும்பினேன்.
உன் அழகான புஜங்களில்
சுருண்டு கொள்ள.
ஒவ்வொரு முறையும் நான் விரும்பினேன்.
உன்னுடன் சேர்ந்து
நான் எனது குறிக்கோளை
அடைந்துவிடுவேன்.
ஒவ்வொரு முறையும் நான் விரும்பினேன்.
நான் விரும்பும் வண்ணம் பூச
நான் கனவில் கண்ட
உன் காதல் வானவில்லில் இருந்து.
[ எனது பிரமை -உன்னை எதிர்பார்த்து-இருக்கட்டும்.உன் கனவை -உனது நினைவை என் விரலில் சுருட்டி நெய்து கொண்டிருப்பேன்.]
ஒவ்வொரு முறையும் நான் விரும்பினேன்.
விண்மீனை தொட
உன்னை சக-பயணியாக்கி .
இதைத்தான் சொல்வாய்
இப்படிப்பட்ட கவிதை
நானும் எழுதுவேன்
ஆனால் உன் காதல்
நிலவு போல்
அதிகரித்தும் குறைந்தும்
இருளும் வெளிச்சமாக.
நான் எதிர்பார்ப்பு என்ற
கடல் கரையில்
மணலில் அமர்ந்து
உன் ஆசையின் சிறிது பெரிது
அலைகளில் விளையாடிக்கொண்டிருந்தேன்.
அவைகளை உள்ளங்கைகளில் நிரப்பும்
வீண் முயற்சி செய்துகொண்டிருந்தேன்.
ஏனென்று தெரியவில்லை
பிறகும் தோன்றுகிறது
ஒரு நாள் நீ வருவாய்
என்னுடைய முகத்தை உன்
கைகளில் தாங்கி கேட்பாய்
நீ தனியாக எப்படி இருந்தாய்?
==================================
முதல் சந்திப்பு
[पहला मिलन पृष्ठ संख्या 56-57]
பொன்னான வாழ்க்கையில்
காதலும்
இளம் வயதில் தான்.
ஏனோ தெரியவில்லை
காதல் நிறைந்த மனத்தில்
விக்கல் ஆரம்பித்தது.
மெதுவாக காதல் வண்ணதில்
மாறத் தொடங்கினேன்.
[உன் வண்ணத்தி்ல் மாறிய நான் என் சுய வண்ணத்தை மறந்து விட்டேன்.உன் உலகில் என்னை இழந்துவிட்டேன்.என் முற்றம் பூக்களால் நிறைந்து விட்டது.சுடு மணலில்
பைத்தியக்காரிபோல் ஆட ஆரம்பித்துவிட்டேன்.]
இந்த காதல் எப்போது அதிகரித்தது
என்பது தெரியவில்லை.
கைகளை மருதாணியால் அலங்கரித்தேன்.
நீ தொட்டது இன்றும் நினைவில்.
உன் கை என் கையில் மோதியதுமே
போதைக் காற்று வீசியதோ?
காதல் மேகம் பொழிந்ததோ?
அவைதான் காதலுக்கு சாட்சி.
பிறகு நாங்கள் எங்களை இழந்துவிட்டோம்.
ஒருவர் மற்றவருடன் கண்களாலேயே
பேசி ஆயிரம் வினாக்கள் பதில் பெறாமல்.
உதடுகள் அசையாமல் அமைதியாகவே
வெகு நேரம் பேசினோம்.
விடைபெற மனம் வரவில்லை.
உலகத்தையே வெற்றி பெற்றோம் என
எங்கள் கண்ணொளி கூறியது.
காதலின் அந்த துளிகளை
பூக்களின் மேலிருந்த
பனித்துளிகளின் மணம் வீசுவது போல்.
அந்த இளமையின் காதல்
என்னைப் போலவே இளமையாக.
========================
[ நீ எங்கிருந்தாலும் சரி, எந்த வண்ணங்களில் இருந்தாலும் சரி, நீ என் மனதில் வராமல் இருந்ததில்லை. ஒவ்வொரு நொடியும் இதுதான் உலகம். என் மனதின் முற்றத்தில் சூழ்ந்த பாக்கியத்தைப் போல .எனக்கு துன்பத்தை வரவிடுவதில்லை.]
=============================
सिमटी परतें
மடிந்த அடுக்குகள்
[सिमटी परतें (पृष्ठ-58-59)]
எனக்கு தெரியும்
உன் மனம் இன்றும்
என்னை விரும்புகிறது.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு
சந்தித்தாலும்
எந்த வித ஆனந்தமும் இல்லை.
உன் மனதில் ஒரு முறை
வாழ்க்கையின் அடுக்குகள் தேடி
நீ எப்படி இருக்கிறாய்?
நீ கேட்கமாட்டாய் என் நிலையை?
எனக்குத் தெரியும்,
ஏனென்றால் உனக்கு அச்சம்,
என்னிடம் கேட்டதுமே
இதயத்தில் அடங்கியுள்ள காதல்
கண்ணீ்ர் போன்று வழிந்துவிடக்கூடாது.
என் மனம் அந்த காதல் நினைவுகளி்ல்
தேம்பி அழக்கூடாது.
என் பிரிவுத் துயரால்
நான் எனது வலிமையை
இழந்துவிடக்கூடாது.
மனத்தின் கம்பி அறுந்துவிடக்கூடாது.
உன் புஜங்களைத் தழுவ
மனதில் ஆசைவரக்கூடாது.
மீண்டும் நினைவலைகள் வரக்கூடாது.
தெரியும்
இந்த சில நினைவுகளை
மீண்டும் நினைவு படுத்த விரும்பவில்லை.
இந்த நினைவுகளின் அடுக்குகளை
மக்கள் நடமாடமற்ற அமைதியான
பாழடைந்த இடம் போல.
ஏதாவதைக் கேட்டு
நமது பொறுமை என்ற நதி
கடந்துவிடக்கூடாது.
உணர்ச்சி அணைகள் உடைந்துவிடக்கூடாது.
நாம் ஆவேசப் படக்கூடாது.
ஆம், நமது அரைகுறை காதலை
இப்படியே இருக்க விரும்புகிறாய்.
சில அடுக்குகள் மடிந்துவிட்டன.
ஆம்,உண்மையிலேயே நீ
குறைக்க விரும்பவில்லை.
பிரிந்த இதயத்தின் சக்தியை.
நம் இதயங்கள் சந்தித்த
நெருப்பு எரிந்து கொண்டே இருக்கட்டும்.
நமது காதல் சம்பங்கி போல்
மணந்துகொண்டே இருக்கட்டும்.
இந்த விசயங்களை விட்டுவிடு.
சில நிமிடங்கள் கிடைத்துள்ளன.
இதை அனுபவிக்கலாம்—பிறகு
மீண்டும் பிரிவதற்காக.
[ இயற்கையில் எத்தனை வேறுபாடுகள்,
வாழ்க்கையின் எந்த திருப்பத்தில் யார் கை விடுவார்கள் என்பதே தெரியாது.யாரை எப்பொழுது சந்திப்போம் தெரியாது.
பசுமை எப்பொழுது உன் பையில் வருமென்று தெரியாது. காலம் நின்றுவிட்டது போல் தோன்றத் தொடங்கும். இதுதான் வாழ்க்கை.]
================================================================
வாழ்க்கையுடன் சந்திப்பு.
जिंदगी से मुलाकात
(पृष्ठ संख्या-६०)
விஷயத்தோடு, விஷயமாக
பாக்யத்தால் சில விஷயங்கள்
அனைத்து விஷயங்களையும்
உன்னுடன் பேசியதாக
மக்கள் கூறுகின்றனர்.
நான் எதைச் சொல்வது?
அவர்களிடம் பேசுவது என்ன?
வாழ்க்கையில் சந்தித்தால்
சில விஷயங்கள்.
நிலவொளியில் குளித்தால்
சில விஷயங்கள்,
என் கையில் அவன் கை இருந்தால்
சில விஷயங்கள்.
பருவகால காதலின் முதல்
மழையாகஇருந்தால்
சில விஷயங்கள்.
வாழ்க்கையில் பல விஷயங்கள் .
ஆனால் அவரிடம் பேசுவதோ
சில விஷயங்கள்.
அதிர்ஷ்டம் வரும் போது
சில விஷயங்கள்.
அனைத்தும் பிடித்த நிலையில்
சில விஷயங்கள்.
காதலில் மூழ்கிய நேரங்களில்
சில விஷயங்கள்.
மணக்கும் எண்ணங்களி்ல்
சில விஷயங்கள்.
தொலைவில் இருந்தாலும்
எங்கிருந்தாலும் என்னுடன் இருந்தால்
சில விஷயங்கள்.
தாஜ்மஹாலை தொட்டுவரும்
காற்றாக இருந்தால்
சில விஷயங்கள்.
இயற்கையின் ஆசிகள் இருந்தால்
சில விஷயங்கள்.
பசுமையான மைதானங்களில்
பசுமை ஆனந்தத்தில்
மூழ்கினால்
சில விஷயங்கள்.
எல்லா திக்குகளிலும்
நிலவொளியி்ல் குளித்தால்
சில விஷயங்கள்.
[உரையாடல்கள் நடக்கின்றன. இப்பொழுது தான் நீ தொட்டாய். உடல் முழுவதும் ஒரு அலை.
என்னை நீ கட்டித் தழுவினால் ,
என் கண்களில் முத்தமி்டால்
நீ வருகின்ற மழைச்சாரல்.
உன்னுடைய உடல் சூட்டில் நனைந்துவி்ட்டேன்)
=======================
உடைந்த படகு.
टूटी कश्ती –पृष्ठ -61.
—--------
என் வாழ்க்கைப் படகு உடைந்து
அனைத்து பலகைகளும் சிதறிவிட்டன.
அங்குமிங்கும் சிதறிக்கிடக்கின்றன.
இவை அனைவருக்கும் தென்படுவதில்லையே.
இவைகளை சகதி மறைத்து விட்டதே.
இப்பொழுது என் தனிமை மட்டுமே.
கடலும் என்னை கோபித்துக் கொண்டதே.
உள்ளமும் நொறுங்கிவிட்டதே.
கரை என்னை கேலி செய்யுதே.
அலைகளும் நன்றி காட்டவில்லையே.
துடுப்பும் கைகளில்
இருந்து விழுந்துவிட்டதே.
எனது நம்பிக்கை போய்விட்டதே.
எப்பொழுதும் இதே எண்ணங்கள் தான்
என்னை அமைதியற்றவனாக்குகிறது.
நீ வா,
சிதறிய பலகைகளை இணைத்து விடு.
என் வாழ்க்கையின் பக்கத்தை திருப்பிவிடு.
எனக்கு போடப்பட்ட விலங்கை உடைத்து விடு.
என்னை மறுபடியும்
ஓடும் நீரோட்டத்தில் விட்டுவிடு.
நான் நிலைத்திருக்க கரை கிடைக்கட்டும்.
மறுபடியும் வாழ்க்கை கிடைக்கட்டும்.
—------
[எல்லா படகுகளுக்கும் விதியில் கரை கிடைப்பதில்லை. எல்லா படகுகளுக்கும் சமுத்திரம் நன்றி காட்டுவதில்லை. எல்லா படகுகளையும் அலைகள் நேசிப்பதில்லை.
சில வாழக்கை படகுகள் மணலிலும் செல்கின்றன. இதுதான் பெண்களின் வாழ்க்கையின் யதார்த்த நிலை. ]
=============================
பொருளுள்ள சொற்களின் விளக்குகள்.
(लफ़जों के चराग-पृष्ठ-62)
இருளே ஏமாற்றாதே .
அதிக வெளிச்சமும் ஏமாற்றுகிறதே.
கண்கள் கூசுகின்றன.
மனதை ஏமாற்றுகிறதே.
இருளில் இருந்து மனிதன்
புகார் அளிக்கமுடியும்.
[ ஆகாயத்திலிருந்து நட்சத்திரம் உதிர்ந்தால் மனம் வேதனைப்படுகிறது. ஆனால் நம்பிக்கை போய்விட்டால் அந்த வலி சகித்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அடிக்கடி ஏன் நடக்கிறது? இந்த வினா வேதனைகள் தருகிறது.அறிந்த அறிமுகமான நொடிகள் ஏன் வஞ்சிக்கின்றன.]
மினுக்கட்டான் பூச்சி மின்னுவதில்
குறிக்கோள் தென்படுவதில்லை.
நிலவும் சூரியனும் யாரிடம் இருக்கின்றதோ,
அவர்கள் அறிவார்கள்
வெளிச்சம் என்ன விலை கேட்கிறார்கள்.
மரியாதையின் அனைத்து எல்லைகளையும்
தாண்டிச் செல்கின்றனர்.
அவர்களுக்கு தனிமையின்
துன்பம் தெரியாது.
அவர்களுக்கு தோல்வியடைந்த
இன்னல் புரியாதே,தெரியாதே.
இப்படிப்பட்டவர்கள்
கபட வேடதாரிகள்.
குறுகியமனம் படைத்தவர்கள்.
படம் எடுத்து கொலை செய்பவர்கள்.
அவர்கள் அனைத்து நட்சத்திரங்களையும்
மின்-மினிப்பூச்சிகளையும்தன் கைப்பிடியில் வைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள்.
நான் அவர்களின் குணங்களை
புரிந்து கொண்டேன்.
எனக்கு இப்படிப்பட்ட
ஒளி தேவை இல்லை.
என்னிடம் பொருளுள்ள
சொற்களின் விளக்குகளும்
கல்வியின் ஒளியும் இருக்கின்றன.
===========================
வேதனைகளின் மாலை
[वेदनाओं की माला– (पृष्ठ संख्या63)]
காதல் அமிர்த மழை பொழிந்தது,
உடலின் சந்தன மணம் வீசியது.
பல யுகங்களின் ஆலிங்கனம்
மிக மென்மையான மனங்களின் பந்தனம்
நீ இதை உடைத்துவிட்டு
செல்லமாட்டாயல்லவா?
நீ என்னை மறக்கமாட்டாயல்லவா?
காதல் ரசத்தால்
உடலும் மனதும்
நனைந்தன.
மனமென்ற நகரம்
பிருந்தாவனம் ஆகியது.
நான் பல யுகங்களாக
நான் உன் பக்தை.
என் மனம் கவர்ந்தவனே.
நீ என்னை கோபித்துக்கொண்டு
செல்லமாட்டாயல்லவா?
இருண்ட காட்சி ஒளிமயமானது.
வேதனைத் தொடர் மணந்தது
நீ செய்த மாயாஜாலம் என்ன?
உடலில் காதல் ஜ்வாலை எரிந்தது.
நீ என்னை விட்டு செல்லமாட்டாயல்லவா?
என் உதடுகளில் உன் பெயர்கள்.
காலையி்ல் இருந்து மாலைவரை
உன்னுடைய சர்ச்சை தான்.
மனக்கோவிலில் நீ தான்.
நான் மீரா, நீ ஷ்யாம்.(கிருஷ்ணன்).
நீ என்னைவிட்டுவிட்டு
செல்லமாட்டாயல்லவா?
நீ என்னை மறக்கமாட்டாயல்லவா?
[நீ ஆகாயத்தில் இருந்து உதிர்ந்த நட்சத்திரத்தை பார்த்திருக்கிறாயா? நட்சத்திரம் பின்னால் விட்டுச் செல்லும் கோடுதான் நான்.நான் உன் தர்காவில் தொழுகை நடத்துபவள். உன்னை பெறுவதற்காக தொழுகிறேன்.
என் ஆழ்மன தொழுகையை கேள்.
==================================
तुम कहीं भी रहो (पृष्ठ संख्या-64)
நீ எங்கிருந்தாலும் .
நமக்குள் இடைவெளி
ஏழு கடல் இருந்தால் என்ன?
என் விருப்பம் என்ற மணம்
உன்னை அடைந்துவிடும்.
அது உனக்கு நாள் முழுவதும்
புத்துணர்வு அளிக்கும்.
இந்த மணம் உன்னை
பின் தொடர்ந்தே வரும்.
அது உன்னை வருத்தப்படவிடாது.
உன் உணர்வுகளை மணக்கச் செய்யும்.
என் கட்டாய காதலுக்கு உரியவன் நீ.
என் பாக்கியப் படகிற்கு துடுப்பு நீ.
நான் உன் உணர்விற்கு மதிப்பளித்தேன்.
தாமதமாக காதலை அனுமதித்தேன்
நீ இன்றும் என்
ஆசையின் வசந்தம்.
நீ எங்கிருந்தாலும்
என் மணத்தின் மதில் சுவர்.
என் விருப்பத்தின் மணம்
கரைந்து இருக்கட்டும்,
உன் சுவாசங்களி்ல்.
உன் வாழ்க்கையில்.
மணம் கைதாகாது.
காதலுக்கு காவலாகும்.
என் நினைவு, என் காதல்,
என் மணம்,உன் உடனே இருக்கும்.
நீ எங்கிருந்தாலும்.
[ மனத்தின் வழிகளில் சிதறிய சருகுகளும் மணக்கின்றன.இந்த மணம் மரணமடையாது.
பிரிந்தபோதும்,உலகம் கேலி செய்த போதும்
தனிமையில் இருந்தபோதும், இதுதான் காதலின்
எல்லையில்லா மாயை என்றே சில சமயங்களில் தோன்றுகிறது.]
=================================
நான் உன்னுடையவள்.
मैं तेरी हूँ. (पृष्ठ संख्या -65]
—-----------------
நான் உன்னை அறிந்து காதலித்தேன்.
என்னை நீ அறிமுகமாக்கி காதலித்தாய்.
என் ஒவ்வொரு துடிப்பிலும்
உன் உணர்வை உணர்ந்தேன்.
நீ என் மனமோகன கிருஷ்ணன்.
நான் புல்லாங்குழலின் இசையைக் காதலித்தேன்.
நான் உன்னுடைய ஆசையால்
ஏற்பட்ட வியப்பை காதலித்தேன் .
நான் கிராமத்தின் சுவாபிமான வியாபாரி.
உன்னுடைய உயர்ந்த
கௌரவத்தைக் காதலித்தேன்.
ஏழேலு பிறவியிலும் சேர்ந்திருக்கும்
வரம் கேட்க காதலித்தேன்.
ஆவணி மாதம் அழுதழுதே கழித்தேன்.
பலவித ஆசைகளை காதலித்தேன்.
முதல் காதலை மறந்துவிடு
சொல்வது எளிது.
உனக்காக உடலையும் மனதையும்
தியாகம் செய்வேன்.
நான் சுவர்க்கத்தின் தாரகை
என்ற உணர்வை உணர்ந்தேன்.
[ மீராவின் உதடு புல்லாங்குழலைத் தொடுகிறது. நீயும் கேட்கலாம். கிருஷ்ணா!
நீ வெண்ணெய் திருடிநாய்.
என்னையும் திருடிக் கொண்டாய்.
என் பிரசாதத்தை ருசித்துப் பார். உன் பெயரின் மயலிறகு எனக்குள் இருக்கிறது. என் நதியில் நனைந்து பார். ]
—------------------------------------------
நான் ஒவ்வொரு நொடியும்.
मैं हर पल. (पृष्ठ–६६-६७)
நான் ஒவ்வொரு நொடியும்
அவன் ஆன்மாவில் இணையும்
முயற்சியில் வாழ்கிறேன்.
ஆனால் அவன் எப்பொழுதும்
எனக்கருகில் செல்கிறான்
அமைதியான காற்றைப் போல,
நகரும் மேகங்கள் போல.
அவன் எனது துயரை அறிவானா என
நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
அவன் தன் நேரத்தை தொலைக்கிறான்.
பேராசையின் சங்கீதசபை அமைக்க
அவனுக்குத் தெரியாது.
உறவுகளின் மரியாதை
அன்பின் வரையறை
மனதின் சமர்ப்பணம்
அவன் பேராவலில் தன் ஒவ்வொரு
நொடியையும் இழந்து விடுகிறான்.
நான் ஒவ்வொரு நொடியையும்
அவன் காதல் தவத்தில்
கழித்து வருகிறேன்.
எப்பொழுதும் அருகில் செல்கிறான்.
========
[காதலுக்கு எல்லை இல்லை.காதல் குறிக்கோள்களுக்கு அப்பாற்பட்டது.குறிக்கோளை அடைந்துவிட்டால் முதலில் இருந்த
கவர்ச்சி இருக்காதே. உன்னை பெறவேண்டும் என்ற துடிப்பு எப்பொழுதும் இருக்கவேண்டும்.
உன்னை பெறவேண்டும் என்ற பிடிவாதமும் இருக்கிறது.அமைதியும் இருக்கிறது.
கற்பனையின் வயது ஸ்பரிசத்தை விட அதிகமாக இருக்கிறது.
================================
வா! நிலவை சேர்ந்து பார்க்கலாம்.
आओ! चाँद साथ-साथ देखते हैं।
[पृष्ठ संख्या-68}
அவன் என் கையை தன் கையோடு
சேர்த்து சொன்னான்:-
வா,நிலவை இருவரும்
சேர்ந்து பார்க்கலாம்.
தெரியுமா! இந்த நிலவு
எத்தனை இணைகளை பார்த்திருக்கும்,
சிரிக்கின்ற,அழுகின்ற,சத்தியம் செய்கின்ற.
நிலவை குழப்ப விரும்புகிறேன்.
உன் காதல் பந்தன மேகங்களில்,
உன் மணக்கும் முந்தானையில்,
மறைந்து கொள்ள விரும்புகிறேன்.
என் உடல் நடுங்கியது.
என் மனம் துள்ளியது.
நிலவொளியில் பிரபஞ்சமே மூழ்கியது.
அவன் காதல் மயக்கத்தில்
மனம் சிலிர்த்தது.
ஒரு மாயாஜாலமே நடந்தது.
நான் என்னை சுருட்டிக் கொண்டு
அவன் அணைப்பில்சுற்றிக் கொண்டேன்.
[ நிலவு எங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது.எங்களிடம் கேள்வி கேட்பதுபோல். நடனமாது நடனத்திற்குப் பிறகு சலங்கையை கலட்டுவது போல் என் அருகில் வா. நான் களைத்துவிட்டேன்.உன் அணைப்பில்
தூங்க விரும்புகிறேன். சூரியன் சமுத்திரத்தில் மறைவது போல்]
அவன் சொன்னான்:- தெரியுமா!
ஒவ்வொருநாளும் புதிய நிலவு வருகிறது.
வா, சேர்ந்தே நிலவைப் பார்ப்போம்.
ஏரிக்கரையில் அமர்ந்து
புதிய கனவுகளைப் படைப்போம்.
உன் கண்களைப் போலவே
ஏரியின் தண்ணீர் ஆழமானதல்லவா?
உன் கவிதைகளைப் போல.
உன் சிந்தனைகளைப் போல.
நிலவு எவ்வளவு இனிதாக இருக்கிறது?
உ்ன்னுடைய சொ்ற்களைப் போல.
உன் பாடலைப் போல.
உன் பேச்சைப் போல.
அவன் சொன்னான்:-
பார்! இந்த மலர்ந்த மலர்களை!
எந்த கண்களால் நான் உனக்கு
அறிமுகமானேனோ,
அதே கண்களால் நீ எனக்கு
அறிமுகமானாய்.
நான் தலை குனிந்து
அமைதியாக அவன் சொல்வதைக்
கேட்டுக் கொண்டிருந்தேன்.
இரவு மறைவதையும்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவன் என் முகத்தில் படர்ந்த
கேசத்தை கோதிவிட்டான்.
நான் அவன் கண்களில்
ஒரு இனிய உணர்வையும்
அற்புதமான தாகத்தையும் பார்த்தேன்.
நான் சொன்னேன்:-
நிலவு ஒவ்வொரு நாளும் வரும்.
ஏதோ ஒரு புது கதை சொல்லும்.
புதிய உணர்வை எழுப்பும்.
நமக்கு காதலை கற்றுத் தரும்.
நீ தினந்தோறும் என்னுடன்
ஏதோ ஒரு கனவைப் படைக்க,
நிலவைப் பாரக்க வருவாயா?
நாங்கள் நிலவைப் பார்த்துக் கொண்டே
கையோடு கைகோர்த்து
ஆகாய கங்கை நிழலில்
மாடியில் தூங்கினோம்.
[நான் உன்னைத் தொடவிரும்புகிறேன்.
காற்று மலரைத் தீண்டுவது போல்.
உதடு புல்லாங்கழலைத் தொடுவது போல்.
மிகஅருகில் வா,
வரைதிறை போல்.
நான் உனக்குள் சிதறவிரும்புகிறேன்.]
======================
நீ தான்.
[तुम्हीं तो हो (पृष्ठ -70-72)]
என் மனம் என்ற வெள்ளைக் காகிதத்தில்
அனுதாபம் என்ற மையினால்
இனிமையான கவிதை எழுதவைத்தவன்
நீ தான்.
மனம் என்ற அரியணையில்
ஒவ்வொரு சொல்லிலும் உணர்வுகளின்
தாமரைகளை மலரச்செய்பவன்
நீ தான்.
வாழ்க்கை குழப்பத்தை ஏற்படுத்தும்
எருக்கை பூக்களில்
மது மணம் தரும்
செம்பங்கி வளர்ப்பவன்
நீ தான்.
மனதின் கடின அனுபவங்களில்
உன் அழகின் இனிமை மூலம்
அமிருத ரசத்தை ஊட்டுபவள்
நீ தான்.
போராட்டங்களின் கசப்பான அனுபவங்களில்
என் வாழ்க்கையின் கல்லான கரைகளில்
நீரோட்டம் ஓடவைப்பது நீதான்
அடர்ந்த இருட்டில்
ஆழ்மன வருத்தங்களில் இருந்து
தனிமையான காட்டில் இருந்து
தொலைவில் அழைத்துச் சென்றவன்
நீ தான்.
அடர்ந்த மேகங்களில்
கற்பனையான கவலைகளில்
என் பெயரின் பொருளை
விளக்கியவன் நீ தான்.
போராட்ட சுடும் வெய்யிலில்
என்னுடன் வந்தவன்
நீ தான்.
என் காதல் என்ற கருங்காலியில் இருந்து
என் சுவாசத்தை மணக்கச் செய்தவன்
நீ தான்.
மெல்லிய நிழலை அதிகமாக்கும்
பாக்கியம் என்ற சூரியனை ஒளிரச் செய்பவன்
இதயத்தின் அடித்தளத்தில்
செந்நிற அரளி மலரச் செய்தவன்
நீ தான்.
புயல் மேகங்களின்
நீண்ட குட்டையான
பாவு நூலில்
திடீரென ஒரு ஒளிக் கொடியை
ஒளிரச் செய்து ஒளி கொடுத்தவன்
நீ தான்.
ஆனந்தமான -குழப்பமான உடலில்
உடலிலும் மனதிலும் மாயாஜாலம் செய்து
எனது அனுதாபத்தை நேசித்தவன்
வேதனைகளைத் தூண்டியவன்
நீ தான்.
என் ஒளி மண்டலத்தில் அமர்த்து
ஒளிரச் செய்பவன்
வாழ்க்கை ரசத்தை பொழிபவன்
நீ தான்.
உன்னால் தான் நான்,
உன் முன்னால் நிற்கிறேன்.
உன் ஒளியால் தான்
இவ்வுலகைப் பார்க்கிறேன.
உன் கண்களில் இருந்துதான்
கனவு காண்கிறேன்.
என் துடிப்புகளிலும்
நீ தான்.
[ உன் காதல் நெருப்பில் வெந்து தான் ஒளிர்கிறேன்.பல ஆண்டுகளின் தவத்திற்குப் பிறகு தான் உன்னை அடைந்தேன். இன்றும் என் மனம் என்ற பாலைவத்தி்ல் கானல் நீர் போல்
மின்னுகிறாய். என் பிரம்மாண்டத்தில் வானவில் போல் பரவியிருக்கிறாய். உன் காதல் நிலவொளியில் என் உடல் ஒளிர்கிறது.]
========================
சந்திப்பின் நிலவொளி.
[वस्ल की चाँदिनी -पृष्ठ–73.]
சந்திப்பின் நிலவொளியை
காலத்தின் மேகங்கள் மூடிவிட்டன.
ஆனந்த மொட்டுகளில்
இரவு விரிந்தது.
ஒவ்வொரு நம்பிக்கையும் வாடியது.
உன்னுடன் கழித்த நொடிகள்
சுவர்கத்தின் ஆனந்தம்
மதுக்கோப்பை குடித்துவிட்டது.
சந்திப்பின் நேரம் வீணாகிவிட்டது.
வயதின் வசந்தம் குறைகிறது.
பிரிவின் தொடர்ச்சி குறையவில்லை.
பருவகால பயணிகள் வினா கேட்கிறார்கள்.
எண் எண்ணங்கள் சருகுகள் போல
உதிரும் விண்மீன்கள் போல
சிதறுகின்றன.
இரவு ஆழமாகிறது
நான் விழித்துக் கொண்டிருக்கிறேன்.
உருகும் இரவின் இருட்டில்
உனக்கு சொல்வதற்காக
புது கவிதை எழுதினேன்.
நம்பிக்கை என்ற கிளைகளில்
பூத்த மலர்கள் உதிர்ந்து விட்டன.
விழித்த கனவுகள் இறந்து விட்டன.
அதிர்ஷ்ட வசத்தால் உன்னுடன்
இருந்த நொடிகள் தான்
என் ஆன்மாவில் நெருக்கமாகிவிட்டன.
[பூமியும் ஆகாயமும் போன்று வாழ்வில் சந்திப்பு
பிரிவு,வெய்யில்-நிழல் போன்ற உண்மைகள்
நம்முடன் இருக்கின்றன. அன்பு, நம்பிக்கைஎன்ற கயிற்றால் உறவுகளை இருக்க கட்டினால் இலையுதிர் காலத்திலும் வசந்தகால உணர்வுவரும்.]
======================
அமிர்தவர்ஷினி
[राग मल्हार -पृष्ठ 74-75]
—---------------------------
உணர்வின் கருவில்
இயற்கையாக எத்தனையோ
உணர்வுகள்,நம் எண்ணங்கள்
அவனுடைய மந்திமான தீண்டலால்
இன்று மறுபடியும் மலர்ந்தது.
ஆவல் பெருக்கெடுத்தது.
உலகக் கிளைகளில்
எதிர்பார்ப்பு உண்மையாக உருவெடுக்கறது.
விருப்பங்கள் புஷ்ப இரதத்தில் ஏரி
உணர்வு ஓட்டம் மழையாக
மேகம் அமிர்தவர்ஷினி
பாடிக் கொண்டிருக்கின்றது.
ஆவணிமாத முதல் தூறல்
நினைவில் வருகிறது.
நடனமாடும் மூடுபனி
நடனமாடும் பூமி.
இளமையின் வண்ணம் முகத்தில்
காதல் ஒளி உடல் முழுவதும் ஒளிர்கிறது.
ஆசைகளின் பெருங் கடல்
கண்களில் பொங்கிவருகிறது.
துடிப்புகள் நட்சத்திரங்கள் ஆகிவிட்டன.
மேகங்கள் அமிர்தவர்ஷினி பாடிக் கொண்டிருக்கின்றன.
உடலுடன் உடல் நனையும் நேரம்
மீண்டும் நினைவிற்கு வந்தது.
கையோடு கை சேர்த்து ஊஞ்சலாடியது.
பூக்கள் நிறைந்த கிளைகள் போன்று
என் மேல் நீ சாய்ந்தது.
அந்த நேரத்திலும்
காற்று சங்கீதம் பாடியது.
பூக்களில் தங்கிய மழைத்துளி
என் கன்னங்களை வருடின.
மேகங்கள் அமிர்தவர்ஷினி பாடிக்கொண்டிருந்தன.
[ இரவில் அலங்கரிக்க நட்சத்திரங்கள் வருவதுபோல் ஒவ்வொரு நிலையிலும் வரவேண்டும்.மழைவருவதுபோல் வரவேண்டும்.
என் மனப் பனிக்கட்டி உருக நெருப்பு மழை பொழிய வேண்டும்]
ஆம், உண்மையிலேயே
உலகில் இருந்தாலும்
இல்லாவிட்டாலும்
பருவகாலம் போல்
நாங்கள் வருவோம்.
நட்சத்திரங்கள் சாட்சிகள் .
காற்று ரீங்காரம் பாடும்.
மேகங்கள் அமிர்தவர்ஷினி பாடும்.
இப்படியே நாங்கள் மேக
அமிர்தவர்ஷினி ஆகிவிடுவோம்.
==========================
நான் ஆறு.
मैं नदी हूँ —-(पृष्ठ संख्या-76-77)
நான் ஆறு
ஆக்கப் பட்ட சாலைகளில் செல்லமாட்டேன்.
வழிகள் அமைக்கும் திறமை எனக்கு உண்டு.
வளைந்து நெளிந்த நீண்ட பயணம் என்னுடையது.
என் குணம் அமைதியாக இருப்பது.
நிற்காமல் ஓடுவது—-செல்வது.
நான் வழியில் உள்ள
கற்களில் பாறைகளில்
மோதிக்கொண்டே செல்வேன்.
நான் எங்கு சென்றாலும்
வரண்ட பூமி புன்சிரிப்பு சிரிக்கும்.
எனக்கென்றே சில சித்தாந்தங்கள்.
நான் தானியங்களை மணக்கச் செய்வேன்.
பூக்களை மலரச் செய்வேன்.
என்னை தடுக்க ,
என்னை திசை திருப்ப
பிடிவாதம் செய்யாதே.
என்னுடைய சுதந்திர நடை
கட்டுப்பாடுகளை ஏற்காது.
மழைகாலத்தில் கடவுளின் பரிசை
நான் வீணாக்கியதே இல்லை.
நான் ஒவ்வொரு மரத்திடமும் சொல்கிறேன்
நான் சுயநலமின்றி ஓடிக்கொண்டிருக்கிறேன்.
காதல் மலர்கள் எனக்குள் ஓடுகிறது.
நம்பிக்கைகளின் விளக்கு
என்னுடைய குணம்,என்னுடைய பருவகாலம்
எனக்குள் கலந்து விடுகின்றன
அதிக திக்குகள்
என்னுடன் விளையாடுகின்றன.
அதிக காற்றுகள்
எனக்குள் மறைந்து செல்கின்றன,
மறையும் சூரியனின் செந்நிறம்.
மென்மையான மரக்கிளைகள்
என்னை பணிந்து தொடுகின்றன.
நான் மனநிறைவுடன் போய்க் கொண்டிருக்கிறேன்.
உணர்வின் பூமியில்
என் லட்சியம் எங்கோ தொலைவில்.
சென்று கொண்டே ஒரு நாள்
காதல் பெருங்கடலில்
ஐக்கியமாகிவிடுவேன்.
[ வாழ்க்கை ஒரு பிரவாகம். அதன் வழியில் துன்பத்தின் பாறைகள், பிரச்சனைகளின் மலைகள். ஆனால் தைரியம் என்ற அதிக வேக ஓட்டத்தில் பாறைகள் உடைந்து விடும்.
பிரச்சினை மலைகள் தூள் தூளாகிவிடும்.
குறிக்கோள் பெரிதாக இருந்து செல்லும் திசை சரியாக இருந்து ,பிடிவாதமும் இருந்தால் நதி பெருங்கடலை அடைந்துவிடுகிறது.
==================================
கண்ணீர்.
आँसू- [78-79]
=============
என் கண்களில் இருந்து
இமைகளில் சிந்துகின்ற நீர்
என் வேதனையின் ஒவ்வொரு கதையையும்
காலத்திற்கு சொல்லும்.
என் கண்களின் கண்ணீர் தான்
என்னுடையதாகவில்லை.
என் மன ரகசியத்தை உலகத்திற்கு
மறைக்க விரும்புகிறேன்.
ஆனால் கண்களில் இருந்து
என் கண்ணீர் இமைகளில் சிந்தி
மகிழ்ச்சி அல்லது துன்பம்
கண்களில் பெருக்கெடுத்தால்
அதன் பொருள்
கண்ணீர் வலி இல்லாதது.
என்னை அடிக்கடி அழ வைக்கிறது.
காலத்தின் பார்வையில்
எப்பொழுது வரை மறைப்பது?
நான் அழுதால் சிரித்து சிரித்து
என் மனதை வேதனைப் படுத்துகின்றனர்.
இந்த கண்களில் சிலசமயம்
அந்த கண்களில் சில சமயம் வழிந்து
கன்னங்களின் வரைதிறையில்
ஒரு சித்திரத்தை வரைகின்றன.
அந்த சித்திரம்
நோக்கர்களின் பார்வைக்கேற்ப
தனித்தனியாக தென்படுகிறது.
அந்த சித்திரத்தை காலங்களில்
எப்படி மறைப்பது?
இதற்கு காலை-மாலை
என்ற நிலையின்றி
கண்களில் வடிகின்றது.
எந்த நேரத்திலும்,
எந்த பருவகாலத்திலும்
இவை என் மனதை துன்புறுத்துகன்றன.
அவை என் நம்பிக்கைக்கு பாத்திரமானவை.
என் பாடலுக்கு சுரம் அளிப்பவை.
என் நண்பனாய் இருந்தாளும்
இவைகளால் என் மகிழ்ச்சியை
பார்க்க முடிவதில்லை.
என் விரோதியாகவே அவை
தொடர்கின்றன.
இந்த கண்ணீர் ததும்பி
வரவில்லை என்றால்
குருதி போன்றே
இவைகள் எங்கே
எதுவரை தொடருமோ?
[ கண்ணீர் சிந்தும் போது நேரத்தின் நொடியும் சிந்துகிறது.கனவு களைகிறது.
விழித்தருக்கும் இரவில் தனிமை தோன்றுகிறது.
என் விடியலில் நட்சத்திரம் உதிர்கிறது.
உன் எண்ணங்கள் என் முந்தானை முடுச்சில்
கட்டுண்டிருக்கின்றன.மிக அருகில் செல்கிறாய்.
உன்னுடன் எங்கு வரை வந்திருக்கிறேன்.
ஒருமுறை திரும்பிப் பார்.]
=========================
முழுமை அடையா வாழ்க்கை.
(जिंदगी आधी-अधूरी सी–80-81)
—------------------------------------
வாழ்க்கை
சட்டப்போடாத படம் போன்று
முழுமை அடையாதது போல்
சிலசமயங்களில் தோன்றுகிறது.
அது சாயம் போனது போல் தோன்றுகிறது.
வொய்யிலின் சக்கரத்தில்
சில வண்ணங்கள் அழிந்துவிட்டன.
கண்ணீர் மழையால்
ஆசைகளின் ஒளியில்
சில வண்ணங்கள் மங்கிவிட்டன.
ஆனால்
மனம் என்ற தொடுவானில்
நம்பிக்கையின் ஒளியில்
வானவில்லில் இருந்து
வண்ணம் எடுத்து
வாழ்க்கையின் முழுமையடையா
முகத்தில் வண்ணம் தீட்டுவேன்.
எனக்குப் பிறகு வருபவர்கள்
அவைகளை இயற்கையின்
வரைதிரையில்
வாழ்க்கையின் முகம்
வருத்தமல்ல புன்சிரிப்பு தென்படட்டும்.
மங்கலாக அல்ல,
தெளிவாக தெரியட்டும் என்று
இதை நினைத்து.
வண்ணம் நிறைந்த,
சிரிப்புடன் தென்படட்டும்.
இம் முயற்சையில் காதலின் வண்ணம்
எடுத்து அமர்ந்திருக்கிறேன்.
[ வாழ்க்கையில் காதல் தவிர வேறு என்ன இருக்கிறது. இருந்தாலும் வாழ்க்கை எத்தனை
வண்ணங்களில் கிடைக்கிறது. சில சமயங்களில்
வேப்ப மரத்தின் கீழே அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது. கண்ணாடியில் இருந்த தண்ணீர் ஓடி பளபளப்பதுபோல். நீ பார்த்த நட்சத்திரம் ஆகாயத்தில் இருந்து உதிர்ந்து
காணாமல் போய்விட்டது போல.சில சமயங்களில் நாம் நம் வீட்டுக் கதவை நாமே
தட்டுகிறோம். உள்ளே ஒருவரும் இல்லை என்று
தெரிந்து கொண்டு. வாழ்க்கை வண்ணம் எப்படி எல்லாம் —]
இந்த வண்ணமும் ,
சில சமயங்களில் தனிமைப் படுத்துகிறது.
ஏதோ சத்தத்தில்
வெற்றிடம் நிரம்பியது போல.
ஒரு கண்ணீர்
எனக்குள் தங்கியிருந்தது
நேற்று இரவு அந்த நொடியில்
உன் பெயரில் ஒரு கவிதை எழுதியிருக்கிறது.
=============================
வாழ்க்கையின் திருப்பத்தில்
जिंदगी के मोड पर -पृष्ठ -संख्या-82-83.
—-----------------------
காதலின் பாதையில்
நான் மிகவும் இழந்து விட்டேன்.
அமைதி சிலசமயம்,
தூக்கம் சில சமயம்
இவனை சில நேரம்
அவனை சில நேரம்
யார் எவ்வளவு உடன் தொடர்ந்தார்
நினைவில்லை.
வாழ்க்கையின் எந்த திருப்பத்தில்
நீ சந்தித்தாயோ
அந்த திருப்பத்தில் இருந்து
பல வழிகள் புறப்படுகின்றன.
அவை பிரமிக்க வைக்கின்றன.
இன்னலும் தருகின்றன.
உன்னை சந்தித்ததால்
என் குரல்,என் யூகம்
மனதில் இனிய இசை இசைத்தது.
என் சுவாசத்தில் நிலவொளி மலர்ந்தது.
நம்பிக்கை ஒளி ஒவ்வொரு பக்கமும் பரவியது.
உன்னை சந்தித்ததால்
எனக்குள் தன் நம்பிக்கை விழிப்படைந்திருக்கிறது.
எனக்குள் புதிய உணர்வுகள் விழித்திருக்கின்றனர்.
நீ பாழடைந்த இடத்தில் வசந்தம் கொண்டுவந்தாய்.
ஒரு புதிய கனவுகளில் உலகம்
எனது கண்களில் ஆசையின் வெப்பம் வந்துவிட்டது.
என் நிறம் உருவம் ஒளிர்ந்தது.
உன்னுடனான உறவு மனதின் உறவு
பவித்திரமானது உண்மையானது.
உன்னவள் ஆனதால்
என் பாக்கியம் மனந்தது.
நீ என் வெளிப்பாடு.
நீ எனது ஆற்றல்.
நீ என் சுயகௌரவம்.
நீ என் அகங்காரம்.
நீ என் மன ஓசையை கேட்கிறாய்.
என் சொல்லின் ஆணவம் கேட்டு
பார்த்து மகிழ்கிறாய்.
என்னை பார்த்துக் கொண்டே இரு
குறிக்கோளை பார்த்து முன்னேறுவதை.
புகழின் படிகளில் முன்னேறுவதை.
நீ என்ன இழந்துவிடாதே.
நான் உன்னை இழக்க விரும்பவில்லை.
ஒரு புதிய காயம் படுவதை விரும்பவில்லை.
நான் உண்மையில்
உன்னை இழக்கவிரும்பவில்லை.
[ காதல் கடலில் இருந்து சிப்பிகள் சேகரித்து வந்துள்ளேன். இதில் உன் பெயரின் முத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். அதை என் மூச்சுக் காற்று நூலால் கோர்க்க வேண்டும்.அந்த ஒளியில் கண்களை மூடிக்கொண்டே செல்லவேண்டும். உனக்காக ஆகாயகங்கை கடந்து நட்சத்திரங்கள் என்னைத் தடுத்து
எங்கே போகிறாய் என்று கேட்டால் என்ன சொல்வது என நினைத்துக் கொண்டிருக்கிறேன்.]
—------------------------------------
தனிமையிலிருந்து எங்காவது.
खिलवतों से कहीं–84–
—-----
நெட்டிலிங்க மர நிழலில் அமர்ந்து
தனிமையில் அதிகமாக சிந்திக்கிறேன்,
காதலென்பது என்ன?
உண்மை—கடவுள் இருக்கிறார்.
தனிமையில் இருந்து எங்காவது
மலைகளிலிருத்து எங்காவது
வெகு தொலைவில் செல்ல
எப்பொழுதும் நினைக்கிறேன்.
காதல் ஒரு பவித்திரமான உணர்வு.
இதை புரிந்தவர்கள் யார்?
அறிவுள்ளவர்களும் ஆர்வம் உள்ளவர்களும்
காதலில் தன்னையே மறந்துவிடுகிறார்கள்.
காதலில் மூழ்கிவிடுகிறார்கள்.
மனம் இருந்தும் வசத்திலில்லை.
என்னிடம் அடிக்கடி சொல்கிறது
மக்கள் ஏன் பாலைவனத்தில்
வழி தெரியாமல் சுற்றுகிறார்கள்?
வெற்றிடத்தில் ஏன் தேடுகிறார்கள்?
வா! வா!
காதலிடமும் காலத்திடமும்
இந்த கேள்வி கேட்கலாம்.
[காதல் என்பது இருண்ட வழி,அது வழிப்போக்கனை அவன் குறிக்கோளை அடையச் செய்வது குறைவே. இது மகிழ்ச்சியைவிட அதிகமாக துடிக்கவைக்கிறது.
காதல் ரகசியமானது.இதை நூற்றாண்டுகளாக புரிந்துகொள்ள முடியவில்லை.காலத்தின் நெற்றியில் விதி எழுதப்பட்டிருக்கிறது.காதலுக்கு ஒருபுதிய வரையறை எழுதவேண்டும்]
—-----------------------------
நேரத்தின் ஒரு திருப்பத்தில்
वक्त के एक मोड़ पर -85-86]
==================
நேரத்தின் ஒரு திருப்பத்தில்
நானும் நீயும் சந்தித்தோம்.
அமைதியான புல்லாங்குழல் இசைத்தது.
வாழ்க்கையின் பங்காகிவிட்டது.
அந்த அழகான நொடிகள்
என் விருப்பத்தின் கதை ஆகிவிட்டது.
நமக்குள் இனிமையான,புனிதமான
மனம் கவரும் ஆழமான
ஒரு முறியாத பந்தனம் உண்டாகிவிட்டது.
உன் விருப்பம் என்ற நெட்டிலிங்க மரத்துடன்
மென்மையான கொடிபோல சுற்றிக் கொள்வேன்.
முதல் சந்திப்பின் நிலவொளியாகி
உன் மடியில் குறுக்கிக் கொண்டேன்.
[ உன் மடியில் எவ்வளவு நேரம் இருந்தேன் என்ற நினைவே இல்லை. இது ஒரு சுகமான இன்னல்கள்.இந்த இன்னலோடு வாழ்க்கையை கழிக்க விரும்புகிறேன். உன்னுடைய இந்த ஏமாற்றமும் அழகாகத்தான் இருக்கிறது. அதை அப்படியே வைத்துக் கொள். சிதறவிடாதே.
இது எல்லாமே ஒரு ஏமாற்றமாகவே தோன்றியது.]
ஏன் என்று தெரியவில்லை.
எல்லாமே ஒரு ஏமாற்றமாகத் தோன்றியது.
உன் பிடிவாதத்திற்கு முன்னால்
என் வேதனைகள்
எனக்கு குறைவாகத் தோன்றின.
இதயத்தின் கம்பிகள் இணைந்தன.
ஆனால்
அதிலிருந்து ஒன்றை மற்றொன்று
பிழிகின்ற மனவேதனை உண்டாகியது.
என்னை உதவியற்றவளாகக் கருதினேன்.
என் யதார்த்த வெயிலில் ஏதோ
ஒரு கற்பனை கருப்பு மேகம் பரவியது.
தவறான புரிதல்கள்நெருப்பு பற்றியது,
நம்பிக்கை என்ற பசுமை இலைகளில்.
வசந்தத்தில் இலையுதிர்காலம் வந்தது.
இருப்பினும்
கண்களில் இனிமைக் கனவுகள் கொண்டு
நம்பிக்கை புல்லாங்குழல் எடுத்து
வாழ்க்கை இராகத்தை உன்னுடன்
இணைந்து
முனுமுனுக்க விரும்புகிறேன்.
[
[இரவின் இறுதி யாமம். என் உடல் விழித்துக் கொண்டிருக்கிறது.விழித்துக் கொண்டே கனவு காண்கிறேன். மாலை அறுந்து கொண்டிருக்கிறது.ஒவ்வொன்றாக மணிகள் சிதறிக் கொண்டிருக்கின்றன.என் கையில் இறுதி மணி.மூச்சும் நின்று கொண்டிருக்கிறது.]
வா!
என்னை அணைத்துக் கொள்.
தனிமையில் எவ்வளவு காலம் செல்வது.
வாழ்க்கைப் பாலைவனத்தில்
சிதறிய மணல் போல்
நானும் சிதறிவிடக்கூடாது.
============================
நினைவுகள் இறப்பதில்லை.
यादें कहाँ मरती हैं ( पृष्ठ87)
அவன் என்னை புரிந்து கொள்ளமாட்டான்
என்பது எனக்குத் தெரியும்.
பிறகும்
அவன் அழகில் உணர்ச்சிப் பெருக்கெடுத்து
இரவும் பகலும் அவனை எதிர்பார்த்துக்
கொண்டே இருக்கிறேன்.
சந்தித்தால் அவனுடன் செயற்கையான
உணர்வுதான் இருக்கும்.
பெரும் இடைவெளி இருப்பதால்
அவன் என்னை மறந்திருக்கலாம்.
அதையம் நினைக்கிறேன்.
ஆனால்
நிலத்தில் புதைந்த விதை அழுகுமா?
காலத்தின் வெப்பத்தால்
சிறிது ஈரம் பெற்று
நிலத்தில் முளைவிட்டுவருகிறது.
இப்படித்தான்
மனதில் புதைந்த நினைவுகளின் நெருப்பு
பற்றிக் கொள்கிறது.
உணர்வுகளின் மென்மையான காற்று பட்டு
காலத்தின் காலடி ஓசை பெற்று
நினைவுகள் மடிவதில்லை.
பழமையடைவதில்லை.
[ நான் யார்? நீ யார்? இவைகளை மறக்க வேண்டும்.நான் உன்னை நோக்கி நகர்வதால்
நீ நீயாக இருக்கிறாய். நீயும் வா.மணல் கடலில்
புதைந்து விடலாம். வா, ஒவ்வொரு உறவையும்தாண்டி சென்றுவிடுவோம்.]
============================
எண்ணங்களின் ஆகாயத்தில்
ख्यालों के आस्माँ पर–{पृष्ठ 88}
இன்று மீண்டும்
மணத்துடன் கூடிய மென்மையான காற்று
சில சமயம் என் மேலாடையில்
சில சமயம் என் உடல் சுருக்கங்களில்
விளையாடி பல விசயங்களை சொல்கின்றன.
உன் வெயில் என் உடலைத் தொட்டது.
[இன்று மறுபடியும் காதல் வந்தது.காற்றில் உன் மணம்.வெய்யிலில் உன் சிரிப்பு,உன் உலகம் அழகாக இருக்கிறது.உன்னுடன் நேரமும்
களங்கமற்று இருந்தது]
இன்று மீண்டும்
என் எண்ணங்களின் ஆகாயத்தில்
உன் நினைவுகளின் வெள்ளி நிற மேகம்
பறப்பது தென்பட்டது.
தரையில் உன் கருப்பு நிழல்கள்.
நமது உருவங்களாகி
நீண்ட அகலமான மைதானத்தில்
நின்றும் ஓடுவதுபோலும் தென்பட்டது.
இன்று மீண்டும்
மேகங்களின் நிழல் விளையாட்டுகள்
எவ்வளவு களங்கமற்று
நம் இளமை வயதுபோல
இன்றும் காற்று என் மேலாடையில்
ஏதோ சொன்னது
நீயும் மெதுவாக என் கண்களில் சொன்னாய்
இன்று எனக்கு மீண்டும்
வாழ்க்கை கிடைத்தது.
======================
எதிரெதிலில்
आमने सामने - (89.)
ஒரு நாள் நாம்
எதிரெதிரில் அமர்வோம்.
ஒருவேளை அச்சமயம்
நம் மோதலின் அத்தியாயம் முடியலாம்.
இரண்டு எதிரெதிர் திசையில்
செல்லும் வழிகள் முடிந்துவிடும்.
விரகவேதனைகளின் துயரம்
தவறான புரிதலின் மந்தம்
அந்தநாள் தன் கடந்த
காலகதைகளை சொல்வான்.
நான் என் பிரிந்தநாள் கதையை சொல்வேன்.
இருவரின் ஆன்மாவும் நடுங்கும்.
உடல் நடுங்கும்.
நகரும் நேரம் நிற்பது போலகும்.
கண்களில் கண்ணீர் உரைந்தது போலாகும்.
உதடுகளில் சொற்கள் நின்றுவிடும்.
முழுமை அடையா சந்திப்பின் வருத்தத்தில்
இருவரின் சிரங்களும் குனிந்துவிடும்.
நம் முழுமையடையா விருப்பத்தின் கதை
பல யுகங்களின் கதை
நொடிகளில் முடிந்துவிடுமல்லவா?
சொல்.
[ எதுவும் பேசாமல் இருப்பதே நல்லது. ஒருவர் மற்றொருவரின் மௌனத்தை கேட்போம்.
என் முந்தானை உன் இரவுக்காக .
என் விடியல் உன் புஜங்களில். உன் காலடியில் எனது தேர்வு .என் உடல் தனியாக-என் உடலில் இறங்கிவிடு.]
==================================
முற்றுபெறா சந்திப்பு.
अधूरा मिलन- (पृष्ठ -90-91)
==============
ஒரு முற்றுபெறா சந்திப்பு.
இந்த தாகம் தீராதது.
தூக்கத்திலும் துள்ளுகிறது.
இந்த நம்பிக்கை முழுமை பெறாதது.
ஒரு உடல் உருகி
என் புஜங்களில் வந்தது.
அவன் நிழலில் கவலையில்
நாட்கள் நகரந்தன.
வாழ்க்கையின் ஒரு பங்கு
உன் பெயரில் சமர்ப்பணம்.
நாங்கள் பிரிந்தாலும்
இந்த நம்பிக்கை விலகாது.
புனிதமான பவித்திரமான
இந்த பந்தநம் விலகாது.
இந்த காதலின் எல்லை
உடலுக்கு அப்பால்.
இந்த காதலின் குறிக்கோள்
பல பிறவிகளுக்கு முன்னே.
இந்த காதல் ஒரு ஓட்டம்.
பல நூற்றாண்டுகளாக ஓடுகிறது.
இந்த காதல் மடிவதில்லை.
ஒவ்வொரு நொடியையும்
பரித்துக் கொண்டு செல்கிறது.
இந்த காதல் ஒரு உணர்வு
இந்த காதல் ஒரு இச்சை.
மாறவில்லை. மாறாது.
இது காதலின் வரையறை.
=
[ ஒவ்வொரு நதியும் கடலில் சங்கமிக்க விரும்புகின்றது. ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. பல முறை வழி மாறுகிறது.
முழுமை அடையா சந்திப்பு, துடிப்பு, கவர்ச்சி ,
அது உயிருடன் இருக்கிறது. மன அலைகள்,
மகிழ்ச்சிக்கு காதல் சமர்ப்பணம். சுயநலமில்லை. ஆசைகள் இல்லை. காதல் யதார்த்தமானது. உடலின் சந்திப்பை விட உணர்வுகளின் சந்திப்பு.ஆன்மாவின் சந்திப்பு.]
=================
அமைதியில்
खामोशी में –[पृष्ठ-92-93 ]
================
இந்த இரவு அவனை கண் மூடாமல்
பார்த்துக் கொண்டிருந்தது.
நான் அவனிடம் கேட்டேன்:-
நீ ஏன் இவ்வளவு மௌனமாக இருக்கிறாய்?
அவன் சொன்னான்:-
நான் உன் குரலோசையை
தொட்டு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நான் என்னை நானே சந்திக்க விரும்புகிறேன்.
என் மௌனத்திலும் ஓசைஇருக்கிறது.
உன்னை அழைக்கின்ற
நீயும் மௌனமாகிவிடு.
என் உதடுகளில் நீ முனுமுனுக்கவும்.
[ பட்டகத்தில் இருந்து மற்றொரு வண்ணம் வருகிறது. நம் மௌனம் களையும் போது ஒரு அலை எழுகிறது. சுவாசத்தில் சில துடிப்புகள் உண்டாகிறது. இது எப்படிப்பட்ட உலகம்? இங்கே ஒரு ஓசை மட்டுமே ஒலிக்கிறது]
இப்படியே சேர்ந்து அமர்வது,
ஒருவர் மற்றொருவரை பார்ப்பது,
ஒருவர் மற்றவர் நெருக்கத்திற்கு,
இதுதான் முறை.
அவன் அமைதியில்லா முகத்தை
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவனுக்குள்ளும் ஏதோ பேரிரைச்சல்.
அது என்னிடம் கூறியது : –
வா,போகலாம்.
காலத்தைக் கடந்து–வெகுதொலைவிற்கு
அங்கேயே தங்கிவிடலாம்.
அங்கு அமைதியிலும் சொற்கள் இருக்கும்.
இயற்கையே இசைக்கருவி வாசிக்கும்.
நிலவொளி அமைதியாகும்.
நீலவண்ண இரவு மதி மயக்கம்.
ஆறு அமைதியாகும்.
மழைகளில் உடல் நனையவேண்டும்.
இப்பொழுது நான் வியப்படைந்து மௌனமானேன்.
கண்ணை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
இப்பொழுது மௌனமொழியின்
வரையரையை புரிந்து கொண்டேன்.
அப்பொழுது தான் வேள்வி நடந்தது.
உடல்களில் இருந்து மந்திரம் உச்சரிக்கப்பட்டது.
வேள்வித் புகைகள் உண்டாகியது.
ஆஸ்ரம சுவர்களை விட உயர்ந்த
நாங்கள் அதிக மௌனமானோம்.
ஒரு மணம் வீசியது.
அது இரவில் கரைந்துவிட்டது.
[உன்னுடன் பேச நான் பேசவேண்டுமா? என் ஒவ்வொரு சொல்லும் உனக்காகவே. என் ஆஸ்ரமத்திற்கு வந்துவிடு. பேசாமலேயே நாம் செல்வோம்.நீ நடனமாடவேண்டும் மேனகாவைப் போன்று விஸ்வாமித்திரர் சமாதி களையச் செய்தது போன்று.]
===============================
தென்படாத தோழன்.
अदृश्य साथी. [94-95]
—
என் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை
அவன் மீண்டும் மாற்றினான்.
அதில் எழுதிய சம வேதனையின்
கவிதையில்
சிதறிய எண்ணங்களை
கற்பனையின் பட்டு நூலால் தொடுத்தான்.
அனைத்து ரசமற்ற வரிகளையும்
அணியில் அலங்காரமின்றியும்
கணவனால் கைவிடப்பட்டவள் போல்
தோன்றியவைகளையும்
அகற்றிவிட்டான்.
வாழ்க்கை என்ற கவிதையின் ஆரம்பத்தில்
தடையாக இருந்த அனைத்து
முற்றுப் புள்ளிகளையும் நீக்கிவிட்டான்.
என் வாழ்க்கையை வெப்பப் படுத்திய
என் பங்கின் நிலவொளி என
அனைத்துப் பெயர்களையும்
வெட்டிவிட்டான்.
இருளில் நெய்த போர்வையால்
என்னை போர்த்திவைத்தான்.
என்னை சிக்கலில் வைத்து
வஞ்சனை என்ற மந்திரத்தால்
மேகம் தாகமான பூமியை
ஏமாற்றியது போல் ஏமாற்றிவிட்டான்.
கவிதையில் அற்புதமான
சொற்களை இணைத்து விட்டான்.
அதற்கான ஒத்த சொல் தேடுவதில்
வயதாகிவிட்டது.
விரக வேதனையில் துடிக்கும்
தாபமான கவிதைகளை குடிக்கவைத்தான்.
சுவாதி நட்சத்திரத் துளிகளில்
நனைந்த சிப்பி போன்ற கவிதைகளின்
காதலின் ஒளிமிக்க முத்துக்களை
கருவில் வைத்துவிட்டான்.
அவன் கவிதைகளை காகிதத்தில்
இருந்து எடுத்து உயர்ந்த
வரைதிறையில் காதல் கொடிகளை
நாலாபக்கமும் அமைத்துவிட்டான்.
அந்த கொடிகளில்
மணக்கும் பூக்களுடன்
என் வாழ்வு என்ற கவிதையில்
ஒவ்வொரு சொல்லும் மணந்தது.
தென்படா தோழனே!
நீ யார்?
எதிரில் வா.
நான் உன் கரங்களில்
முத்தமிடவேண்டும்.
[ வாழ்க்கை ஒரு பயணம். ஒரு நாடகம்.
நாடகத்தின் சில பாத்திரங்கள் திரைக்குப் பின்னால் இருப்பார்கள்.அவர்கள் பாத்திரத்தின்
குணாதிசயங்களை கட்டுப்படுத்தி இயக்குவார்கள். அவர்கள் பங்கிற்கு பார்வையாளர்களின் கை தட்டல் கிடைக்காது.
அவர்கள் தான் பாத்திரங்களை செல்வாக்கு உள்ளவர்களாக ஆக்குவார்கள். அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும்.நீங்கள் நடிக்கலாம். ஆனால் கற்பனையில் மூழ்கி உரையாடல் எழுத முடியாது.
குறிக்கோளை அடையச் செய்வதில் வழியில்வருகின்ற முட்கள்,தடுக்கி விழுதல் ஆகிய வற்றின் பங்களிப்பும் இருக்கிறது.]
===========================
தீர்ப்பு
फ़ैसला–96.
==========
நான் உன் பிடியில்
நீ உன்பிடியில்
வா,காதல் அவையில்
நறுமணப் பொருள் வைப்போம்.
தீர்ப்பு எப்படி இருந்தாலும்
அதை ஏற்க வேண்டியிருக்கும்.
ஒவ்வொரு ஐயத்தையும்
போக்கவேண்டியிருக்கும்.
பாழடைந்த மசூதி போல்
அதன் பின் உள்ள மல்லிகை
மரத்தின் கீழே உட்கார்ந்து
எதிர்பார்.
மல்லிகை பரி.
கவிதை படி.
தீர்ப்பு வர
ஒருநொடி,பல ஆண்டுகள்,பல யுகங்கள்
ஆகலாம்.
அடிக்கடி நாம் பிறவி எடுக்கிறோம்.
சந்திக்கிறோம்—-பிரிகிறோம்.
வா ,மீண்டும் எதிரெதில் அமர்வோம்.
மல்லிகை மலரைக் காண்போம்.
இது காதலின் அவை
நடப்பது நடக்கும்.
[ தீர்ப்பு எப்பொழுதும் இரு பக்கங்களிலும் இருக்கும், ஒன்று நான். மற்றொன்று நீ.
தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்க வேண்டிய
அவசியம் இல்லை.காதலில் மனம் தான்.
ஒருவரும் தீர்ப்பை ஏற்பதில்லை.
நம் மனத்தின் துடிப்பிற்கு யார் தீர்ப்பளிப்பது.
வலியின் வழியில் நாம் இருவரும் தான்செல்லவேண்டும்.இது நமது துடிப்பு.அவை யாருடையது? காதல் நமதே! தீர்ப்பும் நமதே!.]
===============================
தேனீருடன் (கஹ்வா காஷ்மீர் நறமண தேநீர்) சேர்ந்து
कहवे के संग —97.
—-------
நீ என்னைப் பிரிந்து எப்பொழுது இருந்தாய்.
என் சுவாச மணத்தில் என்னுடன்
உன்னை அழைத்துவந்தேன்.
இந்த வாதிகளில் நீ என்னுடனேயே இருந்தாய்
காலை கஹ்வாவின் (காஷ்மீர் நறுமண தேநீர்)
ஒவ்வொரு உறிஞ்சி குடிக்கும் போதும்
உன் நினைவின் உணர்வே.
நீயும் என்னுடன் அமர்ந்து கஹ்வா அருந்திக் கொண்டிருக்கின்ற உணர்வு தான்.
வேட்டையில் நீ ஒரு மந்திரவாதி,
என் உடலை உன் அணைப்பில்
இருக பிடித்துக் கொண்டாய்.
நாம் இருவரும் சேர்ந்து
அழகான பள்ளத்தாக்கில்
சுற்றிக் கொண்டிருந்தோம்.
வெகுநேரம் இயற்கை காற்றில்
பேசிக்கொண்டிருந்தோம்.
ஆகாயத்தைத் தொடும்
தேவதாரு,நெட்டிலிங்க மரங்கள்.
அவைகளுக்கிடையில்
ஒற்றை அடிப்பாதை.
மௌனமாக இந்த கற்கள்
ஏரித் தண்ணீரில் உன் நிழல் நனைகிறது
அது பல விஷயங்களை என்னிடம்
சொல்லிக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.
உன்னுடன் சேர்ந்து குங்குமப் பூ போல்
மணம் வீசிக் கொண்டிருந்தது.
பாதாம் அக்ரூட் மலர்கள் போன்று.
உன் பாசத்தை நேசத்தை உணர்ந்து கொண்டிருந்தேன்.
கவலையற்று சிரித்துக் கொண்டே
நீரூற்று போல் நினைவுகள்
பொங்கிக் கொண்டிருந்தன.
உன் தனதாகிய முதுகில் சவாரி செய்து
நான் காதலின் சிகரத்தை அடைந்து விட்டேன்.
உன் உணர்வு கம்பளி வெப்பம் போல
என்னைச் சுற்றிக் கொண்டது.
காலையில் நீ வருகிறாய்
தாமரை போல்,அரேபிய மல்லிகை போன்று
சூரியகாந்தி மலர் போன்று.
நான் காதல் ஏரியில் நீந்திக்கொண்டிருந்தேன்.
நினைவுகளின் துடுப்பை செலுத்திக் கொண்டிருந்தேன்.
நீ ஒரு முறை டல் ஏரி தண்ணீர் போல்
எனக்கருகில் தென்படுவாய்.
சில சமயம் ஒருபீர் பஞ்சால் மலைச்
சிகரம் போல் தொலைவில் தென்படுவாய்.
காதல் பருவகாலம் எப்பொழுது வரும்
என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பனிக்கட்டி போர்வைக்குக் கீழே
உன் காதல் வெப்பத்தால் மூடிக்கொள்வேன்.
ஒரு நாள் சித்திரை-வைகாசி
சூரியனைப்போல் ஒளிர்வாய் என்ற
நம்பிக்கை இருக்கிறது.
நான் முற்றிலும் உருகிவிடுவேன்.
உன்னுடன் சேர்ந்து பசுமை
போர்வை போர்த்திக்கொள்வேன்.
நீ எனக்கு மிக அருகில் இருக்கிறாய்.
கஹ்வாவின் ஒர் உறிஞ்சலுடன்
எனக்குள் இறங்கிவிட்டாய்.
எனக்குள் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது.
[ இரவிற்குப் பிறகு பகல் வருவது இயற்கையின் நியதி.பகல்வரவேண்டும்.அதற்காகபிரார்த்தனை|செய்தாலும் செய்யாவிட்டாலும்.
ஆனால் உண்மையான விடியல்,யார் வருகைக்காக இரவு முழுவதும் எதிர்பார்த்து
யாருடன் காலையில் சேர்ந்து கஹ்வா அருந்தி,
நம் உதட்டுடன் தொட்டு நமக்கு அக்கம்-பக்கம் அவன் மணம்,அவன் காலடி ஓசை கேட்டு நாள் முழுவதும் புத்துணர்ச்சி பெற்று,குளிர் காலங்களிலும் சூடான கஹ்வா போன்று வெப்பம் உணரவேண்டும்.]
==================================
நம்பிக்கையின் காகிதத்தில்
विश्वास के कागज पर -[पृष्ठ -99-100]
=========================
உன் கசப்பான வார்த்தைகளிலும்
நான் இனிமையை உணர்கிறேன்.
நீ என்னுடன் சண்டையிடுதல்,சச்சரவு
உன் உரிமையை சொல்லுதல்
இவை எல்லாம் என்னை உனக்கருகில் கொண்டுவருகிறது.
உன் வினாக்களுக்கு என்னிடம் விடை கிடையாது.
நான் விடைஅளிக்காமல் இருப்பதிலேயே
உன் எல்லா வினாக்களுக்கும் விடை இருக்கிறது.
என் குனிந்த கண்களிலேயே
உன் விடைகளைத் தேடு.
அதன் பிறகு உனக்கு
கேள்வி கேட்கும் அவசியம் ஏற்படாது.
வேதனைப்படும் அவசியமும் இருக்காது.
வினாக்களின் நான்கு சுவர்களைத் தாண்டி
என் வரை வரவேண்டும்.
உனக்கு கஷ்டம் வரக்கூடாது.
நீ விடைகளைப் பற்றாமலேயே
என் மனத்தின் அருகில் வந்துவிட்டாய்.
உனக்கு மகிழ்ச்சி வரட்டும்
என் உணர்வுளின் நிழலுள்ள மரத்தில்.
நீ காதலின் அடர்ந்த நிழலில்
அங்கேயே அமர்ந்து விடு.
நம்பிக்கை என்ற மணமிக்க கிராமத்தில்
குடியமர்ந்து விடு.
உன் நம்பிக்கை வீட்டில்
அவநம்பிக்கை என்ற பாழடைந்த
கட்டடம் வர வேண்டாம்.
வா! கையோடு கை சேர்த்து
நம்பிக்கை விளக்கேற்றி
உறவினர்கள் முற்றத்தை மணக்கவைத்து
அங்கு நாம் மட்டும் இருப்போம்.
விருப்ப பருவகாலம் இருக்கட்டும்.
இருவரும் சேர்ந்து
சமரப்பணம் என்ற புது கவிதையை
நம்பிக்கை காகிதத்தில் எழுதுவோம்.
[ நீ இன்றி வாழ்வது கடினம்.நீ இல்லை என்றால் மூச்சு நிற்கத் தொடங்கும்.நீ தான் இருக்கிறாய்.
நான் எங்குமே இல்லை.இந்த நேரத்திலும்
உன்னை நான் என் கண்களில் நிறைத்து வைத்திருக்கிறேன்].
==================================
வசந்தகாலம்
बहारों के रुत (पृष्ठ-101-102
நான் வசந்தகாலமாக இருந்தால்
உன் முந்தானையில் சுற்றிக் கொள்வேன்.
நான் மென்மையான நிலவொளியாக இருந்தால்
உன் புஜங்களில் சுருங்கிவிடுவேன்.
நான் ஆவணி மாத மேகமானால்
நான் உன் உடலையும் மனதையும்
நனைத்து விடுவேன்.
நான் உன்னை சந்திக்கும் விருப்பத்தில்
கண்ணீரால் கட்டிப் போட்டிருப்பேன்.
நான் ஒரு காதல் வழியானால்
உனக்கு குறிக்கோளின்
விலாசம் தருவேன்.
நான் நிலவின் கதிரானால்
உன் வழியை நான் அலங்கரிப்பேன்.
நான் மீராவைப் போல் இருந்தால்
விழா கொண்டாடி இருப்பேன்.
துன்பத்தின் வெப்பம் இருந்தால் உன்னை தலைமுடியில் மறைத்துக்கொள்வேன்.
நான் நதியின் உற்சாகமாக இருந்தால்
உன் படகை மூழ்கடிக்க மாட்டேன்.
நீ வாக்கு தவறா மணமாக இருந்தால்
உன் நெற்றியில் முத்தமிடுவேன்.
என் ஜன்னலின் தூய கண்ணாடியில்
பனி படரும் நேரத்தில்
நீ பேசியதை நினைத்து
என் ஒவ்வொரு துயரத்தையும்
எதிர்கொள்வேன்.
குளிர் காலத்தில் நிலவொளியில்
பெரும்பாலும் காதல் பாட்டு பாடுவர்.
கடந்த கால நிமிடங்களின் ஒளி
இப்பொழுதும் கண்களில் ஒளிர்கிறது.
நான் புல்லாங்குழலாக இருந்தால்
உன் பாடலின் இசை பாடுவேன்.
நான் நிழலானால் அதிக
தொலைவுவரை உன்னுடன் வருவேன்.
நான் அந்த அழகான காட்சிகளை.
எப்படி மறப்பேன்.
என் இமைகளில் உன் இமைகள்.
உன் புஜங்களில் என் உடல்.
உன் தோளில் என் கூந்தல்.
நான் பனித்துளி ஆனால் உன்
நம்பிக்கை மலரில் படர்ந்திருப்பேன்.
உன் வாழ்க்கையை அழகாக்க
உன் மூச்சில் கலந்திருப்பேன்.
[ என் மனதின் ஜன்னலில் இருந்து வந்து வாசனை போல் சிதறுகிறாய்.சில சமயம் வெய்யில் போல்,வசந்த்தத்தின் எத்தனை கனவுகளைக் காட்டுகிறாய்?வாடிக் கொண்டிருக்கின்ற நம்பிக்கை கொடிகளை.
நீ கட்டிப் பிடித்தது ஒவ்வொரு காலடி வைக்கும் போதும் உணர்கிறேன். உன் பொன்னான உணர்வுகள் எங்கும் விலகுவதில்லை.வீணாக செல்லும் நொடிகள் எனக்கு மறக்கமுடியாதவைகள்.நீ என் வாழ்க்கையின் துன்பத்தைக் குறைக்க வந்திருக்கிறாய் .என்னை அன்பாலும் நேசத்தாலும் மகிழ்ச்சிப்படுத்து.[
சில நேரங்களில் எண்ணுகிறேன்
कभी-कभी ख्याल आता है - पृष्ठ-103-105.
சில சமயங்களில் எண்ணுகிறேன்
மூடுபனியை ஊடுருவி
மலைச்சிகரத்தில் ஏறி தினந்தோறும்
நிரந்தரமாக உன்னை
உலகை மறக்கச் செய்யும்படி செய்யலாமா?.
இந்த பைத்தியக்கார காற்றை
என் கரங்களில் நிரப்பிக் கொள்ளலாமா?
உலகிலுள்ள பூக்களை நிரப்பி
உன் பாதையில் பரப்பலாமா?
வாழ்க்கையின் ஒரு குற்றச்சாட்டை
பலமுறை சாட்ட விரும்புகிறேன்
ஒரு நல்ல செய்தி எனக்கு கிடைத்தது
அது ஏன் இவ்வளவு தாமதமாக கிடைத்தது?
மனம் அலைபாய்கிறது
கரையில் அமர்ந்து அலைகளோடு
விளையாடிக் கொண்டே இருக்கலாமா?
கண்ணை மூடிக்கொண்டே காதலை
புதிய கோணத்திலே நினைக்கலாமா?
சிந்தனைக்கு காவல் இருக்கிறது—
இந்த காலத்தை வெறுத்துவிடலாமா?
எல்லா சடங்குகளையும் மறந்துவிடலாமா?
அனைத்து உறவுகளையும் முறித்துவிடலாமா?
எல்லா சபதத்தையும் மறந்து விடலாமா?
சில சமயங்களில் எண்ணங்கள் வருகின்றன.
பாதி வயதில் ஆணாக இருக்கிறேன்.
பாதி வயதில் பெண்ணாக இருக்கிறேன்.
முறைப்படி நான் இரண்டையும் உணர்கிறேன்.
சில சமயம் நினைக்கிறேன்
அவன் எனக்கு உண்மை என்ற
எழுதுகோலை கொடுத்திருக்கிறான்.
இருந்தாலும் கண்களில் ஏன்
இன்னல் உலகத்தைக் கொடுத்துள்ளான்.
மிருதுவான மணலில் உட்கார்ந்துகொண்டே
இருக்கலாமா? எண்ணங்களில் அமைதியாக.
என் மனமும் சிக்கலில்
இந்த மனம் வாக்கு நிறை வேற்றும்
வினாக்களில் அமைதியாக.
சில சமயங்களில் நினைக்கிறேன்
இந்த மணமுள்ள கொடிகளில்
பின்னி படர்ந்து தூங்கலாமா?
மணக்கும் பூக்களின் அழகில்
உன் கரங்களில் என்னை இழந்துவிடலாமா?
அடிக்கடி மனதில் எண்ணுகிறேன்
நான் கவிதை எழுதவில்லை
என்றால் என் வாழ்க்கை சிதறிவிடும்.
நான் வீட்டின் நான்கு சுவற்றுக்குள்
மூச்சு திணறி இறந்திருப்பேன்.
என் அப்பாவி தனத்தாலும்.
என் அறியாமையாலும்
நான் அதிகம் இழந்திருப்பேன்.
ஒரு குறிக்கோளை அடைய
கசப்பான அனுபவத்தால் நாட்கள் கழிந்தன.
சில சமயங்களில் வாசனை போல்
காற்றில் பறக்கலாமா? என்ற
எண்ணம் வருகிறது.
நான் தேவதைகளின் நாட்டிற்குச் சென்று
அவர்களுக்கு என் பாட்டை சொல்லலாமா?
[ வாழ்க்கை யதார்த்தத்தை ஏற்கிறது. நாம்இப்படி இருந்தால்,அப்படி இருந்தால் என்ற மனப் போராட்டத்தில் வாழக்கையின் ஒற்றை அடிப்பாதை கற்பனை உதவியோடு செல்கிறது.பயணத்தில் வெய்யிலும் நிழலும் மாறி மாறி வருகிறது. சிலசமயம்சொன்னவாக்கைகடைப்பிடித்தல்,சொன்னசொல் தவறுதல் இரண்டும் நடக்கிறது.அதில் பிரச்சினை இழந்துவிடுகிறோம்.மனதின் ஆகாயமும்,உணர்வின் பூமியும் சில சமயங்களில் எத்தனை வண்ணமாக மாறுகின்றன.நீ மாறமாட்டாய் என்ற நம்பிக்கை இருக்கிறது.இது உண்மை தானே?
ஆம், உண்மை தான் என்று சொல்லிவிடு.]
===============================
நீ மிகவும் நல்லவன்.
[तुम बहुत अच्छे हो- पृष्ठ106.]
=================
நீ மிகவும் நல்லவன்.
உன்னை விட நல்லவை
உன் பழக்க-வழக்கங்கள்
உன் எண்ணங்கள்
உன் விருப்பங்கள்
உன் தொடர்புகள்.
நீ நல்லவன்.
உன்னைவிட நல்லவை
உன் பரிகாசங்கள்.
உன் நட்பு
உன் தொலைநோக்குபார்வைகள்.
நீ நல்லவன்.
உன்னைவிட நல்லவை
உன் மன உலகம்.
நான் கட்டவேண்டும்
என் கனவு மாளிகைகள்.
நான் அமைக்க வேண்டும்
காதல் பூந்தோட்டங்கள்.
இப்பொழுது நான் போவதெங்கே?
[ மக்கள் கண்ணீரை ஏரிபோலவும் முகத்தைநிலவு போலவும் எழுதி மன நிறைவு அடைகின்றனர்.என் உள்ளழகை பார்த்திருக்கிறாய்.இயற்கை சுற்றுப் புறச் சூழல் இதுதான் கலை என்கிறாய்.உலகக் கூட்டம் தனி. உன் கணகளின் அழகு–இந்த கண்கள் இப்படியே என் வாழ்நாள் முழுவதும் என் அக்கம்-பக்கத்தில் இருக்கட்டும்.
அந்த திருப்பம் வரவில்லை.
[वो मोड नहीं आया-पृष्ठ-107]
நான் இங்கே அமர்ந்து உன்னை எதிர் பார்க்க வேண்டியிருந்தது.
வந்து போகும் பருவகாலங்களை காதலிக்க
வேண்டியிருந்தது.
காதலால் கிடைத்த காயங்களை குணப்படுத்த
வேண்டியிருந்தது.
இங்கிருந்து நான்
உன் கையை என் கையுடன்
கோர்த்துக்கொண்டு செல்லவேண்டியிருந்தது.
இங்கிருந்து இரண்டு உடல்களை காதல்
வெப்பத்தில் எரிக்கவேண்டியிருந்தது.
இங்கு இச்சைகளின் கிளைகளில்
பூத்து பழுக்க வேண்டியிருந்தது.
இங்கிருந்து புறப்பட்டு உன் வரை
அடையும் தொடர்ச்சி.
இங்கிருந்து செல்லும்
புதிய வசந்தங்களின் பயணிகள்.
இங்கு அமர்ந்து நான்
என் காதலின் தீர்ப்பை எழுதுவேன்.
இங்கிருந்து குறிக்கோளை நோக்கி
ஏதோ ஒரு பாதை செல்கிறதா?
இங்கிருந்து பறந்து சுற்றும்
மின்மினுப் பூச்சிகளின் மீது
கவனம் செல்கிறது.
இங்கிருந்து நான் கண்களில் பொழியும்
கண்ணீரைப் பார்க்கிறேன்.
இங்கே என் கூந்தலில் வைக்கும்
மல்லிகைப் பூக்களின் சரத்தை
தொங்க விட்டுச் செல்வார்கள்.
இங்கு இலை சருகுகள் பறக்கும்.
காலத்தின் தூசிகள் பறக்கும்.
இங்கே நான் உன்னுடன் அமர்ந்து
அனைத்து துன்பங்களையும் மறந்துவிடுவேன்.
என் வாழ்க்கையில் அந்த திருப்பம் வரவில்லை.
=======
[ வாழக்கை பயணத்தில் பல திருப்பங்கள் வருகின்றன. சில திருப்பங்கள்மூடு பனி பக்கம்.சில குறிக்கோளின் பக்கம்.
திருப்பத்திலேயே ஏதாவது கிடைத்துவிடுகிறது.சில பிரிந்துவிடுகின்றன.
அவனை பாதை தெரியாமல் சுற்றவைக்கும் திருப்பத்தை யாரும் விரும்புவதில்லை.
நான் பிரிவின் திருப்பத்தில் நின்று கொண்டு
இந்த ஆசிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.]
==============
காதல் மலர்கள்.
[मुहब्बत के फूल -पृष्ठ संख्या-108.]
=============
காதல் மலர்களின் வண்ணங்கள்
சிவப்பு,ஆரஞ்சு,மஞ்சள்,பச்சை,ஊதா,கருநீலம்
அல்ல.
இவை மென்மையான பூமியில் மலர்வதில்லை.
அவை பாறைகளில் மலர்கின்றன.
இவை தண்ணீர் வெப்பத்தில் மலர்வதில்லை.
இவை கண்ணீரின் உப்புத் தண்ணீரால் மலர்கின்றன.
இவைகள் மீது வசந்தத்தின் பனித்துளிகள் சொட்டுவதில்லை,
இவைகள் மீது கண்களிலிருந்து வரும்
கண்ணீர் துளி விழுகிறது,
இந்த மென்மையான துளியை
வெய்யில் அல்ல
பிரிவின் வெப்பம் அழிக்கிறது.
காதல் பூக்கள் கடைத்தெருவில் விற்பதில்லை.
இவை மாலைகளாக தொடுக்கப்படுவதில்லை.
இவை காதல் தேவதையின் பாதங்களில்
அர்பணம் செய்யப்படுகின்றன.
காதல் பூக்களின் நிறம்
என்ன என்று கேட்கிறீர்கள்?
நீங்கள் உண்மையாக யாரையாவது
காதலித்து பாருங்கள்
தானாகவே தெரிந்து கொள்வீர்கள்.
இந்தப் பூக்களின் நிறம் என்ன என்று?
[மனம் என்ற தோட்டத்தில் பூத்த மலர்கள் அவைகளில் இருந்து என் சுவாசம் என் வாழ்க்கை மணக்கிறது.எனது இரண்டுங்கெட்டான் நிலை இந்த பூக்களின் மீது எழுதியுள்ள பெயரை படிக்க முடியாது.
சொல்ல முடியாது. இந்த பூக்கள் நீடூழி வாழ பிரார்த்தனை செய்கிறேன்.]
====================================
இறுதி பக்கத்தில்.
आखिरी पन्ने पर–पृष्ठ सं. 109-110.
உன்னை மறப்பதற்காக,
சுவற்றில் தேட ஆரம்பித்தேன்.
தனிமையின் பயத்தால் நடுங்கும் இரவுகள்.
நகர ஆரம்பித்தது.
அறியாத பாதையில்
பருவகாலங்களுடன்
காதலிக்கத் தொடங்கியது.
ஆனால்
யாருடைய பெயரையும் சொல்லி
யாரையும் உரிமையுடன்
அழைக்க முடியவில்லை.
யாரையும் ஆன்மாவில்
இணைக்கமுடியவில்லை.
எப்பொழுதும் மனதில் உன் நினைவே.
உனக்காகவே நான் பிரார்த்தனை செய்கிறேன்
நீ உன் கையை
நாடிகளில் வைத்து பார்க்கவில்லை.
உன் துடிப்புகளில் என்
துடிப்புகள் தான் .
என் சமர்ப்பணம் உனக்கு
நினைவில்லை.
நான் ஆரத்தி தட்டில்உன் பெயரால்
விளக்குகளை அலங்கரித்தேன்.
ஆனால் இன்று நீ இல்லாமல்
மாலை விளக்கு ஒளி மங்கிஉள்ளது.
மனக் கோவில் இருட்டாக உள்ளது.
காதல் நட்சத்திரம் அமைதியாக உள்ளது.
பிறகும்
காதுகளில் ஏதோ சங்கீதம்
எதிரொலிக்கிறது.
உதடுகளில் நம்பிக்கை நிறைந்த பாட்டு.
சுகம் மனதிற்கு அருகிலும் இல்லை
தொலைவிலும் இல்லை.
இதயத்தில் ஒரு பொன்னான உணர்வுகள்.
அது உதிரும் உணர்வல்ல.
இறுதி நிலை மஞ்சள் இலை போல
நூற்றாண்டு சங்கிலி அறுந்தது போல.
உதவியற்ற நொடிகள் போன்று.
அது உதிரும் உணர்வல்ல.
எப்பொழுதும் உணர்வுகளின்
கிளைகள் பசுமையாக இருக்கும்.
காதல் நெருப்பு எரிந்துகொண்டே இருக்கும்.
இந்த வெப்பமான கரைகளை
என் ஆன்மா குளிராக்க விரும்பவில்லை.
வாழக்கையின் இறுதி பக்கத்தில்
வேறொருவர் பெயரை
இப்பொழுது எழுத முடியவில்லை.
எனக்கு தோற்பதற்கு என எதுவுமில்லை.
[ மனதில் உணர்வுகளின் கடல் இருக்கிறது. நீ சென்றதால் அது அமைதி ஆனதாக நீ நினைக்கிறாய்.
இப்பொழுது தான் சிறிது நேரத்திற்கு முன்
உணர்ச்சி மிக்க வேகமான அலைகள் வீசி என்னை வெகு தொலைவிலுள்ள கடந்த கால பாலைவனத்தில் பதள்ளிவிட்டது. இங்கு நான் இருக்கிறேன்.
மணல் இருக்கிறது.உனது நினைவுகளின் ஈரமான மணத்துடன் நிறைந்த காற்று மட்டுமே. வேறு எதுவும் கிடையாது.]
======================================
இறுதி விடை.
अलविदा-पृष्ठ -111-112.
—------------------------
காதல் என்ற புனித இடத்தில்
நாங்கள் சேர்ந்து ஆசிகள் கேட்டோம்.
காதலில் கடவளின் மகிழ்சி கேட்டோம்.
அவன் நினைத்தான்:-
நான் இதை அதை
கேட்டிருப்பேன்.
நான் நினைத்தேன்:-
அவன் இதை,அதை கேட்டிருப்பான்.
இருவரும் எதை வேண்டுமென்றாலும்
கேட்டிருப்போம்.
ஆனால்
ஆன்மா ஈரமாகி விட்டது.
மனம் ஆனந்தமாகிவிட்டது.
வெய்யிலில் வயல் ஓரத்தில்
ஏதோ ஒருமரத்தில் சாய்ந்து
அவன் தன்
புதுக் கவிதையைச் சொன்னான்.
அது உணர்ச்சி மிக்க கவிதை நதி.
நீ எங்கே இருக்கிறாய்?
[எத்தனை பிறவிகளில் உன் குரலை பின்பற்றி வருகிறேன்.அடிக்கடி என்னை கைவிட்டு எங்கே போகிறாய். உன்னை அடைவதற்காக அடிக்கடி பிறவி எடுக்கிறேன்.ஒவ்வொரு முறையும் நான் நம்பிக்கையை இழந்து விடுகிறேன்.உன்னை எண்ணுவதால் மட்டும் நம்பிக்கை வந்து விடுகிறது.]
மென்மையான மஞ்சள் கடுகுப் பூக்கள் அருகில்
இனிமையான உணர்வுகள் விழிப்படைந்தன.
அவன் என் மகத்துவத்தை அமைதிப் படுத்தினான்.
இந்தக் காலத்தில் காதல் கடினமானது.
பிறகு சூரியன் மறைவதற்கு முன்னால்
வீட்டிற்கு செல்வதற்கு முன்
அவன் இறுதி விடை கூறிவிட்டான்.
இன்றும் நினைக்கிறேன்
பிரார்த்தனையை விட பெரியது காதல்.
காதலை கேட்க வேண்டியதில்லை.
[இயற்கை கேட்காமலேயே தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. கைகளில் பூக்களால் அர்ச்சனை செய்து வேண்டினாலும் எதுவும் கிடைப்பதில்லை.நீ என் பிரார்த்தனையின் நீதி.நீ பவித்திரமானதொடர்ச்சி.
நான் இனிமேல் பிரார்த்தனைக்காக கை தூக்க மாட்டேன்.]
==================================
தமிழ் மொழிபெயர்ப்பு
சே. அனந்த கிருஷ்ணன்.*
No comments:
Post a Comment