காலை வணக்கம் /மாலை வணக்கம் /இரவு வணக்கம்
இந்த வணக்கம் நேரம் சேர்ப்பது யார் பழக்கம்.
வணக்கம் இருகரம் கூப்பி சொல்வதா?
ஒருகரம் எடுத்து அடிப்பதை தடுப்பது போல் சொல்வதா?
நம்மில் பயம் இல்லை ,இருகரம் கூப்பியே
வணக்கம் சொல்வோம்.
அப்படித்தானே கொன்றான் கோட்சே .
வணக்கம் சொல்பவனிடமும் எச்சரிக்கை தேவை.
இந்திராவைக் கொன்றவன் பாதுகாவலன்
அவன் வணக்கம் சொல்லவில்லை .
கூழைக்கும்பிடு போடுதல் என்பார்கள்
கொலைக் கும்பிடும் உண்டு .
கோழை கும்பிடும் உண்டு .
சுயநலக் கும்பிடும் உண்டு .
சூழ்ச்ச்சிக்கும்பிடும் உண்டு.
மரியாதைக் கும்பிடும் உண்டு.
சாமியைக் கும்பிடுவதும் உண்டு.
எதற்கும் எச்சரிக்கை வேண்டும்
கும்பிடு.எதிர்கும்பிடு போடுவதில்