Wednesday, November 25, 2015

     ஷிவஸ் தோ த்ராணி

சிவனே !பசுபதியே! தேவனே !
உனக்கு பூஜையின் பரிசாக ,
ரத்னத்தால் அமைத்த  அரியணை ,
குளிர்ந்த நீரால் ஸ்நானம் ,
பலவித ரத்தினம் பதித்த ஆடைகள்,
கஸ்தூரி மணம்  நிறைந்த சந்தனம்,
மல்லிகை ,முல்லை ,பில்வ இலைகள் ,
கொண்டு மலர் அர்ச்சனை,
தூப தீபம் இவை எல்லாம்  மானசீகமாக
அர்பணிக்கிறேன். ஏற்றுக்கொள்வீர்களாக !


புதுமையான ரத்தினங்கள் பதித்த
தங்க பாத்திரங்களில்
நெய்சேர்த்த  பாயாசம் ,
வாழைப்ப ழங்கள் ,பழ ரசங்கள்,
பலவித தின்பண்டங்கள் ,
ரசகர்பூரம் கலந்த வாசனையுள்ள இனிப்பான தண்ணீர் ,
தாம்பூலம்  இவையெல்லாம் மனதால் தயாரித்து ,
அர்ப்பணிக்கத்  தயாராகிறேன் ,
இறைவா !ஏற்றுக்கொள்ளுங்கள்.தயை புரியுங்கள்.

மனதில் உறுதிபூண்டு வெண்கொற்றக்குடை ,
இரண்டு சாமரங்கள்,விசிறி ,நிர்மலமான கண்ணாடி ,
வீணை, முரசு ,துந்துபி இசைக்கருவி ,நடனம் ,
சாஷ்டாங்க நமஸ்காரம் ,பலவிதமான ஸ்துதிகள்,
தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இறைவா! என் பூஜையை ஏற்றுக் கொள்ளு ங்கள்.


சிவ சம்போ ! என்னுடைய ஆத்மா நீங்கள்.
என்னுடைய  ஞானம் பார்வதி தேவி.
என் உயிர் சிவ  கணங்கள்.
என் உடல் உங்களுடைய ஆலயம்.






No comments: