Tuesday, December 1, 2015

காஞ்சனா போல் வரட்டும். கதரவைக்கட்டும்.

மக்கள் நிலை கண்டு வருந்தவேண்டாம்.
மக்களாட்சி ஊழலில் செய்யும் அரசியல் பின்னணி கண்டு வருந்தவேண்டும்.
புறநகர்ப்பகுதி ரியல் எஸ்டேட் அனுமதிக்கு சிபாரிசு செய்த அரசியல் திமிங்கிலங்கள்,
கட்டட அனுமதி அளித்த பொறியாளர்கள் 
இளைஞர்களை மயக்கி கடன் வாங்க லஞ்சம் கொடுத்து 
கடன் அனுமதி அளித்த வங்கி எல் ஐ சி அதிகாரிகள்,
அனைவரும் சித்தம் கலங்கி பித்துப்பிடித்து திரிய வேண்டும்.
வாங்கியவர் குற்றமா /மயக்கும் விளம்பரம் அளித்தோர் குற்றமா /
அனைத்துக்கும் அரசியல் செல்வாக்குடன் அல்லது சுயலாபத்துடன் அனுமதி அளித்தவர்கள்  இறைவன் தண்டனையிலிருந்து தப்ப முடியாது,
நேர்மை சத்தியம் விரும்பிகள் பிரார்த்தனை வீண் போகாது.
அவன் சிவன். அவன் அல்லா அவள் காளி 
கவனிப்பார்கள். கவனிப்பாள் .
பிரார்த்திப்போம். ஊழல் லஞ்சம் ஒழிய .
பாடம் கற்பிக்கட்டும் . இறைவனும் இறைதூதர்களும்.
நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த ஆத்மாக்களும். 
நேர்மையால் உயிர் இழந்தவர்களின் ஆன்மாக்களும். ஆவிகளும் .
காஞ்சனா போல் வரட்டும். கதரவைக்கட்டும். 
பிரார்த்திப்போம்.
ஓம் நமச்சிவாய். ஓமம் சக்தி. ஓம் முருகா . ஓம் கணேசா .
நாட்டை தூய்மையான ஆட்சியாளர்களிடம் ஒப்படைப்பீர்.


No comments: