Wednesday, May 22, 2019

तमिल चित्रपट गीत कवि कणणदासन

कवि सम्राट कणणदासन  के चित्र पट  गीत।

யாரடா  மனிதன் இங்கே          कौन  है मनुष्य यहाँ,
கூட்டிவா அவனை அங்கே       ले आओ उसको वहाँ।
இறைவன் படைப்பில்                भगवान की सृष्टि में

குரங்குதான் மீதி இங்கே           बन्दर ही बचा यहाँ।

மனிதரில் நாய்கள் உண்டு       मनुष्यों में कुत्ते हैं
மனதினில் நரிகள் உண்டு         मनुष्यों में सियार हैं ।
பார்வையில் புலிகள் உண்டு
                                                                 दृष्टी  में बाघ भी हैं
பழக்கத்தில் பாம்பு உண்டு
                                                                   रहसहन  में साँप भी हैं

நாயும் நரியும் புலியும் பாம்பும்    कुत्ते,सियार,बाघ, सर्प
வாழும் பூமியிலே                                   जीने की भूमि में
மானம் பண்பு ஞானம் கொண்ட
                                                                      मान,गुण,ज्ञान के
மனிதனைக் காணவில்லை
                                                                     आदमी न दीख पडा ।

சிரிப்பினில் மனிதனில்லை
                                                                    हँसी  में मनुष्य नहीं
அழுகையில் மனிதனில்லை
                                                                  रोने में मनुष्य नहीं
உள்ளத்தில் மனிதனில்லை
                                                                 मन में मनुष्य नहीं
உறக்கத்தில் மனிதனுண்டு
                                                               नीन्द में मनुष्य नहीं।

வாழும் மிருகம்                              जीता जानवर
 தூங்கும் தெய்வம்                          सोते भगवान।
நடுவே மனிதனடா                          बीच में ही मनुष्य ।
எங்கோ ஒருவன் இருந்தால்---அவனை
உலகம் வணங்குமடா
                                                                कहीं कोई रहें तो
                                                        करेगी सारे जग वन्दना।

Wednesday, March 27, 2019

अशांति कमी नहीं होगी।

परिषद को नमस्कार ।
शीर्षक :- कम नहीं  होता ।
संचालक : कौशल वंदना ।
सब को सादर प्रणाम।
कौशल की वंदना कम नहीं  होता।
एकलव्य,कर्ण,सुभास चंद्र बोस
जैसे कौशल लोगों को
दबाना भी कम नहीं होता।
ईमानदारी  की तारीफ़ कम नहीं  होती।
बेईमानी  की चुनाव
 सफलता  भी कम नहीं  होती।
सत्य  का यशोगान  कम नहीं  होता।
असत्य लोगों के पिछलग्गु की
संख्या भी
कम नहीं  होती।
बलात्कारी  की सजा बढती नहीं,
बलात्कार  घटनाएँ  भी कम नहीं होती।
रिश्वत अपराधी  को पकड़ने के अधिकारी  अधिक,पर बगैर रिश्वत  के काम नहीं  कम होता।
महँगाई भत्ता  बढती कम नहीं होती ।
महँगाई  भी कम नहीं  होती।
शिक्षा  शुल्क, पुरोहित  शुल्क,
चिकित्सा  शुल्क, 
चुनाव  खर्च
 कम नहीं होता ।
बढती उम्र  घटती नहीं ।
  यही कारण है कि
बढती  घटती जिंदगी  में,
शांति  की होती कमी,
अशांति  की कमी नहीं होगी ।
स्वरचित स्वचिंतक यस ।अनंत कृष्ण ।




Saturday, March 23, 2019

சாஹித்திய அகாடெமி ஹிந்தி இதழில் வெளியான ஹிந்தி கவிதைகளின் தமிழ் ஆக்கம் -2





6. கவிஞர் :---மாதவ் கௌசிக்

     கவிதை :- கஜல்
 
    பூக்கள் ,இலைகள் ,பூந்தோட்டங்கள்
    இப்பொழுது எங்கே ?
     வீடுகள் இருக்கின்றன ,
   ஆனால் தாழ்வாரங்கள்
   இப்பொழுது எங்கே ?
    அப்பாவிக் குழந்தைகள்
   படுக்கைக்குக்  கீழே
   அமுக்கப்பட்டு ,
  முன்போல் குழந்தைப் பருவம்
    ஆனந்தமாக இல்லை.
    உங்கள் முகமே உங்களுடையதாக இல்லை ,
     உண்மையைக் காட்டும் கண்ணாடிகள் எங்கே ?

 அமில மழை  பொழிகிறது .
பால் போன்ற நீர்த்துளிகளின்  இப்பொழுது எங்கே ?

கனவுகள் பறவைகள் போன்று பறந்து விட்டன .
மரத்தில் தொங்கு கின்ற  கூடுகள்  எங்கே ?
கேட்டுப்பார்த்தால்  வாழ்க்கை பேசியது --
வாழ்க்கையில்  நட்பு  வாழ்க்கை இப்பொழுது எங்கே ?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2.   நகரத்தில் எனக்கு ஆறுதல் அளிப்பவர் யார் ?

     கிராமத்தில் இருந்தும் எனக்கு கடிதங்கள் வருவதில்லை.
   
     எனது  தனிமை உலகம் பற்றி என்னத்தைச்  சொல்வது.?
    மாடி   என்னை முறைத்துப் பார்க்கிறது ?
   உண்மை பேசும் பழக்கத்தால்
    எல்லோரும் என்னிடம்
    கோபமாக   இருக்கின்றனர் .

   மனக்காயம்  இதயத்தில் இருந்து வெளிப்படக்  கூடாது .

    என்னை சீண்டி கோபமூட்டக்கூடாது .
தன்  கண்களால் தன்னையே  பார்க்க முடியாது .
நேரம் எனக்கு  வாய்ப்பளிக்கவில்லை .
எந்தச்  சொற்களால் ,நன்றி சொல்லமுடியும் ?
எனக்கு மரியாதையை பரிசாகக் கொடுத்துள்ளார்கள்.
***************************************************************

7.       கவிஞர்  தேவேந்திர ஷர்மா "இந்திர "

            கவிதைத்  தலைப்பு :--நவ  கீத்
                   புதியபாடல்

            1. மௌனத்தின் தொடர்ச்சி
               இப்பொழுது முடியாது .
                சிரிப்பின் மணத்தால்
                பேச முடியாது .
                 பூ இதழின் முந்தானையில் இருந்து
                  முத்துக்கள் சிதறிவிட்டன.
                 புயல்   மலராத நான்கு
                  பூக்களை உதிர்த்தது விட்டது.
                    சந்தனக்காட்டை எரிக்க
                     காற்று வீசியதுபோல்
                    உறவினரின்   பாலம் உடைந்து விட்டது.

                   நமக்கிடையில் சேர்ந்து இருந்தவர்கள் ,
                   சந்தித்தும்  சந்திக்கவில்லை .
                    உயிருள்ள சத்தங்கள்
                   படுக்கையில் புதைத்துவிட்டன .

                 இறந்த ஆணவம் ஆகாயத்தில்
                தொங்கிக்கொண்டிருக்கிறது
                   சொற்களின்  பயணிகள் கூட்டம்
                   பாலைவனத்தில் மறைந்துவிட்டது .

***********************************************************

                 
             





Friday, March 22, 2019

इंद्रधनुष

मंच को प्रणाम ।
 शीर्षक समिति कौ प्रणाम ।
 आज का शीर्षक:_
इंद्रधनुष।
++++++++
दुरंगी दुनिया,
दुष्ट दुनिया,
  धूप छद्मवेशी,
सात रंग छिपा,
सर्वेश्वर  भी  अवतार।
मोहिनी रूप,
वामन रूप,
हरियाली  का आधार
वरुण भगवान
सच्चाई  प्रकट
सात रंग ,
सर् सि वि रामन का प्रमाण
सात रंग,
नियाग्रा में देखा
भूमि पर सात रंग।
इंद्र धनुष।
सात रंग।
जाता धूप भी,
बरसातें  काले
बादल सब
छद्म वेशी
इंद्रधनुष ।
स्वरचित
स्वचिंतक
यस। अनंत कृष्णन

சாஹித்திய அகாடெமி ஹிந்தி இதழில் வெளியான ஹிந்தி கவிதைகளின் தமிழ் ஆக்கம்



சமகாலீன்    பாரதீய சாஹித்திய --141வது  பதிப்பு

சம கால பாரதீய  இலக்கியம் -141வது  பதிப்பில் வந்த ஹிந்தி கவிதைகளின் தொகுப்பின்   தமிழாக்கம் .


1.  கவிதைத்  தலைப்பு :---கவிதையில்  கடுகுகள் .



    கவிஞர் :-சஞ்சீவ் பக்ஷி --
தமிழாக்கம் : சே. அனந்தகிருஷ்ணன்


நான்  கவிதைகளில்   கடுகுகைப் பற்றி
குறிப்பிடும் போதெல்லாம் ,
அதனிடம்  நியாயம் வழங்கவில்லை என்றே
உணர்கிறேன் .

அதை முழுவதுமாக  வெளிப்படுத்தவில்லை  
                அல்லது
எதோ கலப்படம் நடந்து வருகிறது.

கடுகு வயல்களைப்பார்த்தும்
கடுகு விவசாயியின்   முகத்தில் ,
கடுகு வயல்களுக்கிடையில்  நின்று
கலகல சிரிப்பைக்கண்டும்  பல நாட்கள் கடந்துவிட்டன .

மாங்காயின் ஊறுகாயில் இருந்து இதன் குணம் மணம் அறிந்திருக்கிறேன் .
பலநாட்டு நிறுவனங்களின்
புட்டியின்   மூடியைத் திறந்ததுமே ,
அறைமுழுவதும்  அதன் மணம் .
சிறிது நேரத்தில் இந்த அறை
ஒரு நகரமாகி நாடாக மாறிவிடுகிறது.

குழந்தைகள் ,
அழகான  மஞ்சள் காகித உரைகளை
கடுகுகளின்  வயல்கள்போன்றே   அறிந்து உணர்கிறார்கள்.

இதில் குழந்தைகளின் தவறுகள் எங்கே ?
இந்த ஊறுகாயை ஒவ்வொரு மாதமும்
நான் தான் கடைத்தெருவில் இருந்து வாங்கி வருகிறேன்.
வாசகர்கள் கேட்கின்றனர் கவிதைகளில் கடுகைப் பற்றி எழுதுவது அவசியமா ? கவிதைகள் ஊறுகாயா ? ருசித்துப்பார்த்து இதில் கடுகு இல்லை என்றே சொல்ல . என்ன சொல்கிறார்கள் ? இதைநானறிவேன் . சில நண்பர்களின் கவிதைகளில் கடுகுகள் இருப்பது ,(ரசங்களுடன் ) அதன் வயல்கள் இருப்பதுபோல் அத்தியாவசியமே . ஹிந்தியில் சரஸ் என்றால் கடுகு என்பது பொருள். மற்றொன்று நவரசங்களுடன் கூடியது . இந்த இருபொருளில் கவிதை . सरस. =கடுகு ;स+रस = ரசத்துடன் கூடிய . திருக்குறள் பற்றி கூறும்போது கடுக்கைத்துளைத்து எழுகடலைப் புகுத்தி குருக்கத்தி தரித்த குரள் . தமிழ் இலக்கியத்திலும் கடுகு இடம் பெற்றுள்ளது. 2. सपनों की नदी ,सपनों का पहाड़। தலைப்பு :- கனவுகளின் ஆறு ,கனவுகளின் மலை.
கனவில் நதி , கனவில் மலை கனவில் மலர்கள் , கனவில் பசுமை , கனவுக்குத்தெரியவில்லை கனவு கலைந்து விடும் என்று . மங்கிய நிலையில் அது கனவல்ல ,கனவின் கனத்த நிறம் மூளையில் படர்ந்து விட்டதை நிலைத்து இருப்பதை இப்பொழுதும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். முற்றுப்பெறா கதையை முழுவதும் முடிக்க , வெளிக் காட்சிகளும் தொலைவின் ஓசையையும் கனவு சுருட்டிக்கொண்டிருந்தது . கனவின் மலையை நான் தீண்டியது மலைபோன்று இல்லை கையில் இருந்து போய்க்கொண்டிருந்தது காட்சியில் இருந்து மறைந்த சொரசொரப்பு. கனவின் ஆற்றில் தண்ணீரின் குளிர்ச்சி , கனவின் ஆரம்பத்திலேயே சென்றுவிட்டது. மெல்ல மெல்ல மின்னிக்கொண்டிருந்த அனைத்து கதா பாத்திரங்களும் மறைந்து கொண்டிருந்தன. கனவில் செல்கின்ற விருப்பத்தை என் கண்களுக்கு எதிரிலேயே மறையும் காட்சிகள் தடுத்துக்கொண்டிருந்தன. ஜன்னலுக்கு வெளியில் ,தொலைவில் தெரியும் மலையின் காட்சி,இந்த உண்மையான மலை இப்பொழுது தெளிவாகா தென்பட்டுக்கொண்டிருந்தது. இப்பொழுது மூளையின் ஒரு மூலையில் கனவு காட்சியளித்துக் கொண்டிருந்தது. இப்பொழுதும் மரத்தைத் தொடுவது , முயலைத்தோடும் உணர்வைத் தந்தன பறவைகள் காற்றுபோல் பறந்தன . சூரிய ஒளி வேறுபட்டு ஏழு வண்ணங்களாகக் காட்சியளித்தன . இந்த வண்ணங்களை என்னால் தொட முடிந்தது. இந்த த் தொடு உணர்வை விழித்தெழுந்த பின்னரும் சேமித்து வைக்கத்தான் விரும்புகிறேன். தூங்குதல் ,விழித்தலுக்கிடையில் ஓரிடத்தில் தேடுகிறேன் .
கவிஞர் கனவின் யதார்த்த நிலை ,கலைந்த பின்பும் அதன் பசுமை நினைவுகளை இக்கவிதையில் இயற்கையாகக் கூறியுள்ளார். ************************** 3. खैरायगढ़ में कप चाय और डबल पान தலைப்பு :-- கைராயட் கோட்டையின் அரைக் கோப்பைத் தேநீரும் ,பீடாவும் (பானும் ) கைராய் கோட்டையின் நிகழ்ச்சி அரைக் கோப்பை தேனீர் ,மற்றும் இரட்டை வெற்றிலையுடன் துவக்கமாகிறது. முழு தேநீரும் அருந்துபவர்களை அறியாதவர்கள் போல் பார்க்கிறார்கள் . என்ன ஆச்சு என்று முறைத்துப் பார்க்கிறார்கள். அரைக்கோப்பையே போதும் என்ற நிலையில் முழு கோப்பைத் தேவை எதற்கு ? உணவு விடுதி செல்லுங்கள், அமருங்கள் ,ஒரு நொடியில் அரைக்கோப்பைத் தேநீர் வைக்கப்படும். அங்கே உங்கள் ஆட்சிபோலவும் , இன்று உங்களுக்கு முடி சூட்டுவிழா போன்ற கவனிப்பு. யார் கேட்டார்கள் ? என்று வினவினால் , அமர்ந்திருக்கிறீர்கள் தேநீர் அருந்தவீர்கள் . அரைக்கோப்பைத் தேநீர் அருந்துங்கள். என்றே பதில் வரும். தேநீர் அருத்திக்கொண்டிருக்கும்போதே , துக்காராம் கடையின் பாண் பீடா தரப்படும் கேட்டது போன்றே நடக்கும். துக்காராம் கடைபோன்று கிடைக்காது என்று உங்கள் முன் பான் பீடா அளிக்கப்படும் . வாயின் ஒருபக்கம் பான் அமுக்கிக்கொண்டு தங்களையும் துக்காராமையும் புகழ்ந்து கொண்டு உங்கள் முன் பீடா தயாராகி வைக்கப்படும். வெற்றிலையில் பாக்கு எவ்வளவு ? வாயில் போட்டதுமே வலதுகை மற்றொன்று வாங்க நீளும் . துக்காராம் விரைவாக மற்றொன்று தயாரித்து நீளும் கைக்குள் வைக்க எதிப்பார்ப்பர். நாந்த் கிராமத்தில் மற்றொரு பீடாவிற்கு காய் நீண்டதும் கேட்பார்கள் -கைராய் கோட்டையில் இருந்து வந்துள்ளாயா ? தேநீர் அருந்தி ,பீடாவை வாயில் அமுக்கிக் கொண்டு எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். துக்காராம் கணக்கில் எல்லோர் பெயரும்
ஒன்றாம் தேதி கணக்குச் சீட்டுடன் பீடாவும் வந்து விடும். கைராய் கோட்டை அரைக்கோப்பை தேநீருக்கும் , பீடாவுக்கும் மட்டும் புகழ் பெறவில்லை . கடன் கொடுத்து வாங்குவதிலும் புகழ் பெற்ற ஊர். காது கொடுத்துக்கேளுங்கள் , அங்கே திரைப்படமும் கடன் சொல்லி பார்ப்பார்கள் . வாணிகத்தந்திரம் கடன் வழங்கல் ,தற்புகழ்ச்சி ,கட்டாயபணம் பெறா விற்பனை முதல் தேதி வசூல் ,அப்பொழுதும் கணக்குச்சீட்டுடன் பீடா , திரைப்படமும் கடன் சொல்லிப்பார்த்தல் ..நல்ல யதார்த்த வர்ணனை. 4. கவி --இலா குமார் அச்சா ஹை , தலைப்பு :-
நல்லாயிருக்கு . ********************** நான் தனிமையில் இல்லை , என்னுடன் உணர்வு நிலையில் மூடுபனியில் மின்னும் எத்தனையோ
புதிய பழைய காட்சி ஓவியங்கள் .
கதவின் சட்டத்திற்குள் அமைதியாய் அமர்ந்திருக்கும் தாய்-தந்தையின் கலை நிறைந்த உடல் அசைவுகள் , மூன்றாவது மாடியில் இருந்து எட்டிப்பார்க்கும் உறவுமுறை உடன்பிறப்புக்கள் , சகோதர சகோதரிகளின் முகங்கள் சித்தி -சித்தப்பா ,மாமா -மாமி ,அத்தை -அத்தை மாமா , ஆகியோரின் கதைகள்
எண்ணிக்கையிலடங்கா கதைகள் என்னுடன் நடக்கின்றன . எங்கு சென்றாலும் அரசவை போல் உறவினர்கள் , அவர்களுக்கிடையில் வேலைக்காரர்கள் -வேலைக்காரிகளின் கொடுமையான காட்சிகள் , குளிர் காலத்தில் இரவில் எண்ணெய்க்கோப்பை வைத்து காத்திருக்கும் செவிலித்தாய்கள் , கல்லூரி நாட்களில் சமையல் காரனிடம் அதிகாலையில் சூடான தேநீர் கேட்டு திட்டு வாங்கும் தம்பி , இன்று தனிமையிலும் என்னுடன் துணை வரும் நினைவுகள். இப்பொழுது புது விழிப்புணர்வு கொண்ட கூட்டம் , தன் அக்கம் பக்கத்தில் யாரையும் சேர்க்காத கூட்டம் , வெளிநாட்டுத் தனிமை என்ற நாடகம் போடுகிறது. நாடகம் போட்டே நடிகன் அதே கதா பாத்திரம் ஆவது இயல்பு , வெளிநாட்டில் மிச்சம் மீதி பெறும் அழுத்தம் , பன்னாட்டு நிரூபி=வனத்தின் ஆசைக்கு அடியில் நடுநக்கிக்கொண்டே வாழ்கிறது. புதிய நூற்றாண்டின் வாயிலில் வளர்ந்த கரையான் கூட்டத்திற்கு இடையில் மனம் பிரமை அடைந்து பதைக்கிறது . எப்படி அடிமையான வாரிசுகள் .? நான் தனிமையில் இல்லை என்பதே நல்லாயிருக்கு. வெளிநாட்டில் பனி செய்யும் நமது இக்கால தனிமை வாழும் இளைஞர்கள் நிலை நம்நாட்டின் கூட்டுக்குடும்பம் இரண்டையும் கூறியுள்ள முறை நல்லா இருக்கு . ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 5. कुछ தலைப்பு :- சிலர் வாழ்நாள் முழுவதும் சில ஆண்கள் ,பல பெண்கள் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் . எவனாவது /எவளாவது திடீரென்று வருவான் / வருவாள் , அவன் /அவள் வாழ்க்கையில் சுகம் தருவான் /தருவாள் எங்கும் சுகமென்ற அலைகள் பாயும். மனதையும் வாழ்க்கையையும் இன்புறச் செய்வான் /செய்வாள் . பணிவான சேவை ,கண்பாப்பாவின் எதிர் நோக்கிற்குப் பின் நின்று எதிரில் உள்ள எல்லையற்ற ஆகாயத்தைப் பார்ப்பாள் . பார்வைக்குள் மின்னும் அழகனா துடிப்புகள் , ஒளிக் கதிர்கள் வழியில் பிடித்து இதயத்தை நடுங்கச்செய்யும் . அவர்கள் தேடுகிறார்கள். இவனுடைய .இவளுடைய ,அவனுடைய /அவளுடைய முகங்களில் ,பேச்சில் ,பார்வையில் அங்க அசைவுகளில் ,சாடைகளில் . மூளை ஒவ்வொரு நொடியும் தேடுகிறது. விரலால் அடிக்கும் கணினியில் மூளையின் நரம்புகள் உலகின் நடுவில் இருந்து விழிப்புணர்வு என்ற தத்துவ இயந்திரத்தை இயக்கிக்கொண்டு எதிர்பார்ப்பு என்ற நீரோட்டத்தில் நரம்புகளில் காதுக்குப்பின் துளையின் துடிப்பில் எப்பொழுதாவது கபாலத்திற்கு இடையில் மனத்துடிப்புடன் வயதாகிவிடுகிறது. கவிஞர் திருமணமாகாத ஆண்கள் பெண்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாநிலை உள்ள இன்றைய சமுதாய நிலையை சித்தரிக்கிறார் .
.

Thursday, February 7, 2019

கபீரின் ஈரடிகள் ----101 முதல் 150 வரை

கபீரின் ஈரடிகள் ----101 முதல் 150 வரை 

           101.   இந்த உடல் காட்டைப் போன்றது.
                   நமது செயல்கள் கோடாலி போன்றது .
                   நமது வினைகள் மூலம் நாமே  நம்மை
                  வெட்டிக்கொண்டிருக்கிறோம் .இப்படி நம்மை நாமே
                  அழிப்பதை கபீர்  சிந்தித்து சொல்கிறார்.

102.   உனக்கு என்று நண்பர்கள் ஒருவரும் கிடையாது.
எல்லா மனிதர்களும் சுயநலத்தால் கட்டுண்டு இருக்கிறார்கள்.
 இந்த ஞானம்  அறிந்து நம்பிக்கை மனதில் உண்டாகும் வரை
ஆத்மாவின் நம்பிக்கை விழிப்புணர்வு  வராது.
உண்மை ஞானம் வராததால் மனிதன் உலகியலில் 
 சிக்கி  துன்பம் அடைகிறான் .
.இந்த சுயநல உலகை அறிந்துகொண்டால்
 மனிதன்  மனம் இறைவனையே நாடும்.

103.   அழிவின் ஆணிவேர் அகங்காரம். ஆணவம் . இதில் சிக்கிக் கொள்ளாதே.

         இந்த ஆணவம் கை  விலங்காகும்.கழுத்துக்குத் தூக்குக் கயிறாகும்.

104.  இந்த வாழ்க்கைப் படகு பாழடைந்ததாகும் .
இதை துடுப்பு போட்டு செலுத்துபவன்  முட்டாள்.
இந்த உலகியல் ஆசைகளின் சுமை யால்
வையகக்  கடல் மூழ்கிவிடும். 
உலகியலில் இருந்து மீட்க முடியாது.
இந்த உலகியலில் இருந்து விடுபட்டவர்கள்
 வையகக் கடலில்   மூழ்குவதில் இருந்து தப்பிவிடுவார்கள் .

105.   மனித  மனம் அனைத்தும் அறிந்தும்
 தீய குணங்களில் சிக்கிக்கொள்கிறது.
அதன் செயல் விளக்கை கையில் பிடித்துக்கொண்டே
 கிணற்றில்  விழுவதுபோல் ஆகிவிடும்.
  அப்படிப்பட்ட மனிதன் நலமாக வாழ்வது எப்படி  ? 
 நலமாக இருக்க எப்படி முடியும் ?

106. நம் இதயத்திற்குள் கண்ணாடி இருக்கிறது.
ஆனால்  கேளிக்கை காமக் களியாட்டங்களால்
 முகம் தெளிவாகத் தெரியவில்லை.
மனதின் சந்தேகங்கள்  தீய ஆசைகள் நீக்கிவிட்டால்
உண்மையான முகம் தென்பட முடியும்.

107.  நீதான் செயல் புரிபவன்.ஏன்  பேசாமல் இருக்கிறாய் ?
 செயல் புரிந்து ஏன்  வருத்தப்படுகிறாய் ?
நீ நட்டதோ கருவேல முள் மரம்.
அவ்வாறிருக்க மாம்பழம்  எப்படி கிடைக்கும்.?
நீ  எப்படிப்பட்ட விதை விதைக்கிறாயோ ,
அப்படித்தான் பலன் கிடைக்கும்.
தீய வினைக்கு தீய பலன்.
நல்வினைக்கு நற்பயன் .

108. நாம் நல்லவர்கள் சேர்க்கையால்
நல்ல விளைவுகளை தாக்கத்தைப் பெறமுடியும்.
 சந்தன மரத்தருகில் இருக்கும் மணம்
  அதன் அருகில் இருக்கும்  வேப்ப மரமும்  பெறும் .
ஆனால் ,ஓங்கி உயர்ந்து வளரும் மூங்கில்
தன்  பெருமையில் மூழ்கிவிடும். இப்படி மூங்கில் போல் இருக்காமல் ,
சேர்க்கையின் பலனை கிரஹித்துக்கொள்ள வேண்டும்.

109.   இந்த  உலகம்  கண்மை மாளிகை .இதன் கதவு செயல்கள்  கர்ம  வினை கருமையால் அமைக்கப் பட்டிருக்கின்றன. பண்டிதர்கள் பூமியில்
கற்சிலைகளை ஸ்தாபனம் செய்து வழிகளை அமைத்திருக்கின்றனர்.

110. முட்டாள்களுடன் சேராதே.
முட்டாள்கள் இரும்பு போன்று .தண்ணீரில் மூழ்கிவிடுகிறார்கள் .ஆகாயத்தில் இருந்து விழும் நீர்த்துளி வாழைப்பழத்தில் விழுந்தால் கற்பூரமாகிவிடும்.சிப்பியில் விழுந்தால் முத்தாகிவிடும்.
பாம்பின் வாயில் விழுந்தால் விஷமாகிவிடும்.
நல்லவர்களின் நட்பும் சேர்க்கையும் தேவை.

111.நல்லவர்களின் சேர்க்கை ஒருபொழுதும்
பயனற்றுப் போய்விடாது.
சந்தன மரம் உயரத்தில் குறைந்திருந்தாலும்
நான்கு பக்கங்களுக்கும்
நறுமணம் வீசும்.
அதை ஒருவரும் வேப்பமரம் என்று சொல்லமாட்டார்கள்.
சந்தன மரம் தன சுற்றுப்புறத்தை நறுமணமாக வைத்திருக்கும்.


112.    தெரிந்தே பொய்  பேசுபவர்கள் ,பொய்யை  காதலிப்பவர்கள் ஆகியோரைத்   தவிர்க்க வேண்டும்.
கனவிலும் அவர்களுடைய சேர்க்கை கூடாது.

113.  மனத்தைக் கொன்று ஆணவத்தை விட்டு வாழ்ந்த யோகிகள் சென்றுவிட்டனர். அவர்களுடைய அஸ்தி விபூதி இருக்கிறது.
அதாவது உலகில் அவர்களுடைய புகழ் மட்டுமே உள்ளது.

114.  பன்னிரண்டு மாதங்களும் பலன்கள்
பழங்கள்  தரும் மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக்கொள்.
அதனுடைய குளிர் நிழல் அடர்த்தியாக இருக்கவேண்டும். பறவைகள் விளையாட வேண்டும் .பழங்கள்  அதிகமாக இருக்கவேண்டும்.

115. உடல் அழியக்கூடியது. மனம் சஞ்சலமானது.
ஆனால் நாம் இதை நிலையானது என்று எண்ணி
வேலை செய்கிறோம். இந்த நிலையற்றதை நிலையானதாக எண்ணி இவ்வுலகில் நீ போடும் ஆட்டம் கண்டு காலன் சிரிக்கிறான்
.மரணம் அருகாமையில் உள்ளது என்று அறிந்தும்
மனிதன் அறியாதது போல் வாழ்கிறான்.
 இது மிகவும் வேதனையான விஷயமாகும்.

116.குடத்தில் தண்ணீர் ,தண்ணீரில் குடம் ,உள்ளும் புறமும் தண்ணீர்.
குடம் உடைந்தால் குடத்தின் தண்ணீரும் 
குளத்தின் தண்ணீரில் கலந்துவிடும்.
அறிஞர்கள் இந்த தத்துவத்தையே ஆத்மாவும்
 பரமாத்மாவும் ஒன்று என்று பகர்கின்றனர் .
ஆத்மா பரமாத்மாவிலும் பரமாத்மாவில் ஆத்மாவும்
 கலந்திருக்கிறது. அத்வைதக்கருத்து சங்கரர் கூறியது இதுதான்.

117. படித்தவர்கள் கூறுவது நூலில் உள்ளவை.
படிக்காத கபீர் சொல்வது அனுபவத்தில் அறிந்ததும்
கண்ணால் பார்த்ததும். உண்மையானவை.
 நான்எளிதாக புரியவைக்க தீர்வு  காணவும்  சொல்கிறேன்.
 அதை சிக்கலாக்கி கடினமாக்குவது படித்தவர்கள். தான்.

118. மனதை  வென்றால் வெற்றி.   
மனதை  வெல்லவில்லை என்றால்  தோல்வி.
 வெற்றிக்கும் தோல்விக்கும் மன வலிமை ,
மன  திடம் தான் காரணம்..மன நம்பிக்கையும் வேண்டும் 
 கடவுளின் அனுக்கிரஹம் ,தரிசனம்  கிடைக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மனதில் வேண்டும்.
நம்பிக்கை இல்லை என்றால் எப்படி தரிசனம் கிடைக்கும்.

119. ஆணவம் இருந்தால் ஆண்டவன் இல்லை.
ஆண்டவன் இருந்தால் ஆணவம் இருக்காது.
அன்பின் வழி  மிகவும் குறுகளானது ,
ஒன்றுக்குத்தான் இடம்.   ஆணவமா ? ? ஆண்டவனா ?
ஒன்றிருந்தால் மற்றொன்று இருக்காது.

120. அறிவை விட அன்பே உயர்ந்தது,
ஞானம் பெற்று மனது கல்லானால் ,
செங்கல் போல் உயிரற்றது
ஆனால் எவ்வித பயனும் கிடையாது.

கபீர்-76 முதல் 100 வரை


76.  உலகவாழ்வில்  மாயையும் மனதும்  இறப்பதில்லை.
மனித உடல்மரணமடைவதைக்கண்டும் 
மனிதனின் நம்பிக்கைகளும் 
ஆசைகளின் தாக்கங்களும்  என்றும் இறப்பதில்லை .
கபீர் பலமுறை இதைக்  கூறியுள்ளார் .

77.  மன  ஆசைகளை விட்டுவிடு.
நம் ஆற்றலால் அறிவால்  அவைகளைப்
பூர்த்தி செய்ய முடியாது.
தண்ணீரிலிருந்து நெய் வந்தால்
எடுக்க முடிந்தால் ஒருவரும் காய்ந்த
 ரொட்டி சாப்பிடமாட்டார்கள்.

78.   அறியாமை என்ற தூக்கத்தில்  இருக்காதீர்கள்.
ஞானத்தின் விழிப்புணர்ச்சி பெற்று 
கடவுளின் பெயரை ஜபிக்க ஆரம்பியுங்கள் .

விழிப்புணர்வுடன் இறைவனை தியானம்  செய்.
 நீ ஆழ்ந்த மீளாத்தூக்கத்தில் தூங்கும்
நாட்கள் விரைவில் வந்துவிடும்.
விழித்திருந்து கடவுளின் பெயரை ஜபித்து
ஏன்  தியானம் செய்வதில்லை ?

79. தண்ணீரின் அன்பை பசுமையான மரங்கள் தான் உணரும். 
 காய்ந்தகட்டைகளுக்கு மழை  பெயதால் என்ன ?பெய்யாவிட்டால் என்ன ? சகிக்கும் நல்ல உள்ளங்களுக்குத்தான் அன்பின் அருமை தெரியும் .அன்பில்லா மனதிற்கு இதை உணர அறிய வாய்ப்பில்லை.

80 .மேகங்கள் கல்லின் மேல் மழை  பெய்யத்தொடங்கின.
மண் கரைந்து தண்ணீருடன் ஓடியது.
கல் அப்படியே உள்ளது.

81. மனித  வாழ்க்கை சில ஆண்டுகள். இதற்காக பல வகை முன்னேற்பாடுகளை செய்ய முற்படுகிறான் .
அரசனோ ஏழையோ நின்றுகொண்டே அழிந்துவிட்டன.

82 . அரசர்களே!பேரரசர்களே !  ஒருநாள் எல்லோரையும் ,எல்லாவற்றையும் விட்டுவிட்டு  செல்லும் நாள் வரும் . ஏன் ,நீங்கள் இப்பொழுதே எச்சரிக்கையாக இருக்கமாட்டீர்கள் ?

83.  அன்பை ருசிக்காதவர்கள் ,ருசித்தும் ரசிக்காதவர்கள் ,
சூனியமான ,ஜன சஞ்சாரமற்ற வீட்ட்டில் உள்ளவர்கள் ,
அவர்களுக்கு எதுவுமே கிடைக்காது .
சூனியமான வீட்டிற்கு வந்தவர்கள் ,
சூனியமாகவே சென்றுவிடுவார்கள்.



84. மனிதனிடம் ஏதாவது கொடுக்க
சொன்னால் மரியாதை ,பெருமை ,கௌரவம் ,
அன்பு எல்லாமே வெள்ளத்தில்  அடித்துச் சென்றுவிடும்.

85.போகின்றவனை ,போவதைத் தடுக்காதே. 
நீ உன்  தன்னிலையை  இழந்து
விடாதே. நீ உன் இயல்பு நிலையிலேயே இருந்தால்
 குகனின் படகுபோல்பலர் உன்னை சந்திப்பார்கள் .

85. இந்த உடல்  பச்சைமண் குடம் போன்றது.
 உடன் எடுத்துச்செல்கிறாய்.
சிறிது அடிவிழுந்தாலும் உடைந்துவிடும்.
எதுவும் மிச்சமிருக்காது.

86.  ஆணவம் மிகவும் கெட்ட  பொருள்.
முடிந்தால் இதிலிருந்து தப்பித்து  ஓடிவிடு. 
நண்பனே!பஞ்சினால் சுற்றப்பட்ட நெருப்புபோல் ஆணவம் .
இதை நம்மருகில் எப்படி  வைத்திருக்க முடியும்?

87. அன்பு என்ற மேகம் நம்மேல் பொழிய ஆரம்பித்ததால் 
உள்ளுள்ள  ஆத்துமா  நனைந்து விட்டது.
அக்கம் பக்கத்தில் உள்ள சுற்றுப்புறம் பசுமையாகிவிட்ட.
நிலை மகிழ்ச்சியாகி விட்டது. அதன்பின் அரிய  நிலை.
நாம் என் ப தே  அன்பில் வாழ்வதில்லை.

88.  அன்பில்லா இதயம் ,அன்பின் ருசி அறியா  நிலை,பகவானின் பெயரை சொல்லா நாக்கு  இவை இல்லா மனிதன் உலகில் பிறந்ததே வீண்.
அன்பு தான் வாழ்க்கையில் பொருள் நிறைந்தது.
அன்பின் ரசத்தில் மூழ்கி இருப்பதுதான்  வாழ்க்கையின் சாரம்.

89.பகவானை தரிசிக்க  எவ்வளவு இடையூறுகள்.
அவனை அடையச்செல்லும் வழி  பயங்கரமானது.
அநேக பாதகர்கள் ,திருடர்கள் ,ஏமாற்றுபவர்கள் உள்ளனர்.
நீண்ட வழி .அநேக ஆபத்துக்கள் .தடைகள்.
அவைகளில் சிக்குண்டு புலம்பிக்கொண்டே இருக்கிறோம்.
பல மாயைகள் கவர்ச்சிகள்,
நாம் நம் குறிக்கோள்களை மறந்து மயங்கி விடுகிறோம்.
நாம் நம் முதலீட்டை இழந்துகொண்டே இருக்கிறோம்.

90. இந்த உடல் விளக்கு. உயிர் திரி.
இரத்தம் எண்ணெய்.
இவ்வாறான விளக்கு ஏற்றி எத்தனை ஆண்டுகள்
கடவுளை தரிசிக்க காத்திருப்பேன்.
அந்த விளக்கில் ஜ்வாலை ஏற்றி அவனை பெறுகின்ற
பக்தியில் உடலையும் மனதையும் ஈடுபடுத்துதல் 
ஒருபெரும் தவம் சாதனை.
இதில் சிலர்தான் வெற்றிபெறுவார்கள்.

91.பகபவானே ! நீ  என்கண்கள் வழியாக உள்ளே வந்து விடு.
 நான் நீ வந்த பின் கண்களை மூடிக்கொள்வேன்.
பிறகு நான் மற்றவர்களை மற்றவர்களை
பார்க்கமாட்டேன் .
 எனக்குள் இருக்கும் உன்னை மற்றவர்களையும் பார்க்க விடமாட்டேன்.

92. குங்குமக்கோடு வைக்கும் இடத்தில் கண் மை  ஒருவரும் வைக்கமாட்டார்கள்.கண்களில் பகவான் எழுந்தருளிவிட்டால்
வேறு ஒருவரும் மனதில் வசிக்கமுடியாது.
எப்படி வரமுடியும்?

93. கடலுக்குள் உள்ள சிப்பி  அளவில்லா கடல் தண்ணீரை குடிக்காமல் ,
தாகம் தாகம்  என்று   சுவாதி நக்ஷத்திரத்தில் விழும் மழை  நீர்த்துளிகளை
எதிர்பார்த்து   கடல் நீரை தூசிபோல் கருதுகிறது. நம் மனதில் இதைப்பெறவேண்டும் என்ற ஆசை இருக்கிறதோ எதைப்பெறவேண்டும்
என்ற மன  ஈடுபாடு உள்ளதோ அதைப்பெறாமல் மற்றவை எல்லாம் சாரமற்ற பொருளாகிறது.

94.   ஏழு ஸ்வரங்கள் ஒலி  கேட்ட ,ஒவ்வொரு நொடியும்
விழாக்கோலமாக இருந்த  வீடுகளும் இன்று காலியாகி அவைகளில் காகங்கள்  வாழ்கின்றன. எப்பொழுதும் ஒரே மாதிரியாக காலங்கள் இருப்பதில்லை. மகிழ்ச்சி இருந்த இடத்தில் துன்பங்கள் சூழ்கின்றன .
மகிழ்ச்சியான கூடாரங்கள் துக்கமான கூடாரமாகின்றன.
இதுதான் உலக நடப்பாகும்.

95. உயர்ந்த   கட்டிடங்களைப்  பார்த்து ஏன்  கர்வப்படுகிறாய்?
நாளையோ நாளை மறுநாளோ இந்த உயரங்கள் மண்ணோடு மண்ணாகலாம். நீங்களும்  மண்ணில் சாய்ந்து விடுவீர்கள்.
மேல் புற்கள் முளைத்துவிடும்.
சூனியமாகிவிடும் . மகிழ்ச்சியான வீடுகள் முற்றங்கள்
ஒன்றுமில்லாமல் போய்விடும்.  ஆகையால் ஆணவம் கூடாது.
இந்த ஈரடி படிக்கும்போது  தனுஷ்கோடி நினைவுதான் வருகிறது.

96. பிறப்பு -இறப்பை எண்ணி தீய செயல்கள் செய்வதை விட்டுவிடுங்கள்.
நீ செல்லும் வழியை  நல்ல வழியாக எண்ணி -அதையே நினைவில் வைத்து
அதையே அழகாக மாற்றி முன்னேறுங்கள்.

97. காவலன் இன்றி பறவைகள் வயல்களின்
பயிர்களை காலி செய்துவிட்டன.
இருப்பினும் சில வயல்கள் மீதம் இருக்கின்றன.
நீ விழித்துக்கொண்டால்  அவைகளை காக்கலாம்.
விழிப்புணர்வும் முன் எச்சரிக்கையும் இல்லாததால் தான்
 மனிதன் நஷ்டமடைகிறான்.

98.  உடல் என்ற ஆலயம் அழிந்துவிடுகிறது.
அதன் ஒவ்வொரு அங்கமும் அழிந்துவிடுகிறது,
இந்த உடல் என்ற ஆலயத்தைப் படைத்த பகவானை
தியானம் செய்து இந்த உடல் அழியாதவாறு கவனித்துக்கொள் .

99.  இந்த உடல் அரக்கு  ஆலயம்.
இதை  நாம் வைரங்களாலும் விலையுயர்ந்த கற்களாலும்  அலங்கரித்துக்கொள்கிறோம்.
 இந்த உடல் தற்காலிக பொம்மை .அழியக்கூடியது.
நாம் முயன்று உழைத்து அதை அலங்கரிக்கிறோம்.
உடல் நொடியில் அழிவதை  மறந்து விடுகிறோம்.
உடல் பச்சை மண் பொம்மை  உடைந்து விடுகிறது. 
எதிர்பாராமல் நாம் அறியாமலேயே அழிந்துவிடுகிறது.

100. இந்த உடல் அழியக்கூடியது.நீ இதை நிர்வகித்து சமாளித்துக்கொள்.
கோடிக்கணக்கில் ரூபாய்கள் சொத்துக்கள் இருந்தவர்களும் வெறுங்கையுடன்  சென்றுவிட்டனர். ஆகையால் பணம் சொத்து சேர்ப்பதையே குறிக்கோளாகக் கொள்ளாதீர்கள். வாழ்க்கையை  அர்த்தமுள்ளதாக (பொருளுள்ளதாக )ஆக்கிக்கொள் .
சில நல்ல செயல்களும் செய்யுங்கள் .