ॐ स्वामी |
लक्ष्य को स्थापित एवं प्राप्त करना குறிக்கோள் நிலை நிறுத்தலும் அமைத்தலும் அடைதலும்.
Posted: 21 Dec 2014 03:54 AM PST
திடமாகவும் திறமையுடனும் செயலாற்றினால் எந்தவிதமான குறிக்கோளையும் அடைய முடியும். *************************************************************************************
ஒரு வாசகர் என்னிடம் குறிக்கோள் நிலை நிறுத்தலும்
அதை அடையும் விதம் பற்றியும் எழுத வற்புறுத்தினார். அதனால் இந்த பொருள் பற்றி வெளியிடுகிறேன்.
ஒரு சிறிய கதை சொல்லி ஆரம்பிக்கிறேன்.
குளிகாலத்தின் ஒருநாளில் முல்லா நசிருத்தீனும் அவருடைய மிகவும் நல்ல நெருங்கிய
நண்பரும் ஒரு அழகிய தோட்டத்தின் பசுமையான புல் படுகையில் படுத்துக்கொண்டு வெயிலின் வெப்ப சுகம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். அழகான அடர்ந்த நிழல் தரும் தோட்டம் அதன் கிளைகள் வழிகளை மூடி இருக்கும் மாண்பு . பலவித மலர்கள் அவைகளில் வண்டுகள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன. அச்சமின்றி பறவைகள் மரங்களின் மீது ஒலி எழுப்பிக்கிண்டிருந்தன. வெப்பக்காற்று அவர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்ததுபோல் உணர்ந்தனர் .மிகவும் அமைதியான சூழல்.
முல்லா சொன்னார் , ஆஹா !இங்கு எவ்வளவு அழகு.
இந்த நொடியில் எனக்கு லக்ஷம் டாலர் கொடுத்தாலும் இந்த இடத்தை விட்டு செல்லமாட்டேன்.
நண்பன் கேட்டான் --ஒரு கோடி டாலர் கொடுத்தால்.
முடியாது.முழு உலகமும் கொடுத்தாலும் முடியாது.
நண்பன் கேட்டான் --நான் மூன்று டாலர் கொடுத்தால்?
நான் இப்பொழுதே மூன்று டாலர் கொடுக்க முடியும்.
மூன்று டாலரா ! இது வேறு விஷயம்.இப்பொழுது நீ உண்மையான பணம் பற்றி
பேசுகிறாய்.என்று முல்லா எழுந்து அந்த இடத்தை விட்டு போகத் தயாராகிவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் உள்ள மேன்மையான செய்தி--கனவு மிகவும் கவர்ச்சியாக இருந்தாலும்
உங்கள் மனம் அதை மிகவும் தீவீரமாக ஏற்காது;
ஆனால் பரிசு அல்லது லாபம் என்ற சிறிய உண்மையான முடியக்கூடியதைப் பார்த்து
மனம் செயல்படத் துவங்குகிறது. நீங்கள் மெய்யான உணவு சாப்பிடுகிறீர்கள், உங்களுக்குரிய வேலை செய்கிறீர்கள்,உண்மையான ஆடை அணிகிறீர்கள் பிறகு உங்கள் குறிக்கோள் ஏன் வாஸ்தவமாக இருக்ககூடாது. உங்கள் குறிக்கோள் எளியதாக இயற்கையாக இருக்கவேண்டும் என்பது இதற்குப் பொருள் அல்ல. நீங்கள் அதை உண்மையாக சாதிக்கக் கூடியவர்களாக கருதவேண்டும்.
௧. குறிக்கோளை அடைவதில் நம்பிக்கை வேண்டும் .
குறிக்கோளைப் பற்றி உங்களுடைய மகத்துவம் நிறைந்த விஷயம்
உங்களுக்கு அதன் மேல் நம்பிக்கை இருக்க வேண்டும் என்பது. உங்கள் குறிக்கோள் உண்மையின் ஒரு அம்சமாக இருக்கவேண்டும்.. பகல் கனவின் எண்ணங்களின் பொங்கலாக இருக்கக் கூடாது. கனவு காண்பதிலும் குறிக்கோளை நிலை நாட்டுவதிலும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. நீங்கள் எதை உண்மையிலேயே உண்மை என்று கருதுகிறீர்களோ , அதைத்தான் உங்கள் மனது ,அந்த எண்ணங்கள், குறிக்கோள்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கும். உங்கள் கருத்துரு, மேலும் குறிக்கோள் , உலகின் பார்வையில் உண்மையற்ற நோக்கில் பார்க்கப்பட்டாலும் , உங்கள் நம்பிக்கை அதன் மேல் இருந்தால் கண்டிப்பாக அது உங்கள் குறிக்கோளாக முடியும். அதை அடைவதற்காக தகுந்த செயல் புரியத் தயாரானால் அதை அடைய முடியும்.
நீங்கள் எதை சத்தியம் என்று கருதுகிறீர்களோ ,
அது உங்கள் எண்ணங்களின் ஓட்டம் ,இணைப்பு ,முயற்சி ,மன நிலை ஆகியவற்றைப் பொறுத்தது. ஐந்தடிஉயரத்தில் ஒரு மாம்பழம் தொங்குகிறது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் இரண்டடி உயரம் குதிக்கமுடியும். உங்கள் கை இரண்டடி எட்டமுடியும்உயரம். நீங்கள் இன்னும் சிறிது முயற்சி செய்தால் , கொஞ்சம் உயரமாக குதித்தால் உங்கள் லட்சியத்தை அடைய முடியும். உங்கள் மனது உங்கள் லக்ஷியத்தை அடையமுடியும் என்று ஏற்க வேண்டும். மாம்பழம் இருபது அடி உயரத்தில் இருந்தால் நீங்கள் நிராசை அடைந்து, உங்கள் முயற்சி எடுக்காமலேயே விட்டுவிடலாம். ஆனால் இருபதடி உயரத்தில் இருக்கும் மாம்பழத்தைப் பெறுவது நீங்கள் விரும்பினால் முடியாத செயல் அல்ல. ஆனால்,குதித்து எடுப்பதில் வெற்றி கிடைக்காது.உங்களுக்கு நீண்ட கம்பு ,ஒரு கல் அல்லது ஏணி போன்ற பொருள்கள் தேவைப்படும். நீங்கள் உங்கள் குறிக்கோளில் உறுதியாக இருந்தால் ,நம்பிக்கை இருந்தால் உங்கள் மனம் தானே ஆலோசனையும் திட்டமும் கொண்டு வந்துவிடும். ௨. குறிக்கோளை அடைய தகுந்தசெயல் செய்ய வேண்டும். கனவு என்பது நீங்கள் பார்ப்பது மட்டுமே.ஆனால் அதற்காக நீங்கள் எவ்வித செயலும் செய்வதில்லை. நீங்கள் எதை அடைய செயல் புரிய தயாராகிறீர்களோ , அவைகள் தான் உங்கள் குறிக்கோள்கள். நீங்கள் "ஸ்மார்ட் கோல்ஸ் " பற்றி கேட்டிருக்கலாம். இந்த குறிக்கோள் குறிப்பிட்ட சிறப்பும் ,அளவும்,வாஸ்தவமான குறிப்பிட்ட காலமும் கொண்டதாகும்.(என்ன,எவ்வளவு,எப்படி,எப்பொழுது.). நீங்கள் சாதிக்க முடியும் என்ற குறிக்கோளை உண்மையாக விரும்பினால் உங்கள் மனம் அதை அடையும் முயற்சியை திடப்படுத்தி அனுமதி அளிக்கும் என்பதை மீண்டும் சொல்கிறேன். "ஸ்மார்ட் கோல்ஸ் " இருப்பது போதுமானதல்ல. குறிக்கோள் உங்களால் மதிப்பீடு செய்யக் கூடயதாக இருக்கவேண்டும். பிறகு சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரிசெய்ய முடிவதாக இருக்கவேண்டும். நீங்கள் உங்கள் குறிக்கோளுக்காக ,உங்களை சமர்ப்பணம் செய்தால், அதைப்பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது. உங்கள் பாக்கியம் திறந்துகொள்கிறது. வெளிக்கொணரமுடியும். தைரியமாக நீங்கள் முயற்சி உடையவர்களாக இருக்கவேண்டும். ஒழுக்கத்தையும் திடமான உறுதியையும் விட்டு விடாதீர்கள். பொறுமையின் பலன் இனிமையாக இருக்கும். அனுகூலமான பலன் நிச்சயமாக கிடைக்கும். உங்களுடைய குறிக்கோளை மதிப்பீடு செய்யுங்கள். தேவைப்பட்டால் சூழலுக்குத்தக்கவாறு அவைகளை சரிசெய்துகொள்ளவும். கனவுகள் பல இருக்கின்றன.ஆனால் நீங்கள் எதற்கு முதலிடம் அளிக்கிறீர்களோ , எதை உண்மையாக சாதிக்க முடியும் என்று கருதுகிறீர்களோ , அதைத் தான் குறிக்கோள் என்று சொல்கிறார்கள் . இனிப்பகத்தில் ஒருகுழந்தைக்கு அனைத்து இனிப்புகளும் வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அந்தக் குழந்தைக்கு எந்த இனிப்பு சாப்பிட அனுமதி ,உள்ளது, அந்தக் குழந்தையிடம் உள்ள பணம் எவ்வளவு என்பதைப் பொறுத்து இனிப்பு வகை தேர்ந்தெடுக்கவேண்டி இருக்கும். உங்கள் கனவுக் கடையிலிருந்து, உங்களால் எதைக்கொண்டு வாழ முடியுமோ அதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் குறிக்கோளுக்கு முக்கியத்துவம் அளித்து அதன் படி செயலாற்றுங்கள். ஒவ்வொரு குறிக்கோளையும் அடைய காலமும் முயற்சியும் தேவை. நீங்கள் தொடர்ந்து தைரியமாக குறிக்கோளை நோக்கி முன்னேறிக்கொண்டே இருந்தால் , மிகக் கடினமான குறிக்கோளைக் கூட அடையமுடியும். நீங்கள் பேரொளியுள்ள வைபவங்கள் நிறைந்த கனவுகள் பார்க்க முடியும். இவ்வாறு செய்ய நீங்கள் உற்சாகம் பெற்றால் , உங்கள் குறிக்கோளை உண்மையில் அடைய விரும்பினால் , நீங்கள் அது சம்பந்தமான நீதி-நியாயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். நீங்கள் உங்கள் குறிக்கோளை உறுதிப்படுத்திக்கொண்டால் , பின்னர் அந்த கனவுகள் மூலம் உங்களுடைய ஆளுமையையும் உங்கள் வாழ்க்கையையும் உறுதி செய்து கொள்வீர்கள். உங்களுடைய குறிக்கோளை அடைய உங்களுடைய முழு சக்தி என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? அது உங்களுடைய பழக்க வழக்கங்களே. ஒழுக்கமும் ஒரு பழக்கம் தான் . ஒழுக்கமின்மையும் ஒரு பழக்கம் தான். நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தெளிவாக அமைத்துக் கொள்வதற்கு முன் நீங்கள் உங்களைப்பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஆத்மா சோதனை செய்துகொள்ள நேரத்தைக் கழியுங்கள். அப்படி செய்தால் உங்களை நீங்களே வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல போதிய ஆற்றல் /திறன் /சக்தி பெறுவீர்கள். சாந்தி . சுவாமி. s |
No comments:
Post a Comment