Sunday, October 17, 2021
NOTION प्रेस
Inna Naarpadhu
kabir ke dohe (paagam-2)
Mathinanth ki Mukth Rachnaaein: Bhaag-2
Iniyavai Naarpadhu kabir ke dohe (paagam -1)
Mathinanth ki Mukth Kavithaayein: Bhaag-5
Mathinanth ki Mukth Kavithaayein: Bhaag-4
Mathinanth ki Mukth Kavithaayein: Bhaag-1
Learn Tamil Mathinanth ki Mukth Kavithaayein: Bhaag-3
Avvaiyar: Nalvali- Hindi Translation (Part-1)
Avvaiyar: Nalvali- Hindi Translation (Part-2)
Hindi Ilakkiyam Bhakti Kaalam: Oar Arimugam- Part-1
Hindi Ilakkiyam Bhakti Kaalam: Oar Arimugam- Part-2
WAVES OF THOUGHTS (Part-1)
WAVES OF THOUGHTS (Part-2)
Thirukkural-1
Thirukkual-2
Thirukkural-3
Thirukkural-4
Thirukkural-5
Thirukkural---6
Thirukkural-7
Thirukkural-8
Thirukkural-9
Thirukkural-10
thirukkural 11
कबीर के दोहे கபீர் ஈரடிகள்
கபீர் -
திவ்யானுபவ்==கடவுளுணர்வு /இறையுணர்வு.
இறை உணர்வு -ஆத்மானுபூதி பற்றி , என்னிடம் கேட்டால் ,எப்படி விளக்குவேன்?
ஊமை வெல்லத்தின் ருசி அறிந்ததை, எப்படி அவன் வாயால் பகர்வான்?
அதாவது இறைவனின் அநுபூதி உணர்ந்தவர்கள் அதன் ருசியை அறிய முடியுமே தவிர, அந்த பேரானந்தத்தை விளக்க முடியாது.
௨.
ஊமையின் சங்கேத மொழியை ஊமையால் தான் அறிய முடியும்.-அவ்வாறே ஆத்மா ஞானியின் பேரானந்தத்தை, ஆத்மா ஞானியால் தான் அறியமுடியும் .
கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பதுபோல் இறைவனை உணர்ந்தவர்களை
இறைவனை உணர்ந்தவர்களே இறைவனை அறிய முடியும்.
வெள்ளைத்தாளில் தன் ஞானத்தை எழுதுபவன் ,நகல் எடுப்பவன் . ஞானம் பெறாததால் உலகில் நடைமுறை அறியாமல் வழி தெரியாமல் சுற்றுபவன்.
ஆத்ம உணர்வு ,ஆத்ம நோக்கு பெற்றவர்கள் ,(சுய சிந்தனை )
தங்கள் ஞானம் பற்றி தாங்கள் எப்படி எழுதுவார்கள்?
ஞானம் பெற்றவர்களுக்கு அங்கிங்கு எனாதபடி எங்கும் இறைவனே தென்படுவான்.
எழுதுவதால் எந்த ஞானமும் இல்லை. நேரடியாக பார்க்கின்ற ஞானம் தான் ஞானம். மணமகளும் மணமகனும் கலந்து விட்டால, மாப்பிள்ளை ஊர்வலம் கலை இழந்துவிடும் .
விளக்கம்:---
சுய நோக்கு மூலம் பெற்ற ஞானம் சுய உணர்வால் பெற்ற ஞானம்
எழுதி உணர வைக்க முடியாது.
சுயாநுபூதி பெற்ற பிறகு ஜீவாத்மா,,பரமாத்மா இரண்டும் கலந்து பெரும் ஞானம் வந்துவிட்டால் , உலகியல் பற்று ஏற்படுத்தும் ஐந்து இயற்பியல் தத்துவங்கள் ஒளி இழந்து விடும். உடல் சம்பந்தமான/ உலகியல் பற்றுகள் ஏற்படாத நிலை வந்துவிடும்.தன்னைத்தான் பெரிய முற்றிலும் அறிந்த ஞானியாக கருதுபவன் ,
ஆத்ம ஞானம் பெற்ற பிறகும் ,தனக்குள் ஒரு வெற்றிடத்தையே உணர்வான்.
ஞானம் பெற்றவன் தன்ன அக்ஞாநியாகவே உணர்ந்தால் முழு ஞானி ஆவான்.
ஒரு நல்ல ஞானி அல்லது சாது ஒரு முறம் போல் இருப்பான். உபயோக மற்ற விஷயங்களை வெளியேற்றி நல்ல சாறுள்ள சத்துள்ள விஷயங்களை மட்டும தன்னிடம் வைத்துக் கொள்வான்.
நல்ல மனிதன் ,சாத தீய குணங்களை மனதில் ஏற்க மாட்டான்.
நல்ல குணங்களை நல்லவைகளை
தேர்ந்தெடுத்து அவைகளையே ஏற்பான்.
அவன் ஒவ்வொருவரிடத்தும்
இருக்கும் இறைவனை ,
நல்லவற்றை ,தீயவற்றை
அறிந்துகொள்ளும் திறன் பெற்றவன்.
வெவ்வேறு பூக்களில்
தேனை எடுக்கும் தேனீ ,
அந்த அந்த பூக்களின் சுவை,
மணம் அறிந்து எடுக்கும்.
அவ்வாறு தான் சாதுக்களும்.
****************************************************************************
௮. அன்னப்பறவை பாலும் தண்ணீரும்
சேர்த்து வைத்தால்
பால் மட்டும் அருந்தி
தண்ணீரை விட்டுவிடும்.
அவ்வாறே பக்தன் /சாது
இறை தத்துவங்களை ஏற்று நடந்து
வையகக் கடலை கடந்து செல்வான்.
**************************************************
௯. இறைவனுடைய நாமம்
பால் போன்று சத்தான பொருள்.
மற்றவை எல்லாம் சாரமற்ற
சத்தற்ற தண்ணீர் போன்றவை.
இவ்வாறு பாலையும் நீரையும்
அன்னப்பறவை போல் பிரித்து எடுக்கும்
ஆற்றல் சாதுக்களுக்கு உண்டு.
அவர்கள் ஞானிகள். விவேகமுள்ளவர்கள்.
**************************************************
௧௦. என்னுடைய நல்ல உயர்வுள்ள குருவானவர்
நிலையான சஞ்சலமற்ற
அறிவைக் கொடுத்து
சமநோக்கை உபதேசித்துள்ளார்.
ஆகையால் நான்
அனைத்து இடங்களிலும்
இறைவனையே காண்கிறேன்.
வேறு எதையும் பார்ப்பதில்லை.
*******************************************
௧௧.
கபீர் சொல்கிறார் :--
சத்குரு ஆனவர் மனதில்
பற்றி எரியும் காமம் , கோபம்
போன்ற மன மாற்றங்களை
எரித்துவிட்டார்.
எனக்கு சமநோக்கு பார்வையை
வழங்கிவிட்டார்.
இப்பொழுது குரு அருளால்
மன ஒருமைப்பாடு ஏற்பட்டு
நோக்குமிடமெல்லாம்
ஒரே இறைவனைத்தான்
தர்சிக்கிறேன்.
**************************
௧௨.
சம நோக்கு என்பது மனதில்
எல்லா அறங்களையும்
மதங்களையும் சமமாக
உணர்வதாகும்.
எல்லா உயிரினங்களின்
ஆத்மாக்களையும்
ஒன்றுபோல் பார்ப்பது ,
அறிவதும் தெளிவதுமாகும்.
**************************
௧௩
இறைவனை மனிதன் துன்புறும்போது
அதிகம் வணங்கி வேண்டுகிறான்.
சுகத்திலும் இன்பத்திலும்
யாரும் வணங்கி வேண்டுவதில்லை.
சுகத்திலும் இனத்திலும் நினைத்தால்
துன்பமே வராது.
இறைவனை சதா சர்வகாலமும்
ஜபிக்கவேண்டும்.
**************************
௧௪.
சுகத்தில் ஜபிக்காமல்
துன்பத்தில் மட்டும் ஜெபிக்கும்
பக்தனின் பிரார்த்தனையை
கடவுள் ஏற்கமாட்டார்.
**********************
௧௫
கடவுளை பெண்ணாசை உள்ளவன் போல்
இரவும் பகலும் நினைத்து அவன்
நாமத்தை ஜபிக்கவேண்டும்.
******************
௧௬.
மான் இசையில் மயங்கி தன்னை
மறந்து தன் மயமாவதுபோல்
பக்தன் பக்தியில்
தன்னையே மறந்து
ஈடுபடவேண்டும் .
மான் இசையின் நாதத்தில் மயங்கி
உயிரையே விட்டுவிடுகிறது.
அப்படி மெய்மறந்து
வணங்குவதே
பிரார்த்தனையாகும்.
*************************
௧௭.
இறைவனை தியானம்
செய்யும்போது ,
மனதில் அவன் சிந்தனை
மட்டும் இருக்கவேண்டும்.
வேறு சிந்தனையோ,
வேறு பேச்சோ இருக்கக் கூடாது.
ஐம்புலன்களின் சஞ்சலங்களை அடக்கி
உள் கதவை திறந்து
ஆத்மாவை மட்டுமே
உணரவேண்டும்.
௧௮.
கையில் ஜபமாலை சுழற்றி ,
ஒரு யுகம் கழிந்துவிட்டது.
மனதில் உள்ள சஞ்சலங்கள்
தீய எண்ணங்கள் நீங்கவில்லை.
எப்படி இறைவனருள் கிட்டும்.
கையில் உள்ள ஜபமாலை கீழே
போட்டு விடு.
மனம் என்ற மாலையை சுற்று.
மனதை ஒரு நிலைப்படுத்து.
மற்றவர்களுக்காக மாலை சுற்றி காட்டும்
பொய்யான காட்சியை விட்டு
மனதிற்குள் இறைவனை வைத்து தியானம் செய்.
௧௯.
மாலை என்பதுதான் மனம்.
கையிலுள்ள ஜபமாலை
வெறும் வெளி வேடம்.
பெண்களின் கழுத்திலும்
மாலை இருப்பதைப் பார்.
மனம் என்ற மாலையில் இறைவனை
இடைவிடாமல்
ஜபிக்கவேண்டும்
************************
௨௦.
நீ வைத்துள்ள ஜபமாலையில்
முடுச்சுகள் உள்ளன.
அது மரத்தால் செய்த மாலை.
ஆத்மாவின் நலத்திற்கு
பிராணாயாமம் தான் சிறந்தது.
பிராணாயாமம் என்ற மாலையில்
முடுச்சுக்கள் தடைகள் இல்லை.
எவ்வித கலைப்படமும் இல்லை.
ஒவ்வொரு மூச்சிலும்
இறைவனின் நாம
ஸ்மரணை உள்ளது.
அதுதான் உண்மையான மாலை.
௩௧.
இதயத்தில் இறைவனின் நாமம்
இயற்கையாகவே ஒலிக்கிறது.
ஆத்மாவும் பரமாத்மாவும்
ஒன்றான பிறகு இறைவனின்
நாமத்தை வாயால்
ஜெபிக்கவேண்டிய
அவசியம் இல்லை.
௩௨.
கையில் ஜபமாலை சுழன்று கொண்டிருக்கிறது.
நாவானது இறைவனின் நாமத்தை சொல்கிறது. ஆனால்
மனம் உலகியல் நிகழ்வுகளை நோக்கி
பத்து திசைகளிலும் சுற்றிக்கொண்டிருக்கிறது.
இதற்குப் பெயர் இறைவனின் தியானம் ஆகாது.
௩௩.
ஆத்மா பரமாத்மாவில் நிலைத்த பிறகு
மனம் ஒருமையுடன் இறைவனில் நிலைக்கிறது.
சொல்,செயல் இரண்டும் மாறாமல் இருக்கிறது.
வேற்றுமை இல்லா
ஐக்கிய உணர்வின்
பேரா னந்தத்தை
பல யுகங்கள் தவத்தில் ஈடுபட்டாலும்
உலகியல் கர்மங்களில் ஈடுபடும்
மனிதர்கள் அனுபவிக்கமுடியாது.
34 ௩௪
ஜபம் செய்பவனும் மடிகிறான்.
ஜபம் செய்யாதவனும் மடிகிறான்.
இறைநாமங்கள் ஆன்மீக ஓசைகள்
கேட்பவனும் மடிகிறான்.
ஆனால் மனிதன் வடிவில்
நாராயணன் ஆனவனும்
ஆத்மா பரமாத்மா இரண்டும் ஓர் நிலை
அடைந்தவனுக்கு மரணம் இல்லை.
௩௫.
கபீர் சொல்கிறார் :-பசியானது நாய் போன்றது,
அது இரவும் பகலும்
பஜனையில் இடையூறு செய்கிறது. .
ஆகையால் சிறிது உணவு
அதற்கு போட்டுவிட்டு
எவ்வித சேர்க்கைத் தடையும் இன்றி
இறைவனை வழிபடு.
௩௬.
ஹே பகவானே!
நான் உன்னையே துதித்து
உன்னைப்போலவே ஆகிவிட்டேன்.
உன்னைப்போல் ஆனதால்
ஆணவம் ஒழிந்துவிட்டது.
எங்குபார்த்தாலும் அங்கெல்லாம்
இறைவனையே காண்கிறேன்.
ஆணவம் அழிந்ததால்
இறைவனை மட்டுமே காண்கிறேன்.
௩௬.
கபீர் சொல்கிறார் ,
நான் ஏன் கவலைப்படவேண்டும்.
நான் கவலைப்படுவதால்
என்ன நடக்கப்போகிறது.
மனிதனைப்படைத்த ஹரிதான்
என்னைப்பற்றி கவலைப்படுகிறார்.
ஆகையால் எனக்கென்று
எவ்விதக் கவலையும் இல்லை.
௩௮.
ஒரு சாது அல்லது மஹான்
தனக்காக எதுவும்
சேர்த்துவைப்பதில்லை.
அவன் தன் வயிற்றுப் பசி அடங்க
எவ்வளவு தேவையோ ,
அந்த அளவே சேர்த்து வைக்கிறான்.
அவனுக்கு முன்னும் பின்னும்
கடவுள் நின்று கொண்டிருக்கிறார்.
அதனால் அவன் கேட்டதுமே
இறைவன் அவைகளை
கொடுத்துவிடுகிறார் .
௩௯.
கபீர் சொல்கிறார் :-
விடிந்துவிட்டது.
எல்லா ஜீவராசிகளும்
விழித்துக்கொண்டன.
பகவான் அவரவர்களுக்கு
எவ்வளவு வேண்டுமோ ,
அந்த அளவு
எல்லோருக்குமே அளிக்கிறார்.
௪௦.
எல்லோரின் கர்ம பலனை
ஆண்டவன் எழுதிக் கொண்டிருக்கிறார்.
அவர் எது எழுதினாரோ ,
அதுவே நடக்கும்.
என்னதான் கடும்
முயற்சி செய்தாலும்
எது கிடைக்கவேண்டுமோ
அதில் எள்ளளவும் கூடாது. குறையாது.
௪௧.
கபீர் இறைவனிடம் வேண்டுகிறார்:--
கடவுளே ! எனக்கு என் குடும்பத்தை
சமாளிக்கின்ற அளவிற்கு
கொடுங்கள் . அது போதும்.
நானும் பசியோடு இருக்கக் கூடாது ,
என் வீட்டிற்கு வரும் சாதுக்களும் ,
மகான்களும் பசியோடு போகக் கூடாது.
௪௨.
உடல் மணமுள்ள மலர் போன்றது.
மனது அதில் ரீங்காரமிடுகின்ற
வண்டு போன்றது.
பொருள் அதனுடைய விசித்திர மணம்.
அந்த மலர் என்ற உடலில்
இறைநாமம் என்ற தண்ணீரை பாய்ச்சினால்
அதில் நம்பிக்கை என்ற பழம் ஏற்படும்.
௪௩.
இறைவனே! உன்னை தியானிப்பவர்களுக்கு,
நீ கிடைக்கவில்லை. தியானி க்காதவர்களுக்கும்
நீ கிடைப்பதில்லை.
சிரத்தையுடன் உன்னை
தியானிப்பவர்களுடனேயே
நீ இருக்கிறாய்.
௪௪.
உன் இதயத்தில் ஆத்ம ஞானம்
என்ற கண்ணாடி இருக்கிறது.
ஆனால் மனதின் விகார எண்ணங்களால்,
பரமாத்மாவை பார்க்க முடியவில்லை.
கோபம்.காமம் போன்ற விகார எண்ணங்கள்
போக்கிவிட்டால், உன் மனம் இறைவனைப்பார்க்க முடியும் .
இறவன் உன் இதயத்தில் அமர்ந்துவிடுவார்.
௪௫.
கபீர் சொல்கிறார் ,
நான் எல்லா சாஸ்திரங்களையும்
படிக்கவும் மட்டுமில்லை ,
அவைகளை கற்று
மனப்பாடமும்
செய்தேன்.
இருந்தாலும் மனதில்
இருந்து சந்தேகம் என்ற முள்
குத்த ஆரம்பித்தது.
நான் இப்பொழுது எல்லா
துன்பங்களின்
மூலக் காரணங்களையும்
யாரிடம் சொல்லுவேன்.
௪௬.
ஜீவாத்மா பிரம்மாவைத்
தேடிச் செல்லும் போது
நடுவில் மாயை வந்து விட்டது.
அதனால் இறைவன் கிடைக்கவில்லை.
இதை கபீர் சொல்கிறார்-
எறும்பு
ஜீவாத்மா பிரம்மா என்ற அரிசியை
எடுத்துச் சென்றது,
நடுவில் மாயை என்ற பருப்பு பார்த்ததும்
அரிசியை விட்டுவிட்டது.
இறுதியில் இரண்டும் கிட்டவில்லை.
எறும்பால் இரண்டையும் எடுக்கமுடியாது.
நாம் இறைவனை நேசித்தால்
இறைவனை மட்டும் தியானிக்கவேண்டும்.
௪௭.
கபீர்தாசரே,
எனக்கு இறைவனின் பெயர்
கசப்பாக இருக்கிறது.
ஆனால் பணமும் சொத்தும்
இனிமையாக உள்ளது.
இதை இரண்டும் பெறவேண்டும்
என்ற மோகத்தில்
இரண்டுமே கிடைக்காமல் மறைந்துவிட்டது.
இந்த மனப்போராட்டத்தில்
மாயையும் கிட்டவில்லை.
இறைவனும் கிட்டவில்லை.
1.
உருவமற்ற இறைவன் ஒரு மரம் .
தண்டிலிருந்து வெளிவரும் கிளைகள் ,
குற்ற மற்ற பிரம்மா மரத்தின் கிளைகள்
இறைவனின் பெரிய கிளைகள்.
பிரம்ம ,விஷ்ணு ,மகேஷ் மூவரும்
அதனுடைய துணை கிளைகள்.
இந்த உலகம்
அதன் இலைகள் வடிவத்தில் வெளிப்பட்டுள்ளது.
இலைகள் பட்டுப்போவதுபோல்
புதிய இலைகள் தொன்றுவது போல்
நிலையற்று மாற்றம் அடைவதுதான் வையகம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
௨.
கபீர் இஸ்லாமிய கருத்துப்படி
கடவுள் ஒருவரே என்றும்
மற்ற ஒருவர் இல்லை என்றும்
மற்ற ஒரு இறைவன் உள்ளார் என்றால்
உண்மையான கடவுள்
கோபமடைந்து விடுவார்.
ஹிந்து வேதாந்தமும் இக்கருத்தை ஏற்கிறது.
உருவமும் அருவமுமாகி இறைவன் உள்ளார்.
கடவுள் விருப்பு-வெறுப்பற்றவர் என்றாலும்
கடவுள் அவதாரத்தில்
வெறுப்பு ,குரோதம் போன்ற மனித குணங்கள்
காணப்படுகின்றன.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
௩. 3
கபீரின் சிந்தனையில் ஞானத்தில் கடவுள்
உருவமற்றவர். அவருக்கு முகமில்லை.
நெற்றியில்லை .
அழகில்லை .
அழகில்லாமலும் இல்லை.
அவர் ஒரு விசித்திர
தத்துவ மாக விளங்குகிறார்.
இறைவன் பூவின் மணம் போன்று
உருவமற்றவர் .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
௪.4
இறைவன் உடலற்ற நிலையில்
நினைவலைகளாக இருக்கிறார்.
அவருக்கு வடிவமோ
வண்ணமோ கிடையாது.
அவர் அகில உலகத்திலும் வியாபித்து இருக்கிறார்.
மனித உடலில் நினைவு /ஞாபகம்/ தியானம்
எல்லாமே உருவமற்ற சூக்ஷும அலைகள்.
அவ்வாறே இறைவன் வண்ணமின்றி .
உருவமின்றி அகில உலகில்
வியாபித்திருக்கிறார்.
உடலுள்ள ஜீவன்கள் , மனிதர்கள்
அதை உணரமுடியும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
௫. 5
உருவமற்ற கடவுளை வழிபடும் கபீர்
சொல்கிறார்--
நான்கு புஜங்களைக்கொண்ட
விஷ்ணுவை எல்லோரும் துதிக்கின்றனர்.
ஆனால் கபீர் துதிக்கும் ஆண்டவனுக்கு
புஜங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை.
வேதங்களிலும் இறைவனைத்
துதிக்கும்போது
ஆயிரம் புஜங்கள் ஆயிரம் கைகள்.
என்றே சொல்கின்றனர்.
"சஹஸ் ர ஷீர்ஷஹ , சஹஷ்ரபாஹூ "
******************************************
௬.
கபீர் சொல்கிறார் :--
என்னுடைய கடவுள்
பிறப்பு -இறப்பு இல்லாதவர்.
எல்லா அசையும்
அசையாதவற்றை
படைப்பவர்.
அந்த காதலர் கடவுளிடம் நான்
என்னை அற்பணிக்கிறேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
௭. 7.
கடவுள் ஒருவர் என்றால்
அகிலஉலக த்தில்
வியாபித்திருக்கிறார்.
இருவர் என்றால் திட்டுவதாகும்.
கடவுள் ஒருவரே.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
௮. 8
கடவுளுக்கு எந்த உருவமும் கிடையாது.
அவர் எந்த யோனியிலும் பிறக்கவில்லை.
இறைவன் ஆகாயம் போன்று
வியாபித்து இருக்கிறார்.
உருவம் உள்ளது என்றால்
வரையறைக்கு உட்பட்டவராகிவிடுவார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
௯.9
கடவுள் ஒருவரே.
கடவுள் மற்றொருவர் இருக்கிறார் என்றால்
அவன் வேறுபட்ட குலத்தவன் .
பதிவிரதை போன்று பக்தனும்
பக்தியில் ஒரே இறைவனை
ஆராதிக்கவேண்டும்.
ஹிந்து தர்மத்திலும்
ஹனுமான் உபாசகர், முருகதாசர், சக்தி உபாசகர் என்று
ஒரே இறைவழியில் செல்பவர்கள் உண்டு.
சிவபக்தர்கள் , சைவ பக்தர்கள் ,
வைஷ்ணவ பக்தர்கள் என்று உண்டு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10
பரப்ரம்மாவை அடைய
உருவ ஆராதனை செய்யுங்கள்.
அதாவது குருவை வணங்கி
சேவை செய்யுங்கள்.
நிர்குண அதாவது உருவமற்ற
இறைவனின் ஞானம் பெறுங்கள்.
ஆனால் கபீர் உருவம் -உருவமற்ற இறைவனைக்
கடந்த பரபிரம்மாவை தியானிக்கிறார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
௧௧.
கபீர் :-கடவுளால் தான் அனைத்தும் நடக்கிறது.
மனிதனால் எதுவுமே நடக்காது.
கடவுள் கடுகை மலையாக்கிவிடுவார்.
மலையை கடுகாக்கி விடுவார்.
அவரின்றி அணுவும் அசையாது.
*****************************************************
௧௨
கடவுள் ஓடும் தண்ணீரை
தரையாக்கிவிடுவார்,
தரையில் நதியை ஓடச்செய்வார்,
அனைத்திலும் அவர் பங்குதான் உள்ளது.
அவர் எப்படி எதை விரும்புகிறாரோ ,
அப்படியே அதை செய்துவிடுவார்.
*****************************************************
௧௩.
கடவுளைப் போன்று சாமார்த்தியமுள்ள ,
கௌரவமுள்ள ,ஆழ்ந்த,கம்பீரமானவர்
வேறு யாரும் கிடையாது.
அவன் உயிரனங்களின் குணங்களை ஏற்று ,
கெட்ட குணங்களை விட்டுவிடுவார்.
அவர் நல்லவர்களை ஒரு நொடியில் உலகம் என்ற
கடலைக் கடக்க வைத்துவிடுவார்.
***************************************************************
௧௪.
கபீர்:--
நான் எது செய்தேனோ,அதை எல்லாம்
நீதான் செய்தாய்.
நான் எதையும் செய்யவில்லை.
இந்த வேலையை நான் தான் செய்தேன் என்று
சொல்லும் போது நீயும் (கடவுள் ) எனக்குள்ளிருந்தாய்.
****************************************************************
௧௫.
கடவுளால் காப்பாற்றப்படும் ஒருவரை
யாராலும் அடிக்க முடியாது.
உலகமே எதிர்த்து நின்றாலும்
ஒரு சிறு தீங்கு கூட செய்யமுடியாது.
******************************************************************
௧௬.
என்னுடைய கடவுள்,
ஒரு வாணிகச் செட்டியார்.
வியாபாரம் செய்வதில்
மிகவும் கெட்டிக்காரர்.
திராசு தட்டு இல்லாமலேயே
பாவ புண்ணியங்களை
அளந்துவிடுவார்.
*****************************************************************
௧௭.
இறைவனே!
நீ விரும்பாதவனை
உலகம் ஒரு தம்படிக்குக் கூட மதிக்காது.
உன்னால் விரும்பப்பட்டு
பாதுகாக்கப்படுபவன்
மிகவும் மதிக்கப்படுவான்.
*********************************************************************************************************************************************************
௧௮.
பக்தர்களிடம் கபீர் கூறுகிறார் :-
பூவில் மணம் இருப்பதுபோல்
உன் இறைவன்
உனக்குள் இருக்கிறார்.
கஸ்தூரிமான் வயிற்றில்
மணமுள்ள கஸ்தூரி
இருப்பதுபோல்
உன் கடவுள் உனக்குள்ளேயே இருக்கிறார்.
வெளியில் தேடுவது அறிவற்றசெயல்.
கஸ்தூரிமான் தன்னுள் இருக்கும்
மணத்தை உணராமல்
வெளியில் தேடும்.
அது அதன் அறியாமை.
அறிவுள்ள மனிதன்
அப்படி வெளியில் தேடமாட்டான்.
*************************************************************************
௧௯.
நீ வையகம் முழுவதும்
வடிகட்டி தேடிய கடவுள்
உனக்குள் இருக்கிறார்.
நீ அறியாமை என்ற திரையைப் போட்டு
வெளியில் தேடுவதால்
உனக்கு கடவுள்
தரிசனம் கிடைக்கவில்லை.
********************************************************************************
௨௦
கபீர் சொல்கிறார்
நீ கடவுளை
அறிந்துகொண்டு விட்டாயானால்
உன்னுடைய வீட்டிற்குள்ளேயே
இருந்து தியானம் செய்.
உன்னுடைய கடவுள்
உனக்குள்ளேயே இருக்கிறார்.
அவனைத்தேடி எங்கும் செல்லாதே.
**************************************************************************
-அடல் பிஹாரி வாஜ்பாயி உயிர் பிரிந்துவிட்டது -
--அவர் கவிதை -
நாட்டிற்காக வாழ்ந்து நாட்டிற்காக முடிவதே அவர்
வாழ்வின் கவிதை
****************************************************
பாரதம் பூமியின்
ஒரு துண்டல்ல
உயிருடன் இருக்கும்
தேசீய மனிதன்
ஹிமாலயம்
இதன் தலை ,
காஷ்மீர்
இதன் கிரீடம் ,
பஞ்சாபும் வங்காளமும்
இதன் விசாலமான தோள்கள் .
கிழக்கு மேற்கு கரைகள்
இதன் தொடைகள்
கன்னியாகுமாரி இதன் பாதங்கள் .
கடல் இதன் பாதங்களைக் கழுவுகிறது.
இது சந்தன பூமி,
வணக்கத்திற்குரிய பூமி .
இது தர்ப்பண பூமி ,
அர்ப்பண பூமி .
இதன் ஒவ்வொரு
தொண்டனும் சங்கரனே .
இதன் ஒவ்வொரு
துளியும் கங்கை நீரே.
நாம் இதற்காகவே
வாழ்வோம் .
இதற்காகவே
மடிவோம்.
அடல் பிஹாரி வாஜ்பாயின் கவிதை
தமிழாக்கம் எஸ் .அனந்த கிருஷ்ணன் .
भारत जमीन का टुकड़ा नहीं,
जीता जागता राष्ट्रपुरुष है।
हिमालय मस्तक है, कश्मीर किरीट है,
पंजाब और बंगाल दो विशाल कंधे हैं।
पूर्वी और पश्चिमी घाट दो विशाल जंघायें हैं।
कन्याकुमारी इसके चरण हैं, सागर इसके पग पखारता है।
यह चन्दन की भूमि है, अभिनन्दन की भूमि है,
यह तर्पण की भूमि है, यह अर्पण की भूमि है।
इसका कंकर-कंकर शंकर है,
इसका बिन्दु-बिन्दु गंगाजल है।
हम जियेंगे तो इसके लिये
मरेंगे तो इसके लिये।
ஹரிவம்சராய் பச்சன் அவர்களின் கவிதை
लहरों से डरकर नौका पार नहीं होती
அலைகளுக்கு பயந்தால் படகில் கடக்க முடியாது.
कोशिश करने वालों की हार नहीं होती
முயற்சி செய்வோர்களுக்கு தோல்வி ஏற்படாது
नन्ही चीटी जब दाना लेकर चलती है
சிறிய எறும்பு தானியம் எடுத்துச்
செல்லும் போது
चढ़ती दीवारों पर, सौ बार फिसलती हैசுவரின் மேல் ஏறும்பொழுது நூறுமுறை நழுவி விழுகிறது
मन का विश्वाश रगों मे साहस भरता हैமனதின் நம்பிக்கைகள் நரம்புகளில் துணிவை நிரப்புகிறது .
चढ़कर गिरना, गिरकर चढ़ना न अखरता हैஏறி விழுவதும் , விழுந்து ஏறுவதும் பிடிப்பதில்லை
आखिर उसकी मेहनत बेकार नहीं होती,இறுதியில் அந்த உழைப்பு வீணாவதில்லை
कोशिश करने वालों की हार नहीं होती
முயற்சி செய்பவர்களுக்குத் தோல்வி ஏற்படுவதில்லை
डुबकियां सिन्धु मे गोताखोर लगाता है,
முத்து எடுப்பவன் கடலில் மூழ்கி
जा जा कर खाली हाथ लौटकर आता है
பல தடவை வெறுங்கையுடன் திரும்புகிறான்
मिलते नहीं सहज ही मोंती गहरे पानी में,
எளிதாக ஆழமான கடலில் கிடைப்பதில்லை.
बढ़ता दुगना उत्साह इसी हैरानी में.இந்த வியப்பில் இரு மடங்கு வியப்பு ஏற்படுகிறது .
मुट्ठी उसकी खाली हर बार नहीं होती,ஒவ்வொரு முறையும் அவன் வெறுங் கையுடன் வருவதில்லை.
कोशिश करने वालों की हार नहीं होती
முயற்சி எடுப்பவர்களுக்கு தோல்வி ஏற்படுவதில்லை
असफलता एक चुनौती है , इसे स्वीकार करो ,
தோல்வி என்பது ஒரு அறைகூவல்
இதை ஏற்றுக்கொள்
मी रह गई, देखो और सुधार करो .
குறைகளை அறிந்து அவைகளைத் திருத்திக்கொள்.
जब तक ना सफल हो , नींद चैन को त्यागो तुम ,
வெற்றி கிடைக்கும் வரை
அமைதியான தூக்கத்தை விட்டுவிடு
संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम.
போராட்ட களத்தை விட்டுவிட்டு ஒடாதே.
कुछ किए बिना ही जय जयकार नहीं होती,
எதுவுமே செய்யாமல் வெற்றி முழக்கம் ஏற்படாது
कोशिश करने वालों की हार नहीं होती
முயற்சி எடுப்பவர்களுக்கு தோல்வி ஏற்படாது.***********************************************************************