Sunday, October 17, 2021

பகவத்கீதை

 பகவத் கீதை



பகவத் கீதையில்  மொத்தம்  பதினெட்டு அத்தியாயங்கள் உள்ளன .

1. அர்ஜுன விஷாத  யோகம்

भगवद गीता। , பகவத்கீதை

18 அத்யாயச் சுருக்கம்.
***************************

1. அர்ஜுன் விஷாத யோகம்.

  போர்க்களக் காட்சி பற்றி திருதராஷ்டிரன் கேட்க சஞ்சய் விளக்குகிறார்.அர்ஜுனனுக்கு யாருடன்

போர் புரிய வேண்டும் என்ற கவலை.

எதிரிகளாக  அவன் பார்த்தது உறவினர்களையும்  குருமார்களையும் தான்.  அர்ஜுனன்  போர் புரிய தயாராக இல்லை
*************************. 

2. ஸாங்க்ய யோகம்.

அர்ஜுனன் பலவானாக விரும்பினாலும்

தன்  குரு மார்கள் உற்றார்  உறவினர்கள்

ஆகியோருடன்  போரிட தயக்கம் காட்ட

கிருஷ்ணன் ஆத்மா பற்றி விளக்கி  ஸத்,சித் பற்றி விளக்கி பற்று அற்ற நிலையில் இருக்க உபதேசிக்கிறார்.

ஆத்மா வின் அழிவிற்காக வருத்தமடையக் கூடாது.

மறுபிறப்பு நிச்சயமாக இருக்கும்.

ஆத்மாவைப் பற்றி புரிந்து கொள்வதிலும். கடமையை ஆற்றவேண்டும். கர்மம் கடமை தான்யோகத்திற்குத் திறவுகோல்.
*********************************************
3. கர்மயோகம்
அர்ஜுனன்  ஞான யோகம் என்பது பற்றற்ற நிலையில் துறவறம் மேற்கொள்ளுதல் .நீங்கள் போர்புரியச்சொல்கிறீர்கள் .
உற்றார் உறவினர்கள் ,குருமார்களை எதிர்த்து போரிடுவதை  விட அனைத்தும் துறந்து பிச்சைக்காரனாவது எனக்கு சாலச் சிறந்ததாகத் தோன்றுகிறதே. இதைக்கேட்ட ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகில் பிறக்கின்ற
ஒவ்வொரு  ஜீவராசிகளுக்கும்  ஒவ்வொரு வினைத் திறமை உண்டு.
அந்த பிறவியில் நிர்ணயிக்கப்பட்ட செயலை செய்யாவிட்டால் அது ஒரு திருட்டு .இவ்வுலகில்  ஜனனம் ,கர்மங்கள் செய்தல் ,வாலிபம் முதுமை மரணம் அனைத்துமே  ஸ்ரீ கிருஷ்ணனாகிய நான்தான் .
இறைவனை தரிசிக்க தடைக்கற்களாக இருப்பது காமம் ,குரோதம் பேராசை ,ஆணவம் நான்கும் தான். நீங்கள்  உங்களுக்குக் கொடுத்துள்ள ஞானம் செயலாற்றவே . உனது ஆத்மா இறைவனின் சிறு அம்சமே .
===========================================
4. ஞான கர்ம  சந்நியாசி யோகம்

ஞானம்  உயரிய நிலை . இறைவனை அடைய பல வகை மார்க்கங்கள். அனைத்துமே இறைவனை அடைய வழிகாட்டுகின்றன. மனம் சஞ்சலமானது . நான்கு வகை வர்ணங்களும் தங்களுக்கு கிடைத்த  கர்ம ஞானம் கர்மங்கள் செய்யவே ,அந்தணர்கள் வேதம் ஓதவேண்டும் .க்ஷத்திரியர்களுக்கு வீரம் ,வைஷ்யர்களுக்கு வாணிகம் ,சூத்திரதாரி என்றால் ஆண்டவன் .சூத்திரர்கள் என்ற உழைப்பாளிகள் இல்லை என்றால்
உணவு  கிடையாது . சாலைகள் போடமுடியாது .கிணறு தோண்டமுடியாது .
நிலத்தை உழுது பயிரிட முடியாது . அதுதான் சூத்திரர்களின் மகத்துவம் ..
இந்தக்காலத்தில்    விவசாயப்படிப்பு ,இரசாயனம் ,பௌதீகம் கணிதம் என்று தனித்தனி வல்லுநர்கள் .மருத்துவர்கள் என்றால் உடலின் ஒவ்வொரு அங்கத்திற்கும்  ஒரு வல்லுநர்கள் .இப்படி அனைவருமே வல்லுநரானால்
உழைப்பாளிகள்  இல்லா உலகம் .
  ஆண்டவன்  அறிவுத்திறனை அனைவருக்கும் ஒரே அளவில் தரவில்லை . செல்வத்தை ஒரே அளவில் தரவில்லை.
அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவர்கள் நாடாளும் அமைச்சர்களாகவில்லை .ஒரு மருத்துவ நிபுணர் சுகாதார அமைச்சர் ஆகவில்லை .கல்வி அறிவியல் ஆராய்ச்சி முனைவர் கல்வி அமைச்சர் ஆகவில்லை.இதெல்லாம்  ஞானம் இருந்தும் ஞான சூன்ய நிலை .
இவர்களுக்கு வாய்ப்பில்லை .இந்த கர்மா சந்ந்நியாச யோகத்தில் நமக்கு
ஞானம் அளித்தும் செயலாற்றா  நிலை கூடாது என்பதை விளக்குகிறது .
ஞானி என்பவன் சந்தேகமே இல்லாதவன் தான்.
=================================
5. சந்நியாச யோகம்

கர்மயோகம் என்பது  வேறு .ஆத்மா என்பது வேறு . மனிதன் இறந்ததும் ஆத்ம பிரிந்து  புது ஜென்மம் அதாவது புதுப்பிறவி எடுக்கிறது. அப்பொழுது கர்மம் வேறுபடுகிறது. எல்லோரையும் நடு நிலையாக சம நோக்கில் பார்ப்பது தான் ஞானம் , அது அனைவருக்கும் எளிதாக கிட்டுவதில்லை .
சுயநலம் ,பாசம் மோகம் பெண் ,பொன் ,மண் ஆசைகள் மாயை /சைத்தான் /சாத்தான் அவை அனைவருக்கும் எளிதாகின்றன .உடனடி பலன் ஞானம் பெறவிடுவதில்லை. இதில் விஷய சுகம் ,பிரம்மசுகம்  வேறுபடுகிறது.
விஷய சுகம் லௌகீகத்தையும் ,பிரம்மா சுகம் அலௌகீகத்தையும் குறிப்பதால்  பிரம்ம ஞான நாட்டங்கள் உடையவர்கள் சந்நியாசியாகிறார்கள்.
====================================================================
கர்மத்தில் பறித்தல் ,பங்கிடுதல் ,படைத்தல் என்ற மூன்று இயல்புகள் .
கீழ்நிலை விலங்குகள் பறித்துப்புசித்து உயிர்வாழ்கின்றன.அந்த உயிரினங்கள் வாழ்க்கை மிகவும் போராட்டங்கள் .இதில் பலமுள்ளவை முதல் இடத்திற்கும் ,பலமில்லாதவை வருந்தி வாழ்கிறது அல்லது
அழி க்கப்படுகின்றன. இவை கடைநிலை விலங்குகள்.
இடைநிலை உயிர்கள்  பரஸ்பர துணையுடன் மற்றோர் உயிருக்கு உதவி புரிந்து வாழ்கின்றன .மனித சமூகம் இப்படிப்பட்ட அமைப்பு.
  மேல்நிலை  அதாவது தலை நிலை உயிர்கள் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்கின்றன. அன்புடன் பண்புடன் பிறருக்குப் படைத்தலை கோட்பாடாக கொண்டு வாழ்கின்றன. இப்படி பிறருக்காகவே வாழ்கின்ற வர்களின் ஆற்றல் ,ஆக்கம் படைத்தல் மூன்றும் உயர்கின்றன.ஊற்றுநீர் போல் இவை எடுக்க எடுக்க கொடுக்க கொடுக்க பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஞானம் அளிப்பவனுக்கு ஞானம் வளர்கிறது.ஈயக் குறைவின்றால் கல்வி என்பது பெருகும் செல்வமாகிறது.இந்த அனைவருக்கும் அளிக்கும் பொது சேவையில் அனைவருக்கும் பயன் தனக்கும் பயனளிப்பதாக அமைகிறது.
    தன் நலத்திற்காக செய்யாத செயல் புண்ணியச் செயல்.தியாகபுத்தியோடு செய்யும்  அருட்பணி . வையகம் வாழ ஆற்றும் பொதுப்பணி ஈஸ்வர ஆராதனையாக  செயல்படும் கர்மங்கள் மற்றவர்களின் நலனுக்காகவே செயபவை அனைத்துக்கே யாகங்களாக மாறுபவை .இதுதான் யக்ஞம்  .
யக்ஞங்கள்  ஐந்து வகைகளாகும்.1. தேவ யக்ஞம் 2.ரிஷி  யக்ஞம் 3.பித்ரு
யக்ஞம் 4,நர  யக்ஞம் 5.பூத  யக்ஞம்.

தேவ யக்ஞம்:---தினந்தோறும் றும் பகவானின் பிராத்தனைகள் ,இஷ்ட தெய்வ வெளிப்பாடு  முறைப்படி செய்தல் .
2.ரிஷி  யக்ஞம் --பிரம்ம   யக்ஞம் --உலக நன்மைக்காக யார் இயற்றினார் என்று தன்  புகழ்விரும்பாத பல அரிய கருத்துள்ள நூல்களை எழுதிவைத்துச் சென்றுள்ளனர்.அந்த நூல்களை ஆராய்ந்து  கற்று அறிந்து பரப்புரை செய்வதும் நாட்களைக் கழிக்கவேண்டும் .
3.பித்ரு  யக்ஞம் :----மனிதனைப் படைத்த பெற்றோர்கள் தெய்வங்கள்.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார் தெய்வப்புலவர் அவ்வையார்.ஆகையால் பெற்றோர்களுக்கு சேவை செய்தல் ,தினந்தோறும் பூஜித்தல் ,பணிவிடை செய்தல் பித்ரு  யக்ஞம் .
4,நர  யக்ஞம் :--மக்களின் நலம் காத்தல் ,பசிப்பிணி மற்றும் உடல் பிணிபோக்குதல் ,கல்வி கற்பித்தல் ஆகியவை மனிதனுக்காக மனித இனம் சுபிக்ஷை  பெற நர  யக்ஞம் .
.5. பூத  யக்ஞம் :--- ஆடு,மாடுகள் ,மரம் செடிகள் விலங்குகள் ஆகியவற்றிற்கு சேவை செய்தல் உணவளித்தல் பூத யக்ஞமாகும் .

தன ஆத்மாவில் இன்புற்று ,மனநிறைவடைந்து சுயநல ம்மகிழ்ச்சியில் திளைப்பவனுக்கு கடமை இல்லை.ஆத்மாவைச்  சார்ந்து ஆத்மாவுடன் ஐக்கியமாவதே கர்மமாகிறது.

6. தியான யோகம்

No comments: