Sunday, October 17, 2021

ஹிந்தி இலக்கியம் ஒரு அறிமுகம் -பகுதி -1

 துளசிதாசர் ---கிருஷ்ணபக்தி


    துளசி ஈரடி  ஈரடி


—1—எஸ். அனந்தகிருஷ்ணன்  மொழிபெயர்ப்பு


राम नाम  मनिदीप धरु जीह देहरीं द्वार |


तुलसी भीतर बाहेरहुँ जौं चाहसि उजिआर ||


   துளசிதாசர்  ராம பக்தர்.


இந்த  ஈரடியில் ராமரின் பெயரை
உச்சரிப்பதால் ஏற்படும் பயனைக்

கூறுகிறார்.

  இராம நாமம் என்பது

மணிவிளக்கைப் போன்றதாகும்.

 இந்த நாம மணிவிளக்கை

 நாக்கில் வைத்து  ஜபம்  செய்தால்

உள்ளும் புறமும்  ஒளிமயமாகும்.

நான்கு  பக்கங்களிலும்   பிரகாசமாகும்.

  புறமாயைகள் ஒழிந்து  அகில மாயை
அழிந்து  மனநிறைவு, மன சாந்திகிட்டும்.

மன சஞ்சலம்தீரும்.


—2—


नामु राम  को कलपतरु कलि कल्यान निवासु |


जो सिमरत  भयो भाँग ते तुलसी तुलसीदास ||

   ராம நாமம்  கற்பக விருக்ஷம்.

அனைத்து  மன விருப்பங்களையும்

நிறைவேற்றக் கூடியது.

நலம் தரக்கூடியது.துளசிதாஸை  தீய நிலையில்  இருந்து

நல்லவனாக்கியது    ராம ஜபம்.

துளசி போன்று  அவரை பரிசுத்த

மாக்கி அழியா புகழ் தந்தது.


—3—


तुलसी देखि सुबेषु भूलहिं मूढ़ न चतुर नर |


सुंदर केकिहि पेखु बचन सुधा सम असन अहि ||

 

 துளசிதாசர்  சொல்கிறார்,

புறத்தோற்றம் அழகாக இருந்தால்

அனைவரும் மயங்கி விடுகின்றனர்.

முட்டாள்  மட்டுமல்ல,

புத்திசாலி கூட ஏமாற்றம் அடைகின்றனர்.

மயில் அழகாகத் தான் ஆடுகிறது. ஆனால்

அதன் உணவு பாம்பாகும்.

 புற அழகு  மாயை.


—4—


सूर समर करनी करहिं कहि न जनावहिं आपु |


बिद्यमान  रन पाइ रिपु कायर कथहिं प्रतापु ||


   துளசிதாசர் சொல்கிறார்:

    வீரர்கள்  என்றும் போரிட

     அஞ்சமாட்டார்கள்.

      கோழைகள் தான் வீண் பேச்சு

பேசுகிறார்கள்.

போரிடாமல் தன்

குலப்பெருமை பேசி

தன்னை வீரர்கள் போன்று

காட்டிக் கொள்வார்கள்.


—5—


सहज सुहृद  गुर स्वामि सिख जो न करइ सिर मानि |


सो  पछिताइ  अघाइ उर  अवसि होइ हित  हानि ||


  இயற்கையிலேயே  நல்லது விரும்பினால்

நல்லதை உபதேசிக்கும் குருவின்
உபதேசத்தை ஏற்று நடக்கவேண்டும்.

அவ்வாறு  குரு உபதேசத்தை ஏற்று 
நடக்காதவர்களுக்கு தீமையே நடக்கும்.

பாவம் சேரும்.  வருத்தப்பட வேண்டியிருக்கும்.


—6—


मुखिया मुखु सो चाहिऐ खान पान कहुँ एक |


पालइ पोषइ सकल अंग तुलसी सहित बिबेक ||


துளசிதாசர் சொல்கிறார்:

  தலைவன் வாய் போன்று இருக்கவேண்டும்.

வாய் தனக்குள் போட்ட

உணவை நன்கு மென்று

விழுங்கி அனைத்து

அங்கங்களையும்

வலிமையாக்குகிறது.

 அவ்வாறு  தலைவன்

வலது இடது,ஜாதி மத இன சம்பிராதயமின்றி

அனைத்து மக்களையும்

 சமமாகக் கருதி பாதுகாக்க வேண்டும்.


—7—


सचिव  बैद गुरु तीनि जौं प्रिय बोलहिं भय आस |


राज  धर्म तन तीनि कर होइ बेगिहीं नास ||

 அமைச்சர், மருத்துவர், குரு ஆகிய மூவரும்

சுயநலம்,அச்சம்,சுயலாபம் இன்றி இருக்கவேண்டும்.
அவ்வாறு  இல்லை  என்றால் 

நாடு,,உடல்,அறம் அனைத்தும்

விரைவில் அழிந்து விடும்.


—8—


तुलसी मीठे बचन  ते सुख उपजत चहुँ ओर |


बसीकरन इक मंत्र है परिहरू बचन कठोर ||


  துளசிதாசர் சொல்கிறார்:

       இனிய சொற்கள் பேசினால் நாலாபக்கங்களிலும்   சுகம் கிடைக்கும்.

         இனிய சொற்கள் தான் மற்றவர்களை

வளப்படுத்தும் மந்திரமாகும். ஆகையால் கடினமான சொற்களைப்  பேசுவதை விட்டு விட வேண்டும்.


—9—


सरनागत कहुँ जे तजहिं निज अनहित अनुमानि |


ते नर पावँर पापमय तिन्हहि बिलोकति हानि ||

    சுயநலத்திற்காக தன்னிடம் அடைக்கலம் வந்தவனை விட்டுவிடுபவன், மிகப்பெரிய பாவி.அவனைப்  பார்ப்பதே பாவம்


—10—


दया धर्म का मूल  है पाप मूल अभिमान |


तुलसी दया न छांड़िए ,जब लग घट में प्राण ||


     இரக்கம்   அறத்தின் ஆணிவேர்.

பாவங்கள் ஆணவத்தின் ஆணிவேர்.

மனிதன் எந்த  நிலையிலும்  இரக்க குணத்தை விட்டு விடக்கூடாது.

ஆணவம் அனைத்துப் பாவங்களுக்கும்

மூலகாரணமாகும்.


—11—


आवत ही हरषै नहीं नैनन नहीं सनेह|


तुलसी तहां न जाइये कंचन बरसे मेह||


  கண்களில் அன்பு இல்லை.

சென்றால் மகிழ்ச்சி  இல்லை.

அவ்வாறானவர்கள் வீட்டில்

தங்கமே   மழையாகப் பெய்தாலும்

செல்லக்கூடாது.


—12—


तुलसी साथी विपत्ति के, विद्या विनय विवेक|


साहस सुकृति सुसत्यव्रत, राम भरोसे एक||


 துளசிதாசர் சொல்கிறார்:

   இன்னல்கள் வரும்  போது

 நமது நண்பர்கள்

கல்வி,பணிவு,அறிவு,துணிவு,நற்செயல்கள்,

உண்மை பேசுதல்,கடவுள்  பக்தி,  ஆகிய ஏழு குணங்கள்  தான்.


—13—


तुलसी नर का क्या बड़ा, समय बड़ा बलवान|


भीलां लूटी गोपियाँ, वही अर्जुन वही बाण||

துளசிதாசர் சொல்கிறார்:

    காலம் மிகவும்  வலிமையானது.

காலம் தான் மனிதனை சிறியவன்,பெரியவனாக்குகிறது.

வில் வீரரான அர்ஜுனுக்கு

 நேரம் சரியில்லாததால்

 ஒரு முறை வேடர்களிடமிருந்து கோபிகளைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.



—14—


तुलसी भरोसे राम के, निर्भय हो के सोए|


अनहोनी होनी नही, होनी हो सो होए||

   துளசிதாசர் சொல்கிறார்:

   பகவான்   ராமர் மீது   நம்பிக்கை வைத்து

அச்சமின்றி தூங்குங்கள். எந்த அசம்பாவிதமும் நடக்காது.

நடக்கும்  அசம்பாவிதத்தைத்

தடுக்கவும் முடியாது.



—15—


तुलसी इस संसार में, भांति भांति के लोग|


सबसे हस मिल बोलिए, नदी नाव संजोग||

 துளசிதாசர் சொல்கிறார்::--

   வித விதமான குணமும் நடத்தையும் உள்ள மக்கள் வாழும் வையகம்  இது. ஆகையால்  நல்லவர் கெட்டவர்கள் எல்லோரிடமும் நட்புடனும் கனிவுடனும் சிரித்துப் பழகுங்கள்.


—16—


लसी पावस के समय, धरी कोकिलन मौन|


अब तो दादुर बोलिहं, हमें पूछिह कौन||


   துளசிதாசர் சொல்கிறார்:

  மழைக்காலத்தில் தவளைகள்கத்தும்.

குயில் மௌனமாக இருக்கும்.

தவளைகளின் கர்ண

கொடூரமான டர்டர்

என்ற ஓசைகளின் முன்

குயிலின் இனிமையான

குரல் எடுபடாது.

தவளைகள் போல்

கத்தும் முட்டாள்

கள் வஞ்சகர்கள்

முன் அறிவுஉள்ளவர்கள்,

பேசமாட்டார்கள்.


—17—


काम क्रोध मद लोभ की, जौ लौं मन में खान|


तौ लौं पण्डित मूरखौं, तुलसी एक समान||

  துளசிதாசர் சொல்கிறார்:

  காமம்,கோபம்,ஆணவம்,

பேராசை

ஆகிய

குணங்கள் மனதில்

 சுரங்கம் போல் இருந்தால்

பண்டிதர்களும்முட்டாள்களும் ஒன்றே.

===================================


சூர்தாஸ் ஹிந்தி பக்தி கால இலக்கியத்தின்
சூரியன் என்று போற்றப்படுபவர்.


பகவான் ஸ்ரீ கிருஷ்ண பக்தரான இவர்
மனம் ,வேறு எந்த இறைவனையும்

விரும்பவில்லை.


 அவர் பகவான் ஹரியை வணங்கு வதற்கான காரணங்களாக


ஒரு பஜனைப்பாடல் இயற்றி உள்ளார்.


1.

நான் ஹரியின் தாமரைப் பாதங்களை  வணங்குகிறேன்.


அவரின் கிருபையால், கால் ஊனமுற்றவனால் ,


மலைமேல் ஏறி இறங்க முடியும்.


கண்தெரியாதவனால்


 எல்லாவற்றையும் பார்க்க முடியும்.


காது கேட்காதவனால்


 கேட்க முடியும்.


ஊமையால்


 பேசமுடியும்.


ஏழையால்


  மன்னனாக முடியும்.


உலகில்  ஹரியின்  அருளால்


இயலாது  என்பதெல்லாம்


இயல்பாக  இயங்கும்.




                                    2.


சூர்தாஸ்  நந்தனின் புத்திரனிடம் வேண்டுகிறார் :-


பிறந்தது   முதல் ,நான் ஆடாத ஆட்டமில்லை.


காமம் ,குரோதம் என்ற ஆடை அணிந்து ஆடினேன்.


 இவ்வுலக இன்பங்களின் மாலையாக


கழுத்தில்  அணிந்து  ஆடினேன்.


காலில் மோகம் என்ற சலங்கை அணிந்து ஆடினேன்.


இவ்வுலகை  உண்மை என்றும்  ,


நிலையானது  என்றும்  நினைத்து,


  மாயையில்  மனம் என்ற மிருதங்கம்


வாசித்துக்கொண்டே இருந்ததது.


கெட்டவர்களின் சகவாசம் என்னை


  மாற்றி-மாற்றி ஆடவைத்தது.


மாயை என்ற ஆடை  இடையில்  கண்களை  மறைக்க



பேராசை என்ற திலகத்தை நெற்றியில்  இட்டு


ஆடாத ஆட்டங்கள் ஆடினேன்.-என்


ஆட்டங்கள் அறியாமையால் தான்.


அறியாமல் முட்டாள்தனமான என் ஆட்டங்களுக்கு


வடிகாலாக   உன்னைக்  கருதி  உன்னை


சரணடைகிறேன்.


.நந்தகோபால!சூர்தாஸின்


 வேண்டுகோள்  இதுதான்--


எனக்கு  முக்தி கொடு.



ரஹீமின்  ஈரடி

ரஹீம் ஈரடி

அப்துர்ரஹீம் கான்கானா    என்பது ரஹீம் என்ற ஹிந்தி கவிஞரின் முழுப்பெயர்.

இவர் பேரரசர் அக்பரின் அமைச்சர் , சேனாபதி . அவரது அரசபையின் நவரத்தினங்களில்  ஒருவர்.இவர் தானவீரர் கர்ணன்  அவர்களுக்கு சமமானவர்.

வருடத்திற்கு ஒரு நாள் தன்னிடம் உள்ள அனைத்தையும் தானம் கொடுத்துவிடுவார்.

ரஹீம்   ஹிந்து தர்மத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர்.


அவரது dhohai  அதாவது  ஈரடி 

१.1.


இயற்கையில் நல்ல உயர்ந்த  குணப்பண்புகள்  உள்ள உயர்ந்த மனிதனை கெட்ட சேர்க்கைகள்  தீய குணங்கள் உள்ளவனாக மாற்றமுடியாது.குளிர்ச்சியும் நறுமணமும்  கொண்ட சந்தனமரத்தில் சுற்றியுள்ள பாம்பால் 

சந்தன மரம் தன்  பண்புகளை இழக்காது.


जो रहीम उत्तम प्रकृति ,का करी सकत कुसंग. चन्दन विष  व्यापत नहीं, लिपटे रहत भुजंग.


2. வைரத்தின் மதிப்பை மற்றவர்கள்தான் மதிப்பீடு செய்வர்.வைரம் தன் விலையை ஒருபொழுதும் ஒரு லக்ஷம்  என்று கூறியதில்லை.அவ்வாறே உயர்ந்த மகான்களை  மற்றவர்கள் தான் மதிப்பர்.உயர்ந்தவர்கள் தற்புகழ்ச்சி

செய்ய மாட்டார்கள்.

बड़े बडाई ना करें ,बड़े न बोली बोल. रहीमन हीरा कब कहे ,लाख ताका है मोल.





ஜோ ரஹீம்  உத்தம் பிரகிருதி ,கா கரி சகத் குசங் .,


சந்தன்  விஷ்  வ்யாபத் நஹீன் ,லபடே ரஹத் புஜங் .



             நல்லவர்களின்  உத்தமர்களின் இயற்கை குணம் ,


             தீயவர்களின் சேர்க்கையால்  தீய குணமாக மாறாது.


                 சந்தன  மரத்தில் பாம்பு சுற்றியிருந்தாலும் ,

               சந்தன மரத்திற்கு பாம்பின் விஷம் ஏறாது.



இயற்கையாகவே உத்தம குணம் உள்ளவர்கள்

தீயவர்களுடன்  சேர்ந்தாலும் நல்லவர்களாகவே  இருப்பார்கள் என்பதை ரஹீம்  சந்தன மரம் பாம்பின் சேர்க்கையோடு  ஒப்பிட்டுக் கூறுகிறார்.

சந்தனமரம் வாசமும் குளிர்ச்சியும் இயற்கையாகவே  இருக்கும்.

பாம்பிற்கு இயற்கையான குணம் விஷத்தன்மை .

இதனால் சந்தனமரம் விஷமாக மாறாது. தன இயல்பான நற்குணங்கள் எத்தகைய தீயவர்கள் சேர்ந்தாலும் மாறாது.




௨.  ரஹீமன் பாணி ராக்கியே ,பினு  பாணி சப் ஸுன் .

பாணி கயே ( gaye)  ந  ஊபரே( oobhare)மோதி ,மானுஷ்  சூன்.


   ரஹீம்  சொல்கிறார் :-

  தண்ணீரை,    ஒளியை , (பிரகாசத்தை )கௌரவ த்தை க் காப்பாற்றுங்கள் .


தண்ணீர்   இல்லை என்றால்  முத்து உருவாகாது.


கௌரவம் இல்லை என்றால் மனிதனுக்கு மதிப்பில்லை.


தண்ணீரின்றி மாவு பயன் படாது.


முத்து  பளபள  வென்று மின்னி ஒளிரவேண்டும்.


பாணி =  தண்ணீர் ; பளபளப்பு , மதிப்பு- மரியாதை


பாணி ராக்கியே  ==கௌரவம் ,பளபளப்பு , தண்ணீர்  காப்பாற்றுங்கள் , சேமியுங்கள் .



௩.

 ரஹிமன்  தேக்கீ  badan  கோ ,laghu ந  தீஜியே டாரி.

ஜஹான்  காம்  ஆவே சூயி ,கஹா கரை தரவாரி .



  பெரியவர்களைக்  கண்டு ,

சிறியவர்களை விட்டு  விடாதீர்கள்


ஊசி   சிறியது , வாள்  பெரியது.


ஊசி செய்யும் வேலையை கத்தி செய்யாது .


கத்தி யின் வேலையை ஊசி  செய்யாது.


  மனிதர்கள் வாழ  ஊசியும்  வேண்டும் , கத்தியும் வேண்டும்.

தருவர் ப்பல் நஹீன் காத் ஹை,சர்வர் பியத் ந  பான்.

கஹி ரஹீம் பர்காஜ் ஹித் ,சம்பத்தி சஞ்சஹி சுஜான்.




 ரஹீம்  சொல்கிறார் ---


  மரங்கள் தன்  பழங்களை  சாப்பிடுவதில்லை .


  நதி தன்னிடம் ஓடும் நீரை பருகுவதில்லை.



  மரங்களின் பழங்கள், ஆற்று நீர் மற்றவர்களின் பயனுக்காக.


அவ்வாறே   உத்தமர்கள், நல்லவர்கள்  மற்றவர்களின் 


நன்மைக்காகவே   சொத்து சேர்க்கிறார்கள்.


    **********************

  ௨.  ஜோ கரீப்  பர்  ஹித்  கரை ,தே  ரஹீம் படே லோக் .


         கஹான் சுதாமாபாபுரோ,கிருஷ்ண மிதாஈ  ஜோக்.



 ரஹீம் சொல்கிறார் ---

 ஏழைகளுக்கு  நன்மை செய்பவனே பெரியவன் , உத்தமன்.

ஏழை  சுதாமா , அரசனான  கிருஷ்ணன் இருவரின் நட்பும்

 உயர்ந்தது.  மதுரா புரி  அரசன்  கிருஷ்ணன் ,

ஏழை  சோற்றுக்கு வழியில்லா சுதாமா இருவருக்கும்

பெருத்த வேறுபாடு அந்தஸ்தில்.

ஆனால்  நட்பு என்ற  வட்டத்தில் இருவரும் உயர்வு தாழ்வின்றி

ஒன்றாகினர்.  அதனால் கிருஷ்ணர் மிகப்பெரிய மதிப்புக்குள்ளான கடவுளாக விளங்குகிறார்.

*******************************

௩.  ரஹீமன்  வே  நர்     மர்  சுகே ,

ஜே கஹூன் மாங்கன் ஜாஹின்.

வுன்கே   பஹ்லே வே முயே ஜின் முக்ஹ நிகசத் நாஹீன் .


      ரஹீம் கூறு கிறார் ---


மற்றவர்களிடம் யாசகம் ஏதாவது உதவி கேட்பவர்கள்


இறந்து  விட்டார்கள்  என்றே பொருள்.

கேட்டும் இல்லை என்று சொல்பவர்கள் 

கேட்பவனுக்கு  முன்பே  இல்லை என்று சொல்பவர்களும் இறந்ததற்கு சமம்.


 மற்றவர்களிடம் கேட்பவர்களும் பிணம் ,

கேட்டு இல்லை என்போரும் பிணம் .

ரஹீம் தோஹை  ரஹீம் ஈரடி.


சுவாதி நக்ஷத்திரத்தின் தண்ணீர்  வாழைமரத்தில் விழுந்தால் சுவையான கனியாகும்.  முத்துள்ள சிப்பியில் விழுந்தால் விலைஉயர்ந்த முத்தாகும்.பாம்பின் வாயில் விழுந்தால் விஷமாகும்.அவ்வாறே மக்கள் யாருடன் சேர்கிறார்களோ அதற்கேற்ற குணம் பெறுவார்கள்.


कदली सीप भुजंग मुख,स्वाती एक गुण तीन, जैसी संगती बैठिये ,तैसोई   फल  दीन 11




திருவள்ளுவர் :--


இரந்தும்   உயிர்வாழ்தல்  வேண்டின் பரந்து

கெடுக  உலகியற்றியான்.


கபீர்    कबीर


அன்பு என்பது தோட்டத்தில் வளராது.

அன்பு என்பது சந்தையில் விற்கும்

பொருளல்ல.

அரசனோ ஏழையோ தன்உயிர்,

ஈந்து தான் அன்பைப்பெற முடியும்.

(பணத்தலோ அல்லது அதிகாரத்தாலோ

அன்பை பெறமுடியாது.

தியாகத்தால் தான் அன்பைப்பெற முடியும்.)


प्रेम न बाढ़ी ऊपजै, प्रेम न हॉट बिकाय.I

 राजा परजा जेहि रुचे,सीस देई लै जाय.II

************************************************************************

நட்பு

நல்ல நட்பு  கிடைப்பது அரிது.

நல்ல நட்பு முறியக்கூடாது

முறிந்த நல்ல நட்பு  ,

 மீண்டும்  பாக்யவான்களுக்கே  மீண்டும் கிட்டும்.


.

मिलना जग में कठिन है,मिली बिछुड़ी जनि कोय.I

बिछुड़ा सज्ज़न तेहि मिलै,जिन माथे मणि होय. II

ஹிந்தியில்   கபீர் ,துளசி ,ரஹீம் ,பிஹாரி லால், போன்று

விருந்தரும்   தோஹே   அதாவது  ஈரடி எழுதியுள்ளார் .


திருவள்ளுவரின்  திருக்குறள் போன்று இவர்களும்  அவர் போன்ற  கருத்துக்களை  ஈரடியாக எழுதி புகழ் பெற்றவர்.


இன்று  அவரின்  சில  ஈரடிகளைக் காண்போம்.


1.    எல்லோரும்  சுயநல  நண்பர்களே.

       சுயநலமின்றி  யாருமே இல்லை.

      கொக்கு ,நாரை   நீர் உள்ளவரை  தான்

      ஒரு குளத்தில் இருக்கும் .

      நீர் வறட்சி ஏற்பட்டால்

       அந்த  குளத்தை விட்டு பறந்துவிடும்.

             அவ்வாறே  நம்மிடம் இருந்து ஏதாவது கிடைக்குமா

     என்று எதிர்பார்க்கும்  நண்பர்களே  அதிகம்.

     வறுமையில்  உதவ வருபவர்கள் குறைவே.



2. நல்ல குணம்  இருந்தால் தான்

நமக்கு மதிப்பு.

   இயல்பான நல்ல குணம் ,

அழகு உள்ள கிளியை வளர்ப்போர் அதிகம் .

காகத்தை யாரும் வளர்க்கமாட்டார்கள்.

 அது  இறந்த முன்னோர்கள் போல் .

அது நகரத்தை சுத்தம் செய்யும் .

ஒருநாள் அழைத்து உணவு படைப்பர்.

அதன் குணம் சரியில்லாததால்

 மதிப்பு இல்லை.


3.கல்விச் செல்வம்  என்பது  கடின உழைப்பு,

கவனத்தால் வருவது.

நூல்கள் வாங்கி அடுக்குவதால்  ஞானம் வராது.

நூல்கள் பொருளுணர்ந்து படிக்க வேண்டும்.

விசிறி வாங்கினால் காற்று வராது.

அதை கையில் எடுத்து வீசினால் தான் காற்றுவரும்.அதுபோல் நூல்களை

 வாசிக்கவேண்டும்.

4.நல்லவர்கள் -கெட்டவர்கள் ஒரே மாதிரி

இனிமையாகப் பேசமுடியாது.

 வசந்தகாலம் வந்தால் குயிலின்

 இனிய குரலும்

காகத்தின்

 கர்ணகொடூரக் குரலும்

தெரிந்துவிடும்.

 நிறம் காகத்திற்கு குயிலுக்கு ஒன்றே.

ஆனால்  குரல் மற்றும் குணம்  வேறுபட்டதே.


5. எல்லோரும்  பலமுள்ளவர்களுக்கே

 உதவுவார்கள்.

 அதிகாரபலம் ,பணபலம் ,குணபலம் , ஞானபலம் ,உடல்பலம் ஆனால்  அதிகார பலம் , பணபலம் மதிப்பு மிக்கது.


காற்று நெருப்பை அதிகமாக பற்றவைக்கும்.

 காட்டுத்தீ பரவும் .

ஆனால்   காற்று விளக்கை  அணைத்துவிடும் .



साई इतना दीजिये,जामें कुदुम्ब समाय; मैं भी भूखा न रहूँ,साधू न भूका जाय.


இறைவனே இந்த அளவில் வசதி கொடு;

எதனால் நான் என் குடும்பம் நிர்வஹிக்க முடியும்.

நானும் பசியோடு இருக்கக்கூடாது.,

என் இல்லம் தேடி வரும்

சாதுக்களும்மகான்களும்

வயிறார உண்டு செல்ல வேண்டும்

 --------------அஞ்சாமை ..........................


जिन ढूंढा  तिन पाईयां ,गहरे पानी पैठ. मैं बौरी डूबन डरी,रही किनारे बैठ.


ஆழ் கடல் மூழ்கி ,அஞ்சாமல் செயல் புரிந்தோர் விலை இல்லாமுத்துபெற்றார்

அஞ்சி நான் கரையில் அமர்ந்து காத்ததுதான் .எனக்கு எதுவும் கிட்டவில்லை.

பரோபகாரம்

वृक्ष कभी फल न भखै,नदी न संचै नीर. परमार्थ के कारणे साधुन धरा शरीर.


....மரம் தன பழங்களை தானே சாப்பிடுவது இல்லை.ஆறு தன நீரை தானே

பருகாது.  அவ்வாறே மற்றவர்களுக்காகவே மகான்கள் புவியில் வாழ்கிறார்கள்.



ஹிந்தி கவி வ்ருந்தரின் ஈரடி.


1.அரசன் அழிவான் ஆலோசனை  தப்பானால்,

ஆன்மீக சாதுக்கள் சேர்க்கை தப்பானால் அழிவர்.

அன்பு அதிகமானால் புத்திரர்கள் அழிவர்.

அந்தணர்கள் கல்வி கற்கவில்லையானால் அழிவர்.

************************************************************

௨.இனிய சொற்கள் மருந்துக்கு ஒப்பாகும்,

கசப்பான சொற்கள் கூறிய அம்பாகும்.

செவி வழி சென்று,முழு உடலையும்

நடுங்கச்செய்யும்.

*************************************************************

௩.எதையும் அறியாமல்,காணாமல்,தீர விசாரிக்காமல்,

சிந்திக்காமல்,மற்றொரு வரைப்பற்றி

 எப்படி கருத்துக் கூற இயலும்.?

கிணற்றுத் தவளை கடலின்

விஸ்தீரணம் எப்படிக் கூறும்.?

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7

௪. வீரனின் வேடம் தரித்தாலும்,

கோழை வீரனாக முடியாது.

சிங்கத்தின் தோல் போர்த்தினாலும் ,

நரி சிங்கமாக முடியாது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

௫.முட்டாளும் தன் இடைவிடா,

முயற்சியால்,பயிற்சியால்,

மேதை ஆகலாம்.

கல்லும் கயிறு பட்டு ,

இழுக்க,இழுக்க குழியும்.

---------==============================


கபீர்  ஒரு கல்வி அறிவற்ற  கவிஞர்.

 ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக 

அவர்  பாடிய ஈரடிகள், பத்  என்ற பாடல்கள் .
அவர்நல்லவர்களின்சேர்க்கையால் ஞானம்பெற்றார்


அவர் இறந்தபின் இந்துக்களும் ,முஸ்லிம்களும் 

அவரது உடலை தத்தம் மதச் சடங்குகள் படி 

அடக்கம் செய்ய விரும்பினர்.

ஆனால் அவர் உடல் மறைந்து 

பூக்களாக மாறின.


அவர் இறைவனை அடைய ஞானம் தான் முக்கியம் என்ற 

ஞான மார்க்கம் தோற்றுவித்தவர்.

அவர் கடவுள் ஒன்றே என்ற தத்துவத்தை 

உணர்த்த பாடல் எழுதியவர்.


அவரின் ஒரு பாடல் கருத்துரை கேளுங்கள்:


  1. இரண்டு கடவுள் எங்கிருந்து வந்தார்?

உன்னை, கடவுள்   இரண்டு என்ற
பிரம்மையில் ஆழ்த்தியவர்  யார்.?

அவருக்கு அல்லா,கேசவன்,ஹரி,ஹஜ்ரத் என்று 

நாமங்கள் வைத்து இருக்கிறார்கள்..

தங்கத்தால் பலவித பெயரில்  நகைகள். 

.அந்த நகைகளுக்கு தங்கம் தான் மூலப்பொருள்.


அவ்வாறே கடவுளுக்கு ,

பல நாமங்கள் இருந்தாலும்,

கடவுள் ஒருவரே.

ஒருவர் தொழுகை என்றால்,

மற்றவர் பூஜை-அர்ச்சனை. 

இருவரும் ஒருவரே.

அந்த இறைவனை
சிலர் மகாதேவன்,

சிலர் முஹம்மது ,

 என்கின்றனர்.

சிலர் பிரம்மம், 

சிலர் ஆதம் என்கின்றனர்.

சிலரை ஹிந்து, 

சிலரை முஸ்லிம் என்கின்றனர்.

எல்லோரும் ஒரே மண்ணில் வாழ்கின்றனர்.

ஒருவருக்கு வேதம் புனித நூல் .

ஒருவருக்கு  குரான்  புனிதநூல்.

ஒருவருக்கு தர்ம குரு  மௌலானா.

ஒருவருக்கு தர்ம குரு பூஜாரி.

ஆனால் எல்லோரும் ஒருவரே.

ஒரே மண்ணில் செய்யப்பட்ட,

பலவித மட்பாண்டங்கள்.

அவைகளுக்குப் பலவித  பெயர்கள்.

ஆனால், ஹிந்து முஸ்லிம் இருவரும்,

கடவுள் ஒருவரே  என்ற உண்மை 

தத்துவத்தை மறந்துவிட்டனர்.

அதனால் இருவரும் 

இறைவனை அ டையவில்லை.

முஸ்லிம் பசுவதை செய்கிறான்/

ஹிந்து  வெள்ளாட்டை வதம் செய்கிறான்.

அதனால் இருவரும்  

தங்கள்  குறிக்கோளை அடையவில்லை.

இந்த வேறுபாட்டினால் இருவரும் 

தங்கள்  வாழ்க்கையை 

வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
=====================================


ஞான மார்க்கம் -3


நீ அறியாமை என்ற முக்காடை நீக்கினால்,

உன் இறைவன் உனக்கு கிடைப்பார்.

அங்குஇங்கு  எனாதபடி 

அகிலத்தில் எங்கும் வியாபித்து 

இருக்கும் இறைவனை ,

நீ சந்தித்து அருள்பெற விரும்பினால்,

கசப்பான வார்த்தைகள் பேசாதே.

செல்வத்தைச் சேர்த்து 

ஆணவமாக இருக்காதே.

பஞ்ச தத்துவங்களால் ஆன,

இவ்வுடல் பொய்யானது.

(நிலம்நீர்நெருப்புகாற்றுஆகாயம்)

அழியக்கூடியது.

ஆகையால் இந்த வெற்று உடலில் 

ஞானம் என்ற விளக்கு ஏற்று.

ஆசனத்தில் அமர்ந்து 

அசையாமல் இரு.

(ஹட யோகம் )

யோக சாதனையில் 

விலைமதிப்பற்ற 

இறைவனை சந்தித்து 

அருள்பெறுவாய்.

அப்பொழுது 

ஆனந்தம் பரமானந்தமே 

உன்னிடம்குடிகொள்ளும்.

உன்மனதில் 

சதா சர்வகாலமும் 

உடலின் ஆறு சக்கரங்களிலும் 

ஆனந்த பேரிகை

 இசைத்துக்கொண்டே 

இருக்கும்.


(குண்டலினி சக்தி ,(அரவ வடிவான இறை ஆற்றல்)

அதுவே பேரானந்தம்


ஆணவம் அழிந்தது


ஹிந்தி கவிதை.



நான் ஒரு கவிஞன் ,


புவி புகழும் புலவன்  ,


என்ற மமதை யோடு,


மாடியின் சாளரத்தில்,


நின்று,

ஆணவத்தோடு,

அகிலம் என் கையில் ,

என்றே  இருந்த நேரம்,

காற்று ஒன்று வீச,

தூசி சிறு துரும்பு,

கண்ணில் விழ

துடித்தேன் ,

பல மணித்துளிகள்.

துரும்பின் எச்சரிக்கை,

என்னைத் திகைக்க

வைத்தது.

ஆணவக் கவிஞரே,

அவனியில்

ஆணவம்   ஒழிய

போதுமே ஒரு துரும்பு.

செயல் மறந்து ,

செயல் இழந்து ,

திகைத்து நின்ற

மணித்துளிகள்

=============================================

தாஜ்மஹால்


ஜனாப்   சாஹர் லுதியாநபி


தாஜ்மஹலை ஷஹ்ஜஹான்

கட்டுவித்து,

தன் காதலை  அமரக் காதலாக்கினான்.


ஆனால்


தாஜ் மகாலை கட்டி


அவன் ஏழையின் காதலை


கேலிச்சித்திரம் ஆக்கிவிட்டான்.


என்னருமைக்காதலியே!!

  தாஜ்மஹால் காதலின்

அன்புச்சின்னமாகத் தோன்றலாம்.

இந்த இறந்த பேரரசரின்

 கல்லறை கண்டு மகிழும் காதலியே!

நீ  உன் இருள் சூழ்ந்த உன் வீட்டினைப்பார்.


உலகில் எண்ண முடியாக் காதலர்கள்,

அவர்களின் காதலும் உண்மையானதுதான்.

ஆனால் வறுமையின்  காரணமாக

அவர்களின் காதல் ஒளிரவில்லை.

தஜ்மஹாலைப்பார்!

இந்த கல்லறைகள் ,

இந்த கோட்டை ,மதில் சுவர்கள்,

அழகுமிளிரும் தூண்கள்.

பூவேலைப்பாடு நிறைந்த ,

சுவர்கள் ,எழில் பூங்காக்கள்,

 வியர்வையும்

மிளிரும் விளக்குகள்,

உதிரமும்

உழைப்பும்

முன்னோருடையது.

இந்த தொழிலாளர்கள்

காதலிக்கவில்லையா?

ஆனால் அவர்களின் நினைவாக

எந்த அடையாளமும் இல்லை.

சிறிய மண் விளக்குகூட இல்லை.

பணம் படைத்தவர்கள்,

பாட்டாளியின் ரத்தம்

உறிஞ்சி

ஏழைகளின் காதலை

ஏளனத்திற்கு

உள்ளாக்கியுள்ளனர்.

என் அருமைக்காதல்,

கண்மணியே,

நாம் இந்த அவமானத்தின்

சின்னம்

தாஜ்மஹாலில்,

சந்திக்க வேண்டாம்.

வேறு எங்காவது

சந்திப்போம்.

=================

குதா=கடவுள்


உருது கவிதை (தமிழாக்கம்)

அக்பர் இலஹாபாதி


இறைவனின் பெயர் ஒளி.

இறைவனின் பெயர் அன்பு.

இறை நாமம் ஜபித்தால்,

மன வலிமை கிட்டும்.

நாக்குக்கு பேசும்

உரிமை(திறன்) கிட்டும்.

இரவும் பகலும்

இறைவனின் ஆணைப்படியே.

விண்ணின் விண்மீன்கள்

ஏற்பாடும் ஆதிக்கமும்

ஆண்டவனின் அதிகாரத்திலே.

பருவ கால மாற்றமும்

பகவானின் கட்டளையே.

அவன் கட்டளையாலேயே

காற்று வீசுகிறது.

அவன் கட்டளையால்

பழங்களும் தானியங்களும்

விளைகின்றன.

அவன் கட்டளையே

மழை பெய்வதும்.

ஆனால் மனிதன்

ஆணவத்தால்

தன்னையே

உயர்ந்தவனாக

கருதுகிறான்,

மற்றவர்களை மதிப்பதில்லை

மரணம்  நெருங்கும்    போது

வேறுவழி இன்றி,

இருப்பான்.

செயல் நன்காக  இருந்தால்

உயர் இடம் கிடைக்கும்,

அழியும் இந்நில உலகில்

மனிதன் சோதனைக்கு

உட்படுத்தப்படுகிறான்.

நமக்கு தர்மங்கள்

நல்வழி காட்டுகின்றன 

பெரியோரை  

மதிக்கவேண்டும்.

இறைவனிடம்

அஞ்சவேண்டும்.

தீய செயல்களில் இருந்து

தப்பிக்க வேண்டும்.

இறை மார்க்கத்தில்,

செல்லவேண்டும்.

================================.

முள்ளும் மலரும்



மலரும் முள்ளும் ஒரே செடியில்,

கதிரவன் ஒளியும்,சந்திரன் ஒளியும் ,

மாரியின் நீரும்,வீசும் காற்றும்,

அவைகள் மேல் இரண்டுக்கும் ஒன்றே.


ஆனால்,

மலரின் மணம்,

மலரின் மென்மை,

மது தரும் மாண்பு,

வண்டுகளிடம்

காட்டும்

அரவணைப்பு,

மனம் பெறும்,

மகிழ்ச்சி,

கண்களுக்கு  

குளிர்ச்சி.


அதே  செடியில்.

முட்கள்,

வண்டுகள்

உடலில் குத்தி,

தொடுவோரின்

உடலையும்,

உள்ளத்தையும்

புண்ணாக்கும்.

இன்னல் இயல்பு.


இப்படைப்பு,

இத்தோற்றம்.

இக்குணம்,

யார் குற்றம்??
=========================
கபீர் ஈரடி


हम तुम्हारो सुमिरन करैं ,तुम मोहिं चितवो नहीं,  सुमिरन मन की प्रीती है,सो मन तुम्हीं माहीं ११


கபீர் இறைவனிடம் சொல்கிறார் --இறைவா!
நான் உன்னை பிரார்த்தனை செய்கிறேன்.
ஆனால் நீ என்னை பார்ப்பதில்லை.
உன் மனதில் நான் உள்ளேனா,

என்பது என் கவலை இல்லை
.என் மனதின் அன்பால் உன்னை வேண்டுகிறேன்
.என் மனம் உன்னிடத்திலேயே நிலைத்துள்ளது.

இறைவனை நாம் உள்ளன்போடு தியானம் செய்யவேண்டும்.
அவன் நம்மை அருள்பார்வையோடு பார்க்கிறான இல்லையா
என்ற கவலை நமக்கு ஏற்படக்கூடாது.


हंसा बगुला एकसा ,मानसरोवर माहिं 1   बगा ढून्दूरे    माछरी,हंसा मोती खाहिं 11

கபீர் கூறுகிறார்:---

அன்னப்பறவையும் கொக்கும்
ஒரே மானசரோவர்
ஏரியில் வசிக்கின்றன.

ஆனால் கொக்கு மீனைத் தேடி அலையும்.
அன்னப்பறவை சிப்பியில் உள்ள
முத்தைத்தேடி அலையும்.
ஏனென்றால் இரண்டின் உணவும் வேறுபட்டது.

மனிதர்கள் ஒருவரைப்போல் ஒருவர்
இருக்க ஆசைப்பட்டாலும்
இறைவன் கொடுத்த இயல்பு வேறு பட்டது.
குணமும்  குற்றமும் இயற்கையில் ஏற்படுவது..
அதற்கேற்றவாறு மனிதனின் செயல் அமையும்.

************************************************************************************

माला   फेरत    जुग     भया  , फिरा    न  मन का  फेर  ,
कर    का  मनका   डाली दें  ,मन  का  मनका   फेर./


ஒரு பக்தன் பல யுகங்களாக
ஜபமாலை கொண்டு
ஜபித்துக்கொண்டுள்ளான்.

ஆனால் அவன் மனம்
பலவிதத்திலும்  சஞ்சலம்
அடைந்து கொண்டிருக்கிறது.

இறைவனருள் எப்படி கிடைக்கும்?
உண்மை நிலை புரிந்து கையிலுள்ள
ஜபமாலையைக் கீழே போட்டுவிட்டு
மனம் என்ற மாலையில் சுழலும்
மன விகாரங்களை சுழலாமல் நிறுத்து.
அதன் பின்  ஜபதபங்களில் மனம் செழுத்து.

அப்பொழுதுதான் ஆண்டவன் பேரருள் கிடைக்கும்.


No comments: