Sunday, October 17, 2021

रामनाईक राज्यपाल लिखित चरैवेति का अनुवाद। पर न जाने और किसीका तमिलनवाद का प्रकाशन

 சரைவேதி 


ஸ்ரீ ராம்நாயீக்கின்  சுருக்கமான அறிமுகம் .

பிறப்பு :---16 ஏப்ரல் ,1934 .(அக்ஷய் திருதியை )இடம் : சாங்கலி

குடும்பம் :--மனைவி ஸ்ரீமதி குந்தா ,

இரண்டு புத்திரிகள் --     1. டாக்டர்  நி:ஷிகந்தா 2.ஸ்ரீமதி விஷாகா

                                                                                                                                                                               
  அம்மா: --ஸ்ரீமதி இந்திரா ;
    தந்தை :- ஸ்ரீ தா.வா.     குல்கர்ணி

உயர் கல்வி :-பீ.காம் ,(1954 )
ப்ருஹன் மஹாராஷ்டிரா வாணிஜ்ய                                       மஹாவித்யாலயா

எல் எல் பீ (1958 )கிஷன் சந்த் செலாராம்( விதி வித்யாலயா)      சட்டக்கல்லூரி

வேலை :--    பொதுகணக்காளர்அலுவலகம்     மேல்நிலைஎழுத்தர்(1954-1957 }
தனியார் துறை, கிறா ஸ்டீல் நிறுவனம். நிறுவனசெயலர்.(1957-1969)
தனியார்துறைநிறுவனம் ‘அப்மேப் கன்சல்டன்ட்”உயர்மேலாளர்”(1974--1977)


அரசியல்பொறுப்பு;--
.  

  •       பாரதீய ஜனசங் ,மும்பை  உள்ளூர் தொண்டராக பணி  ஆரம்பம்.(1959)


         பாரதீய ஜனசங் --மும்பை அமைப்பாளர், செயலர் முழுநேரப்பணி    (1969-1974 )
        ஜனதா கட்சி ,மும்பை தலைவர் --(1978-1980 )


  • பாரதீய ஜனதா கட்சி ,மும்பை பிரிவு மூன்றுமுறை தலைவர்

  • (1980.1983 1991 )

  • மகாராஷ்ட்ரா சட்டசபையின் சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து  மூன்று முறை .போரேவெளி (1978 ,1980 ,1985 மூன்று முறை )


  • வடக்கு மும்பை மக்களவை தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினர். (1989.1991,1996,1998,1999}


  • பா ஜ ப நிறுவப்பட்டதில் இருந்து (1980)ஆளுநர் (2014)ஆகும் வரை தேசீய நிர்வாகக்குழு அங்கத்தினர்.

  • பாரதீய ஜனதா கட்சியின் மற்ற பொறுப்புகள் :-
            தலைவர் ,தேசீய  ஒழுக்கக் குழு (2005 -2007 )
         


  •     அவைகூட்டுநர் ,பாராளுமன்ற-சட்டசபை பயிற்சி பட்டறை(2007-2010)
       

  •   அவைகூட்டுநர்,நல்லாட்சிபட்டறை(2010-2014)
    ரயில்மாநிலஅமைச்சர்(தன்னாட்சிபொறுப்பு)-----1998-1999
    உள்துறைதிட்டம்மற்றும்நிகழ்ச்சிநிரல்ஒருங்கிணைப்புமற்றும் பாராளுமன்றசெயல்மாநிலஅமைச்சர்


  • பெட்ரோலியம்மற்றும்இயற்கைஎரிவாயுஅமைச்சர் 

  • அக்டோபர்,1999இல்இருந்து  மே ,2004 (தன்னாட்சி பெட்ரோலியம் அமைச்சரவை 1963 இல் ஆரம்பிக்கப்பட்டது .அப்பொழுதில் இருந்து 2015 வரை தொடர்ந்து  ஐந்து வருடம் பெட்ரோலியம் அமைச்சர்  வேலை பொறுப்பில் இருந்த ஒரே அமைச்சர்.

  • தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு ---- பண்டித்  தீனதயாள் ஜெயந்தி (25 செப்டம்பர் 2013)தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு அறிவிப்பு


ஆளுநர் ,உத்திரப்பிரதேசம்     22 ஜூலை 2014
                                           
*************************************

முன்னோக்கிச்செல்

ராம் நாயீக் (நாயக்? )

சரைவேதி ! சரைவேதி ! இதன்  பொருள் முன்னோக்கிச்  சென்றுகொண்டே இரு .இடைவிடாமல் சென்றுகொண்டே இருந்தால் வெற்றி கிடைக்கிறது என்பதை நானே அனுபவபட்டிருக்கிறேன் .
வழியில்  எனக்கு  முழு மனதுடன் உதவிசெய்கின்ற எண்ணிக்கையில் அடங்கா  ஒத்துழைப்பாளர்கள்   கிடைத்தனர் .அவர்களுடைய ஒத்துழைப்பும் உதவியும் இன்றி இந்தளவு உயரம் வரை அடைவது இயலாத ஒன்று  .  அவர்கள் காரணமாகத்தான்  இன்று நான் சிறிதளவு உயர்ந்து  இருக்கிறேன் . ஆகையால் இந்த நூலை என்னுடைய அனைத்து ஒத்துழைத்தோருக்கும்  சமர்ப்பிக்கிறேன் .
                                      ராம் நாயக் 


  பிரதமர்  செய்தி

                                                        பிரதமர்
                                                                                                                        புதுதில்லி
                                                                                                                      மே  04 ,2016                                                                                                                              மரியாதைக்குரிய  திரு  நாயக் ஜீ ,
                  உங்கள் கடிதம்  மூலமாக  நீங்கள்  எழுதிய  நூலின்  பிரதி 
“சரைவேதி !சரைவேதி !!  கிடைக்கப்பெற்று  மகிழ்ந்தேன் . மகாராஷ்டிரம் மற்றும் நாட்டின் அரசியலில் தாங்கள் அளித்த பங்களிப்பு  புகழத்தக்கது. 

வெவ்வேறு  சமுதாய மற்றும் அரசியல் பொறுப்பேற்று நிர்வாகம் செய்ததால்   நீங்கள் வாழ்க்கையின் நீண்ட பரவலான அனுபவத்தைப் பெற்றிருக்கிறீர்கள் . இந்த அனுபவச்செல்வம்   இப்பொழுது நூல் வடிவில்
வாசகர்களை அடைந்திருக்கிறது . முன்னோக்கிச் செல்  என்ற ஹிந்தி ,குஜராத்தி ,ஆங்கிலம்  மற்றும் உருது  பாதிப்புகளுக்கும்  வாசகர்களின் முழு  அன்பும் கிடைக்கும்  என்ற நம்பிக்கை உள்ளது.
  இதயம் நிறைந்த வாழ்த்துக்களுடன் .
                தங்களின் ,

                  (ஒப்பம் )
                (நரேந்திரமோடி )

------------------------------------ராம் நாயக்.
                                          மேதகு ஆளுநர் .உத்தரப்பிரதேசம்
                                          ராஜபவன் ,லக்கனவ்


முன்னுரை

ஒருநாள்  தொலைபேசியின்  மணிஅடித்தது    எடுத்ததும்  உத்திரப்பிரதேசஆளுநர் பேசவிரும்புகிறார்   என்று  கோவா  ராஜபவன் கட்டுப்பாட்டுஅறையில் இருந்து  அறிவிப்பு கிடைத்தது.  அவருடன் பேசுவது  எனக்கு  எப்பொழுதும்  சுகம்அளிப்பதாக  இருந்திருக்கிறது.  அவர்  மி  கவும்   விரிவாக  எந்த ஒரு   நிகழ்ச்சியையும்  சொல்வதால்
பேசுவது  எனக்கு  எப்பொழுதும்  சுகம்அளிப்பதாக  இருந்திருக்கிறது.
அவரைஎனக்கு  முப்பது-முப்பத்தைந்து ஆண்டுகளாகத்தெரியும்.

அவருடைய ஆளுமையின் சிறப்பு பற்றி   மற்றவர்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.   அவர்என்னிடம்சொன்னார்--- ஒரு முக்கியமான வேலைக்காக   உங்களைதொலைபேசியில்  அழைத்திருக்கிறேன் .

மேலும்சொன்னார்,தன்னுடைய    “சரைவதி !சரைவதி !”
நினைவலைகளின்  நூலிற்கு முன்னுரை  எழுதச்சொன்னார் .கைப்பிரதியைப்  படிக்கும் போது   தகுந்த திருத்தமும்  செய்யலாம் என்று சொன்னார் . உத்திரப்பிரதேசத்தில்  மிகப்பெரிய  ஹிந்தி  வித்துவான்கள் இருக்கிறார்கள்  என்பது என்னுடைய  உடனடித் தாக்கமாக இருந்தது .கங்கை ,யமுனை ,லக்கினதேய் கரைகளில் வசிக்கும் ஹிந்தி அன்பர்களையும்  அறிஞர்களையும் விடுத்து  அவர் ஆயிரம் மைலுக்கு அப்பால் அரபிக்கடற்கரையில் வசிக்கும் கோவா ஆளுநருக்கு இந்த வேலையை ஏன்  ஒப்படைத்தார் ? என்பொருட்டு அவருடைய இந்த நம்பிக்கை  எனக்கு  சௌபாக்கியமாகும் .நாற்பதாண்டுகளாக இந்த அரசியல் வாழ்க்கை என்ற இருண்ட  சிறையில் எவ்வித களங்கமும் இன்றி வெளிவருவது  மனிதனுக்கு  மன நிறைவையும்  சுகத்தையம்  கொடுக்கிறது . பார்ப்பவர்களுக்கும்  ,கேட்பவர்களுக்கும்  மற்றும் சந்திப்பவர்களுக்கும்    உபதேசமும்   ஆனந்தமும் கிடைக்கிறது .இப்படிப்பட்ட மனிதன் கடமையைக் கடைப்பிடிக்கிறான் .நீதி -நியமங்களில் நம்பிக்கை வைக்கிறான் .பாரதீய ஜனதா கட்சியின்   மூத்த தலைவர் ஸ்ரீ ராம் நாயக் அவள் இந்த குணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார் .
அவர் நேரத்தையும் நியமங்களையும் பின்பற்றுவதில் உறுதியானவர். தொலைபேசியில் எனது ஒப்புதல் கிடைக்காது என்ற வினாவே எழாது என்பதும் அவர் அறிவார். அவர் தாமதிக்காமல் கூரியரில் தன்  கைப்பிரதியை அனுப்பிவிட்டார். மூன்றாவது நாள் கைஎழுத்துப்பிரதி கிடைத்துவிட்டதா ? என்று கேட்டார்.  கிடைத்ததும் நான் படிக்கத்தொடங்கினேன் .இது சுயசரிதை இல்லை. அரை நூற்றாண்டின் வாழ்க்கைப்பயணத்தில் நடந்த நிகழ்ச்சிகள் மற்றும் மனிதர்களைப்பற்றி  சேகரித்த அனுபவங்களாகும் .இவர் தன்னை சந்திப்பவர்கள் ஒத்துழைப்பையோ அல்லது விரோதத்தையோ கவனித்தது இல்லை. இரண்டுவிதமான மக்களின் வாழ்க்கையில் கிடைத்த சிறிய பெரிய பெருமைகளை சேகரித்து வைத்திருந்தார் .
அதிகமான சூழலில் தன சாதனையின் மேன்மையை மற்றவர்களுக்கும் கொடுத்திருக்கிறார்.கடினமான சூழலில்  தகுந்த நிர்ணயம் எடுப்பதில்  தன்  தந்தையின் மூலம் கிடைத்த  சிறப்பு என்பதை பதிவதை மறப்பதில்லை . நூலைப்படிக்கும்போது  ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய உணர்வுகள் ,நம்பிக்கைகள் ,செயலுடன்  உடன் செல்வது போன்று உணர்வு ஏற்படுகிறது. எளிய மொழியில் எழுதிய இந்த நூல் படிப்பதற்கு சுகமளிக்கறது .(இதமளிக்கிறது ).நினைவுகள் எங்குமே சிக்கலாக இல்லை. ஐம்பது வருடங்களுக்கு முன்னாள் நடந்தவைகளை இப்பொழுது தான் நடந்தது போல் இருக்கிறது. அவருடைய மொழி நடையில் பழமொழிகளும் மரபுத்தொடர்களும்  அதிகம் 

கா ணப்படுகின்றன.

  தன்  வாழ்க்கையின் கடுமையான  திருப்பங்களில்  மனைவியின்  உதவிகளை ஏற்றுக்கொண்டிருப்பதும்  எனக்கு இன்பமான அனுபவமாக இருக்கிறது. ஆலோசனையில்  மட்டுமல்ல ,முடிவெடுப்பதிலும் செயல்களிலும் ஒவ்வொரு சமயத்திலும் மனைவி உதவி செய்திருக்கிறார். அநேக இடங்களில் இவர்  தன மனைவிக்கு உயர்ந்த  சமுதாய அந்தஸ்து  கொடுத்திருக்கிறார். தன்னுடன்  மனைவியின் உடன் ஆறாம் கடைப்பிடித்ததை  சொற்களாலும் உணர்வுகளாலும்  மௌனமான நன்றியை  வெளிப்படுத்தியிருக்கிறார் .
  இந்த நூலை வாசகர்கள் வரலாற்று நூலாகவும் படிக்கலாம். அதிகமான வாசகர்களுக்கு மும்பையில் மட்டுமல்ல ,பாரதத்தின் சமுதாய மற்றும் அரசியல் வரலாற்றை படிப்பதற்கும் அறிவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கும் . சில சமயங்களில் உபன்யாசகராகவும் எழுத்தாளர் மாறிவிடுகிறார். ஆகையால் கதை படிக்கும் ஆனந்தமும் கிடைக்கிறது.
கடந்த ஐம்பதுவருட  அனுபவங்களில் அங்கங்கு என்னுடைய கூட்டுறவு நிகழ்வுகளும் சுட்டிக்காட்டியிருக்கிறார் . ஆகையால் அந்த அரசியல் நிகழ்வுகள் வர்ணனை எவ்வளவு சரியானதாகவும் உயிரோட்டமாகவும் இருக்கிறது என்பதை நான் சொல்ல முடியும். நான் அவனின் நினைவாற்றலைப் புகழ்கிறேன். பாரதீய ஜனதா கட்சியின் காரிய கர்த்தாக்களில்  கர்வமடையும் மனிதர்களில் ராம் நாயகிக்கும் ஒருவர். ராம் நாயக் தன காரியகர்தாக்களின் உற்சாகத்தையும் புகழையும் பாராட்டியிருக்கிறார். தன்  நன்றியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தனது  எழுத்தில்  அதிகமான  இடங்களில்  இலக்கிய ஆசிரியாரின் பங்கை ஏற்கிறார். சாரமற்ற விஷயங்களிலும்  சாரமுள்ளதாக ஆக்கி  எழுதுதல் மேலும் வாசகர்கள்  ஞாபகத்திற்கு  விட்டுவிடுதல் ,மிகவும் சிறப்பானதாகும் .அவர் இந்தநூலில் ஒரு  அத்தியாயத்தின்  தலைப்பை “அன்பு மற்றும் சக்தியால்  நிரப்பப்பட்ட பை “என்று கொடுத்திருக்கிறார் .வாசகர்கள் இந்த அத்தியாயத்தைப் படித்த பின்  தானே அன்பாலும் சக்தியாலும்  நிரம்பிவிடுவார் .பெண்களின் பொருட்டு அவருடைய  உணர்ச்சிபூர்ணமான  நடத்தை  ,அவருடைய அரசியல் பொறுப்புணர்வு ,,
அமைச்சராக இருந்து அவர் எடுத்த முடிவுகள்  மிகவும் புகழத்தக்கதாகவே  இருக்கின்றன . மிகவும்  குறைந்த  அரசியல் தலைவர்கள் தான் அமைச்சரவையில் பெண்கள் துறை கிடைக்கவில்லை என்றாலும் ,அல்லது  பெண்கள் சம்பந்தமாக எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை என்றாலும்  பெண்கள் குறித்து சிந்திப்பார்கள் .
ராம் நாயக் அவர்கள் பெண்கள் மூலமாக  கோரிக்கை வைக்காமலேயே  பெண்களுக்கு ஒதுக்கீடு ,மும்பையில்  பெண்களுக்கான முதல் உள்ளூர் தொடர் வண்டி (லோக்கல் ட்ரையின் )5ந்தேதி மேமாதம் 1992 ல்  துவக்கிவைக்கும்  மகத்துவம்  நிறைந்த  முடிவெடுத்தார்.அவர் பெண்களுக்குத்  தாய்ப்பால்  குழந்தைகள்  குடிக்கும் மகத்துவத்தை அறிந்து அது பற்றிய கேள்வியை  பாராளுமன்றத்தில் எழுப்பினார் . குழந்தை உணவு டப்பாக்களில் “தாய்ப்பால் தான் மிகவும் சிறந்தது “என  எழுதவைத்தார் .
  சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர் ஆகும் முன்பே  ரயில் பயணிகளின் வசதிக்காக போராடினார் . சட்டமன்ற ,பாராளுமன்ற உறுப்பினர் ,அமைச்சர் ஆனதும்  இவைகளுக்காக மறக்கமுடியாத பணிகளைச்செய்தார்.உண்மையிலேயே அவர் சமுதாயப்பணிக்காக
தன்  இளமையிலேயே  பணியைத்துறந்தார் . அவர் ஒவ்வொரு நொடியும் சமுதாயத்தைப்பற்றியே நினைத்தார். ஒவ்வொரு அரசியல் தலைவரும் முதலில் சமுதாயத்திற்கான தொண்டராகவேண்டும் .ராம் நாயக்  அவர்களும்  உண்மையான சமுதாயத் தொண்டர்.  அதனால் அவருடைய  நினைவுகளைப்  படிப்பது  ஆனந்தம்  அளிக்கிறது .
ஹிந்தி வாசகர்களுக்கு இந்த நூல் ஆர்வமிக்கதாக இருக்கும் ,கடந்த அரை நூற்றாண்டு  அரசியல் வரலாறும்  அதில் ராம் நாயக்கின் சக்திமிக்க பங்கும்  நாடு மற்றும் சமுதாயத்திற்காக ஏதாவது கொஞ்சம் செய்யத்தூண்டுதலாக  இருக்கும் .
நான் மரியாதைக்குரிய  ராமநாயக்கிற்கு  இப்படிப்பட்ட தூண்டுதல் தரக்கூடிய சமுதாயத்திற்குப் பயனுள்ள  நூல் எழுதியதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நூல் இன்றைய மற்றும் எதிர்கால  இளைய தலைமுறையினருக்கு  தூண்டுகோலாக அமையும் என்று நம்புகிறேன் .
நல்  வாழ்த்துக்களுடன் ,
ம்ருதலா சின்ஹா ,கோவா .
==================================================================
                  மனதில் உள்ளவை
2014 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் மராட்டி தினசரி “சகால் “என்னுடன் தொடர்பு கொண்டது முற்றிலும்எதிர்பார்க்கததாகும்.
என்னுடைய வாழ்க்கையின் ஏற்றத்  தாழ்வுகள் ,இனிய-கசப்பான நினைவுகள்  மேலும்  குழந்தைப்பிராயவளர்ப்பு  முறை பற்றி  ஒவ்வொரு பதினைந்துநாட்களுக்கும் ஒரு பத்தி எழுதவேண்டும் என்ற முன்கூட்டிய
விருப்ப அறிவிப்பாகும் .நான்  கவலைப்பட்டேன் .நான் எழுத்தாளரல்ல .
என்னுடைய  நரம்புகளில் அரசியல் .சமுதாய நீதி தான் ஓடுகிறது . இதற்கு முன்னால்   நான் ஒரு சிறிய  புத்தகம்   (காதா சங்கர்ஷ்)    “போராட்ட  கதைப்பாடல் “எழுதியுள்ளேன் .  இதைத்  தவிர  ரயில்வே  பட்ஜெட் அல்லது தலைவர் அல்லது ஒத்துழைப்பாளர் பற்றி எழுதியுள்ளேன் . நான் எழுதுவதை  மக்கள் படிப்பார்களா என்பதே என் சவாலாகும் .எனது மனப்போராட்டத்தை  அனுமானித்து ஆசிரியர்  ஸ்ரீ ராம் பவார் சொன்னார் ---”சொல்வதற்கு உங்களிடம் அதிகம் இருக்கும். உங்கள் சமகாலத்தலைவர்கள்  சரத் பவார்,மனோகர் ஜோஷி ,சுஷீல் சிந்தே போன்றவர்களும் எழுதப்போகிறார்கள் .”
அரசியலில் இவர்கள் சமகாலமாக  இருக்கலாம் ,ஆனால் வயதில் என்னைவிட சிறியவர்கள்.
அவர்கள் தங்கள் அனுபவங்களை எழுதுகிறார்கள் என்றால் நானும்  எழுத முயற்சிக்க வேண்டும். விளைவு உங்கள் எதிரில்.
ராம் எழுத ஆரம்பித்தார் .
நான் என்னைப்பற்றி குறைவாகவே  பேசுகிறேன் .ஆனால் எழுதுவது மிகவும் பிடிக்க ஆரம்பித்தது . வாசகர்களின் தன்னிச்சையான பதிலால்  எனது மனவுறுதி அதிகரித்துக்கொண்டே இருந்தது .27 அத்தியாயங்கள் எழுதிய பின்  நான் எழுதுவதை  நிறுத்திவிட்டேன். ஏனென்றால் காலம்  குறைந்ததாக உணர்ந்தேன் .ஆனால் “சகால் “ என் பத்திகளைத் தொடர  வற்புறுத்தியது . 82  வயதிலும்  நான்  மிகவும் மும்முரமாக இருக்கிறேன்  என்ற  இனிய உணர்வு ஏற்பட்டது. காரணமும் அறிவேன் ---முன்னோக்கிச்செல் .தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கவேண்டும். ,முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும் .பணிகள் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பதுதான்  என்னுடைய  வாழ்க்கை மந்திரம் . முடிந்த அளவு அதையே  செய்வேன் .

    சுய சோதனை செய்து  நான் என்னுடைய  பராமரிப்பு ,ஆளுமை படைத்தது  மற்றும்  வாழ்க்கைப் பயணம் பற்றி எழுதுவேன்  என்ற ஆசை அடிப்படையிலேயே இருந்தது .
ஏதோ  ஒரு பொருளாலோ  அல்லது விஷயத்தாலோ  மனிதனுடைய  ஆளுமை அல்லது  வாழ்க்கை அமைகிறது அல்லது கெடுகிறது .  என்னுடைய வாழ்க்கை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. நான் நடுத்தர வகுப்பைச்சார்ந்த  வேலைக்காரன் . தொழிலாளி . பிறகும் வேலையை விட்டு விட்டு  அரசியலுக்கு வந்துவிட்டேன்.   21 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய்  என் வாழ்க்கை ஓட்டத்தைத் நிறுத்துவதற்கு முழு முயற்சி செய்தது.  நான் அதன் முயற்சியைத் தோற்கடித்துவிட்டேன். முன்னேறிக்கொண்டே இருந்தேன்.  நான் 19 வயதாக இருக்கும் போது என்னை வடித்த சிற்பி  அதாவது என் தந்தை  ஸ்ரீ நாயக் மாஸ்டர் உர்ப் .தா.வா .குல்கர்ணி மரணமடைந்தார். ஆனால் என் வாழ்க்கை நிற்கவில்லை ,எனக்கு வலுவூட்டிக்கொண்டே இருந்தது. எப்பொழுதாவது அப்பாவைப்போன்ற  முன்னோர்கள் , எப்பொழுதாவது என் ஒத்துழைப்பாளர்கள் , எப்பொழுதாவது ஓரிரெண்டு அறிமுக மற்ற பொது முகங்கள் எனக்கு பாடம் கற்பித்தார்கள்  .நான் கற்றுக்கொண்டே இருந்தேன் . பழைய  நினைவுகளைப்புதுப்பிக்க வேண்டும் என  உறுதிப்படுத்திக்கொண்டேன் .முடிந்தால் எதிர்காலத்தை நோக்கி பார்வையை நிலை நிறுத்த முயற்சி செய்வேன். கதைக்கு கதை வாசகர்களுக்கு  என் முன்னாள் பக்கத்தைத் திறந்துகொண்டே  செல்வேன்.  மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற   விரதத்தைப் பூர்த்தி செய்யும்  நோக்கத்தில் நான் தொடர்ந்து சென்றுகொண்டே   இருக்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும்  தனக்கென எல்லைகள் உண்டு. மனித மனத்தின்  மரியாதைகளை நான் அறியவில்லை .ஆனால் செய்தித்தாளின் வயது ஒருநாள் என்பதை  அறிவேன் . இப்பொழுது  அது சில மணி நேரங்கள் ஆகிவிட்டன . பிறகும் எழுதிக்கொண்டே இருந்தேன். வாசகர்கள் படித்துக்கொண்டே இருந்தனர் . எனக்கும்  சரி, வாசகர்களுக்கும்சரி,  என்  நலம் விரும்பிகளுக்கும்  சரி ,இந்த கட்டுரை குப்பையில் சேர்க்கக் கூடாது என்பதே  நல்லதாகத் தெரிந்தது. இந்த எண்ணங்கள் இருக்கும் போதே  எழுத்தாளர்களின் தொகுப்பு  நூல் வெளியிட பரிந்துரை முன்னால்  வந்தது.
  என்னுடைய நீண்ட அரசியல் மற்றும் சமுதாய வாழ்க்கையின் சில நினைவுகளே இவை.  சமுதாயப்  பணி ஆற்றுகின்றவர்களின்  வாழ்க்கை வெளிப்படையாக  இருப்பது அவசியம் .அதனால் எனது அந்தரங்கங்களின்  நுழைவாசலை  வாசகர்களுக்கு முன் திறந்து வைத்திருக்கிறேன் .
  நான் லக்னோவிலிருந்து  எழுதிக்கொண்டிருந்தேன் . ஆனால் அநேக நிகழ்ச்சிகளின் தேதிகள் ,சரியான தகவல்கள்  மேலும் நிழற்படங்கள் 
மாற்றிய உருவாக்கங்கள்  என் மகள் விஷாகா மும்பையில் இருந்து செய்துள்ளாள் .அதனால்தான் எனது எழுத்துப்பணியை சரியாகப் பெற்றுள்ளேன் . இன்று வரை கேட்காமலேயே அன்பு கிடைத்துக்கொண்டே இருக்கிறது. சில சமயம் அறிமுகமாகாதவர்களிடமிருந்தும் ,சில சமயம் அறிமுகமானவர்களிடமிருந்தும் . இந்த நூல் வாசகர்களால்  விரும்பப்படவேண்டும் என்று எனது மனது  விரும்புகிறது.

 நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

                                            ---ராம் நாயீக் .
ஆகஸ்ட் 2016.
ராஜபவன் ,
உத்திரப்பிரதேசம் .லக்னவு -226 027
மின் அஞ்சல் ---me @ramnaik .com
================================
சிறப்பான நன்றி .
என்னுடைய  நினைவுத் தொகுப்பு “சரைவேதி ! சரைவேதி!! மராட்டி மொழியில் வெளியிடப்பட்டது.மும்பையில் நீண்ட பொதுநலப்பணி வாழ்க்கையில் என்னுடைய தொடர்பு அனைத்து மொழிகள் அறிந்தவர்களும் சமமானதாக இருந்து கொண்டிருக்கிறது. சரைவேதி  நூல்  வெளியிட்ட பிறகு என் நண்பர்களும் நலம் விரும்பிகளும் இந்த தொகுப்பை ஹிந்தி ,குஜராத்தி ,உருது ,ஆங்கிலம்  ஆகிய மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தினர்.  எதிர்பாராமல் பிரபாத்  வெளியீட்டாளர் பிரபாத் குமார் என்னுடன் பேசினார் .நான் என்னுடைய இந்த தீர்மானத்தை சொன்னேன்.
உடனே அவர் என் முடிவை ஏற்றுக்கொண்டார்.ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாதிப்புகளை வெளியிட தன்னுடைய ஒப்புதலை அளித்தார். ஹிந்தி மொழி வாசகர்களின் வசதிக்காக அவர்களின் அன்பை மதிப்பதற்காக இதன் ஹிந்தி மொழிபெயர்ப்பு தங்களுக்கு முன் தயாராக இருக்கிறது. ஹிந்தி மொழி பெயர்ப்பு செய்ததற்காக நான்  முக்கியமாக  ஸ்ரீமதி குமுதி சங்கவி சாவரே க்கு நன்றியுள்ளவனாவேன் .
இந்நூல் பற்றி தங்களின் எண்ணங்கள் அறிய உற்சாகமாக இருக்கிறேன்.
         
-------------------------------------------ராம்நாயீக் .

மொழிபெயர்ப்பாளரின் வார்த்தைகள் :-
கொஞ்சம்
சொல்லவேண்டியிருக்கிறது
ஸ்ரீ ராம் நாய்க் ஜீ ! நாங்கள் அவரை ராம் பாவூ  என்று சொல்கிறோம்.இதழியலில் எனது தொடர்பு எவ்வளவு பழமையானதோ ,
அவ்வளவு பழைய அறிமுகம் அவருடன் எனது உறவு. நான் 1978இல் இதழியல் ஆரம்பித்தேன். அப்பொழுது அவர் மும்பை ஜனதா கட்சியின் தலைவர்.இன்று அவர் உத்திரப்பிரதேச ஆளுநர் . உயர்ந்த பதவியை அலங்கரிக்கிறார். ஆனால் அவரிடம் சிறிதளவு கூட மாற்றமில்லை. மும்பை நவபாராத் நிருபராக எனது வேலையை ஆரம்பித்தேன்.மெல்ல மெல்ல   பதவி உயர்வு பெற்று நவபாரத் டைம்ஸ்  முதல் பெண் அரசியல் நிருபரானேன். அப்பொழுது நான் மஹாராஷ்ட்ரா அரசியல் மற்றும் அரசியல்வாதிகளை நெருங்கி நடுநிலையுடன் நோக்கினேன் .சோதித்தேன்.அதிகமாக எழுதவும் செய்தேன் .ரேம் பாவூவின் அரசியல் பயணத்திற்கு நான் சாக்ஷி யாக  இருக்கிறேன்.
அவருடைய தோற்றம் 1978இல் எப்படி என் மனதில் பதிந்ததோ அப்படியே இன்றும்  உள்ளது.  இவ்வளவு உறுதி ,திடல்,எண்ணங்களில் சமர்ப்பணம் ,எண்ண ஓட்டங்கள்முதலியவை குறைந்த அரசியல் தலைவர்களிடம் தான் காணக்கிடைக்கும். அவருடைய ஆளுமையின் சிறப்புகள்  பற்றி எழுதுவதும் சொல்வதும் மிகவும் கடினம். அவைகளை உணர்வதும் அறிவதும் அவசியமாகும். சரைவேதியில் அவருடைய ஆளுமையின் நேரான எளிய அம்சங்கள் மற்றும் வாழ்வின் மதிப்புகள் காணக்கிடைக்கின்றன. கசப்பான அனுபவங்களை  நினைவு  படுத்துவதை அவர் உசிதமாகக் கருதவில்லை .ராம்பாவூவின்  அரை நூற்றாண்டு வாழ்க்கைப்பயணம் நேர்மறையானதும் தூய்மையான அரசியலின் கண்ணாடியாகும் .

சரைவேதியின் எனது மொழி பெயர்ப்பு எனக்கு இனிய அனுபவங்களை சுருட்டிவைப்பதுபோன்று இருந்தது.இன்று அரசியலில் நம்பிக்கை இல்லாமல் போனபோது ஸ்ரீ நாயீக்கின்  வாழ்க்கைக்கதை  நமக்கு நம்பிக்கைத்தருவதாக அமைந்திருக்கிறது. இப்படித்தூய்மையானவர்களும் அரசியலில் இருக்கிறார்களா !என்று மனம் வியக்கிறது.இன்று  சகதியில் இருந்து கல்லாக்கிக் கொண்டிருக்கும் அரசியல் நெஞ்சைப் பிளந்து நம்பிக்கை முளை கிளம்பச் செய்யும் நாணயமுள்ள தலைவர்கள் இன்று நமக்குத்தேவை.
ராம்பாவூவின்  வாழ்க்கை புதிய தலைமுறையினருக்குத்
  தூய்மையான அரசியலில்  நம்பிக்கை கொடுக்க முடியும்.  இந்த மொழிபெயர்ப்புப் பணி  எனக்குக்  கிடைக்கவில்லை என்றால் 
இவ்வளவு நுண்ணிய முறையில் நான் படித்திருக்கமாட்டேன். ஒரு தலைவரின் வாழ்க்கையின் நேர்மறை மற்றும் வாழ்க்கையின் மதிப்புகளை அறியும் வாய்ப்பை நழுவ விட்டிருப்பேன். அந்நூலின் மூலம் மராத்தியில் இருந்து ஹிந்தி நூலின் மொழி  ஓட்டத்தை
எளிய மற்றும் இயற்கையாக வைப்பதற்கு நான் முயற்சி செய்திருக்கிறேன்.
நன்றி,மேன்மைமிகு ராம்நாயீக் ஜீ !உங்கள் நூலின் ஹிந்தி மொழிபெயர்ப்புக்காக என்னை த்தேர்ந்தெடுத்ததற்கு  நன்றி. இந்தப்பணி அனுபவத்தின் என் உலகத்தை  மேலும் செழிப்பாக்கியிருக்கிறது.
                                                                      குமுத் சங்கவி சாவரே
                                                                முன் அரசியல் ஆசிரியர் ,
                                                                நவபாரத் டயம்ஸ் ,மும்பை .

பொருளடக்கம்
தூங்கும் தொப்பிக்காரனின் பாடம்

நல்லுணர்வும் அன்பின்  ஆழ்கடலும் --2

தங்குமிடம் தேடுகிறேன்

வாழ்க்கை மாற்றத்தின் திருப்பம்

தொழுநோயாளிகளுடன் இணைந்த  கம்பி

மீனவர்களுடன் நட்பு

பெண் நண்பர்களுடன் மூன்று தலைமுறை சேர்க்கை

பெண்கள் வசதிக்காக போராட்டம்

சட்டமன்ற உறுப்பினராக --1
சட்டமன்ற உறுப்பினராக --2

ஜனதா கட்சியுடன் சுற்றுலா

சுதந்திரப்போராட்ட வீரர்  சாவர்க்கரின் தூண்டுதல்

பா ஜ பா யுகம்  ஆரம்பம்

அறிதுயில்   நிலை சுற்று

பாராளுமன்ற கூடாரம் --1
பாராளுமன்ற கூடாரம் -2

புற்றுநோயின்  பிடியில்

மீண்டும் ஹரி ஓம்

உள்ளூரில் இருந்து  சிவப்புவிளக்கு வரை
ரயிலுக்கு முன் ‘சிவப்புவிளக்கின்  பெருமை

வெளிநாட்டுப்பயண அனுபவம்

பெட்ரோலியத்துறையின்  பொற்காலம்
கருப்புத்தங்கத்தால்  எழுதப்பட்ட புதிய கதைகள்
பரப்புதல் ஆரவாரம்
தோல்வியிலும் உடன் இருந்த தோழர்கள்
தேர்தலுக்கு  முற்றுப்புள்ளி

முன்னோக்கிச்செல்
வணக்கம் . பெண் அடிமை


கற்பு முதல் கர்ப்பத்தடைவரைபத்துஅத்தியாயங்கள்.

கற்பு  என்பது  பெண்களுக்கு மட்டுமா ?ஆண்களுக்கு வேண்டாமா ?

ஒரு பெண் அனைத்து அடிமைத்தனத்தின்  கொடுமைகளை சகித்து
வாழ்வது “கற்பு “ என்ற சொல்லுக்குத்தான்.

நமது நாட்டின் பெண் பார்க்கும் படலத்தில் “ அலைபாயுதே ராமா “என்று
பாடுவதில்லை /அலைபாயுதே கிருஷ்ணா என்றே பாடுகிறார்கள் .
ஆகையால் ஆண்கள் கற்பு என்பதை பெண்களே விரும்பவில்லை.

  கற்பு என்பது  புலன் அடக்கம் .அகல்யா சபிக்கப்பட்டாள் .அவளை அவள் கணவன் வேடத்தில் வந்து கெடுத்த  இந்திரன் சபிக்கப்படவில்லை .

இதை நாம் மேலை நாடுகளோடு ஒப்பிடும்போது சரி  மகாபாரத நாயகி குந்தி ,துரௌபதி ஓடு ஒப்பிடும்போது  கற்பு நிலை என்பதை  தெய்வீகமாக மறைத்து
மந்திரத்தால் பிறந்தார் .கணவன் சரியில்லை வாரிசு வேண்டும் என்ற நிலையில் இன்றைய விந்துத்தானம் ராமாயணத்திலும் உண்டு. விசித்திரவீரியன் கதையிலும் உண்டு.
இந்த கற்பை மேலைநாடுகளில் மதிப்பதில்லை என்றாலும்
அங்கு நியூ யார்க் நகரங்களில் தாய் தந்தை அறி சோதனை செய்ய வசதி ஏற்படுத்தியுள்ளனர்.
புலனடக்கம் தேவை .வருமானமில்லா பெண்கள் ஒழுக்கமின்றி சென்று
இன்னல் அடையக்கூடாது என்பதே கற்பிற்கு முக்கியத்துவம் .
தமிழ் நாட்டில் “
அண்ணன்  ,மனைவி அரை மனைவி ,தம்பி மனைவி முழுமனைவி “என்பது எந்த அளவில் உள்ளது என்று தெரியாது. 
இந்தகற்புஎன்பதுதனிப்பட்டபுலனடக்கத்தால்இருக்கவேண்டுமேதவிர
கட்டாயப்படுத்தமுடியாது யதார்த்தமாககேட்டுபதார்த்தமாக  கொடுப்பவர்களையாரும்தடுக்கமுடியாதுஎன்றேமுடிக்கிறார்
வள்ளுவரும்வாசுகியும்இருந்தபெண்ணடிமைத்தனத்தை  பெரியார்ஏற்கவில்லை.
  காதல்என்பதுஇயற்கைநிலை. அதுஇருத்தலைபக்ஷமாகவும்இருக்கலாம். ஒருதலை பக்ஷமாகவும்இருக்கலாம் .அந்தஉன்னதக்காதல்   வேறு.காமம்வேறுஎன்கிறார் 
காதலை உணர்ந்தவர்கள் காமவாசபடுவதில்லை அறிவியல்ஆராய்ச்சியில் காதல்கொண்டவர்களுக்கு  பெண்ணாசைஇருப்பதில்லை.

திருமணத்திற்குப்பின்  மனமும்உடலும் மகிழ்ச்சிஅடையவில்லைஎன்றால்திருமணவிடுதலை விவாகரத்து வேண்டியதே

விவாகரத்து, விதவை   மறுமணம்தவறில்லைஎன்பதைஇப்பொழுதுநடைமுறையில்காண்கிறோம்
விபச்சாரம் என்பதுதொழில் . இந்தபொதுமகளிர்   என்பதுஅரசர்கள்அந்தப்புரத்தில்பணக்காரர்களும்அடையமுடியும் .
வாடகைத்தாய் என்பதுதியாகம்என்பதைவிபச்சாரப்பெண்களை  உயர்வாகஏற்பதில்லை.ஆண்கள்தேடிச்சென்றுபணம்கொடுத்துமகிழ்ச்சி.காரணம் அடங்காமை. இதில்ஆண்களைக்குற்றவாளியாகசமுதாயம்ஏற்பதில்லை
மிகக்கொடுமை  பால்யவிவாகத்தில்   ஒருவயதுள்ளபெண்குழந்தைகளையும்விதவைகளாககொடுமைப்படுத்தியது தான்.
இந்த நூல்எழுதும்போது    கிட்டத்தட்ட27   லக்ஷம் விதவைகள் இருந்தனர்
இப்பொழுது   இந்தநிலைமாறி    விதவைகள்அடையாளம்தெரியாதஅளவிற்குவளம்வரும்சீர்திருத்தம்.ராஜாராம்மோஹன்ராய்  போன்றோராரால்மாறிஏற்றம்பெற்றுள்ளது.

சொத்துரிமைஎன்பதில்எனக்குபெரியார்கருத்தில்சற்றேஎதிர்எண்ணம்
இப்பொழுது பெண்கள்அதிகம்சம்பாத்திக்கின்றனர். சமமாகபடிக்கின்றனர்
இருந்தாலும் வரதட்சிணைதிருமணசிலவுகள்நகைஎனஅனைத்தும்
பெண்ணின்தாயார்தந்தையார்செய்கின்றனர் திருமணத்திற்கேபலலக்ஷங்கள்  சிலவுசெய்து    பின்னர்சொத்திலும்பங்குஎன்பதுஎப்படி?
இன்றையகாதல்திருமணங்கள்கூடபெற்றோர்ஏற்று  சிறப்பாகநடைபெறுகிறது
இந்தசொத்துரிமை வரதட்சிணைஇன்றிதிருமணம்எளிதாகசெய்துகொண்டவர்களுக்குமட்டுமேசரி.
கர்ப்பத்தடைஎன்பது குரான்பைபிள்வேதம்போன்றவைமிகப்பெரியபாவம்என்றாலும்  மக்கள்கருச்சிதைவைபெரியதவராகக்கருதவில்லை .குடும்பக்கட்டுப்பாட்டையும்அரசுஊக்குவிக்கிறது.
பெண்கள்விடுதலைக்கு ஆண்மைஅழியவேண்டும்என்பதைஇன்றுஊடகங்கள்,திரைப்படத்துறைநீலப்படம் சரியாகசெய்கிறது.பலன்கள்ளக்காதலனுடன்சேர்ந்துகணவன்படுகொலை.
மக்களைக்கொன்றதாய் கள்ளக்காதலனுடன்உல்லாசம் தடை

இப்பொழுது இந்தசெய்திகள்அதிகம் .பெரியாரின்பெண் இப்பொழுது   கருவாகிஉருவாக்கிவிட்டாள் . குழந்தைகள்தான்பாவம்.

     Sent नाईक चरौती  --१

    नाईक चरौती  --१


முன்னோக்கிச்செல் --1

பழைய  இலக்கியங்களின் பொன்மொழிகள் வாழ்கைக்குத் தகுந்த தத்துவங்களை சொல்லி இருக்கின்றன.
ஒருமனிதனின் ஆன்ம  முன்னேற்றத்திற்கு
  ஞானம் அளிப்பதற்காக  இந்திரன்
  மனிதனாக அவதரித்தான் என்று ஐத்ரேயரின் பொன்மொழி
  ஓரிடத்தில்  எடுத்துக்காட்டி  இருக்கிறது.
நல்ல  பாக்கியத்தின் அதிகாரியாக  வேண்டுமானால்                                                                                                                                                        இடைவிடாமல் சென்றுகொண்டே இருக்கவேண்டும் என்று இந்திரன் சொல்கிறார் ----

    ஆஸ்தே   பக் ( bhag ) ஆசீனஸ்ய
    உர்த்வம்  திஷ்டதி திஷ்டதஹ:

     ஷேதே   நிபத்ய மானஸ்ய
    சராதி  சரதோ   பகஹ  ( bhagah )!
  சரைவைதி !  சரைவைதி!!

  உட்கார்ந்திருக்கும் மனிதனின் பாக்கியமும் உட்கார்ந்துவிடுகிறது.
நின்றுகொண்டிருக்கும்  மனிதனின் பாக்கியம்  வளர்ச்சியை நோக்கித் திரும்புகிறது .தூங்கும் மனிதனின் பாக்கியமும் தூங்கிவிடுகிறது.
ஆனால் சென்று கொண்டிருப்பவனின் பாக்கியம் ஒவ்வொரு நாளும் முன்னேறுகிறது.
அதனால் நீங்கள்
சென்றுகொண்டே இருங்கள் ! சென்றுகொண்டே இருங்கள் !!

சரண்வை  மதுவிந்ததி
சரண்ஸ்வாதுமுதும்பரம் .
ஸூர்யஸ்ய  பஷ்ய  ஷ்ரேமாணம்  யோ ந  தந்த்ரியதே  சரஷம் .
  சரைவைதி!  சரைவைதி I I 


தேனீக்கள்    சு ற்றி  சுற்றித்  தேனை    சேமிக்கின்றன.

பறவைகள் இனிய பழங்களை  சாப்பிடுவதற்காகப்
  பயணம் செய்துகொண்டே இருக்கின்றன.

சூரியன் தூங்குவதே  இல்லை ,சென்றுகொண்டே இருக்கிறது.
அதனால் அது உலகத்திற்கு வணக்கத்திற்குரியதாகிறது .
அதனால் மனிதா !  நீயும் சென்றுகொண்டே இரு .
+++++++++++++++++++++++++++++++++++++++++

பழைய  இலக்கியங்களின் பொன்மொழிகள் வாழ்கைக்குத் தகுந்த தத்துவங்களை சொல்லி இருக்கின்றன.
ஒருமனிதனின் ஆன்ம  முன்னேற்றத்திற்கு
  ஞானம் அளிப்பதற்காக  இந்திரன்
  மனிதனாக அவதரித்தான் என்று ஐத்ரேயரின் பொன்மொழி
  ஓரிடத்தில்  எடுத்துக்காட்டி  இருக்கிறது.
நல்ல  பாக்கியத்தின் அதிகாரியாக  வேண்டுமானால்                                                                                                                                                        இடைவிடாமல் சென்றுகொண்டே இருக்கவேண்டும் என்று இந்திரன் சொல்கிறார் ----

    ஆஸ்தே   பக் ( bhag ) ஆசீனஸ்ய
    உர்த்வம்  திஷ்டதி திஷ்டதஹ:

     ஷேதே   நிபத்ய மானஸ்ய
    சராதி  சரதோ   பகஹ  ( bhagah )!
  சரைவைதி !  சரைவைதி!!

  உட்கார்ந்திருக்கும் மனிதனின் பாக்கியமும் உட்கார்ந்துவிடுகிறது.
நின்றுகொண்டிருக்கும்  மனிதனின் பாக்கியம்  வளர்ச்சியை நோக்கித் திரும்புகிறது .தூங்கும் மனிதனின் பாக்கியமும் தூங்கிவிடுகிறது.
ஆனால் சென்று கொண்டிருப்பவனின் பாக்கியம் ஒவ்வொரு நாளும் முன்னேறுகிறது.
அதனால் நீங்கள்
சென்றுகொண்டே இருங்கள் ! சென்றுகொண்டே இருங்கள் !!

சரண்வை  மதுவிந்ததி
சரண்ஸ்வாதுமுதும்பரம் .
ஸூர்யஸ்ய  பஷ்ய  ஷ்ரேமாணம்  யோ ந  தந்த்ரியதே  சரஷம் .
  சரைவைதி!  சரைவைதி I I 


தேனீக்கள்    சு ற்றி  சுற்றித்  தேனை    சேமிக்கின்றன.

பறவைகள் இனிய பழங்களை  சாப்பிடுவதற்காகப்
  பயணம் செய்துகொண்டே இருக்கின்றன.

சூரியன் தூங்குவதே  இல்லை ,சென்றுகொண்டே இருக்கிறது.
அதனால் அது உலகத்திற்கு வணக்கத்திற்குரியதாகிறது .
அதனால் மனிதா !  நீயும் சென்றுகொண்டே இரு .

No comments: