Saturday, September 11, 2021

பாரதியாரின் நினைவுகள்

 பாட்டுக்கொரு புலவன் பாரதி.

முண்டாசு க்கவிஞன்
முக்காலமும் உணர்ந்தவன்
தமிழுக்கு அவன் படைப்புகள்
அழியா நினைவுகள்.
ஒற்றுமை க்கு ஓர் பூனைப்பாட்டு.
அறிவு ரைக்கு ஒரு பாப்பா பாட்டு.
ஆனந்தத்திற்கு ஆடுவோமே பள்ளு பாடுவோமே.
ஒளி படைத்த கண்ணிணாய் வா.
வீரம் நாட்டுப் பற்று பெண் விடுதலை.
அனைத்தும் படைத்தான்.
அகவை 39ல் அகிலத்தை தன் துறந்தான்.
யானை தாக்கி இளமையில் இறந்து
விடுதலைக்கு முன்
ஆனந்த மாக பாட்டுப் பாடி
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று"
வறுமை,
மறைந்து வாழும் நிலை
என்ன சாஹசம் .
தேசப்பற்று--
"பாரத நாடு பழம் பெரும் நாடு நீரின் புதல்வர்
இந்நினைவகற்றாதீர்".
ஆயிரம் உண்டெங்கள் ஜாதி
இதில் அந்நியர் புகலென்ன நீதி."

No comments: