இறைவணக்கம்.
மனிதனின் பிறப்பில்
இன்பம் அதிகமா?
இன்னல் அதிகமா?
இறைவன் அவதாரமே
இன்னல் படுவதற்கே.
பிட்டுக்கு மண் சுமந்து அடிபட்ட சிவன்.
ராம் கஹானி சுனானா என்ற மரபுத் தொடர் ஹிந்தியில் பொருள்
தன் சோகக் கதை சொல்லுதல்.
தர்ம யுத்த குருக்ஷேத்திரம்
முடிவு சோகமே.
ஹரிச்சந்திரன் கதை படித்து சத்யமே ஜயம் என்று சத்தியத்தை பின் பற்றுபவர் எத்தனை?
அஸ்வத்தாமா குஞ்சரஹ துரோணர் வதம் தர்மமா?
கர்ணன் நிராயுத பாணி மரணம் நியாயமா?
ஜயத்ரத் மரணம் கௌரவர் சார்பில் .
பாண்டவர் சார்பில் நீதிக்குப் புறம்பாக
துர்யோதன் தொடையில் அடித்து மரணம்.
சூதாட அழைத்தாலும் சென்றது தர்மர் தவறு. மனைவியை வைத்து சூதாடியது தவறு.
மனித ஜன்மமே தவறுகள் செய்வதே.
அருணகிரி நாதர் ஆரம்ப தவறு
மன்னிக்கப் படுகிறது.
வால்மீகி மன்னக்கப் படுகிறார்.
பொண்டாட்டி தாசன் துளசி தாசர்.
இவர்கள் மஹாகவிஞர்கள்.
கண்ணதாசன் நாத்திகர்.
ஆஸ்திகரானதும் அவர் புகழ் ஓங்கியது.
இறைவன் திருவிளையாடல் புரியாத புதிர்.
No comments:
Post a Comment