Monday, November 24, 2014

वन के वृक्षों का अवलोकन करने के लिएआपको उससे थोड़ी दूरी बनानी होगी या ऊंचाई से निरखना होगा

மனநிலை குன்றிய உலகம்

பைத்தியக்கார உலகம்.


   உங்களுக்கு இந்த உலகில் வாழ்வது எப்படி இருக்கிறது? கடினமாகவா,சரியாகவா

,உத்தமமானதகவா அல்லது தகுதியானதாகவா?

உங்களுக்கு இதைப்பற்றி  சிந்திக்க சந்தர்ப்பம் கிடைக்காமல் இருக்கலாம்.

இந்த உலகம்  பைத்தியக் காரத்தனமாது.

சில சமயம்  தன்  பைத்தியத்தின் ஒரு எல்லை வரை அழகாகத் தோன்றுகிறது.

சிலசமயம் அழகின் எல்லைவரை பயித்தியக்காரத்தனமாக இருக்கும்.

அது பைத்தியமாகவே இருக்கிறது.

ஒருக்கால் இந்த பைத்தியமாக  இருப்பதே ,நமது நோக்கில் அற்புதமாகவும் ,

வளர்ச்சி கொடுப்பதாகவும் ,அழகாகவும் இருக்கிறது.

இவ்வுலகம் நமக்கு கட்டாயமும் அவசியமாகவும் தோன்றுகிறது

ஆனால் .இந்த பைத்தியக்கரத்தனம்  மறைந்துள்ளது
 
ஒவ்வொருவருடத்திலும்  இதன் பகுதி ஐக்கியமாகயுள்ளது.

 
   ஒருகாலத்தில் ஒரு அரசன் இருந்தான்.  தன் குல  வழக்கப்படி  அரசு ஜோதிடரிடம்  ஆரம்பாகும் 

புத்தாண்டு பலன்  பற்றி அறிய விரும்பினான்.

 ஜோதிடரும் அட்டவணையைச் சோதித்து பார்வை யிட்டு

புத்தாண்டு சங்கடங்களால் நிரம்பி உள்ளது

 என்று தன் கவலையை வெளியிட்டான்.

மேலும்  மன்னனின் ராஜ்யத்தில் வரும் ஆண்டில் விளையும் உணவு தானியம்

மற்றும் பழங்கள் சாப்பிடுபவர்கள்  மனநிலை குன்றியவர்களாகிவிடுவார்கள்

என்றும் சொன்னான்.

   ராஜா குழப்பம் அடைந்தான். கவலைப்பட்டு  அரசன்   ஜோதிடரிடம் கேட்டான் --அந்த மனநிலை 

குன்றியவர்கள் நிலை எப்படி இருக்கும்.?  இந்த மனநிலை குன்றிய நிலை எப்பொழுது  வரை 
  
நீடிக்கும்.?  அதற்கு ஜோதிடர் ,--இந்த தொற்றுநோய் தீரும் பொழுது ஒருவர் மற்றொருவரை 

பின்பற்றத்தொடங்குவர். இந்த சுற்று சக்கரம் போல் தொடர்ந்து சுழலும் .இந்த நோய் ஒரு தலை 

முறையிலிருந்து மற்றொரு  தலைமுறை க்குஇடப்பெயர்சி  ஆகிவிடும். இதற்கு சிகிச்சை கிடையாது.

என்றார்.
       ராஜா தன்  மிகவும் ஞானமும் அறிவுத்திறனும்  புகழும் பெற்ற

 முதலமைச்சரை  அழைத்துவரச்செய்தான். முதலமைச்சரிடம் ஜோதிடரின்


எதிர்கால குறிப்பை சொல்லி  அந்த நோயிலிருந்து தப்பிக்க வழி கேட்டான்.

 மந்திரி  சற்று யோசித்து ,பிறகு வருத்தமும் உற்சாகமும் கலந்து  கூறினான்:-
-
நமக்கு மூன்றாண்டுகளுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் நமது உணவு

சேமிப்புக் கிடங்கில் உள்ளன .நீங்கள் ஆட்சி செய்வதால் பைத்தியமாக

விரும்பமாட்டீர்கள். உங்களுக்கு ஆலோசகராக இருப்பதால் நானும் மனநிலை

 குன்றியவனாக ஆகக் கூடாது.நம் இருவருக்கும் போதுமானா உணவு

உள்ளது.  ஆகையால் நாம் இருவரும் வரும் கிடங்கில் உள்ளஉணவு அருந்தி

புத்தாண்டில் விளையும் உணவுப்பொருட்கள் சாப்பிடாமல் சமமாக மனதை

வைத்துக்கொண்டால் விரைவில் இந்த பிரச்சனைக்கு  விடையும்  தேட

முடியும்.
      அரசன்  இது நியாயமாகாது என்றான்.நான் என்னை பாதுகாத்து

மற்றவர்களை மன நிலை குன்றியவர்களாக்குவது எப்படி நிகழும்.இத்தனை

பைத்தியக்காரர்களை சமாளிப்பது மிக்கக் கடினம்.இதை நீ கற்பனை செய்து

பார்த்தாயா?நாம் மக்கள் சாப்பிடும் உணவை சாப்பிடுவதுதான் நல்லது.

நாமும் பைத்தியமாகிவிடுவோம்.

அப்பொழுது இது நம்மை பாதிக்காது.நாமும் மற்றவர்களைப்போல் மாறனால்

நாம் அவர்களைப் பார்த்து கவலைப்பட தேவை இல்லை.

ஆனால் இதற்கு முன்னால் நாம் நம் தோளில்  "நாங்கள் பைத்தியம் " என்று

 பச்சை குத்திக்கொள்ளவேண்டும்.

இது நமக்கு   நினை வுபடுத்திக்கொண்டே இருக்கும்

-நாம் நமது மன நிலையை சரிவிகிதமாக்கி  மீண்டும் பெறவேண்டும்.


 நான் என்னசொல்ல விரும்புகிறேன் என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.உலகின் செயல்பாடுகள் சாதாரண மாகத் தோன்றும்.இப்படி இருப்பதற்கு ,நாம் எல்லோரும் ஒரே விதமான உணவை சாபிட்டுக்கொண்டிருப்பதே . நீங்கள் உங்கள் புஜங்களில் பச்சை குத்திய வாக்கியத்தின் உண்மைநிலை அறியும் வரை நீங்கள் உங்களின் சிறப்பையும் மகிமையையும் சுட்டிக்காட்ட முடியாது.உங்கள் வாழ்க்கை உங்களை நினைவுப்படுத்துகிறது. எழுப்ப குரல் கொடுக்கிறது.சிலர் இந்த குரலைக் கேட்டு தன் வாழ்வின் கடமைகள் மற்றும் ஆசைகளை   சமன்செய்து பெற்றுக்கொள்கின்றனர்.ஆனால் அதிகமானவர்கள் வாழ்வின் இந்த அழைப்பை செவிமடுப்பதில்லை.இந்த வாழ்க்கை சிலருக்கு ஓடும் தண்ணீர் போல் தோன்றக்கூடும்.சிலருக்கு நிகழும் நிகழ்வுகள் ,கடந்த காலம்,அல்லது தானே நடத்தும் எண்ணமாகத் தோன்றுகிறது . என்ன செய்கிறோம்?ஏன் செய்கிறோம் ? என்பது பலருக்குப் புரிவதில்லை.அவர்களுக்கு தகுதியான .தகுதியற்ற வேறுப்பாட்டை யார் கூறினார்கள்?அவர்களின்  அறிவின் ஊற்று என்ன?எந்த அடிப்படையில்? இந்த  தானாக நடக்கும் ஒழுங்குமுறையை ,அவன் பின்பற்றும் முறையை யார் அமைத்தார் ? இதை எல்லாம் அறிய சற்றே தங்கவேண்டியதாகிறது .காட்டு மரங்களை அறியசற்று சிந்திக்க வேண்டியதாகிறது.
 ஒருமுறை ஒரு ரஷ்ய சிந்தனையாளர் தன் சீடனான பீ.டி .ஒஸபென்சகியிடம்
மூன்றுமாதம் மௌனமாக இருக்கும்படிகூறினார்.ஒச்பென்சகி இவ்வாறு  செய்த பின் 
அவரை கடைத் தெருவிற்கு அழைத்துச் சென்றார். ஒச்பென்சகி மிகவும் ஆனந்தமாக இருந்து தனக்குள்ளே யே ஆழ்ந்திருந்தார்.அவர் அக்கம் பக்கத்தில் பார்த்து தன் குரு குர்ஜியேபிடம்கூறினார்-இந்த முழு உலகமும் மனநிலை குன்றி உள்ளதாகத் தேர்கிறது.பைத்தியக்காரர்கள் விற்கிறார்கள் .பைத்தியக்காரர்கள் வாங்குகிறார்கள்.பேருந்து ஓட்டுபவரும் பைத்தியமே அதில் செல்பவர்களும் பைத்தியங்களே.இங்கே ஒரு பைத்தியம் மற்றொரு பைத்தியத்திடம் பேசிக்கொண்டிருக்கிறது.இது ஒரு மிகப்பெரிய மனநிலை குன்றிய கூடம்.நான் இந்தக் கூட்டத்தில் நிற்க முடியாது என்னை இங்கிருந்து தயவு செய்து அழைத்துச் செல்லுங்கள்.

 நீங்கள் தங்களையே கொடுக்க மௌனமும் தனிமையும்  இந்த இரண்டும் தான் மிக உத்தமமான பரிசு என்பதை என் அநுபவத்தால்  கூறமுடியும்.உங்களுக்கு உலகம் முன்பு இருந்தது எப்படியோ அப்படியே தோன்றும் என்று நம்பிக்கை தருகிறேன்.ஹிமாலயத்தின் அமைதியில் பல மாதங்கள் கழித்த பிறகு இந்த சாமான்யமான உலகில் என்னை ஈடுபடுத்த பல மாதங்கள் ஆகியது.அங்கு ஒரு தெய்வீக மாற்றம் உங்களை பண்படுத்துகிறது.உங்களின் நான்கு பக்கமும் விரிவடைகிறது .மேலும் உங்கள் தீயவைகளை நல்லவைகளாக மாற்றத் தொடங்குகிறது. ஏனென்றால் தனிமை உங்களுக்கு ஒரு தேக்கநிலை உண்டாக்குகிறது.அங்கிருந்து நீங்கள் உங்களையே பார்க்க முடியும். சிந்திக்கமுடியும்.நீங்கள் எதை மிகவும் சிறந்த முறை என்று அறிந்துள்ளீர்களோ அவை எல்லாவற்றையும் செய்யமுடியும்.
மக்கள் உங்களைப் பைத்தியம் என்றால் அவர்களே பைத்தியமாகலாம்.நீங்கள் அங்கேயே இருங்கள். உங்கள் சத்தியத்தை நீங்களே தேடுங்கள் .

शांति।
स्वामी - See more at: http://hindi.omswami.com/2013/04/blog-post.html#sthash.vtnAA1a8.dpuf

No comments: