வணக்கம்.
எனது சொந்த படைப்பு.
முதல் படைப்பு.
கவிஞர்கள்
கலைக்கூடத் தில்
இணைந்த நாள்.
கவிஞானா ? நானா?
ஏன்? கூடாது.
முயற்சி திருவினையாக்கும்.
முயல்கிறேன்.
10-6-2021.
வயலும் வாழ்வும்
வையகத்தில்
நாகரீக வளர்ச்சியின்
முதல் மைல் கல்.
ஓடி ஓடி
வேட்டை யாடி
அநாகரீக
ஆதங்கமான
வாழ்கைக்கு
முற்றுப்புள்ளி.
தங்கச்சுரங்கம்
தரணியின்
வெளிப்பகட்டு.
எதைத் தொட்டாலும்
தங்கம்
வரம் பெற்று
வயல் தந்த உணவு
தொட்டு அன்பு மகளைத் தொட்டு அனைத்தும் தங்கம்.
பசியோடு
வாடிய
கதை
வயலும் வாழ்வும்
பின்னிப் பிணைந்த
கதை.
பசி வந்திடப்
பத்தும் பறந்து விடும்.
பசி போக்க
மம்மர் அறுக்கும் மருந்து.
வயலும் வாழ்வும்.
வள்ளுவர்
கூறிய வயலும் வாழ்வு
எந்தத் தொழில் செய்தாலும்
உழவே தலை.
வயலும் வாழ்வும்
நான் கண்ட
இளமைப் பசுமை.
இன்று காண்பது
கட்டிட வரிசை.
எதிர் கால
சந்ததிகள்
பாலைவன நாட்டில்
பசியால் துடிப்பார்களே.
வயலும் வாழ்வும் நிறைந்த
சிற்றூர் வாழ்க்கை
பட்டிணமாக்கல்
பட்டிண விரிவாக்கம்
பாலை வனமாக்குமோ
என்றோர் அச்சம்.
ஏரிகளில்
அடுக்கு மாடி
குடியிருப்பு கள்.
அடுக்குமா?
வயலும் வாழ்வு
மீண்டும்
உயிர் பெற
எதிர் காலத்தில்
நெற்களஞ்சியம்
தஞ்சை தழைத்திட
வயலும் வாழ்வும்
புரட்சி அவசியம்.
வைரம்
வையகப் பசி
போக்காது.
வயலும் வாழ்வும்
ஆரோக்கிய மளிக்கும்.
பசி பக்திக்கு இடையூறு.
புத்தரின் அனுபவம்.
ஆக்கியோன்
பழனி சே. அனந்த கிருஷ்ணன்.
ஹிந்தி ஆசிரியர் சென்னை.
No comments:
Post a Comment