Sunday, April 5, 2015

நேர்மையுடன் செய்வதே.

அன்பு  அதிகம்,

அஹம்பாவம் இல்லாமை ,

அகிலத்தில் இருந்தாலும்  ,

பற்றற்ற  தன்மை ,

பரோபகாரம் ,

 தானும்  வாழ்ந்து ,

மற்றவர்களையும்   வாழ வைப்பதும் ,

தானமும்  தர்மமும் செய்வதும் 

ஆன்மிகம்.

ஆனால் , இன்றைய ஆன்மிகம் 

ஆடம்பரம் நிறைந்ததாகவும் ,

பரிகாரம் ,ஹோமம் யாகம் ,

காணிக்கை ,கனகம் ,வெள்ளியில் 

பாவங்கள் போகும் என்றும் 

வணிக நோக்கில் சென்றுகொண்டிருக்கிறது.

இன்றைய  ஆடம்பர பக்தி,

குறுக்குவழி தரிசனம் ,கட்டண  தரிசனம் 

முக்கியஸ்தர் முன்னுரிமை என்பது 

நமது ஆலயங்களில்  தொன்று தொட்டு வருவது.

வேறுபாடுகள் ,வேற்றுமைகள், விருப்பு 

,வெறுப்புகள்  இருந்தாலும்  ,

ஆலயங்களில்  பக்தர்கள் கூட்டம் ஈர்ப்பது 

ஆண்டவனின்   அற்புதம்.

ஆலயங்கள் சென்றால் ஆத்ம திருப்தி.

ஆத்மா நம்பிக்கை .ஆத்மானந்தம்.

ஆனால், இன்றைய பக்தியில் 

ஒரு சுற்றுலா வேகமே காணப்படுகிறது.

ஆழ்ந்து அமர்ந்து ப்ரார்த்தனை குறைத்து வருகிறது.

காரணம்  வேலைப்பளு .
அருள் /பொருள் இரண்டுமே

 அத்தியாவசியமாக 

உணரும் காலம்.

அனைவருக்கும் முன்னேறும் வாய்ப்பு.

அனைவருக்கும்   கல்வி.

அனைத்து மக்களும் சுகம் /இன்பம் பெறவேண்டும் 

சர்வே ஜனா சுகிநோபவந்து --அந்த ஜபம் 

பலனளிக்க தொடங்கும் யுகம்.
இதில் மிகவும் அருள் பெற தேவை 

துன்ப மின்றி இன்புற்று வாழ ,

நேர்மை ,சத்தியம் ,கடமை ,கண்ணியம்,
புலனடக்கம்.
இவ்வழியில் ஆண்டவன் அருள் பெற 

அவன் இட்ட பணியினை ஆழ்மனதுடன் 

நேர்மையுடன் செய்வதே.













No comments: