Monday, December 5, 2016

மனிதன் எதெல்லாம் சாதிக்கமுடியும்
என்று நினைக்கிறானோ
அதெல்லாம் சாதிக்கமுடியும்
என்பதில் ஐயமில்லை.ஆனால்
எண்ணித் துணிக கர்மம் என்பதைவிட
எண்ணுவதெல்லாம் உயருள்ளளாக இருக்கவேண்டும்.
எண்ணியவை ஏற்றமுடையதாக இருக்கவேண்டும்.
எண்ணுபவை சுயநலமின்றி பொதுநலமாக இருக்கவேண்டும்.
எண்ணுபவை பெண் .பொன் ஆசையாக இருக்கக்கூடாது.
எண்ணங்களுக்கேற்ற வளர்ச்சிக்கு ஆண்டவன் துணை இருப்பான்.
நான் இருந்த நிலையில் எனக்கு ஒருவேலை.மூன்றுநேர
சாப்பாடு.இருக்கவீடு.உடுக்க உடை. இந்த எண்ணத்துடன்
ஆழ்மன பிரார்த்தனை.
எனக்கு ஆண்டவன் அளித்தான்.
தமிழக ஹிந்தி போராட்ட காலத்தில்
ஹிந்தி தான் எனக்கு வாழ்க்கை என்ற நிலை.
என் தாயாரும் நானும் ஹிந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டோம்.
வறுமையிலும் மத்திய அரசின் உதவிபெறும் ஹிந்தி பிரச்சாரசபை
வகுப்புகள்.ஆண்டிற்கு ஒரு முறை மொத்தமாக பணம் வரும்.
என்று வரும் என்று தெரியாது.
இருப்பினும் முற்றிலும் இலவசமாக ஐந்துமணிநேரம்
என்று இல்லை வகுப்புகள் நடத்திவந்தோம்.
௧௦ ஆண்டுகள்.இறைவனை வழிபடுதல் ,வகுப்பெடுத்தல்.
இந்த நிலையில் ஒரு மழலைகள் பள்ளி துவக்கினோம்.
மிகக் குறைந்தகட்டணம்.ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆசிரியை.
மூன்றாண்டுகளுக்கு மேலாக அப்பள்ளியில் இருந்து வருமானம் இல்லை.
அப்பொழுதுதான் ஹிந்தி ஆசிரியர் பயிற்சிப்பள்ளி
மதுரை மஞ்சனக்காரத்தெருவில் துவங்க இருப்பதாக
ஹிந்தி பள்ளி ஆய்வுக்குவந்த மதுரை தக்ஷிண் பாரத ஹிந்தி பிரசார ச பை
அமைப்பாளர் திரு இ.தங்கப்பன் அவர்களும் ,திருச்சி செயலர்
எம்.சுப்ரமணியம் அவர்களும் கூறி என்னையும் பயிற்சி முடிக்க அழைத்தனர்.
என் மாமா கு.வே.நாகராஜன் அப்பொழுது சமயநல்லூர் பவர் ஹவுஸ் மின்
வாரியத்தில் பணியாற்றிவந்தார்.
அவர் எனக்கு ஊக்கமளித்து படிக்க கட்டணம் ,
உண்டி உறையுள் ஆகியவற்றிற்கு உதவிசெய்தார்.
பயிற்சி முடிந்த பின் பாண்டிச்சேரி சபை கிளையில் எட்டு மாதம் பணியாற்றி
ராஜினாமா செய்து பழனி சென்றுவிட்டேன்.
பிறகு ஒட்டன் சத்திரத்தில் கிறிஸ்தவப் பள்ளி டாக்டர் செரியன் ஆரம்பித்தார்.
அதில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன்.
பழனியில் இலவச ஹிந்தி வகுப்புகள்.
உழைப்பு.ஆத்மா திருப்தி. வருமானமில்லை
.
இதற்கிடையில் திருமணம்.பிரச்சனைகள்.
ஆனால் நான் ஹிந்தி ஆசிரியருக்கான பிரார்த்தனையுடன்
ஹிந்தி வகுப்புகள் இலவசமாக.
இறைவன் உதவினான்.
சென்னையில் அரசு உதவிபெறும் வெஸ்லி பள்ளியில்
ஹிந்தி ஆசிரியர் வேலை.
இந்த இன்னலுக்கு இடையில் முயற்சி.
ஹிந்தி பயிலவந்த ஹிருத்யராஜ் என்பவர்
தில்லி பல்கலைக்கழகம் நடத்திய அஞ்சல்வழிக் கல்வியில்
பி.ஏ.சேர வழி காட்டினார்.
பி.ஏ.படித்து ஹிந்தி ஆசிரியராக சேர்ந்தபொழுது
செல்வராஜ் என்ற ஆசிரியர் வெங்கடேஸ்வரா பல்கலைகழகத்தில்
எம்.ஏ,ஹிந்தி சேர வழிகாட்டினார்.
என்ப்ரார்த்தனையுடன் இறைவன் அருளும் முயற்சியும் இருந்ததால்
எம்.ஏ .தேர்ச்சி அடைந்த உடனேயே
எனக்கு ஹிந்து மேல்நிலைப்பள்ளியில்
முதுகலை ஹிந்தி ஆசிரியர் பணி.
ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி வேங்கடவனை தரிசிக்கும் வாய்ப்பு.
பள்ளி ஆசிரியர் சங்கம் ரூபாய் ௧௦ கட்டணத்தில் அழைத்துச்
சென்றது.வேங்கடவன் அருளை அனுபவித்து உணர்ந்து பிரம்மானந்தம்
அடைந்தேன்.
பள்ளியின் தலைமை ஆசிரியாராக ஒய்வு பெற்றேன்.
இதில் இறைவனின் முழு அருளும் எப்படி எனக்கு கிடைத்தது
என்பதை பள்ளி நிர்வாகமும் உடன் பணியாற்றிய ஆசிரியர்களும்
உணர்வார்கள்.
இறைவனின் பிரார்த்தனையால் என் எண்ணம்
என் குறுகிய வட்டத்தில் உயர் பதவி அளித்து உயர்த்தியது.
தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஹிந்தித் துறை ஆசிரியராக
இருந்து தலைமை ஆசிரியராக ஒய்வு பெற்றவர்கள்
எனக்குத்தெரிந்து நானும்.பி.எஸ். சந்திரசேகர்,எஸ்.எஸ்.வி.மே.நி.ஹிந்தி
ஆசிரியரும்.
என்னைப்போலவே அவரும் தில்லி பலகலைக்கழக அஞ்சல்வழி
பட்டதாரி.பி.ஏ .தேர்வு எழுதும் போது நண்பரானோம்.
இதுவும் வேங்கடவன் அருள்.
பிரார்த்தனை நம் எண்ணத்தை செயல் படுத்தும் என்பது
எனது வாழ்க்கை அனுபவம்.
நாம ஜபம் செய்யுங்கள்.கடமையைச் செய்யுங்கள்.
இறைவன் உங்கள் எண்ணங்களை செயல் படுத்துவார்.
உங்கள் வட்டத்தில் உயரலாம்.
உயர்ந்த எண்ணமாக இருந்தால்
உலகத்தில் புகழ் பெறலாம். நடிகர் ரஜினிபோல.
ஓம் நமச்சிவாய!ஓம் முருகா!ஓம் சாய் ராம்!ஓம் அச்சுதா!

No comments: