Thursday, August 16, 2018

அடல் பிஹாரி வாஜ்பாயின் கவிதை.

-அடல் பிஹாரி வாஜ்பாயி உயிர் பிரிந்துவிட்டது -
--அவர் கவிதை -
நாட்டிற்காக வாழ்ந்து நாட்டிற்காக முடிவதே அவர்
வாழ்வின் கவிதை
****************************************************
பாரதம் பூமியின்
ஒரு துண்டல்ல
உயிருடன் இருக்கும்
தேசீய மனிதன்
ஹிமாலயம்
இதன் தலை ,
காஷ்மீர்
இதன் கிரீடம் ,
பஞ்சாபும் வங்காளமும்
இதன் விசாலமான தோள்கள் .
கிழக்கு மேற்கு கரைகள்
இதன் தொடைகள்
கன்னியாகுமாரி இதன் பாதங்கள் .
கடல் இதன் பாதங்களைக் கழுவுகிறது.
இது சந்தன பூமி,
வணக்கத்திற்குரிய பூமி .
இது தர்ப்பண பூமி ,
அர்ப்பண பூமி .
இதன் ஒவ்வொரு
தொண்டனும் சங்கரனே .
இதன் ஒவ்வொரு
துளியும் கங்கை நீரே.
நாம் இதற்காகவே
வாழ்வோம் .
இதற்காகவே
மடிவோம்.
அடல் பிஹாரி வாஜ்பாயின் கவிதை
தமிழாக்கம் எஸ் .அனந்த கிருஷ்ணன் .
भारत जमीन का टुकड़ा नहीं,
जीता जागता राष्ट्रपुरुष है।
हिमालय मस्तक है, कश्मीर किरीट है,
पंजाब और बंगाल दो विशाल कंधे हैं।
पूर्वी और पश्चिमी घाट दो विशाल जंघायें हैं।
कन्याकुमारी इसके चरण हैं, सागर इसके पग पखारता है।
यह चन्दन की भूमि है, अभिनन्दन की भूमि है,
यह तर्पण की भूमि है, यह अर्पण की भूमि है।
इसका कंकर-कंकर शंकर है,
इसका बिन्दु-बिन्दु गंगाजल है।
हम जियेंगे तो इसके लिये
मरेंगे तो इसके लिये।

No comments: