Friday, August 27, 2021

வசந்தத்தை எதிர் நோக்கி

 சே.அனந்தகிருஷ்ணன். வணக்கம். 22-8-2021.

++++++++++++++++++++++++

வசந்தத்தை எதிர் நோக்கி.

   வசந்தா  அவள் அப்பா தர்க்கவியல் பேராசிரியரின்  அறிவு ரைகளை மீண்டும் மீண்டும் சிந்திக்கத் தொடங்கினாள். அவள் வாழ்க்கை இலையுதிர் காலமாகி விட்டதே. வசந்தா அழகு தேவதை.

 ஆறாம் வகுப்பில் இருந்தே அவளைச் சுற்றி 

 மாணவர்கள் கூட்டம்.

 இந்த திரைப்படங்கள் சின்னத்திரைகள் காட்டும் காதல் கதைகள். இவளின் மனம் படிப்பில் ஈடுபட்டாலும்  மனம் 

 எட்டாம் வகுப்பில் ஆரம்பித்த அந்த கலையரசனின் மீது கொண்ட காதல் கல்லூரி வரை நீடித்தது.

 கலை அரசன் அழகான ஆண்மகன். அறிவிலும் ஆற்றலிலும்  நடைந்தையிலும் உயர்ந்த வன். பணம் படைத்தவன்.

அவன் ஒரு நாள் தன் காதலை வெளிப்படுத்த ஆயத்தமாக இருந்த அவள் மனம் தாமதிக்காமல் ஏற்றது. அடிக்கடி சந்திப்பு.

 வயதற்கேற்ற ஒட்டுதல் உரசல்கள். தனிமையில் சந்திப்பு.  

ஒரு நாள் கலையரசன் வசந்தாவை  உடனடியாக சந்திக்க அழைத்தான்.

இவளும் ஓடினாள்.அங்கே அவன் மகிழ்ச்சியாக இல்லை.அகத்தின் அழகு முகத்தில் தோன்றியது.

இவள் முகமும் மாறியது.

வேகமான நடை மெது வாகமாறியது.

 மனதில் ஒரு கலக்கம்.

 வசந்தா! அவன் அழைத்தான். என்ன? என்றால். அவன் நான் மேற்படிப்பு க்காக வெளிநாடு செல்கிறேன்.

 படிப்பு முடிந்ததும்

 அங்கேயே வேலை கிடைத்துவிடும்.உன்னைப் பிரிந்து செல்வது தான் வருத்தமாக இருக்கிறது.

 நீயும்  கடவுச் சீட்டு பெற்று விடு. நான் படிப்பு முடிந்ததும் உன்னை அழைக்கிறேன். 

வசந்தா விற்கு  மிகவும் அதிர்ச்சி யாக இருந்து.

 கலையரசனை ஒருநாள் சந்திக்கவில்லை என்றாலே  கலை இழந்து விடுவாள்.  வேறு வழியின்றி  சரி, அங்கு போய் என்னை மறந்து விடாதே. ஒளி ஒலி அழைப்பில் தினமும் பேசவேண்டும்.

  என்னை மறந்து விடாதே.



 கண்களில் கண்ணீர் ததும்ப வீட்டிற்கு வந்தாள்.

 அவளின் அம்மா மகளின் முகத்தைப் பார்த்ததுமே அவளின் சோகத்தைப் புரிந்து கொண்டாள்.

 வசந்தா! ஏண்டி வருத்தமாக இருக்கே!

 அம்மா கேட்டதுமே அவள் கண்களில் நீர் ஆறாகப் பெருகிய து. முதல் முதலாக அம்மாவிடம் தன் காதல் விசயத்தை வெளியிட்டாள். பையன் யார்? என்று தெரிந்ததும்  அம்மா  , ஏண்டி, அது பணக்கார வீடு.

கலையரசனின்  அப்பா இப்போது தான் என்னிடம் அவன் வெளிநாடு செல்வதாகவும் அங்கேயே

 தங்கிவிடுவான் என்றும் கூறினார்.

  வசந்தாவின் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. அப்போது பக்கத்து வீட்டுக்காரர்ஓடி வந்தார்.  விசயம் தெரியுமா! நம்ம தொழிலதிபர் மகன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் மரணம்.

 வசந்தா மயங்கி விழுந்தாள்.

மயக்கம் தெளிந்ததும் தர்க்கவியல் பேராசிரியர் அவளுக்கு ஆறுதல் சொன்னார். உன் காதல் இப்படி ஆகிவிட்டது. இப்படி விபத்து நடக்கவில்லை என்றாலும்

 உனக்கு ம் அவனுக்கும் திருமணம் நடக்காது.

 முடவன் கொம்பு தன் தேனுக்கு ஆசைப்பட்டது போல் தான். நீ வேலைக்குச் செல்.

 கடமையாற்று.

காலப்போக்கில் உன் மனம் மாறும். நீ பட்டம் படித்தவள். பாண்டவர் வரப்போவதில்லை. அதற்காக நீ வருத்தப்பட்டு பயனில்லை.உன் மனம் மாறும்.

  வசந்தா தன் விதியை நினைத்து  வேதனைப்பட்டாள்.

 அவளுக்கும் ஒரு தனியார்  நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

  இரண்டாண்டில்  அவள் மனம் மாறியது. அவள் நிறுவனத்தில் பணியாற்றி ய கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி மீது முதலில் அனுதாபமும் பின் காதலும் ஏற்பட்டது. அவள் வாழ்க்கையின் பட்டமும் துளிர்த்தது. வசந்த் காலமாக மாறியது.

 அப்பாவின் அறிவுரை அரங்கேறியது.

 மாற்றுத் திறனாளிக்கு வாழ்க்கை அளித்து அவன் வாழ்விலும் 

வசந்தமளித்து  ஆனந்தமாக வாழ ஆரம்பித்தாள் வசந்தா.

No comments: