Saturday, April 21, 2018

ரஹீமின் ஈரடி

௧.


தருவர் ப்பல் நஹீன் காத் ஹை,சர்வர் பியத் ந  பான்.
கஹி ரஹீம் பர்காஜ் ஹித் ,சம்பத்தி சஞ்சஹி சுஜான்.



 ரஹீம்  சொல்கிறார் ---

  மரங்கள் தன்  பழங்களை  சாப்பிடுவதில்லை .

  நதி தன்னிடம் ஓடும் நீரை பருகுவதில்லை.


  மரங்களின் பழங்கள், ஆற்று நீர் மற்றவர்களின் பயனுக்காக.

அவ்வாறே   உத்தமர்கள், நல்லவர்கள்  மற்றவர்களின்

நன்மைக்காகவே   சொத்து சேர்க்கிறார்கள்.

    **********************
  ௨.  ஜோ கரீப்  பர்  ஹித்  கரை ,தே  ரஹீம் படே லோக் .

         கஹான் சுதாமாபாபுரோ,கிருஷ்ண மிதாஈ  ஜோக்.


 ரஹீம் சொல்கிறார் ---
 ஏழைகளுக்கு  நன்மை செய்பவனே பெரியவன் , உத்தமன்.
ஏழை  சுதாமா , அரசனான  கிருஷ்ணன் இருவரின் நட்பும்
 உயர்ந்தது.  மதுரா புரி  அரசன்  கிருஷ்ணன் ,
ஏழை  சோற்றுக்கு வழியில்லா சுதாமா இருவருக்கும்
பெருத்த வேறுபாடு அந்தஸ்தில்.
ஆனால்  நட்பு என்ற  வட்டத்தில் இருவரும் உயர்வு தாழ்வின்றி
ஒன்றாகினர்.  அதனால் கிருஷ்ணர் மிகப்பெரிய மதிப்புக்குள்ளான கடவுளாக விளங்குகிறார்.
*******************************
௩.  ரஹீமன்  வே  நர்     மர்  சுகே ,
ஜே கஹூன் மாங்கன் ஜாஹின்.
வுன்கே   பஹ்லே வே முயே ஜின் முக்ஹ நிகசத் நாஹீன் .

      ரஹீம் கூறு கிறார் ---

மற்றவர்களிடம் யாசகம் ஏதாவது உதவி கேட்பவர் கள்

இறந்து  விட்டார்கள்  என்றே பொருள்.
கேட்டும் இல்லை என்று சொல்பவர்கள்
கேட்பவனுக்கு  முன்பே  இல்லை என்று சொல்பவர்களும் இறந்ததற்கு சமம்.

 மற்றவர்களிடம் கேட்பவர்களும் பிணம் ,
கேட்டு இல்லை என்போரும் பிணம் .


திருவள்ளுவர் :--

இரந்தும்   உயிர்வாழ்தல்  வேண்டின் பரந்து
கெடுக  உலகியற்றியான்.


No comments: