Friday, December 26, 2014

தமிழில் இருந்து ஹிந்தி

தேசத் தந்தையே, தெருவோர மனிதர்களின் குரலைக் கேளுங்கள்
_/\_ (^) _/\_ (^) _/\_ (^) _/\_ (^) _/\_ (^) _/\_ (^) _/\_ (^) _/\_ (^) _/\_ (^)_/\_ (^)
ஒப்பனை முகங்களையே
பார்த்துப் பழகிவிட்ட எங்களுக்கு
உமது உண்மை முகத்தை 
அடையாளம் கண்டுகொள்வது
அவ்வளவு எளிதில்லைதான்,
கொஞ்சம் அவகாசம்
கொடுத்திட வேண்டுகிறேன்.


हे  राष्ट्रपिता!  सडकों के किनारे पर  के लोगों  की आवाज़  सुनिए.
        बने-बनाए अलंकृत चेहरों को देखकर 
        हम  आदि हो गए हैं.
तेरे  सच्चे चेहरे  का पता लगाना ,
नहीं आसान हमारे लिए.
   निवेदन  है ज़रा दें अवकाश। 

கனவுச் சினிமா
கட்அவுட்களின் காலடியில்
தமிழ்க்கவிதை மண்டியிட்டுத்
தவமிருக்கும் காலமிது,
தெருவோர மனிதர்களின் குரல்
கேட்குமா எனத் தெரியாது.
ख़्वाब के बोलपट  के कट-अवुट  के चरणों पर 
तमिल कवितायें घुटने टेक 
तपस्या करने का काल है यह.

வெள்ளைத் துச்சாதனன் சர்ச்சில்
'அரை நிர்வாணப் பக்கிரி' என்றுன்னைப்
பாஞ்சலியாக்கிப் பரிகசித்தானல்லவா..!
அவன்
உன்னைப் பரிகசிக்கவில்லை,
இந்திய அன்னையைப் பரிகசித்தான்.
गोरे दुह्शासन चर्चिल ने तुझे कहा--
अर्द्ध नग्न फकीर.
तुझे पांचाली बनाकर  हंसी उड़ाया.
அதனால்தான்
எங்கள் ஆவேச பாரதி
பாஞ்சாலி சபதத்தை பதிப்போடு எழுதினான்.
इसीलिये  हमारे जोशीले कवि 
भारती ने  लिखा "पांचाली शपथ -उद्वेग के साथ.

அந்த தேசபக்தத் தீக்கொழுந்தைத்
தெளிவாகப் புரிந்ததனால்,
அவனைப் பத்திரமாகப்
பாதுகாக்கச் சொன்னீர்கள்.
அன்றிருந்த தலைவர்களால் அந்த
அக்கினிக் கவிஞனைப்
பாதுகாக்க முடியவில்லை.
उस देश -भक्त चिंगारी को 
आपने स्पष्टरूप से समझा। 
उसकी सुरक्षा की बात बतायी.
तब के नेता उस अंगारे कवि  की सुरक्षाका न सके.

இன்றிருக்கும் தலைவர்களால்
நம் தேச சுதந்திரத்தைக்
காயங்களின்றி காப்பாற்ற முடியுமா
என்ற கவலையில் இருக்கிறோம்.
हम आज इसी चिंता में है --
  क्या आज के नेता ,
हमारी आजादी की सुरक्षा बिना चोट के  कर सकते हैं.
இரவல் மனிதர்கள் கருணையுடன்
ஏதேனும் மிச்சம் வைக்கமாட்டார்களா
என்றே காத்திருக்கிறோம்.

हम प्रतीक्षा करते हैं --
रात में मनुष्य दया से कुछ छोड़ रखें कि नहीं.
அன்று மதவெறிக்கு
உம் தேகத்தைப் பலிகொடுத்தாய்
அதே மதவெறி இன்றும்
தேசத்தையே அல்லவா
பலியாகக் கேட்கிறது.

கோட்சே கூட
தூப்பாக்கிக் குண்டுகளால்
உம்மை ஒரு முறைதான்
கொன்று சாய்த்தான்.
उस दिन तूने धार्मिक कट्टरता  क लिए 
अपने देह का बलिदान किया.
वह धार्मिक कट्टरता आज देश को ही बलि के लिए 
माँग रही है.

இன்றோ
இந்திய அன்னையின்
சிரசில் தொடங்கி
பாதங்கள் வரைக்கும் பாவிகள்
பாடாய்ப் படுத்துகிறார்கள்.
நீயாவது பரவாயில்லை
அடிமை இந்தியாவில் அவதரித்தாலும்
சுதந்திர இந்தியாவில்
சுடர்விழி மூடினாய்.
आज  
भारत माता के सर से लेकर चरण तक 
पापी धार्मिक फैलाते हैं आतंक.
    तू  तो ठीक है ,आजाद भारत में जन्म लेकर,
   स्वतंत्र  भारत में तेज़ आँखें बंद कीं। 

நள்ளிரவில் பெண்ணொருத்தி தனியாய்
நகைநட்டோடு நடந்து சென்று
பத்திரமாய்த் திரும்பினால்தான்
பெற்ற சுதந்திரம் அர்த்தமுள்ளதாகும் என்றாய்.
இரவில் என்ன
பகலில் நடக்கவே
பயமாய்த்தான் இருக்கிறது.
சட்டைகளில் பொத்தான்களுக்கு பதிலாய்
பூட்டுகள் போட்டு பூட்டிகொள்ளும்
கட்டாயம் வந்தாலும் ஆச்சரியமில்லை.


तू ने कहा-सच्ची आजादी तभी सार्थक , तब स्वर्णाभूषणों से 
सजी महिला  आधी रात घूम अकेले घर लौट जाए.

आजकल रात में क्या ,दिन में घूमना भी 
आतंक लगता है.
ऐसे समय आना हैरान  की बात नहीं ,
कुर्तों पर भी ताला लगाने पड़ें, बटन के बदले.
நாட்டில் நடப்பதை நினைத்தால்...

நாங்கள் என்னவோ
சுதந்திர இந்தியாவில் பிறந்திருந்தாலும்
அடிமை இந்தியாவில் ஆயுள் முடியுமோ
என்று அச்சமாய் இருக்கிறது.

 हमें डर लगता है --
देश की घटनाएं देखकर 
आजाद भारत में जन्मे हम 
गुलाम भारत में  अंत हो जायेंगे.
எங்கள் தலைவர்களால்
உம்மைப் போல மகாத்மாக்களாக
மாறவேண்டும் என்று
விரும்பவில்லை.
மனசாட்சியுள்ள சராசரி ஆத்மாக்களாக
நடந்து கொண்டாலே போதும்...
எங்கள் இந்தியா
சரித்திரத்தில் சாதனைகள் பொறிக்கும்.
हम नहीं चाहते ,
हमारे नेता तेरे जैसे महात्मा बने.
मन के गवाह के अनुसार 
औसत आत्माएं  बनना काफी है 
हमारा भारत इतिहास में 
साधना की चोटी पर पहुंच जाएगा.
Post a Comment