Friday, May 22, 2015

wedding day -

திருமணம் முடிந்து இன்று நாற்பதுவருடங்கள் 
(23.5.75 --23.5.2015 )
ஓடி நாற்பத்தொன்றாம் வயது அடி எடுத்துவைக்கின்ற நாள்.

பழைய  பக்கங்களைப் புரட்டிப்பார்க்கிறேன் .

விவாஹ வாழ்க்கையில் 

துணைவி  /மனைவி /இல்லாள் /அர்த்தாங்கினி 

அமைந்தால் ஆனந்தமே.

கீதையில் சொன்னபடி கடமையைச் செய் .
என்று  கர்மமே கண்ணாயினளாக 

எப்பொழுதும்  வீட்டு வேலையில் .

இன்றுவரை எதுவும் கேட்கா  இயந்திரவாழ்க்கை 

என் அன்பு அன்னையும் உழைப்பின் சேவையின் எழில் அன்னை.

இல்லாள் /துணைவி/ அர்த்த +அங்கினி 
இந்த மூன்றிற்கும்  பொருளாக 
அமைந்த மனைவி.
அர்த்தம் என்றால் பொருள் 
அங்கினி  என்றால் அங்கத்தில் இருப்பவள் 
பொருளுள்ள  வாழ்க்கையின் அங்கம்.
arddha  என்றால் பாதி என்று பொருள் .
அங்கத்தில் பாதி .
துணை இருப்பவள் 
இன்ப துன்பங்களில் துணையாக இருந்து 
ஈடில்லா இல்லம் அமைப்பது.
இல்லத்திற்கு ஆள் .காவலாள்  போன்று 
என்னிடம் சினிமா அழைத்துச் செல் என்று சீறியது கிடையா து.

12 *10 வீட்டில் பதினைந்துக்குமேல் வரும் 
விருந்தினர் .விருந்துக்கு மட்டும் ,
உதவிபெற மட்டும் .
அனைவருக்கும் அமைதியாக மகிழ்ச்சி தருபவள்.
உதவி என்று யாரையும் நாடா உள்ளத் தெளிவு.

உள்ள  உறுதி.
வறுமையிலும் செம்மை.
செம்மையிலும் மேன்மை.
அவள் விருப்பங்கள் அதாகவே நிறைவேறும்.
என்னாலோ ,மற்ற உடன் பிறப்புகளாலோ 
நிறைவேறா விட்டாலும் மகிழ்ச்சி.
இயந்திரமயமான வாழ்க்கையாக 
இறைவன் அருள்பெற்ற இல்லறமாக 
இறவனடி  சேரும் நோயால் நான் பீடிக்கப்பட்ட போதும் 
உற்றார் உறவினர் உதவி இன்றி 
தன்னடியிலே காப்பாற்றி வைத்த உள்ளத்தின் ஊக்கம் 
உழைப்பு வருமானம் கணவன் என்றால் 
அதிக  கவனம்  தியாகம் கணவன் என்றால் 
அதற்கு ஒரு சக்தி கிடைக்கும் ஊற்று துணைவி.

நாற்பதாண்டுகள்  இந்த இணைப்பில் பந்தத்தில் 

திரி ரத்தினங்கள்  சந்தான  பாக்கியம்.

கோடி திரவியங்களுக்கு சமம் .
தங்கத்தம்பி ,தங்கை, தம்பி மனைவி ,குழந்தைகள்.
இந்த இனிய நாளில் 
என் இதயத்தில் இருந்து கருணைகாட்டி இயக்கும் 
எங்களது குலதெய்வங்கள் 
காவல் தெய்வம் கருப்பணசாமி ,
இஷ்ட தெய்வம் முருகன் 
குலதெய்வம் ஸ்ரீ வெங்கடாசலபதி,
நான் ஜபிக்கும் காயத்ரி 
அனைவருக்கும் என் ஆழ்மன தியானம் 
எங்கள் குடும்பம் ,மற்றும் வையகத்தில் 
மகிழ்ச்சி தர ப்ரார்த்தனைகள் .
ஆரோக்கியம் ,செல்வம் ,நீண்ட ஆயுள் ,கல்விசெல்வம் 
அறிவு ஆற்றல் ஆக்கம் அளிக்க துணை இருந்து வழி  நடத்த 

என் அம்மாவின் ஆசி ,இறைவனின் கருணைக்கு 
நன்றி .பிரார்த்தனைகள்..





No comments: