Sunday, November 13, 2016

கபீரின் சிந்தனைகள் -௨. இரண்டு 2

         

  ௭.     நல்ல  மனிதன் ,சாது.
        தீய   குணங்களை
        மனதில் ஏற்க  மாட்டான்.

       நல்ல குணங்களை  நல்லவைகளை
     தேர்ந்தெடுத்து அவைகளையே  ஏற்பான்.
    அவன்  ஒவ்வொருவரிடத்தும்
     இருக்கும் இறைவனை ,
     நல்லவற்றை ,தீயவற்றை
     அறிந்துகொள்ளும்  திறன் பெற்றவன்.

   வெவ்வேறு  பூக்களில்
   தேனை எடுக்கும்  தேனீ ,
  அந்த அந்த பூக்களின் சுவை,
  மணம் அறிந்து எடுக்கும்.

  அவ்வாறு  தான்  சாதுக்களும்.
****************************************************************************
௮.      அன்னப்பறவை  பாலும்  தண்ணீரும்
           சேர்த்து  வைத்தால்

        பால்  மட்டும்  அருந்தி
      தண்ணீரை விட்டுவிடும்.
    அவ்வாறே  பக்தன் /சாது
     இறை தத்துவங்களை    ஏற்று   நடந்து

    வையகக்  கடலை  கடந்து  செல்வான்.
 **************************************************

௯.    இறைவனுடைய நாமம்
       பால் போன்று சத்தான பொருள்.
       மற்றவை  எல்லாம்   சாரமற்ற
      சத்தற்ற தண்ணீர் போன்றவை.
      இவ்வாறு   பாலையும் நீரையும்
     அன்னப்பறவை போல்  பிரித்து  எடுக்கும்
     ஆற்றல்  சாதுக்களுக்கு  உண்டு.

    அவர்கள் ஞானிகள். விவேகமுள்ளவர்கள்.
**************************************************

௧௦.    என்னுடைய நல்ல உயர்வுள்ள குருவானவர்
         நிலையான  சஞ்சலமற்ற
       அறிவைக்  கொடுத்து
        சமநோக்கை  உபதேசித்துள்ளார்.
      ஆகையால் நான்
      அனைத்து  இடங்களிலும்
     இறைவனையே  காண்கிறேன்.
     வேறு  எதையும்  பார்ப்பதில்லை.
*******************************************



No comments: