Sunday, November 30, 2014

why the hindi third language in the world?

ஹிந்தி ஏன் இன்று உலகில் மூன்றாவது மொழி?

ஹிந்தியில்  ஒரு வினைச்சொல்லுக்கு (verb) இணைச்சொற்கள்  (conjunction)  இரண்டு மூன்று உள்ளது. அதில் ஏதேனும் ஒன்று பாரதம் முழுவதும் பேசப்படும் மொழியில் உள்ளது. உதாரணமாக ,

முயற்சி  என்ற சொல் எடுத்தால் --

கோஷிஷ் ,ப்ரயத்ன,   என்று இரு சொற்கள் .யத்ன என்ற சொல்லும் உண்டு.

இதில் பிரயத்தனம், யத்தனம் என்பது தமிழ் (tamil) வழக்கில் உள்ளது.


  1. உதவி --மதத் .சகாயதா  என்ற இரு சொல்லில் சகாயம் என்பது தமிழில் உள்ளது.
  2. ஏற்பாடு --ப்ரபந்த,தையாரி ,வ்யவஸ்தா , என்ற மூன்றில் தயார் என்றும் 
  3. தமிழில் விவஸ்தை கெட்டுப்போச்சு என்றும் தமிழ் வழக்கில் உள்ளது.
  4. பிரார்த்தனா,நிவேதன்  ---என்ற இரண்டில் பிரார்த்தனை தமிழில் உள்ளது.
  5. கரூலம் ,கஜானா என்ற சொல்லில் கஜானா ஹிந்தி.


இவ்வாறு பல சொற்கள் இந்தியமொழிகளில் இருந்து  ஹிந்தியில் உள்ளது.

க்வாஹிஷ் ,இச்சா ,சாஹ் , தமன்னா ,என்றால் விருப்பம். இதில் இச்சை என்பது தமிழிலும்  வருகிறது.


க்வாப் ,சப்னா ,ஸ்வப்ன  என்றால் கனவு. இதில் சொப்பனம் தமிழில் உள்ளது.

இதில் க்வாப் ,க்வாஹிஷ்   என்பது முஸ்லிம் நாடுகளில் பயன்படுத்தும் சொற்கள்.

பாக்ய ,கிஸ்மத், அத்ருஷ்ட்  என்பது அதிர்ஷ்டம் ,பாக்கியம் தமிழில் .

தயார்  என்பது ஹிந்தியில் தையார்;

  இப்படியே ஹிந்தி வளர்ந்து இரண்டரை லக்ஷம் பேர் பேசிய கடிபொலி

இன்று உலகில் மூன்றாவது மொழியாக வளர்ந்துள்ளது. இதற்கு சமஸ்கிருதம் ,அரபி,பாரசி ,உருது சொற்கள் செர்த்துக்கொண்டதே காரணம் ஆகும்.

  கலப்பில் சுவை கூடுகிறது.

No comments: